எது நிஜமான
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உணர்ந்து செய்வதே உதவி
டீச்சர் : "ரமேஷ்! ஏன் ஸ்கூலுக்கு லேட்?"
ரமேஷ் : "அது வந்து டீச்சர். . ஒரு பாட்டிக்கு உதவி பண்ணோம். அதான்."
டீச்சர் : "அதுக்கா. . . இவ்வளவு நேரம்?"
ரமேஷ் : "ஆனா... அந்தப் பாட்டி ரோடு க்ராஸ் பண்றதுக்கு ஒத்துக்க மாட்டேன்ட்டாங்க. அதனாலதான்."
வலுக்கட்டாயமாய் உதவி செய்வதும், வலிய வந்து உதவி கேட்கும்போது உதவி செய்யாதிருப்பதும், வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள். 'காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது', என திருவள்ளுவர் குறிப்பிட்டது நிச்சயம் மேற்குறிப்பிட்ட உதவிகளை அல்ல.
உதவி என்ற பெயரில், உபத்திரவங்களைத்தான் மனிதர்கள் பல நேரங்களில் ஏற்படுத்துகிறார்கள்.
முதல் இரண்டுவிதமான உதவிகளைச் செய்வதைவிட, மற்றவர்களின் நிலையை
வலுக்கட்டாயமாய் உதவி
செய்வதும், வலிய வந்து
உதவி கேட்கும்போது
உதவி செய்யாதிருப்பதும்,
வன்முறையின் வெவ்வேறு
வடிவங்கள்.
உணர்ந்து உதவி செய்வது, உபத்திரவங்களை உபகாரங்களாக மாற்றும்.
செய்து பாருங்கள். பல நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள்.
முன்னேற ஆராய்ச்சி செய்யுங்கள் :
சீடன் : “புத்திசாலிகள், நல்ல கணவர்களாக இருப்பார்களா?”
குரு : “புத்திசாலிகள் கணவராக மாட்டார்கள்.”
குரு என்பவர் உங்கள் அனுபவத்தினால் தொடப்படாத வாழ்வின் பகுதிகளைத் தொட்டுச் சுட்டிக் காண்பிப்பவர்.
குருமார்கள் சொல்லும் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமே ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், முன்னேற்றம் மிகக் குறைவாக இருக்கும்.
குரு சொன்ன விதம்;
குரு சொன்ன நேரம்;
குரு சொன்ன இடம்,
எனப் பல தளங்களில் குருவின் வார்த்தைகளை அலசி ஆராயும்போது, பலன் முழுமையாக உங்களுக்குக் கிடைத்துவிடும்.
பெண்களின் மனத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

குரு சொன்ன விதம்;
குரு சொன்ன நேரம்;
குரு சொன்ன இடம்,
எனப் பல தளங்களில் குருவின் வார்த்தைகளை
அலசி ஆராயும்போது, பலன் முழுமையாக
உங்களுக்குக் கிடைத்துவிடும்.
- ரகுவரன், காந்தி.
ஆண்களின் மனத்தை மட்டும் புரிந்து கொள்ள முடியுமா என்ன?
மனம் என்றாலே புரிந்து கொள்ள முடியாது. இதில் பெண்கள், ஆண்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. அப்படிப் பிரித்துப் பார்த்தாலும் பயன் ஏதுமில்லை.
இன்னொரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய மனத்தைப் புரிந்து கொள்ளத் துடிப்பவர்கள் எல்லாமே, தங்களுடைய மனத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.
இல்லாவிட்டால், தலைக்கு மேல் ஆயிரம் வேலை இருக்கும்போது, பெண்கள் மனத்தைப் புரிந்துகொள்ள முடியுமா, முடியாதா என பட்டிமன்றம் நடத்துவார்களா? கவிதைகள் கதைப்பார்களா?
தேவையற்ற விவாதங்களில் இருந்து விடுபடுங்கள். அதுவே போதுமானது.
“சண்டை என்றால் அலர்ஜி... . நான் சும்மாயிருந்தாலும் சீண்டிவிட்டு சண்டை வாங்குகிறார்கள்,” என்று எத்தனைமுறை நினைத்திருக்கிறீர்கள்.
ஒருவருடன் பேசத் தொடங்கினாலே, அது வீண் விவாதத்தில் கொண்டுபோய் விடுகிறது என்று ஒதுங்கியே இருக்கிறீர்களா?
மற்றவரை எளிதில் வசீகரிக்க,
சுலபமான வழி இதோ உங்களுக்காக.
ஆழமான இந்த இரண்டு கருத்துகளையும் ஆழ்ந்து தியானித்து வாருங்கள்.
1. பேசிக் கொண்டிருக்கும்போதும், பேச்சைத் தொடங்குவதற்கு முன்னும், அவர் இப்படித்தான் சொல்வார் என்று எந்த எதிர்பார்ப்பும், கற்பனையும் இல்லாமல் திறந்த மனத்தோடு கவனியுங்கள்.
2. அவர் இப்படிப் பேசுவது சரி, தவறு என மனதில் பிரித்துப் பாகுபடுத்திக் கொண்டிருக்காமல், முழுமையாகக் கவனியுங்கள்.
“அவரைப்போல் வருமா? என்னமா கரிசனையா கேட்பார் தெரியுமா?” என்று கேட்பது ஒன்றாலேயே அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்வீர்கள்.