மனம் செய்யும் மாயாஜாலம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களைப் பிறக்க வைப்பது யார்?
சாSquare : “திடீர்னு முன் பிறவி ஞாபகம் வந்ததும், நிறையப் பேரைப் பார்த்து ஓடி ஒளியிறீங்களாமே... ஏன்?”
கமலன் : “உஷ்... வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். போன பிறவியில் அவர்களிடம் எல்லாம் நான் கடன் வாங்கியிருந்தது ஞாபகத்திற்கு வந்திருச்சி அதான்...”
நல்லவேளை, பிறக்கும் போதே உங்களின் முற்பிறவிகளைப்பற்றிய நினைவுகள் மறந்து போகின்றன. ஒரே ஒரு பிறவியில் நீங்கள் பட்ட பாடுகளை நினைவுபடுத்திவிட்டால் போதும், உங்களின் மனம் தாங்காது. அது அழுதே வெடித்துவிடும்.
மனம் எடுக்கும் முயற்சியே, உங்களின் ஒவ்வொரு பிறவியும். நீங்கள் தடுக்காதவரை, மனம் முயன்று கொண்டேயிருக்கும். பாடுகள் தொடர்ந்து
ஒவ்வொரு பிறவியிலும், வெவ்வேறு விதமாய் நீங்கள் பல பாடுகளை அனுபவித்திருந்தும், மீண்டும் பிறவி எடுக்கிறீர்கள்.
நன்றாய் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், உங்களின் ஒவ்வொரு பிறவியும் நீங்களாய் விரும்பி எடுக்கும் பிறவி அல்ல.
அரைகுறையாய் உலகை அனுபவித்து விட்டு, 'இந்த முறையாவது விட்டகுறை தொட்டகுறையாக விட்டுவந்த ஆசைகளை அனுபவித்து விடலாமே' என எண்ணுவதால், மனம் எடுக்கும் முயற்சியே, உங்களின் ஒவ்வொரு பிறவியும்.
நீங்கள் தடுக்காதவரை, மனம் முயன்று கொண்டேயிருக்கும். பாடுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இனி என்ன செய்வது?
முடிவு உங்கள் கையில்.
பெரியவர்கள் செய்யும் செயலல்ல இது.
அப்பா : "என்னடா, ஸ்கூலுக்கு எல்லாம் ஒழுங்கா போறியா?அங்கு ஒழுங்கா படிக்கிறியா?"
மகன் : "என்ன கேள்வி இது? நீங்க ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்றீங்களான்னு என்றைக்காவது கேட்டிருக்கிறேனா?"
பெரியவர்கள் என்றாலே, எதையாவது தோண்டித் தோண்டிக் கேட்டுக்கொண்டேயிருப்பது என்ற பழக்கம் முடிவிற்கு வரவேண்டும்.
குற்றங்களைக் கண்டுபிடித்து, சிறியவர்களைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்த his பெரியவர்கள் செய்யும் செயலல்ல. குறைகளைக்கூட பாங்காய்ச் சுட்டிக்காட்டி, அவருக்குள் உற்சாக உணர்ச்சி பீறிட்டு எழும்பும் அளவிற்கு, அருமையாய், அழகாய்ப் பேசத்தெரிந்தவர்களே பெரியவர்கள்
நீங்கள் பெரியவர்களா?

குற்றங்களைக் கண்டுபிடித்து, சிறியவர்களைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்துவது பெரியவர்கள் செய்யும் செயலல்ல. குறைகளைக்கூட, பாங்காய்ச் சுட்டிக்காட்டி, அவருக்குள் உற்சாக உணர்ச்சி பீறிட்டு எழும்பும் அளவிற்கு, அருமையாய், அழகாய்ப்
வெறுப்பு ஆணி அடித்து மாட்டப்படுவது எப்படி?
மேனேஜர் : "ஏன் லேட்டு? நாளைக்கு வர வேண்டியதுதானே?"
புதுப்யூன் : "டிரெயின் வரலை. அதான் லேட் சார்."
மேனேஜர் : "டிரெயினா... நம்ம ஊருக்கு ஏது டிரெயின்?"
புதுப்யூன்: "அது தெரியாமத்தான் சார் ரொம்ப நேரமா காத்திருந்திட்டு, டிரெயின் இல்லேன்னு தெரிஞ்சதும், பஸ்ல வரேன்..."
