கடவுள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சென்ட்ஃபிரான்ஸிஸ் ஆப் அஸஸி கூகூ. ஊணுறச்ணஞிடிண் ணிஞூ அண் ண்ச்ண்டி எனும் கிருஸ்துவ ஞானியின் வாழ்க்கையில் நடந்ததெனச் சொல்லப்படும் ஒரு சம்பவம்.
ஒருமுறை மெத்தப் படித்த மேதாவி ஒருவர், ‘கடவுள் கிடையவே கிடையாது’ என்று பாதிரியாரிடம் வாதம் புரிவதற்காகச் சென்றிருந்தார்.
பாதிரியாரிடம், “ஐயா, நீங்கள் கடவுளை நம்புபவர். பைபிள் நன்கு கற்றவர். அதனால் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு எனக்குப் புரியும்படி பதில் சொல்ல வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பாதிரியார் புன்முறுவலுடன் சம்மதித்தார்.
மேதாவி, “என் முதல் கேள்வி: கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவருடைய உருவத்தை எனக்குக் காட்டுங்கள்.
இரண்டாவது கேள்வி: விதி, விதி என்று சொல்கிறார்களே, விதி என்றால் என்ன?
உண்மையை உணர்வதற்கு,
அந்த மனிதர் வாழ்வில்
எதிர்பாராத விதமாக, ஒரு
பாதிரியார் வந்தார்.
மூன்றாவது கேள்வி: பைபிளில்
சொல்லியுள்ளதுபடி பார்த்தால், சாத்தான்
நெருப்பலிருந்து படைக்கப்பட்டுள்ளான்.
ஆனால், சாத்தானைத் தண்டிக்க, இறைவன்
அவனை மீண்டும் நெருப்பிலேயே போடுகிறார்
என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், நெருப்பே உருவான சாத்தானுக்கு நெருப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதே. இது குறித்துக் கடவுள் ஏன் யோசிக்கவில்லை?" என்று கேட்டார்.
இந்த மூன்று கேள்விகளையும் மேதாவி கேட்டதுதான் தாமதம். பாதிரியார் "பளார்," என்று மேதாவியினுடைய கன்னத்தில் அறைந்தார். இதை சிறிதும் எதிர்பார்க்காத மேதாவியின் மனம் சட்டென்று ஸ்தம்பித்தது.
"கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், இப்படியா கோபத்துடன் அடிப்பது?" என்று கன்னத்தைத் தடவியபடி கேட்டார்.
அதற்குப் பாதிரியார், "நீங்கள் என்னிடம் இப்படி கேள்வி கேட்டதனால், உங்களை நான் அறையவில்லை.
உங்கள் மேல் எனக்குக் கோபமே இல்லையப்பா. நீங்கள்தான் உங்களுக்குப் புரியும்படி பதில் சொல்லச் சொன்னீர்கள். அதனால்தான் உங்களை அடிக்க வேண்டியதாய் போய்விட்டது. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்லுங்கள்.
"நான் அடித்த போது உங்களுக்கு வலித்ததா?" என்று கேட்டார்.
"இது என்ன கேள்வி? வலி உயிர் போய்விட்டது," என்று மேதாவி பதிலளித்தார்.
"ஓ! அப்படியா? அப்படியானால், நீங்கள் வலி இருக்கிறது என்பதை நம்புகிறீர்கள். உணர்கிறீர்கள். ஆனால், எங்கே வலியினுடைய உருவத்தை காட்டுங்கள்? இதுதான் உங்கள் முதல் கேள்விக்கு பதில்.

ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும், அந்தப் பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது... என்றளவில்தான் இருக்கும்.
“சரி, என்னுடைய அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். நேற்று, உங்கள் கனவில், என்னிடம் கன்னத்தில் அறை வாங்குவதாக ஏதாவது கனவு தோன்றியதா?’’ என்று கேட்டார்.
மேதாவி, “இல்லை,’’ என்று சொன்னார்.
“சற்று நேரத்திற்கு முன்பு வரை, நீங்கள் அடி வாங்கப் போவது, உங்களுக்கே தெரியாது இல்லையா? ஆனால், அடி வாங்கிவிட்டீர்கள். இதற்குப் பேர்தான் விதி. இனி, என்னுடைய கடைசி கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
உங்களை அறைந்த என்னுடைய கை, எதனால் ஆனது?’’
