காதல் புதிரா? புனிதமா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
~~முரளி, சேலம்.~~
காதல் புதிருமல்ல, புனிதமும் அல்ல.
அது புதியது, புரியாதது.
அதனால், புதிராகிறது, புரியாத அந்த உணர்வு.
உங்களுக்குப் பிடித்துப்போனதால், அது புனிதம் எனத் தெரியும்.
அந்த உணர்வு புதியது.
எனவே, அது புனிதமாய்,
புதிராய்த் தெரிகிறது அவ்வளவே.
நெப்ட்யூன் கிரகம், ஒருமுறை சூரியனைச் சுற்றி முடிக்க 164. 8 வருடங்கள் ஆகின்றன.
ஒருவேளை, நீங்கள் நெப்ட்யூன் கிரகத்தில் வாழ்ந்தால், உங்களின் ஒன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு, 1500 வருடங்கள் ஆகியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
“பூமியில் எனக்கு வயது 9,” எனச் சொல்வதற்கும், “நெப்ட்யூனில் எனக்கு வயது ஒன்பது,” என்று சொல்வதற்கும் சம்பந்தமே இல்லை.
அதேபோல்தான், உங்களின் உற்சாகம் மிகுந்த மனதின் வார்த்தைகளுக்கும், சோர்வு மிகுந்த மனதின் வார்த்தைகளுக்கும் சம்பந்தமேயில்லை.
இரத்தக் குழாய்க்குள் சிரஞ்ச் மூலமாகப் பாய்ச்சப்படும் குளுக்கோஸ் நீருக்கு இணையானது, சுயமதிப்பு (Self respect).
உங்களை நீங்களே மதிப்பது, சோர்ந்த மனசுக்குள் உற்சாகத்தைப் பீய்ச்சும் சிரஞ்சுக்குச் சமம்.
மதித்துப் பாருங்கள், மனம் மாறும். அது நெப்ட்யூன் போல மந்தமானதாக இருந்தால்கூட, உயிருள்ள பூமி போல் இயங்க ஆரம்பிக்கும்.