KAILASA Library/மனதைத் திற/வாய்ப்புக் கிடைSign in
மனதைத் திற

வாய்ப்புக் கிடை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

க்காத தீவிரவாதிகள்

இரண்டு பஸ்ஸைக் கொளுத்தி, பத்து கடைக்குத் தீ, வைத்து மக்களைக் கலங்கச்செய்தால்தான் அது வன்முறை எனச் சொல்கிறார்கள்.

நிஜத்தில் அது வன்முறையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே.

வன்முறை, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுகிறது. நீங்கள் பேசும்விதம், பார்க்கும் விதம், பொருட்களைக் கையாளும் விதம், என ஒவ்வொன்றிலும் வன்முறை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அரைமணி நேரம் மனைவியோடு அன்பாகப் பேசிவிட்டு, 'பட்!' எனத் தொலைபேசியை வைப்பதும், நண்பனை வழி அனுப்பிவிட்டு, வீட்டுக்கதவை, 'படார்!' எனச் சாத்துவதும் வன்முறைக்கான எளிய வாழ்வியல் உதாரணங்கள்.

“பற்கள் வன்முறையின் ஆயுதங்கள்,” எனச் சொல்லும் தாவோ ஞானியிடம், “அதெப்படி குருவே, பற்கள் ஆயுதங்களாகும்?” எனக் கேட்ட பேராசிரியர், சூயிங்கம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

ஞானி, “ஏன் அடிக்கடி சூயிங்கம் சாப்பிடுகிறீர்கள்?” எனக் கேட்டார்

பேராசிரியர், “சும்மாதான்,” எனச் சொல்லி தோள்களைக் குலுக்கிக்கொண்டார்.

அரைமணி நேரம்
மனைவியோடு அன்பாகப்
பேசிவிட்டு, 'பட்!' எனத்
தொலைபேசியை வைப்பதும்,
நண்பனை வழி அனுப்பிவிட்டு,
வீட்டுக்கதவை, 'படார்!' எனச்
சாத்துவதும் வன்முறைக்கான
எளிய வாழ்வியல்

பதிலைக்கேட்டுச் சிரித்த ஞானி, சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த பைத்தியத்தைக் காட்டி, “அதைப் பாரும்!” என்றார்.

பைத்தியம் கீழே கிடந்த பெரிய, பெரிய கற்களாகத் தேடி எடுத்து “உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்... போ... செத்துப் போ!” எனச் சொல்லி அந்தக் கற்களைத் தரையில் ‘டடார்!’ என எறிந்தது.

அந்தச் செயல் பார்ப்பதற்கே கொடூரமாக இருந்தது. அங்கு இல்லாத யாரோ ஒருவரை அந்தப் பைத்தியம் கொலை செய்துகொண்டிருந்தது.

ஞானி, பேராசிரியரிடம், “இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டார். பேராசிரியர், “இது விபரீதமான பைத்தியம். வன்முறை நிறைந்தது. வன்முறை பித்துப்பிடித்திருக்கிறது.

திடீரென ஒரு நாள் இந்தப் பைத்தியம் சாதாரண ஒரு மனிதன் மேல் கல்லைத் தூக்கிப்போடாதென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்தப் பைத்தியத்தை நாட்டுக்குள் உலவ அனுமதிக்கப்படக்கூடாது,” என்றார்.

அந்த விளக்கத்தைக் கேட்டு ஞானி சிரிக்கையில்... அப்பைத்தியக்காரன் அவர்களை நெருங்கிவிட்டான்.

பேராசிரியருக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.

தினம் தினம் அப்பைத்தியம், அந்த ஞானி தரும் ரொட்டிக்காக அங்கே வருவது வழக்கம். ஞானி அருகே வரும் போது, அப்பைத்தியக்காரன் மிகச்சாதுவாக

Sadhguru

வன்முறை, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும்
வெளிப்படுகிறது. நீங்கள் பேசும்விதம்,
பார்க்கும் விதம், பொருட்களைக் கையாளும்
விதம், என ஒவ்வொன்றிலும் வன்முறை
வெளிபட்டுக்கொண்டே இருக்கிறது.

மாறிவிடுவான். சாதாரண மனிதன் போலப் பேசுவான்.

இன்று ரொட்டியைப் பைத்தியகாரனுக்குத் தரும்போது, ஞானி அவரிடம் கேட்டார், “ஏன் பெரிய பெரிய கற்களை எடுத்துத் தரையிலடிக்கிறாய்?”

பைத்தியக்காரன் தன் தோள்களை குலுக்கியபடி, “சும்மாத்தான்,” எனச் சொன்னான்.

ஞானி பேராசிரியரைப் பார்த்தார்... பேராசிரியரின் தலைக்குள் பெரிய மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் வெடித்தது போலிருந்தது.

ஞானி, “சும்மா அந்தக்கற்களை உங்களால் தூக்கி அடித்துக்கொண்டேயிருக்க முடியுமா? எனக் கேட்டதற்கு, “முடியாது,” என்றார்.

ஞானி, “கற்களை சும்மா தூக்கியெறிவது பைத்தியகாரத்தனமென்றால்... சும்மா பற்களை ஒன்றோடொன்று நறநறவென மோதவிடுவதும், செத்த பாம்பை அடித்துக்கொண்டேயிருப்பதுபோல் சுவையில்லாச் சுயிங்கம்மை பற்களால் வெறுமனே மென்று கொண்டே இருப்பதும் எவ்வகைத்தனம்?” எனக் கேட் டதற்கு...