“இரத்தத்தாலும், சதையாலும்,’’ என்று சொன்னார்.
“அதே இரத்தத்தாலும், சதையாலும்தான் உங்களுடைய கன்னங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், என் கை உங்களை அறைந்தபோது, உங்களுக்கு வலித்தது. அதேபோல்தான், தீயால் ஆன சாத்தான், கடவுளால் தீயில் தள்ளப்படும்போதும் துன்பப்படுவான்.’’
இந்தப் பதில்களைக் கேட்டு புத்திபெற்று, பாதிரியாருக்கு நன்றி கூறி விடைபெற்றார் மேதாவி.
உண்மையை உணர்வதற்கு, அந்த மனிதர் வாழ்வில் எதிர்பாராத விதமாக, ஒரு பாதிரியார் வந்தார்.
ஆனால், எல்லோர் வாழ்விலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அந்த மனிதரைப்போல், நம்மில் பலரும் மற்றவர்களிடம் கேள்வி கேட்டும், குறுக்கு விசாரணை செய்தும், வம்புக் கதைகளைப் பேசியும் நேரத்தை வீணடித்து வருகிறோம்.
இதைப் படித்ததும், ‘ஏன்?
அப்படியென்றால், கேள்வியே கேட்கக்
கூடாதா?’ என்ற எண்ணம் எழலாம்.
ஒரு ஜென் ஞானியிடம், “ஏன் நாங்கள்
என் கை உங்களை
அறைந்த போது,
உங்களுக்கு வலித்தது.
அதேபோல்தான், தீயால்
ஆன சாத்தான், கடவுளால்
தீயில் தள்ளப்படும்போதும்
கேள்விகளே கேட்கக்கூடாதா?'' என்று சீடர் ஒருவர் கேட்டபோது... ஜென் ஞானி, "கேள்விகள், அகங்காரத்தை வளர்க்கும். சந்தேகங்கள் அகங்காரத்தை அழிக்கும்,'' என்று சொன்னார்.
மழைக்காலத்தில் பார்த்தீர்களென்றால் தண்ணீர்க் குழிகளில் தேங்கி இருக்கும். அந்நீர்நிலைகளில் தவளைக் கூட்டம் கூட்டமாக வாழும்.
இரவானால் போதும், அந்தத் தவளைகள் எல்லாம் கத்தத் தொடங்கிவிடும். இரவு முழுவதும் கத்திக்கொண்டேதான் இருக்கும். அது ஏன் கத்துகிறது என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ஏன் கத்துகிறது என்று அதற்கும்கூடத் தெரியாது.
எதற்காகக் கத்துகிறதோ, அது கிடைத்தாலும், தேடியது கிடைத்துவிட் டது என்பது தெரியாமல், மீண்டும் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருக்கும். எப்படி அலைகள் ஓயாமல் இருக்கிறதோ, அதைப்போன்றுதான் மனதில் எழும் கேள்விகளும்.
கேள்விகள் கேட்பது என்பது வேலை வெட்டியில்லாமல் டீக்கடையில் அமர்ந்து கொண்டு, "எனக்குத் தெரியாதா அந்த வி. ஐ. பி பற்றி. அவர் அப்படிதான்...
அந்த எதிர்வீட்டுக்காரர் என்ன சொன்னார் தெரியுமா?'' என்று கேள்விகள் கேட்டு நேரத்தைப் போக்கும் வேலை, பிழைப்பு இல்லாதவர்களுக்குதான் சாத்தியம்.
இவர்கள் ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும், அந்தப் பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. 'ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது என்றளவில்தான் இருக்கும். இது இருவருக்கும் நேர விரயமே.
நிற்க நேரமின்றி பறந்து கொண்டிருக்கும் மனிதர்கள், இவ்வாறு தங்களுக்குத்

தவளை எதற்காகக் கத்துகிறதோ, அது
கிடைத்தாலும், தேடியது கிடைத்துவிட்டது
என்பது தெரியாமல், மீண்டும் தொடர்ந்து
கத்திக்கொண்டேயிருக்கும். எப்படி அலைகள்
ஓயாமல் இருக்கிறதோ, அதைப்போன்றுதான்
மனதில் எழும் கேள்விகளும்.
