KAILASA Library/மனதைத் திற/மந்திர சாவியைக்Sign in
மனதைத் திற

மந்திர சாவியைக்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கண்டுபிடியுங்கள்

நான் மேக்கப் போடவில்லை:

1779-ம் ஆண்டுக்கும் 1837-ம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஜோகிரிமால்டி என்பவர் ஒரு நகைச்சுவை சர்க்கஸ் கோமாளி.

1808-ம் ஆண்டில் ஒருநாள் மாலைப்பொழுதில் மான்செஸ்டர் நகரில் இருக்கும் டாக்டர் ஜேம்ஸ்ஹாமில்டரிடம், ஒரு நோயாளி ‘மனத்து சரியில்லை’ என வந்தார்.

“சிரிக்கப் பழகுங்கள், வாழ்க்கை மீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்,” என்றார் டாக்டர்.

“எப்படி சிரிக்கப் பழகுவது,” என்றார் நோயாளி . அதற்கு டாக்டர்

“இன்றிரவு நடைபெறும் சர்க்கஸ் காட்சிக்குப் போய் அங்குக் கிரிமால்டி என்ற கோமாளியின் வேடிக்கையைப் பாருங்கள்,” என்றார்.

""சிரிக்கப் பழகுங்கள்,
வாழ்க்கை மீது
உங்களுக்கு ஒரு பிடிப்பு

நோயாளி சிரித்துவிட்டு, “டாக்டர், மேக்கப் போடாமல் இருப்பதால் என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை போலிருக்கிறது, நான்தான் கிரிமால்டி,” என்றார்.

சாதனையின் உச்சியில் உட்கார்ந்து

இருக்கும் மனிதர்களைப் பார்த்து, மனமொடிந்து போவீர்கள். அவர்களின் நிஜநிலைமை தெரிந்தால்... ஆச்சரியத்துக்குப் பதில், அழுகைதான் வரும்! உள் உலகில் முதிர்ச்சியில்லாமல், வெளி உலகில் சாதனையின் உச்சிவரை செல்வது...

புல் தரையில் சாவியை வைத்துவிட்டு, நூறாவது மாடியில் இருக்கும் தங்களது அறைக்கு நடந்தே செல்வதற்குச் சமம்...

உள்ளுலகின் ஆழம் பார்க்காமல், வெளி உலகின் உயரம் பார்க்க முயற்சித்தவர் கதை இது. அதுதான் பாதகம்.

தினம் ஒரு தியானம் செய்தால், பாதகத்திலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

முட்டாள்களால் உயர்த்தப்படும் விலைவாசி:

அரசர் தைமூர் தமது அரசவைக் கவிஞரான கிர்மானியுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அரசர் : "கவிஞரே, நான் என்னை விற்பனை செய்யத் தீர்மானித்து இருக்கிறேன். நீங்கள் வாங்குவதானால், எவ்வளவு விலை கொடுப்பீர்??"

கிர்மானி : "மன்னர் அவர்களே, அந்நிலை எனக்கு ஏற்பட்டால், நூறு காசுகள் கொடுப்பேன்...!"

அரசர் : "என்ன சொல்கிறீர்கள்... என் இடுப்பிலுள்ள கச்சையே நூறு காசு விலைபெறும்."

கிர்மானி : "மன்னா! நான் சொன்ன விலை அந்தக் கச்சைக்குத்தான்."

சில முட்டாள்கள் போட்டி போடுவதால், வைரம் எனும் சாதாரணக் கல்

Nithyananda

உங்கள் உடலுக்கும் விலையில்லை.

ஏனெனில், அது விலைமதிக்க முடியாது. கோடி ரூபாய் மதிப்பைப் பெறுகிறது. விலையை வைத்து பொருளின் தரத்தை நிர்ணயிக்க முடியாது. வைரத்தை விட முக்கியமான காற்றுக்கு, விலையேயில்லை.

அதேபோலத்தான் காற்றைவிட, மிக மிக முக்கியமான உங்களின் உடலுக்கும் விலையில்லை.

ஏனெனில், அது விலைமதிக்க முடியாது.

அது கடவுளின் சொத்து. இந்த உண்மை உலகிற்குத் தெரியாது. தப்பித்தவறி யாராவது ஒருவருக்குத் தெரிந்துவிட்டால், அவரே "ஞானி.''

ஒருசமயம், போர் முனையில் நெப்போலியனின் படைகள், இரவு நேரத்தில் திடீர்த்தாக்குதலுக்கு உள்ளானது.

அப்போது நெப்போலியன் உறங்கிக் கொண்டிருந்ததால், எப்படி அவர் ஆலோசனையைப் பெறுவது என படைத்தளபதி சங்கடமடைந்து, கூடாரத்திற்குள் பிரவேசித்தார். அப்பொழுது அரசரின் மேஜை மீது காகிதம் ஒன்று இருப்பதைப் பார்த்தார்.

அந்தக் காகித்தில் இதுபோன்ற இக்கட்டான சம்பவம் நடக்கலாம் என ஏற்கனவே யூகித்து, அதற்கான வழிவகைகளை அரசன் எழுதி வைத்திருந்தார்.

அதன்படி தளபதி எதிர்தாக்குதல் நடத்தி வெற்றிபெற்றார்.

எந்த மனிதரால் தம்முடைய எதிர்காலம் பற்றி பத்து அடி தாண்டியோசிக்க முடிகிறதோ, அவரே சாதனையாளர்.

தமக்கொரு தொல்லை ஏற்படும்போது, தடுமாறுபவர்தான், எதிரேயுள்ள வாழ்வின் ஒரு அடி வரை மட்டுமே பார்ப்பவர்.

தடுமாறினாலும், அடுத்து செய்யவேண்டியது என்ன என யோசிப்பவர், எதிரே உள்ள வாழ்வின் இரண்டாம் அடிவரை பார்ப்பவர்.

தொல்லையின் தொடக்கத்தையும், முடிவையும், தெளிவாய் யூகித்துத் தீர்வைத் தேட ஆரம்பிப்பவர் வாழ்வின் மூன்றாவது அடிவரை பார்ப்பவர்.

இதற்கு மேல் உள்ள அடிகள், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத படிக்கட்டுகள்.

இதுவரை வந்து பாருங்கள், நெப்போலியனையே தாண்டிச்செல்லும் சூட்சுமம் கண்முன்னே காத்திருக்கும்.

உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை... இது தவறா? சரியா? அவற்றை அடக்க ஏதாவதொரு வழி சொல்லுங்கள்.

-செந்தில்குமார், பிடதி.

உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவது சரியா, தவறா எனக் கேட்காதீர்கள்.

உணர்ச்சிகளை அடக்குவது, பெட்டிக்குள் அழுத்திவைக்கப்படும் ஸ்பிரிங்குக்குச் சமம். அது எப்போது வேண்டுமானாலும் ‘படார்’ என வெடிக்கும்.

உணர்ச்சிகளை அடக்காதீர்கள். அவற்றோடு வாழுங்கள்; அதுவே உங்களை விடுவிக்கும்.