KAILASA Library/மனதைத் திற/வலிகூடப் பரவசமாகும் விழிப்புணர்வைச்Sign in
மனதைத் திற

வலிகூடப் பரவசமாகும் விழிப்புணர்வைச்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அதுக்கெல்லாம் எங்கப்பா நேரமிருக்கு?

தமிழ்மேதை மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தண்டியலங்காரம் என்ற பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில ஆசைப்பட்டார்.

ஆனால், முறையாக பயிற்றுவிக்கக் கூடிய தகுதி வாய்ந்த புலவர் யாரும் இல்லை.

அச்சமயம் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த ஒரு சாது, இதில் நல்ல தேர்ச்சி பெற்றவர் என அறிந்து கொண்டார்.

பின், அவர் செல்லுமிடமெல்லாம் பின்தொடர்ந்து சென்றார்.

அவர் தேவைகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்துகொண்டே தண்டியலங்காரம் முழுவதையும் பாடம் கேட்டது டன், மூல நூலை முற்றிலும் பிரதி எடுத்தார்.

‘வலிகூட பரவசமாகும்,
விழிப்புணர்வைச்
சேர்த்துவிட்டால்... ’

எடுத்த காரியத்தில் ஜெயிக்க, எந்த
எல்லைவரை வேண்டுமானாலும் செல்லத்
தயாராய் இருந்தால் மட்டுமே ஜெயம்
உங்களுக்குச் சொந்தமாகும்.

"இது சரி,"

"இது நல்லது,"

-என்ற தெளிவு பிறந்துவிட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் விலையாகக் கொடுக்கலாம். தியானம் எவ்வளவு நல்லது என்பது புரிந்துவிட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் கொடுக்க முடியும்.

அது புரியாதவரை, "எங்கப்பா நமக்கெல்லாம் தியானம் செய்ய நேரம் இருக்கு," என்ற சாக்குப்போக்கு மட்டுமே சொல்ல முடியும்.

லேசாயிருக்கும் புத்திசாலியின் மனம்

ஜி. டி நாயுடு, ஒருமுறை தம் அலுவலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் பிரவேசித்தார். அங்குச் சிதறிக் கிடந்த பொருட்களை அடுக்கி, குப்பைக் கூளங்களை அகற்றிபின், ஒரு கடிதம் எழுதி மேஜையின்மேல் வைத்தார்.

அதில், "உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு வாய்ப்பளித்ததற்கு மிகவும் நன்றி," என்று எழுதியிருந்தார்.

அந்த அதிகாரி கடிதம் கண்டவுடன் ஓடோடி, சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கோரினார்.

அதற்கு ஜி. டி நாயுடு... "உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால், வேலையை விட்டுவிட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டு வரவேண்டியிருக்காதல்லவா?" என்றார்.

எளிமையும், புதுமையும், புத்திசாலித்தனத்தின் அங்கங்கள்.

சாதாரண மனிதரால் யோசித்துக்கூடப் பார்க்க முடியாத, ஒரு கோணத்தில்

Nithyananda

எளிமையாக இருக்கும் புத்திசாலிகளின்
மனமும், எளிமையாகவே இருக்கும்,
லேசாகவே இருக்கும். அதனால்தான்,
அவர்களின் ஒவ்வொரு செயலிலும் புதுமை

இருந்து வெளிவரும் புத்திசாலியின் புதுமைகள், சாதாரண மனிதருக்குப் புதிர்! ஆச்சர்யம்!!

எளிமையாக இருக்கும் புத்திசாலிகளின் மனமும், எளிமையாகவே இருக்கும், லேசாகவே இருக்கும்.

அதனால்தான், அவர்களின் ஒவ்வொரு செயலிலும் புதுமை தெரிகிறது.

அவை புகழ் பெறுகின்றன.

முக்கியமான எதற்குமே ஆதாரங்கள் கிடையாது.

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், நிலக்கடலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதில் மாபெரும் சாதனைகளையும் படைத்தார்.

சாதனைகளின் ரகசியம் பற்றி விசாரித்தனர்...

அவர் சாதனைக்கான நுணுக்கங்களை, ‘பைபிள்’ நூலிலிருந்து கற்றதாகத் தெரிவித்தார்.

மேலும் செனட் விசாரணைக் கமிட்டியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் புதுமையானதாக இருந்தது.

"பைபிளில் நேரடியாக நிலக்கடலை பற்றி ஒன்றும் கூறப்படவில்லை.

ஆனால், நிலக்கடலையைப் படைத்த கடவுளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது.

நிலக்கடலை பற்றிய முழு
உண்மைகளையும், எனக்கு அருளும்படி
கடவுளிடம் வேண்டிக்கொண்டு என்
ஆராய்ச்சியினைத் தொடங்கினேன்.

