பிரச்சினைகள் எல்லாமே மாற்ற முடிந்தவையே...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- என் அன்பு உண்மையானது என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது?
உங்களெதிரே இருக்கும் உயிர், இந்த வாழ்வைக் கொண்டாட கிடைத்த ஒரு வாய்ப்பு.
இவரோடிருப்பதே பெரும்பாக்கியம்; இவரோடு சிரிப்பதும், பேசுவதும் அதிர்ஷ்டம் என்ற உணர்விலேயே தொடர்ந்து வாழ முடிந்தால், நீங்கள் உண்மையானவர் என உறுதி செய்து கொள்ளலாம்.
- கடவுள் ஏன் என்னை அடிக்கடி தண்டிக்கிறார்? உண்மையான பதில் வேண்டும்.
உண்மையான பதிலைக் கேட்டதால், ஒரு ஜென் கூற்றை இங்குக் குறிப்பிடுகிறேன். அது...
இவரோடிருப்பதே
பெரும்பாக்கியம்;
இவரோடு சிரிப்பதும்,
பேசுவதும் அதிர்ஷ்டம் என்ற
உணர்விலேயே தொடர்ந்து
வாழ முடிந்தால்,
நீங்கள் உண்மையானவர் என
உறுதி செய்து கொள்ளலாம்.
“உங்களைத் தண்டிக்கும் அளவுக்குத் தாழ்ந்தவரல்ல கடவுள்.
கடவுளிடமிருந்து தண்டனை பெரும் அளவுக்கு நீங்கள் உயர்ந்தவருமில்லை,”
- தண்டனை பெற தவறு செய்தால் போதுமே. அதற்குத் தகுதியெல்லாம் ஏன் வேண்டும்?
கடவுள் கருணை மயமானவர் என்பதால், அவர் உங்களைத் தண்டிக்க மாட்டார். எப்போது உங்களை நீங்களே செதுக்கத் தயாராகிறீர்களோ, அப்போது கருணையின் இன்னொரு வடிவமாகக் கடவுளின் கருணைச் செயல்கள் தொடரும்.
அந்த நிமிடங்களில் உங்களைச் செதுக்கும் சம்பவங்களை நீங்கள் தண்டனை என அழைக்கலாம்.
இப்படி உங்களை நீங்களே செதுக்க ஆரம்பிக்காததற்குமுன், சுய மனத்தடைகளால் சில கஷ்டங்கள் வரலாம். அவற்றைக்கூட நீங்கள் தண்டனை என அழைக்கலாம்.
- நண்பர்கள் பற்றி...?
எதிரிகளை விட ஆபத்தானவர்கள்.
- எதிரிகள்?
நண்பர்களைவிட, நிறைய நல்லது செய்பவர்கள், உங்களின் குருமார்கள்.
- என்னது! எதிரி குருவா?
'குரு' என்றால் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில்!
- குரு என்பவர் பெரிய பெரிய உண்மைகளைச் சொல்பவர். மனிதர்களுக்கு

கடவுள் கருணை மயமானவர் என்பதால், அவர்
உங்களைத் தண்டிக்க மாட்டார். எப்போது
உங்களை நீங்களே செதுக்கத் தயாராகிறீர்களோ,
அப்போது கருணையின் இன்னொரு
வடிவமாகக் கடவுளின் கருணைச் செயல்கள்
வாழ்க்கைப்பாடம் கற்றுத் தருபவர். சரிதானா?
சரியே!
உலகம் இவ்வளவுதான்,
மனிதர்கள் இவ்வளவுதான்.
யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படியும் மாறலாம் எனும் வாழ்க்கைப் புதிர்களை அனுபவப் பாடங்களாக உங்களுக்குத் கற்றுத்தந்தவர்கள் எதிரிகள் தானே!
- உண்மையான தியானம் எது? என்பதைக் கண்டுகொள்வதெப்படி?
தியானம் செய்யும்போது, விறுவிறுப்பு மட்டுமே கிடைத்தால், அது தியானமல்ல.
தியானம் தியான சக்தியைத் தருவதோடு நிற்காமல்...