தேவையில்லாத, வாழ்க்கைக்கு முன்னேற்றமளிக்காத கேள்விகளுக்கு, நேரத்தைச் செலவளிக்க மாட்டார்கள். புத்திசாலிகளின் கேள்விகள், "ஏன் அடுத்த முறையும் இப்படி நிகழ்ந்தது? ஏன் இப்படி கோபப்படுகிறார்கள்?" என்பதாக இருக்காது.
"ஏன் என்னால் அடுத்தவருடன் இனிமையாகப் பழக முடியவில்லை? எதற்காக கோபப்படுகிறேன்? நான் ஞானமடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்ற ஆழ்மனத்தேடுதலாக இருக்கும். உண்மையை அனுபவமாக உணரத்துடிக்கும் கேள்விகள்தான் சந்தேகங்கள்.
டீக்கடையில் அமர்ந்து கொண்டு, அடுத்தவரின் மனத்தை ஆராயாமல், உங்கள் மனத்தை ஆராயத்தொடங்கினால் போதும். உங்கள் வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். வாழ்க்கையின் தீர்வுகளை வாங்கிக் கொள்வதற்கு, உங்களுக்குள் இருந்து வரக்கூடிய கரங்கள்தான் சந்தேகங்கள்.
சந்தேகத்திற்குக் கிடைக்கும் பதில்கள், வெறும் பதில்கள் அல்ல. அது வாழ்க்கைக்கான தீர்வுகள். நம்பிக்கை தரும் ஞான சூத்திரங்கள்.
அதனால்தான் நான் சொல்வதுண்டு, "ஜுணணணிஞினுண ளீடிண்குடி ணீடூது டிண் 1000 ணடிட்றுண் டூச்ணணுண ணடச்ண ச்ண டிஞ்ணணிணுாச்ண ளீடிண்குடிணீடூது."

மனம் ஒரு அரவை மிஷின் (எணூடிணஞீிணஞ் ்டீஞிடைடினு). அதற்கு ஏதேனும் ஒன்றை கேள்விகளாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மிக அழகாகக் கதை ஒன்றைச் சொல்வார். "கல்யாண விருந்தில் சாப்பாடு பரிமாறுவதற்கு முன் சலசலவென்று சப்தம் எழுந்து கொண்டேயிருக்கும்.
"பெண்ணிற்கு என்ன செய்தார்கள்? ஏன் மாப்பிள்ளை வீட்டார் இப்படி இருக்கிறார்கள்?" என்ற தேவையில்லாத கேள்விகளுக்கெல்லாம், மிக சுவாரஸ்யமாய் பதிலளித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உணவு பரிமாறப்பட்டதும், அடுத்தவர் இலையில் என்ன இருக்கிறது? என்பதைக்கூடப் பார்க்காமல், தங்கள் உணவை மிக சுவாரஸ்யமாக மென்று கொண்டிருப்பார்கள், ‘சப், சப்’ என்று உணவை மெல்லும் சப்தமே எழும்,” என்று சொன்னார்.
தன் இலைமேல் கை வைக்காத வரையில், சலசலவென்ற சப்தம்தான் கேட்கும்.
அதேபோன்று உங்கள் மனதில், உங்கள் கவனத்தை வைக்காத வரையில், “அடுத்தவருக்கு என்ன நடக்கிறது? உலகம் ஏன் இப்படி இருக்கிறது? நான் என்ன நினைக்கிறேன்,” என சொல்லத்தொடங்கி, வெட்டி பஞ்சாயத்துப் பேசி நேரம் வீணாகும்.
உங்கள் மனதில் கை வைக்க ஆரம்பித்ததும் ‘சப் சப்’ என்று உணவை ருசித்து சாப்பிடுவது போன்று, உங்கள் வாழ்க்கையில் ‘சப் சப்’ என்று ருசித்து ருசித்து சுவைக்கும் சப்தம்தான் கேட்கும்.
வேதனைகளின் சப்தம் கேட்காது.
தியானம்
இந்தத் தியானம் செய்வதற்கு இரண்டே இரண்டு நிமிடங்களே போதும் “வெளியுலக விஷயங்களில் தலையிடுவது போல், உள்ளுலக விஷயங்களில் தலையிட ஆரம்பியுங்கள்,” எனும் ஞானக் கருத்தை ஆழமாகத் தியானியுங்கள். வாழ்க்கைக்கான தீர்வுகள் கிடைக்கும்.