KAILASA Library/மனதைத் திற/எது தியானம்?Sign in
மனதைத் திற

எது தியானம்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

விருப்பமில்லாதவற்றிற்குத் தலையாட்டுதல் கேடு!

'ட்ட்ரிங்... ட்ட்ரிங்...'

"அடடே! நீங்களா... சொல்லுங்க சொல்லுங்க... நம்மகிட்ட சொல்லிட்டீங்கல்ல, கவலையை விடுங்க, ஜமாய்ச்சிடலாம். மூக்குமேல் விரல் வைக்கிற மாதிரி பிரமாதமா பண்ணிடுவோம்..." எனத் தொலைபேசியை வைத்த மறு வினாடி, "சரியான சாவுகிராக்கி, ஏற்கெனவே, தலைக்கு மேல ஆயிரம் வேலையிருக்கு. இதுல இது வேற..." இப்படி மற்றவரிடம் உங்களின் கஷ்டத்தை மறைத்து... நீங்கள் விரும்பாததற்குக் கூட, தலையாட்டுபவரா நீங்கள்?

விருப்பமில்லா வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தால்... அந்த நிமிடம் அடுத்தவருக்கு சொர்க்கம், உங்களுக்கு நரகம்.

"நோய் என்பது பலகால
ஆரோக்கியக் கேட்டின்
வெளிப்பாடு.

உங்களால் இயலாத காரியத்தை,
'இயலாது' என இதயம் திறந்து மற்றவருக்குத்
தெரிவிப்பது புத்திசாலிக்கு அழகு.

அல்லது எடுத்துக் கொண்ட வேலையில்,
விருப்பத்தை அரும்பச்செய்து... உங்களின்
புத்தி சக்தி அனைத்தையும் பிரயோகித்து,

அச்செயலை அருமையாய்ச் செய்வது தியானிக்கு அழகு. அப்படிச் செய்வதே ஒரு தியானம்தான்.

ஆனந்தம் ஆரோக்கியமானவரின் கிரீடம்.

நோயற்ற நிலை, ஆரோக்கியம் அல்ல.

ஆரோக்கியம் என்பது, உங்கள் உயிரையும் உணர்வையும் ஜிகு ஜிகுவென உற்சாகத்திலிருக்கச் செய்யும் ரம்யமான உணர்வு. என்றைக்கு உங்கள் உடலிலிருந்து இந்த ரம்யமான உணர்வு மறைய ஆரம்பித்ததோ, அன்றே ஆரோக்கியம் குன்றத் தொடங்கி விட்டது.

"நோய் என்பது பலகால ஆரோக்கியக் கேட்டின் வெளிப்பாடு.

ஆனந்தம் என்பது பல மடங்கு ஆரோக்கியத்தின் வெளிப்பாடு."

ஆனந்தத்தை அள்ளித்தரும் எந்தச் செயலைச் செய்தாலும்...

நன்றாய்ச் செய்யுங்கள்... அது ஆரோக்கியத்தை உங்கள் உடல் நோக்கி ஈர்க்கும் தியான நுட்பம்.

நன்னெறிகள் கழுத்தை நெறிக்கக் கூடாது

புத்தனின் மகா நன்னெறிகள் எட்டு.

1. நற்கொள்கை

Nithyananda smiling

ஆனந்தம் என்பது பல மடங்கு ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. ஆனந்தத்தை அள்ளித்தரும் எந்தச் செயலைச் செய்தாலும்... நன்றாய்ச் செய்யுங்கள்... அது ஆரோக்கியத்தை உங்கள் உடல் நோக்கி ஈர்க்கும் தியான நுட்பம்.

2. நல்நினைவு

3. நற்பேச்சு

4. நன்னடத்தை

5. நல்வாழ்வு

6. நன்முயற்சி

7. நல்லெண்ணம்

8. நற்சிந்தனை

எது நல்லது?

நல்லதென்பதின் அளவுகோல் எது?

பதில் காணுங்கள்...

பதில் தெரிந்துவிட்டால்... மேலுள்ள 8 நன்னெறிகளைக் கடைப்பிடிக்கமாட்டீர்கள், அவை உங்களிடமிருந்து இயல்பாய் வெளிப்படும் வெளிப்பாடுகளாகி விடும்.

