ஆசைகளை ஆராய்ச்சி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வாய்ஜாலம் வேலைக்காகாது :
நிரஞ்சன்: "அய்யா, பத்து வருஷத்துக்கு முன்னே, ஒரு பத்து ரூபா என்கிட்டேயிருந்து கைமாத்து வாங்கினீங்களே.... உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"
கோபி: "அட! இருக்காதா பின்னே. என்ன சார், என்னைப் போய் இப்படிக் கேட்டுட்டீங்களே.
நான் நாணயஸ்தன் சார்... இன்னும் பத்து வருஷம் கழிச்சுக் கேளுங்க.
அப்பவும் கரெக்டா ஞாபகம் வச்சிக்கிட்டிருப்பேனாக்கும்...!"
வாய்ஜாலத்தை வைத்து வயிற்றில் அடித்து வாழலாம். ஆனால், அது உங்கள் மனதின் அடி ஆழத்தில் செருகப்படும் முட்களாகச் சேர்ந்து கொண்டேயிருக்கும்.
பாவங்கள் என்று
குறிப்பிடப்படும்
தொல்லைகளை, நீ
ங்கள் மற்றவர்களுக்குச்
செய்யும்போது பயன்படுத்தும்
வார்த்தைகள், உங்கள்
மனதில் செருகிக் கொள்ளும்.
உங்களின் பாவ புண்ணியங்கள், உங்களைப் பாதிக்காது. ஆனால், பாவங்கள் என்று குறிப்பிடப்படும் தொல்லைகளை, நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும்போது பயன்படுத்தும் வார்த்தைகள், மனதில் செருகிக் கொள்ளும். அவை உங்களின் மனஅமைப்பையே மாற்றும். ஜென்ம ஜென்மத்திற்கும் தொந்திரவு கொடுக்கும் தொல்லை விதைகளாக அவை மாறிவிடும். எனவே, வாய்ஜாலத்தைப் பற்றியும், கஷ்டப்படுத்தும் வார்த்தைகளைப் பற்றியும் மிகச்சரியாக இருங்கள்.
விவஸ்தை கெட்ட செயல் :
சங்கர் : “எங்கப்பா மாதிரி, நானும் ஒரு கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்!”
ராஜ் : “அப்போ, உங்கப்பா, இப்ப கலெக்டராவா இருக்காரு?”
சங்கர் : “இல்லை... அவரும் சின்ன வயசுல, கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டாராம்!”
பலரின் மனம் ஆசை மேகங்களிலேயே மிதந்து கொண்டிருக்கிறது.
ஆசைகள் விவஸ்தை கெட்டவை.
அவை திறந்த வீட்டில் நுழையும் நாய்கள்.
இருக்க இடம் கொடுத்தால், படுக்க படுக்கையறை கேட்கும் சோம்பேறிகள்.
நம் வாழ்வின் பல பகுதிகளைத் தின்று கொண்டிருக்கும் இந்த ஆசைகள், ஈவு இரக்கமின்றி துரத்தப்பட வேண்டியவை.
எப்படி விளையாடுவது?
அப்பா : “என்னடா, எல்லா விளையாட்டுலயும் தோத்துப்

வெற்றி, தோல்வி என்னும் வெறி
உணர்வுகள் இல்லாமல் விளையாடத்
தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக
இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக அது
போய்ட்டியாமே...?''
பையன்: “அட, நானாவது தோற்பதாவது?... அது சும்மா விளையாட்டுக்கு விளையாடினேம்ப்பா...!’'
விளையாட்டுக்கள் விளையாட்டுகளாகவே இருக்க வேண்டும்.
அவை என்றும் போட்டிகளாக மாறக்கூடாது.
விளையாட்டு போட்டியாக மாறுவது, அருமையான பால் திரிந்து போவதற்குச் சமம்.
வெற்றி, தோல்வி என்னும் வெறி உணர்வுகள் இல்லாமல் விளையாடத் தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக அது மாறிவிடும்.
வெறியுணர்வு இல்லாமல் விளையாடிப் பாருங்கள்.
விளையாட்டின் மகத்துவம் புரிய வரும்.
★ உடல்வலி என்பது என்ன? அது எதனால் வருகிறது?
உடல்வலி என்பது, உடலின் அந்தப்பகுதி குணமடைந்து கொண்டிருப்பதற்கான ஆதாரம். அல்லது உடலின் தனிப்பட்ட ஞானமானது (Body intelligence) விழித்துக் கொண்டு உடலின் பிரச்சினைக்குரிய பகுதியைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. அதுவே, மனதால் வலி என்று அறியப்படுகிறது.
தியானம் செய்தால்,
உடலின் தனிப்பட்ட
ஞானம் (Body intelligence)
அதிகரிக்கும்
தியானம் செய்தால், உடலின் தனிப்பட்ட ஞானம் (Body intelligence) அதிகரிக்கும்.
தியான சக்தி உடலெங்கும் பரவும்.
நோய்கள் வெகு எளிதாக, வெகு சீக்கிரமாக
இருக்கும் இடம் தெரியாமல் பறந்துபோகும்.

"அட, என்ன உலகம் இது?
சண்டை, சச்சரவு, துக்கம், வறுமை, போர், பட்டினி..."
இப்படி எளிதாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இது மனம் சொல்லும் பக்கா டயலாக்குகள்.
உலகம் இப்படி இருக்க, "நான் காரணமில்லை, நீ காரணமில்லை" என்றால், யார் காரணமாக இருக்க முடியும்?
நாம் ஒவ்வொருவரும்தான் காரணம்.
நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு.
நமது அமைதியில்லாத மனமும், எதிர்மறை எண்ணங்களும்தான் (மீஞ்ஞிச்ப் ணடிதிஞு ணடணிதங்டணண்) காரணம்.
அரைமணி நேரம் இந்தத் தியானத்திற்காக ஒதுக்குங்கள். நீங்கள் அன்பு மயமாகிவிடுவீர்கள்.
தியான பயிற்சி:
பத்மாசனத்தில் அமருங்கள்.
உங்கள் தலை, கழுத்து, முதுகெலும்பு ஆகியவை நேர்க்கோட்டில் இருக்கட்டும்.
கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்கத் தொடங்குங்கள்.
உங்கள் கவனம் முழுவதையும் சுவாச ஓட்டத்தில் பதித்திடுங்கள்.
பிராண ஓட்டம் (சுவாசம்) வெளியிலிருந்து உள் செல்வதையும்; உள்ளிருந்து வெளியில் செல்வதையும் விழிப்புணர்வோடு சாட்சியாகக் கவனியுங்கள். மனம் அமைதியாகி, மகானாவீர்கள்.