மெல்ல மெல்ல, நிலக்கடலை
சம்பந்தமான புதிர்கள் மறைந்து உண்மைகள்
எனக்கு விளங்குகின்றன" என்றார்.

எளிமையும்.
புதுமையும்.
புத்திசாலித்தனத்தின்
அங்கங்கள்.

எல்லாவற்றையும் அறிவு பூர்வமாக விளக்கிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் காட்ட முடியாது.

மனித உணர்வு, மனிதவாழ்வு, கடவுள் சக்தி போன்ற எதற்குமே ஆதாரங்கள் கிடையாது.

ஆனால், ஆதாரமற்ற அந்த அருவங்கள்தான், உங்களையும் உலகையும் இயக்குகிறது.

இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்த, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு நடைமுறை வாழ்வியல் சாட்சி.

தவறு செய்தால் நரகம் செல்வேனா?

-தீபக், பெங்களூரு.

தவறு செய்வதால் நரகம் செல்ல மாட்டீர்கள். நரகத்தில் வாழ்வதால் தவறுகள் பல செய்வீர்கள்.

"நொடிக்கு நொடி உங்களைத் துடிக்கவைக்கும் மன வேதனைகளே நரகம்!"

நரகம் புவியியல் ரீதியானது அல்ல. அது மனோ ரீதியானது.

Meditation symbol

வலிகூடப் பரவசமாகும்... விழிப்புணர்வைச் சேர்த்துவிட்டால்!

பரவசம்கூட வலியாய் தெரியும்,

விழிப்புணர்வைச் சேர்க்காவிட்டால்!

-ஜென் தத்துவம்

என்ன! ஆச்சரியமாயிருக்கிறதா?

ஆனாலும் இது உண்மையே. இந்தத் தியானத்தைச் செய்து பாருங்கள் மேலுள்ள கூற்றின் ஆற்றல் புரியும்.

உடலில் வலி ஏற்படும் காலங்களையெல்லாம் இந்தத் தியானத்திற்காகத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

“வலி எங்கிருந்து வருகிறது?” என்று உணர்வால் ஊடுருவுங்கள்.

ஊடுருவ... ஊடுருவ, வலி அதிகமாகும். அதே நேரத்தில் வலி ஏற்படும் பரப்பளவு சுருங்கிக் கொண்டே செல்லும்.

வலி ஒடுங்கிக்கொண்டே செல்லும். ஒரு சிறு புள்ளியில் வலி ஒடுங்கியபின், அந்த எதிர்பாராத அனுபவம் நிகழும்.

ஒடுங்கிய வலி, பரவசமாய் வெடிக்கும். உடலுக்குள் ஆனந்தம் பரவும்.

எறும்புக் கடியிலிருந்து, எலும்பில் பட்ட அடிவரை இந்தத் தியானத்தை பிரயோகப்படுத்திப் பார்க்கலாம்.

செய்து பாருங்கள். வலிகூடப் பரவசமாகும்.

இது உங்களுக்கும்தான்...

முதல் கழுதை : "அந்த வீட்டுல உன்னை நல்லாத்தானே கவனிச்சுகிட்டாங்க, அப்படி இருந்தும் நீ ஏன் ஓடி வந்துட்டே?"

இரண்டாவது கழுதை : "இல்ல. அந்த எஜமான் பொண்ணு ஏதாவது தப்பு பண்ணா... பாரு உன்னை அந்தக் கழுதைக்குக் கட்டி வச்சுப்புடுவேன்னு சொன்னாங்க! அதான்."

மிருகங்கள்கூட பல மனிதர்களைப் பார்த்து பயப்படுகின்றன.

ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், 'நான் நல்லவன்' என நம்பும் மனிதனுக்குள்கூடப் பல மிருகங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நேரத்தில் மனிதர்கள் மிருகங்களாக மாறினால், மிருகங்கள் கூட, பயப்படத்தான் செய்யும்.

"இது எனக்கல்ல," எனத் தப்பிக்காமல் யோசித்து, சுய பரிசோதனை செய்யும் ஒவ்வொருவருக்கும் மேலுள்ள வரிகள் ஒவ்வொன்றும் ஞான சூத்திரங்கள்.

'நல்ல பேச்சாளர்களின் கவனத்திற்கு. . '

பொருளாதார நிபுணர்: "இந்தியாவில் என்னவொரு பொருளாதாரம் முன்னேற்றம். இங்கே பொருளாதாரம் என்னமா வளருது?"

சாதாரண பொதுஜனம்: " ஆமா! ஆமா! சுவர்க்கத்தை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கு. அதனால் கடவுள்தான் காப்பாத்தனும்.''

எதையாவது பரபரப்பாகப் பேசிக் கொண்டிருப்பதென்பது ஒரு ஆரோக்கியமான உரையாடல் என்றாகி விட்டது.

இதுபோல் சம்பந்த சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டேயிருப்பது, ஒரு மனக்குறைபாடு.