எது நல்லது எனத் தெரியாமல் புத்தனின் 8 நன்னெறிகளை ஒருவர் கடைப்பிடிக்க ஆரம்பிப்பது, தம்முடைய கழுத்தைத் தானே நெறிப்பதற்குச் சமம்.

காரணம்... உங்களுக்கு, 'இது நல்லது' எனத் தோன்றும் சிறு வட்டத்திற்குள்ளிருந்து மட்டுமே புத்தனின் நன்னெறிகளைக் கடைப்பிடிப்பீர்கள். இது தொடர்ந்தால், பித்தனாகத்தான் மாற வேண்டும். புத்தனாக முடியாது.

எது நல்லது என எல்லாக் கோணத்திலும் ஆராயுங்கள்... விரியும் பதில்களைச் சேகரித்தால், வரும் தெளிவு மட்டுமே உங்களைப் புத்தனாக்க

மோகத்தின் காந்த சக்திதான்
நம்மை ஈர்க்கிறது.
நிஜத்தில் அந்தப்
பொருளுக்கோ, அந்த
நபருக்கோ, தனிப்பட்ட
மாயசக்தி எதுவுமில்லை.

வல்லது. ஆனந்த வாழ்வு தரவல்லது.

செய்து பாருங்கள், தியான சக்தியின் பலம் புரியும்.

மோகம் ஒரு மாயம்

ஐந்நூறு கோடி ரூபாய்க்கு இன்சூர் செய்யப்பட்டிருக்கும் மோனாலிசா ஓவியம், 1911 ஆம் ஆண்டில் ஒருமுறை திருட்டுப் போய்விட்டது.

ஓவியம் திருடு போன பிறகும், அது இருந்த வெற்றிடத்தைப் பார்க்கவே கூட்டம் அலை மோதியதாம்!

மோகம் ஒரு மகா மாயாசக்தி.

ஒரு பொருளைச் சுற்றியோ, ஒரு மனிதரைச் சுற்றியோ மோகம் உருவாக்கப்பட்டுவிட்டால், அதன் மதிப்பு, அவரின் மதிப்பு பலமடங்கு கூடிவிடும்.

உங்களின் பணத்தைக் கரைய வைக்கும் எல்லாமே மோகத்தால் சூழப்பட்டவைதான்.

மோகத்தின் காந்த சக்திதான் நம்மை ஈர்க்கிறது. நிஜத்தில் அந்த பொருளுக்கோ, அந்த நபருக்கோ தனிப்பட்ட மாயசக்தி எதுவுமில்லை.

நிஜம் தெரியாத மனிதரோ, மோகத்தால் உலகில் பல விஷயங்களில் ஈர்க்கப்படுகிறார். அலைக்கழிக்கப்படுகிறார்.

portrait

எது நல்லது? என எல்லாக் கோணத்திலும் ஆராயுங்கள்... விரியும் பதில்களைச் சேகரித்தால், வரும் தெளிவு மட்டுமே உங்களை புத்தனாக்க வல்லது. ஆனந்த வாழ்வு தரவல்லது.

“மோகம் ஒரு மாயம்...”

எனும் உண்மையை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தால், இந்த நிமிடத்திலிருந்தே பல சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

“எது தியானம்?” என ஒரு முறை ஜென் ஞானியிடம் கேட்கப்பட்டபோது, “எது தியானமல்ல?” எனத் திருப்பிக் கேட்டார்.

“இது தியானம்,” எனும் வரையறை, தொடக்க நிலைக்குச் சரி, ஆனால்...

தியானத்தில் முன்னேற... முன்னேற, விழிப்புணர்வு பெருகப் பெருக, ‘இது தியானம்’ என எதையும் வரையறை செய்ய முடியாது.

அப்புறம் நீங்கள் செய்வதெல்லாமே தியானமாகத் தெரியும்.

காரணம், தியானமென்பது செயல் அல்ல நிகழ்வு.

தியானம் நிகழச் செய்யும் செயலிலெல்லாம், விழிப்புணர்வைச் சேர்ப்பதும், ஆர்வம் சேர்ப்பதுமே போதுமானது.

விழிப்புணர்வும், ஆர்வமும், செய்யும் செயலையெல்லாம் தியானமாக்கும் சக்தி பெற்றது.