அறிவைத் தாண்டி உழையுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- உங்கள் மகனை முட்டாளாக்க வேண்டுமா?
பெற்றோர்: "என் மகன் எல்லா மாணவர்களும் படிக்குமளவுக்கு படிக்க விரும்பவில்லை. மிகவும் துரிதமாக, இவன் கல்வி கற்பதற்கு ஏதாவது குறுக்கு வழி உண்டா? இருந்தால் சொல்லுங்கள்."
முதல்வர்: "உமது மகனை ஓர் அடிமுட்டாள் ஆக்க வேண்டுமென்றால், ஒரு மாதத்தில் அதைச் செய்துவிட முடியும்.
ஆனால் இவனை ஒரு சிறந்த கல்விமானாக, அறிவாளியாக ஆக்க வேண்டுமானால், அதற்குச் சற்று அதிக காலந்தான் ஆகும்."
☞ இந்த சுவாரஸ்யமான உரையாடல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கார்பீல்டு, கல்லூரி முதல்வராக இருந்தபோது ஒரு செல்வந்தப் பெற்றோரோடு நடத்திய உரையாடல்.
நிமிட நேர
சுதந்திரத்திற்காக
ஐம்புலன்களை
அழிக்கின்றார்கள்,
மனிதர்கள்.
- நிமிட நேர சுதந்திரத்திற்காக ஐம்புலன்களை அழிக்கின்றார்கள், மனிதர்கள்.
நான்கு இட்லி போதுமெனக் தோன்றிய பின், இன்னும் இரண்டை உள்ளே அனுப்புவது... கண் எரிய... எரிய ஒரு நாள் கூத்துக்காக, விடிய, விடிய கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது...
தங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக அது தவறே ஆனாலும், திரும்பத் திரும்ப செய்து பார்ப்பது ஆகிய அனைத்துமே குறுக்கு வழியில் தேடப்படும் ஆனந்தங்கள்.
நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.
☞ நிஜ ஆனந்தத்தைப் பெற, நியாயமான உழைப்பே தீர்வாக இருக்க முடியும்.
• மரணமில்லா அமிர்தக் குளம்
பகவான் இராமகிருஷ்ணர், ஒருநாள் தம் சீடர்களிடம் மிக அழகான கேள்வியைக் கேட்டார், “நீங்கள் ஒரு ஈயாக மாறியுள்ளீர்கள். அப்பொழுது, உங்கள் எதிரே அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டார்.
சுவாமி விவேகானந்தர் வேகமாக எழுந்து, மிகத்தெளிவாக பதில் சொன்னார், “நான் கோப்பையின் விளிம்பில் கவனமாக உட்கார்ந்து அமுதத்தைப் பருகுவேன்.”
அவசரப்பட்டு கோப்பையிலுள்ள அமுதத்தில் விழுந்து உயிரை விடமாட்டேன்,” என்றார்.

நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு
வழிகள்,
சறுக்கல் பாதைகளாக மட்டுமே
அமையும்.
பகவான் சிரித்துக்கொண்டே, "அமுதத்தை உண்டவர்களுக்கு மரணமே இல்லை. அப்படியிருக்க... . விளிம்பில் உட்கார்ந்தால் என்ன? அமுதத்திலேயே விழுந்தால் என்ன?" என்றார்.
☞ வாழ்வு ஓர் அமிர்தக்குளம். உங்களின் சிறிய ஆசைகள், குளத்தின் விளம்பில் மட்டுமே உட்காரவைக்கும்.
ஆசைகளைக் கடந்து,
வாழ்வில் குதித்தால்,
அல்லல் படமாட்டீர்கள், அழிந்து போக மாட்டீர்கள்.
மாறாக ஆனந்தப்படுவீர்கள். அருமையானவராக ஆகிவிடுவீர்கள்.
• அறிவைத் தாண்ட உழையுங்கள்.
ஆச்சார்ய வினோபாபாவே, ஒருமுறை தாம் பெற்ற உயர் கல்விக்கான பட்டயச் சான்றிதழ்களை, தீயிலிட்டுக் கொளுத்தினார்!
அதைக் கண்ட அவரின் தாயார், "புத்தி கெட்டுப்போய் விட்டதா?" எனக் கடிந்து கொண்டார்.
அதற்கு வினோபா பாவே, "வெறும் பட்டங்கள் மட்டுமே மனித வாழ்வை உயர்த்திவிடுவதில்லை. கடுமையான உழைப்புதான் வாழ்க்கையை உயர்த்தும். அதனால் வெள்ளைக்கார அரசாங்கம் கொடுத்த பட்டங்கள் பற்றிக் கவலைப் படாதே," என்றார்.
வெறும் பட்டங்கள்
மட்டுமே மனித வாழ்வை
உயர்த்திவிடுவதில்லை.
கடுமையான
உழைப்புத்தான்
"அறிவாளியால் மட்டுமே, தம் அறிவு உபயோகமற்றது," என்று அறிவிக்க முடியும்.
எல்லா அறிவும், அறிவைத் தாண்டிய
அனுபவத்திற்கும், உங்களை அழைத்துச்
செல்லும் படகுகள் மட்டுமே.
துன்பக் கடலில் தத்தளிக்கும் மனிதருக்குக் கிடைக்கும் சிறு படகாகிய அறிவிலேயே, சிக்கிக் கொள்ளக் கூடாது.
படகில் சிக்கிக் கொண்டால் பாதி கடலிலேயே உயிரைப் பிரிய வேண்டியிருக்கும்.
அறிவைத்தாணட உழையுங்கள்!
அறிவைத்தாண்டி ஆனந்தமாக இருப்பீர்கள்!