நிஜமாய்ச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாளின் பல நேரங்களில் நாம் தலைமறைவாகிவிடுகிறோம்.
இருக்கும் இடத்தை விட்டு!
செய்யும் செயலை விட்டு!
எங்கோ எகிறிக் குதித்து ஓடுகிறோம். சைக்கிள் ஓட்டுகிறோம் என்பதை முழுமையாய் மறந்துவிட்டு, எதையோ கற்பனை செய்து கொண்டோ, பாடிக்கொண்டோ, சைக்கிள் ஓட்ட முடியும்.
அப்புறமாய் திடீரென, "ஓ! நாம் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறோமா!" என ஆச்சரியப்பட்டு தொடர்ந்து சைக்கிள் ஓட்டவும் முடியும்.
இது பாதகமானது.
நெருங்கிய உறவுகளோடு இருக்கும்போதுகூட இப்படி மனமானது எங்கோ ஊர் சுற்றப்போய் விடுவதால்தான் மனஸ்தாபங்கள் வருகின்றன.
கல்யாணம் என்பது
Share market
அல்ல.
"நீங்கள் என்னைப் புரிந்து
கொள்ளவில்லை," என ஆணித்தரமாய்ச்
சொல்கிறார்கள்.
வெறுப்பு, கோபம் இப்படித்தான் மனதில் ஆணியடித்து மாட்டப்படுகிறது.
கல்யாணம் செய்து கொண்டால் நிம்மதியாக வாழவே முடியாதா?
- ரவி,சேலம்
வாழ முடியாது... என்று சொல்ல முடியாது. காரணம் கல்யாணம் என்பது தரகர்களாலும், யாரோ ஒரு ஜோதிடர் எழுதிய மஞ்சள் படிந்த ஜாதகத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
கல்யாணம் என்பது குடச்ணூநு ட்ச்ணூடுஞூணா அல்ல.
முன்பின் தெரியாத இருவர், அடுத்த 40 வருடம் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், நிம்மதி என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
திருமணத்திற்குமுன், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்குமுன், மனப்பொருத்தம் பார்க்க வேண்டும்.
வெறும் வயது வரம்பை மட்டும் பார்ப்பதைத் தாண்டி, அவர்களின் சக்தி, புத்தி எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
அப்படிப் பார்த்துச் செய்யப்படும் திருமணமானது, நிச்சயமாக ஆனந்தத்தில் தொடங்கி ஆனந்தத்தில்தான் முடியும்.
மணி : காலை 8. 00
ட்ரிங்...
கோபால், "மணி எட்டு ஆயிடுச்சா!" என்று அலறிக்கொண்டே எழுந்தான்.
"ஏய் மாலா, குளிக்க தண்ணி ரெடியா? காபி எங்கே? சீக்கிரம்... ஆபீஸுக்கு லேட் ஆகுது பாரு... இன்னும் என்ன பண்ணிட்ருக்க அங்க?" என எழுந்ததும் சுப்ரபாதம் பாடினான்.
நாளின் தொடக்கமே இப்படி என்றால், அந்நாளின் மொத்த இனிமை எவ்வாறு இருக்கும்?
ஆழ்ந்து யோசித்துப் பார்த்தோமானால் புரிந்துகொள்ள முடியும், நம் மொத்தப் பிரச்சி னைகளுக்கும் காரணம் மந்தத்தன்மையே.
மந்தத்தன்மையின் பிடியிலிருந்து நிரந்தரமாக மீண்டு வருவதற்கு, இந்த அருமையான தியானம் செய்யுங்கள். கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தோமானால் போதும் மொத்தப் பிரச்சினையையும் மிக எளிதாகத் தாண்டி விடலாம்.
காலையில் கண்விழlistenersக்கும்போது, அப்படியே கண்களைச் சொக்கிச் சொக்கி இழுக்கும் பாருங்கள். இமைகளைத் தானாக மூடி, உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அந்தச் சில நிமிடங்கள்தான் தியானகாலம்.
முழு விழிப்புணர்வையும் கொண்டு, அப்போது தடுமாறும் அந்தக் கணங்களைச் சாட்சியாகப் பாருங்கள்.