உங்களுக்குள் அமைதியையும், குண பக்குவத்தையும் நிறையச்செய்தால், அதுவே அது!
- உண்மையான குருவைக் கண்டு கொள்வது எப்படி?
ஒருமுறை குருவை நேரில் பார்த்தபின், நீங்கள் நினைக்காமலே உங்களின் நினைவலைகளில் மீண்டும் மீண்டும் வருகிறாரா... அவரே அவர்!
- வெளியுலக வாழ்க்கையில் இருப்பவர், ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழையலாமா?
வாழ்க்கை ஒன்றே, அது இந்த உலக வாழ்க்கை.
நீங்கள் குடும்பத்தில் இருந்தாலும்,
தனியாளாக இருந்தாலும், ஒரே உலகத்தில்தான்
இருக்கிறீர்கள்.
ஆனந்தமாக வாழ, நீங்கள் முடிவெடுத்துவிட்டால், எங்கிருந்தாலும்
ஆனந்தமாக வாழ, நீ
ங்கள் முடிவெடுத்துவிட்
டால், எங்கிருந்தாலும்
தவறில்லை. ஆன்மீகம்
உங்களுக்கானதே!
தவறில்லை. ஆன்மீகம் உங்களுக்கானதே!
சிறு வயதில் நிறைய திருடியிருக்கிறேன். இப்போதுகூட அந்தக் குணம் அடிக்கடி மேலெழும்புகிறது. என்ன செய்வது?
-ரமேஷ்,திருச்சி.
திருடுவது ஜீன் சம்பந்தப்பட்டது என சிலர் வாதிடுகிறார்கள்.
என்னைப் பொறுத்தளவு, அது விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது.
நோய்களையும் குணங்களையும் ஜீன்கள்தான் நிர்ணயிக்கின்றன என்றால், அந்த ஜீன்களை நிர்ணயிப்பது யார்?
உங்களுடைய பிரச்சினை ஒன்றும் மாற்றவே
முடியாத பிரச்சினை அல்ல. இனி ஒருமுறை
அதுபோல் செய்யத்தோன்றினால், முழு
விழிப்புணர்வுக்கு வாருங்கள்.
விழிப்புணர்வு எனும் நெருப்புக்கு முன்,
அந்தக் குணக்குறைகள் இருக்கும் இடம்
தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்ளும்.
இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்.
உங்களுக்கு அவரைப்பற்றி முன் பின் எதுவும் தெரியாது. ஆனால் அவரால் உங்களுக்கு ஒரு நன்மை நடந்தாக வேண்டும்.
அவருடன் நீங்கள் கட்டாயம் அறிமுகமாக வேண்டும்.
காரியத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, வெறும் சம்பிரதாயத்திற்காக உதட்டளவில் மட்டும் வணக்கம் என்று சொல்லிப்பாருங்கள்.
அவரிடமிருந்து மலர்ந்த சிரிப்பு பதிலாய் வரும்.
அதன்பின் நடக்கும் உரையாடல், சுவாரஸ்யமாகத்தானே அமையும்.
இது உறவுகளுக்குள் இணக்கத்தை ஏற்படுத்தி, உங்களின் வலைக்குள் கட்டி இழுத்து வந்துவிடும்.
சாதாரணமாக, வெறுமனே இரு கரங்களைக் குவித்து, வணக்கம் என்று சொன்னதற்கே இப்படியென்றால், முழுமையான விழிப்புணர்வோடு உணர்ந்து, இரு கரங்களையும் முகத்திற்கு நேரே உயர்த்தி, வணக்கம் என்று சொல்லிப் பாருங்கள்.
அவர் மலர்ந்ததைப் போன்று, நீங்களும் மலர்வீர்கள்.
அவரை வளைத்தது போன்றே, உங்களையும் மொத்தமாக உங்கள் கட்டுக்குள் வளைத்து விடுவீர்கள்.
ஒவ்வொரு முறை நீங்கள் ஆழ்ந்து சொல்லும்போது, அந்த இனிமை, ஆழமாய் உங்கள் மனதில் பதிந்து, உங்களை அருமையானவராக மாற்றும் தியானமாய் அமையும்.