KAILASA Library/மனதைத் திற/நல்லவராவதுSign in
மனதைத் திற

நல்லவராவது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • ரமேஷ் : "சுரேஷ், உங்கப்பா ஒரு டீச்சர் தானே?

ஆனா, உங்க அக்காவுக்கு ஒரு

லெட்டர்கூடப் படிக்கத்தெரியலையே..."

சுரேஷ் : "அதனாலென்ன?

உங்கப்பாகூடதான் ஒரு பல் டாக்டர்...

ஆனா உன் தம்பிக்கு ஒரு பல்லுகூட இல்லை."

பதிலுக்கு பதில் பேசுவது பெரிதல்ல. பதில் தருவதற்குப் பதில், பதிலடி கொடுப்பதிலேயே எல்லோரும் குறியாயிருக்கிறார்கள். இது சாதனையல்ல, வேதனை.

பதிலுக்கு பதில்
பேசுவது பெரிதல்ல.
பதில் தருவதற்குப்
பதில், பதிலடி
கொடுப்பதிலேயே
எல்லோரும்
குறியாயிருக்கிறார்கள்.
இது சாதனையல்ல,

பதிலடி கொடுப்பதைமட்டும்
நிறுத்திப்பாருங்கள். இவர் ரொம்ப நல்லவர்.
இவரிடம் பேசிக்கொண்டே இருக்கலாம்.
இவரிடம் பேசிக்கொண்டேயிருந்தால், நேரம்
போவதே தெரியாது என மற்றவர்கள் சொல்லும்
அதிசயம் நிகழக் காண்பீர்கள்.

✦ நடி hisப்பதை விட, வடிப்பதே மேல் :

கணவர் : "என்னப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கிற? என்னை என்ன 'நாய்'ன்னு நினைச்சியா?

மனைவி : "கடவுளே, உங்களை நான் அப்படி நினைப்பேனா? கொஞ்சம் நேரம் குலைக்காம இருங்களேன்."

உங்களால் நடிக்க முடியாது. நடிக்க முயற்சிப்பது, ஆற்றுக்குள் விட்ட காற்றுக் குமிழிக்குச் சமம். அது எவ்வளவுதான் அமைதியாயிருக்க முயற்சித்தாலும், அதையும் மீறி வெளியே வந்துவிடும்.

அதேபோல்தான், உங்களின் குணாதிசயங்களை, உங்களால் மறைக்க முடியாது. அப்படியே மறைத்தாலும், மேலே உள்ள சம்பவத்தில் வெளிப்படுவது போல் வெளிப்பட்டே தீரும்.

எனவே, நடிக்க முயற்சிக்காதீர்கள். உங்களை நன்றாய் வடிக்க முயற்சி செய்யுங்கள்.

✦ அதீதப் பசி ஏன்?

"23 வயதுதான் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு 45 வயதுக்காரர் போல் உடல் பெருத்துவிட்டது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதைவிட இன்னும் கொடுமையான விஷயம், என்னால் பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 மணிநேரமும் சாப்பிட வேண்டும் என்பது போலவே இருக்கிறது. இதிலிருந்து விடுபட வழி என்ன?"

அதிக உணவெடுத்துக்கொள்வது, உங்களின் ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளும்

portrait

உங்களின் குணாதிசயங்களை உங்களால் மறைக்க முடியாது. அப்படியே மறைத்தாலும், மேலே உள்ள சம்பவத்தில் வெளிப்படுவது போல் வெளிப்பட்டே தீரும். எனவே நடிக்க முயற்சிக்காதீர்கள். உங்களை நன்றாய் வடிக்க முயற்சி செய்யுங்கள்.

ஒருவடிகால்.

நீங்கள் எதிர்பார்க்கும் அன்பு கிடைக்காதபோது, ஆழ்மனம் இப்படித் தன்னைத் திருப்திபடுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்.

அன்பு கிடைக்காமைக்கும், அதீதப் பசிக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது. கிடைக்காத அன்பிற்காக ஏங்குவதை நிறுத்தினாலே உங்களின் மொத்தப் பிரச்சினையும் சரியாகிவிடும்.

யோகா முத்திரை

"அப்பா, என்ன சோர்வாக இருக்கு?

ஒரு காபி சாப்பிட்டா நல்லாயிருக்கும்ல...?"

என்று உடலை ஐந்து நிமிடங்களாவது தளர்வாக வைக்க நினைத்து, அதற்காக நேரம் ஒதுக்கும், உள்ளத்தைச் சட்டை செய்வதில்லை. எப்போதும் வேலை, வேலை என்று வேலையின் பின் ஓடிக்கொண்டே இருந்தால், வெகு விரைவில் வாழ்க்கை மீது வெறுப்புத்தான் மிஞ்சும்.

வாழ்வின் சாரம் குறையாமல் இருப்பதற்கு, உள்ளத்தை உற்சாகமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வாழ்வில் ருசியை அதிகரிக்க, இந்தத் தியானம் மிக அருமையான உணவாக அமையும்.

ஐந்து நிமிடமே ஆகும் இந்தத் தியானத்தை, நீங்கள் சோர்வாய் உணரும் போதெல்லாம் செய்து வாருங்கள். ஐந்து நிமிடங்கள், சிலைபோன்று, உடலில் எந்த அசைவும் இல்லாமல், உங்களை நீங்களே சாட்சியாகப் பாருங்கள்.

இவ்வாறு, உங்களுக்காக, உள்ளுக்குள் செலவிடும் ஐந்து நிமிடங்கள், உங்களை அடுத்தடுத்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.