மந்தத்தன்மை மறைந்து விடும். பின் மந்ததன்மையா, எங்கே எங்கே? என்று வலை வீசித் தேடுவீர்கள்.
★ ஒருவர் : "பேய்களை அடக்குவது எப்படி?" ன்னு ஒரு சீரியல் எழுதிட்டிருந்தாரே உங்க பையன், கல்யாணத்திற்குப் பிறகு என்ன சீரியல் எழுதறார்?
மற்றவர் : "பேய்களுடன் வாழ்வது எப்படின்னுதான்."
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், திருமணத்திற்குப் பின் நரகம் பலருக்கு நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.
வாழ்க்கைத்துணை - கடவுள் கொடுத்த நன்கொடை.
'வாழ்க்கைத்துணை - வாழும் தெய்வம்' எனும் வாழ்வியல் உண்மைகள் தெரியாமல் போனதே, இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.
'வாழ்க்கைத்துணை -
வாழும் தெய்வம்' எனும்
வாழ்வியல் உண்மைகள்
தெரியாமல் போனதே, இந்த
எல்லாப் பிரச்சினைகளுக்கும்
மூலகாரணம்.
★ டாக்டர் : "உங்க இதயத்தை
வெற்றிகரமாக ஆபரேஷன் செய்திட்டேன்.
இப்ப நல்லாயிருக்கு."
நோயாளி : "கிட்னி ஆபரேஷன்னுதானே என்னை அட்மிட் பண்ணினீங்க டாக்டர்?!"
நேருக்கு மாறாய், முன்னுக்குப்பின் முரணாய் முடியும் எல்லாச் சண்டைகளும் சாதாரணமாய் ஆரம்பித்த உரையாடல்கள் தானே?
பேச்சைச் சண்டையாக்குவது எது? கண்டுபிடியுங்கள்.
கவலைகள் எல்லாம் கலைந்து போகும் கானல் நீராக!
| ✦ ஒருவர் : | "எங்க கம்பெனியில் இன்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்." | |
| மற்றவர் : | "கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க, கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாம் இல்லையா?" |
✦ காரணம் இல்லாமல் பேசிச் சிரிப்பவர் பெண்கள்.
காரணம், அவர்களுக்குள் இன்னும் எஞ்சி இருக்கும் பெண்மை என்னும் மென்மை!
குழந்தையும் ஞானியும் மென்மையின் உச்சம். அதனால்தான்... காரணம் ஏதும் இல்லாமலேயே, சிறு புன்னகை ஒட்டியிருக்கிறது, அவர்களின் முகத்தில்.
நிஜத்தில்... . காரணமில்லாமல் துக்கம் வரும்போது, காரணமில்லாமல் 'ஆனந்தம்' ஏன் வரக்கூடாது.?
காரணமில்லாமல் வருவதே, 'ஆனந்தம்'.
| ✦ ஒருவர் : | "இன்னைக்கு என் மனைவிகிட்ட அன்பா நடந்துக்கிட்டேன்." | |
| மற்றவர் : | "ஏன்?" |

குழந்தையும் ஞானியும் மென்மையின்
உச்சம். அதனால்தான்... காரணம்
ஏதும் இல்லாமலேயே, சிறு புன்னகை
ஒட்டியிருக்கிறது, அவர்களின் முகத்தில்.
ஒருவர் : "இன்னைக்கு வனவிலங்கு பாதுகாப்பு நாளாச்சே,"
* மனிதர்களின் பேச்சிலும், மூச்சிலும், அவர்களின் நடையிலும், உடையிலும்...
குணம் கொப்பளிக்கிறது.
பண்பு பளிச்சிடுகிறது.
நான் நினைப்பதெல்லாம் சாதிக்க முடியவில்லையே... ஏன்?
- உதயகுமார், கலமருதூர்
நினைப்பதுதான் காரணம்.
நினைப்பதை நிறுத்தினால், நினைப்பதைச் சாதிக்கலாம்.
நினைப்பதிலேயே தொடர்ந்து வீணாகும் சக்தி, சாதிக்கும் சக்தியாக மாறும். நினைப்பது 1% செயல்படுத்துவது 99% -என வாழ்ந்து பாருங்கள். நினைப்பதை எல்லாம் சாதிப்பீர்கள்.