பேசுங்கள். நன்றாகப் பேசுங்கள்.

அது விழிப்புணர்வை அதிகப்படுத்தும். அதே நேரத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் வாயிலிருந்து வந்ததெல்லாம் அளந்து விட்டுக்கொண்டிருந்தால், அது உங்களை விழிப்புணர்வின்மையில் ஆழ்த்தும்.

இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இப்படி அளந்துவிடுவது விழிப்புணர்வின்மையின் வெளிப்பாடு.

'அருமையான தியானத்திற்கான அருமையான வழி'

அம்மா: "ராஜு கண்ணா. . பெரியவனானா என்ன ஆவ?"

ராஜு : "மிருகங்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்.''

அம்மா: "ஏன்?"

ராஜு: "ஏன்னா! மிருகங்கள்தான் டாக்டர் பத்தி குறை சொல்லாது.''

நான்கு பேர் சொல்லும் குறைகளுக்குப் பயப்படுபவர்கள், இந்த ஜென்மத்தில் ஜெயித்ததாகச் சரித்தரமில்லை. மற்றவர்கள் குறை சொன்னால், நீங்கள் நிச்சயம் குறைந்து போக மாட்டீர்கள்.

குறை சொல்வதை மிகைப்படுத்திப்பார்க்கும் பலவீனப்பட்ட மனம்பலமானால் யாரும் உங்களைப் பாதிக்க முடியாது.

நேருக்கு நேர் அசிங்கமாய்ப் பேசினால்கூட அழகாய் அந்தச் சூழ்நிலையை கையாண்டு அதனால் எந்தப் பாதிப்பும் அடையாமல், அங்கிருந்து ஆனந்தமாய் கிளம்பிச் செல்வார்கள் சிரத்தையோடு தியானம் செய்யும் ஒவ்வொரு மனிதரும்.

எனக்குச் சக்தி குறைபாடு இருப்பதாய்க் கருதுகிறேன். உடல் அடிக்கடி சோர்வு அடைந்துவிடுகிறது. நான் என்ன செய்ய...?

  • பால கேசவ், கன்னியாகுமரி.

கரண்ட் கட்டாகி படிக்கட்டில் இறங்கும்போது, கடைசி படி தாண்டியபின் கூட, இன்னொரு படி இருப்பதாய் எண்ணி காலை தரையில் வேகமாய் வைத்து

தடுமாறிய அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறதா?

இந்தத் தடுமாற்றம் படிக்கட்டால் வந்ததல்ல. இது சாதாரண மனத்தடுமாற்றம்தான்.

நீங்கள் சுட்டிக்காட்டும் சக்தி குறைவுகூட நிஜமானதல்ல. நீங்கள் குறிப்பிட்டிருப்பது கூட, 'எனக்குச் சக்தி குறை இருப்பதாய்க் கருதுகிறேன்' என்றே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

உடல் சோர்வு உங்களை விட்டு ஓடிப்போகும் அளவிற்குச் சுறுசுறுப்பு உள்ளே நுழைய அனுமதியுங்கள்.

இடுப்பிற்கு கீழே இருக்கும் இரண்டு எலும்புகளை, ஒரு நிமிடம்கூட மந்தமாய் இருக்கவிடாமல் இயக்கி ஏதாவதொரு வேலை செய்யுங்கள். அப்போது விழிப்புணர்வை முழுமையாக எடுத்து வாருங்கள்.

"இது போல் பேச இனி நேரமில்லை" எனுமளவுக்கு சக்தி பொங்க ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.

அரவிந்தன் மிகவும் நல்லவர், உண்மையைப் பேசுபவர். ஆனால் கோபக்காரர். கண்ணனோ பொய் சொல்வதில் வல்லவர். மக்களிடம் மிகவும் சாந்தமாய் பே,”வார்.

மாறுபட்ட குணங்கள் கொண்ட இவ்விருவரையும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லையே...

ஏன்?

ஆழ்ந்து பார்த்தோமானால், இதில் இரண்டு தியானக் கருத்துகள் அடங்கியிருக்கிறது.

1. முதலாமவரிடம் இருக்கும் கோபத்தை விட்டுவிடுங்கள்.

2. இரண்டாமவரிடம் இருக்கும் பொய்யை விட்டுவிடுங்கள்.

முதலாம் நபரின் நல்ல குணத்தையும், இரண்டாம் நபரின் நல்ல குணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படி நீங்கள் செய்யும் போது அன்னப்பறவையாவீர்கள்.

அன்னப்பறவை எவ்வளவுதான் பாலில் தண்ணீர் கலந்திருந்தாலும், பாலை மட்டும் குடிக்கும்.

இதைப் போன்று உலகில் மற்றவரின் நல்ல கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஆனந்த பறவையாக மாறுவீர்கள்.

ஆனந்தமாய்ச் சிறகடிப்பீர்கள்.