KAILASA Library/மனதைத் திற/மகாவாக்கியம்Sign in
மனதைத் திற

மகாவாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“இதமாயிருப்பது, அடுத்தவர்களைவிட,
உங்களுக்குள்தான் இதமான
உணர்வை தூவிக்கொண்டேயிருக்கும்,”

பதமாய் (பாருட்களை)க்
கையாளத் தெரிந்தவர்,
இதமாய்
வாழத்தெரிந்தவர்.

ஞானிக்கும்,
எனக்கும்
என்ன வித்தியாசம்
சொல்லுங்களேன்
எனக் கேட்டால்...

ஞானிகள்
இதமானவர்கள்.
ஒரு பொருளைக்கூட,
ஒரு குழந்தையை போல்
அன்பாய்த் தொடும்
பதம் நிறைந்தவர்கள்,
என்பதே
என் பதில்.

நீங்கள்
பெற ஏங்குவதும்,
நீங்கள்
தர மறுப்பதும்,
இதமளிக்கும்
குணத்தைத்தான்,
பேச்சைத்தான்,
தொடுதலைத்தான்.

இதம்
அது...
கேட்டால்,
கொடுக்கப்படாது.
கொடுங்கள்,
கிடைக்கப்பெறும்.
அதில் மூங்குமளவுக்கு
கிடைக்கப்பெறும்

முரட்டுத்தனமாய்ப் பொருட்களைக் கையாள்பவரிடம் பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்காதே!

  • சீனப் பழமொழி

தீவிரவாதம் என்று ஒழியும்?

  • ஜாபர்கான் உத்தண்டி

என்றும் ஒழியாது.

இன்று ஒழிந்தால், என்றும் ஒழிந்து விடும். இன்று ஒழியாவிட்டால், என்றும் ஒழியாது. இது என்றென்றைக்கும் பொருந்தும்.

வன்முறையாய்ச் செயல்படுவதில் கட.ஈ செய்தவர்களைத் தீவிரவாதிகள் எனச் சொல்லி... மனிதர்கள்தான் மிக நியாயமானவர்கள் எனத் தப்பிக்கவே முயற்சி க்கிறார்கள். தீவிரவாதிகளுக்காவது, அவர்களின் தீவிரவாதத்துக்கு நியாயமான ஒரு காரணம் சொல்ல முடியும்.

நம்மிடம், நம் கரடுமுரடான அணுகுமுறைகளுக்கும், எளிதாய்க் கண்டுபிடிக்க முடியாத நம் வன்முறைச் செயல்களுக்கும், என்ன காரணம் சொல்ல முடியும்?

தனிமனிதத் தீவிரவாதம்தான் முதலில் தீ வைக்கப்பட வேண்டும். அது ஒழியாத வரை, அது புதுப்புது தீவிரவாதிகளை உற்பத்தி செய்துகொண்டேதான் இருக்கும்.

ஓர் இளைஞன் ஜென் ஞானியிடம், தான் சீர்திருத்த எண்ணங்களைக் கொண்டவன் எனக் காட்டிக்கொள்ளும் வகையில், "நம் நாட்டில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை நான் ஓயமாட்டேன்!

இதற்காக என் உயிரைக்கூடப் பணயம் வைக்கத்தயார்.

யார் என்னோடு வரத் தயார்?" என வெடிக்கும் குரலில் கண்கள் சிவக்க கரங்கள் நடுங்க, சத்தமிட்டுப் பேசினான் அந்த இளைஞன்.

அறையில் அமைதி. அந்த இளைஞரின் கண்களை ஊடுருவிப் பார்த்த ஞானி கேட்டார், "நீ செய்யத் துடிப்பது என்ன வகையான தீவிரவாதம்?"

அந்த இளைஞருக்கு ஜென் ஞானி அளித்த அந்த பதில்தான், இந்த கேள்விக்குமான பதில்... "முதலில் உள்ளுலகைச் சீர் செய்வோம். பின் வெளிஉலகில் தீவிரவாதம் ஒழிப்பது பற்றி யோசிக்கலாம்."