பேராசிரியரால் பதில் சொல்ல முடியாவிட்டாலும்... ‘தம்மிடமிருந்தும் வன்முறைகள் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன?’ என்று புரிந்துகொள்ளுதல் நிகழ்ந்ததால், குருவைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார்.

‘தீவிரவாதி’ என்பவன், சாதாரண மனிதனை விடக் கொஞ்சம் அதிகமான அளவு வன்முறை கொண்டவன்.

இன்னமும் சொல்லப் போனால்,
தீவிரவாதிகளுக்கு வாய்ப்புக்
கிடைத்ததால்... தூங்கும் வன்முறையை
வெளிப்படுத்திவிட்டார்கள் என்பதே உண்மை.

சாப்பிடும்போது, பலர் உணவைப்
பற்களால் கொலை செய்கிறார்கள். சாப்பிடுதல்
சாந்தமாய் நிகழ்வதேயில்லை.

இரண்டு சக்கர வாகனங்களில்

‘தம்மிடமிருந்தும்
வன்முறைகள் வெளிப்பட்டுக்
கொண்டேதான்
இருக்கின்றன?’ என்று
புரிந்துகொள்ளுதல்
நிகழ்ந்ததும் தம்மை முதலில்

ஆக்ஸிலேட்டரைப் பிடித்துத் திருகும் விதத்திலேயே, ஒருவரின் வன்முறையைக் கண்டுபிடித்து விடலாம். வண்டி "உர்... உர். ." எனக் கூச்சலிட, கூச்சலிட, வண்டியை விரட்டுவதும், குண்டு குழி பார்க்காமல் கண்டபடி வண்டியை ஓட்டுவதும், வன்முறை வெளிப்படும் விதங்களில் ஒன்று.

வன்முறை குறையக் குறைய, ஒரு தகப்பன் தம் குழந்தையைக் கையாள்வதுபோல, உங்களின் இருசக்கர வாகனத்தைக் கையாள்வீர்கள்.

"என்ன நீங்கள்? உயிரில்லாத பொருள் மீதெல்லாம் அன்பு செலுத்தச் சொல்கிறீர்களே!" என நீங்கள் கேட்கலாம்.

அப்படிக் கேட்டாலும், உயிருள்ள பொருட்களிடம் நீங்கள் செலுத்தும் அன்பும், கருணையும் மிக மிக முக்கியமானது என்றே சொல்வேன்.

நீங்கள் கையாள்வது பொருளா, மனிதரா என்பது முக்கியமல்ல. 'கையாளும் விதமே' முக்கியமானது. அப்போது வெளிப்படும் அன்பின் பக்குவமே முக்கியமானது.

ஏனென்றால், பொருட்களை நீங்கள் கையாளும் விதமும், மனிதர்களோடு நீங்கள் பழகும் விதமும், நேரடி தொடர்பு கொண்டவை.

பொருட்களைப் பதமாய்க் கையாளத் தெரியாதவரால், உறவுகளிடம் இதமாய்ப் பழகுவது என்பது அவரின் கனவில்கூட நிகழ முடியாத ஒன்று.

Sadhguru portrait

நீங்கள் கையாள்வது பொருளா, மனிதரா
என்பது முக்கியமல்ல. 'கையாளும் விதமே'
முக்கியமானது. அப்போது வெளிப்படும்
அன்பின் பக்குவமே முக்கியமானது.

பொருட்களைப் பதமாய்க் கையாளத்
தெரியாதவரால், உறவுகளிடம் இதமாய்ப்
பழகுவது என்பது அவரின் கனவில்கூட நிகழ

கையாளும் விதம், பதமானதாக, இதமானதாக மாற ஒருவரின் நுண்ணுணர்வு அதிகரிக்க வேண்டும். அன்றாடச் செயல்களில், நீங்கள் எப்படிப் பொருட்களைக் கையாள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.

செயல்களில் வெளிப்படும் முரட்டுத்தனம், வேகம், பரபரப்பு, அவமதிப்பாகத் தூக்கி எறிவது, துஷ்பிரயோகம் செய்வது என்ற அனைத்துமே வன்முறையின் வெளிப்பாடுகள்தான். நுண்ணுணர்வோடு உங்களைக் கவனித்தால் மட்டுமே, உங்களைப் பற்றிய முழுக் கண்டுகொள்ளுதல் நிகழும்.

“நான் நல்லவன்!” என வேஷம் போடும் மனதின் பகுதி, இந்த வன்முறைச் செயல்களை இந்நாள் வரை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைத்திருக்கும்.

“இப்போதுதான் நிஜம் என்ன என்று தெரிந்து விட்டதே. அப்புறமென்ன... முதலில் வன்முறைகளைப் பட்டியலிடுங்கள். அதிகாரியாவீர்கள். பின், வன்முறையை மாற்றிச் சாந்தமாக, இதமாகச் செய்வது பற்றிச் சிந்தியுங்கள். ஆசானாவீர்கள்.

இதமானவராக்குங்கள் உங்களை... நீங்கள் ஒரு குருவாகவே மாறிவிடுவீர்கள்.

நுண்ணுணர்வின் உச்சம் குருநாதர்.