KAILASA Library/மனதைத் திற/மகாவாக்கியம்Sign in
மனதைத் திற

மகாவாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

‘‘அகங்காரம் உயிராற்றலைச் சுருக்கும்,’’

நீங்கள் அனுமதித்தால், ஆத்ம சக்தி புகுந்து உங்களை விரிவடையச் செய்தால்,

நீங்களும் பறக்கலாம். பலூன்போல் மிதக்கலாம் உள்ளுணர்வில்.

✦ தியானம் செய்யும் முனிவர் நிலத்திலிருந்து பறப்பார், என வரையப்பட்ட படங்களைப் பார்த்திருப்பீர்கள்.

அது தவறான வர்ணனை

நிஜத்தில்... உடல் தியானத்தால் உயராது. உடல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்கும்

ஆழ் தியானத்தில் ஆழ்ந்து போக,
அகங்காரம் அழிந்து போகும் நிமிடங்களில்...
உடலின் கனம் பற்றிய எண்ணம் மறைய மறைய,
நீங்கள் லேசாவீர்கள். லேசாக... லேசாக...
உயரே பறப்பதாய் உணர்வீர்கள்.

லெவிடேஷன் (ஃநூதிடிணச்கூணாடிணிண) என்றால் என்ன? -கனகசுப்பு. திண்டல்

"மனிதர்கள் ஒருபோதும் நடப்பதில்லை அவர்கள் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், முதலில்..." எனும் தாவோ கீத வரிகள் அர்த்தம் பொதிந்தவை.

மனிதர் நிற்கிறார் என்றுகூடச் சொல்ல முடியாது. நிலம் தடுப்பதால், அவர் நிற்கிறார்.

இல்லாவிட்டால், அவர் தொடர்ந்து கீழே சென்று கொண்டேயிருப்பார். காரணம், புவி ஈர்ப்பு விசை (எணூச்திடிணச்கூணாடிணிண ஞூணிணூஞிஞ).

ஒரு மனிதர் சும்மா நிற்பதற்கே, அவருடைய பாதி தசைகள் இயங்க வேண்டும். பாதி தசைகள் மட்டுமே ஒரு மனிதர் சும்மாயிருக்கும்போது, சும்மாயிருக்கும்.

அப்படிமட்டும் பாதித் தசைகள் சுருக்கப்படாமல் (ஞிணிணணூச்கூஞி ணாடிணிண) இருந்தால், மனிதர்கள் கீழே விழுந்துவிடுவார்கள். அவர்களால் நிற்க முடியாது, என மருத்துவம் சொல்கிறது.

மனிதரைக் கீழே விழாமல் காப்பது இரண்டு.

  1. தொடர் சுருக்கம்
  1. ஈர்ப்பு விசை.

இவையிரண்டையும் செய்ய மனம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். அகங்காரம் அதன் பங்குக்கு, "நீ கனமானவன் என்ற உணர்வைத் தரும்." விளைவு, மனிதர்கள் தங்களை ஒரு தனி திடப் பொருளாய் உணர்வார்கள்.

தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது, முதலில் மனம் அசைக்கப்படும். அடுத்து, உடலின் ஞானம் விழித்துக் கொள்ளும். மனம் முதல் முறையாய், அப்போது ஓய்வு பெறும். உடலானது, தன்னைத்தானே நிறுத்திக்கொள்ளவும், உட்கார வைக்கவும் செயல்பட ஆரம்பிக்கும்.

மனமும் அகங்காரமும் மறைய, புவி ஈர்ப்புவிசை பற்றிய உணர்வு துண்டிக்கப்படும். பூமி நோக்கி இதுவரை இழுக்கப்பட்ட மனிதர், மேல்நோக்கி இழுக்கப்படுவார். இந்தத் தியான அனுபவமே, ‘ஃஞதிடிணச்கணாடிணிண’ எனப்படும்.