மனவலி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வெளிநாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம்... .
“எனக்கு விவாகரத்து வேண்டும்,” என்று பிடிவாதமாகத் தம்முடைய குடும்ப வக்கீலிடம் அந்தப் பணக்காரப் பெண்மணி விவாதித்து கொண்டிருந்தார்.
குடும்ப வக்கீலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “ஏம்மா, உனக்கு அப்படி என்ன நிகழ்ந்தது? எனக்குத் தெரிந்தவரை உன் கணவரோடு நன்றாகத் தானே வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். இப்போது திடீரென்று என்னாயிற்று? காரணமே சொல்லாமல் இப்படி விவாகரத்துக் கேட்டால், யாரும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்குள் அப்படி என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.
அப்பெண்மணி, “அதெல்லாம் எனக்குத் தெரியாது... எனக்கு விவாகரத்து வேண்டும்,” என்று மீண்டும் சொல்ல, அந்த வக்கீலும் விடவில்லை.
“குறிப்பிட்டக் காரணத்தைச் சொன்னால்,
உங்களுக்கு விவாகரத்து கிடைக்க ஏற்பாடு
செய்வேன். இல்லையென்றால், என்னை
விட்டுவிடுங்கள்,” என்று சொன்னார்.
மனமும், செயலும்
வெவ்வேறாக
இருக்கிறது.
“காரணம் கேட்டால், நான் எதைச்
சொல்வேன்,” என்று அந்தப் பெண்மணி
யோசிக்கத் தொடங்கினார்.
வக்கீல், "ஏம்மா, உன் கணவர் உனக்குப் பணம் கொடுக்காமல் துன்புறுத்தினாரா?"
பெண்மணி, "இல்லை, இல்லை. நான்தான் அவருக்குப் பணம் தருவேன்."
வக்கீல், "அப்போது, உன்னை அடித்துத் துன்புறுத்தினாரா?"
பெண்மணி, "இல்லை, இல்லை. நான்தான் அவரை அடிப்பேன்,"
வக்கீல், "குழந்தைகளைச் சரியாக பார்த்துக் கொள்ளவில்லையா?"
பெண்மணி, "குழந்தைகளை அவர்தான் முழுவதும் கவனித்து வளர்த்து வருகிறார்."
வக்கீல், "உங்கள்மீது அன்பு செலுத்தாமல், வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறாரா?"
அதற்கு அப்பெண்மணி, "இல்லை, இல்லை. எனக்கு அவரை விடவும், அவர் நண்பரை மிகவும் பிடித்திருக்கிறது," என்று சொன்னார்.
வக்கீல், "அப்போது முறைப்படி பார்த்தால், அவர்தானே உங்களிடமிருந்து விவாகரத்துப் பெறவேண்டும். நீங்கள் கேட்கிறீர்களே?" என்று கேட்டார்.
ஆழந்து பார்த்தீர்களென்றால், புரிந்து கொள்வீர்கள். தவறுக்கான காரணத்தைத் தேடும் போதெல்லாம், நம் மனம் இதுபோன்ற காரணங்களைக் கண்டுபிடிக்கிறது. இதுபோன்ற தவறான காரணங்களுடன்தான் பெரும்பாலான நேரத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நாம் உண்மையில், உண்மையாக
வாழாமல் இருப்பதுதான் இதுபோன்ற
காரணங்களைத் தேடுவதற்கான காரணமே.
இதனால் மனமும், செயலும் வெவ்வேறாக இருக்கிறது. நாம் உண்மையில், உண்மையாக வாழாமல் இருப்பதுதான் இதுபோன்ற காரணங்களைத் தேடுவதற்கான காரணமே.
அப்போதுதான் வீட்டிற்குள் நுழைகிறீர்கள். "என்னங்க... நீங்க வெளில போயிட்டு வர்ற இந்த 10 நிமிஷத்துக்குள்ளே, 5 முறை உங்க நண்பர் போன் பண்ணிட்டார். ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயமாம்.
சார்கிட்ட உடனடியா பேசணும் என்று ரொம்ப பதைபதைப்பாப் பேசினார்," என்ற தகவலை வீட்டில் இருப்பவர்கள் தருகிறார்கள்.
உள்ளுக்குள் சென்று போனைக்கையில் எடுத்து, நண்பருடன் பேசு வதற்குள் என்னென்ன எண்ணங்கள் வந்து போகும். கவனித்திருக்கிறீர்களா?
எதுக்கு போன் பண்ணினானோ... உடனடியாக அவனுக்குப் பணம் தேவைப்படுதா?
இல்லை, எங்காவது போலீசில், வம்பில் கிம்பில் மாட்டிக்கிட்டானா? இல்லை...
ஒருவேளை ரவுடிக் கும்பலிடம் மாட்டிக் கொண்டானா?' என்று அந்த மூன்று நிமிடங்களில், போனைக்கையில் எடுப்பதற்குள் மூவாயிரம் எண்ணங்கள் நிகழ்ந்துவிடும்.
ஏன்?
எப்போதும் எதையும் முன்கூட்டியே தயாரித்து, தங்களைப்பற்றிச் சொல்ல, மனப்பாடமான வசனங்களால் இதுவரை வெளியுலகிற்கு காண்பித்து வந்த மனதிற்கு, இப்படி இடையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில், "எப்படிப் பேசுவது? எவ்வாறு நடந்து கொள்வது?" என்பது தெரியாத காரணத்தினால், வரும் தடுமாற்றம் இது.
ஒருமுறை இதுபோன்ற தயாரித்த வசனங்களைக் கொண்டு பேசலாம். மறுமுறை
உண்மை வெளிவரும்போது,
அதை ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் இல்லாத மனதால்
உருவாகுவதுதான்,
இந்த உறவுகளில்
ஏற்படும் விரிசல்களும்,
காதல் தோல்விகளும்.
சமாளிக்கலாம். ஆனால், அடுத்த முறை...?
உண்மை வெளிவந்துதானே ஆகவேண்டும். அப்படி உண்மை வெளிவரும்போது, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாத மனதால் உருவாகுவதுதான், இந்த உறவுகளில் ஏற்படும் விரிசல்களும், காதல் தோல்விகளும்.
என்னைப் பார்க்க, காதல் திருமணம் புரிந்த ஒரு தம்பதியர் ஆசிரமத்திற்கு வந்தார்கள்.
கணவர், "நான் காதலிக்கும்போது இருந்த பெண் அல்ல இவள். நான் காதலில் தோற்றுவிட்டேன். நான் ஏமாந்துவிட்டேன்," என்று சொன்னார்.
மனைவி, "என் கணவர் கல்யாணம் செய்வதற்கு முன், மிகவும் இனிமையாக இருந்தார். ஆனால் இப்போதோ, அதற்கு நேர் எதிராக இருக்கிறார். என்னால், இவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னை, இவர் நன்றாக ஏமாற்றிவிட்டார்," என்று சொன்னார்.
ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். யாரும், யாரையும் ஏமாற்றுவதில்லை. உண்மை தன்னால் வெளிப்படுகிறது. அவ்வாறு உண்மை வெளிவரும்போது, பிரச்சினை என்று நீங்கள் நினைப்பதுதான், எழுகிறது.
தலைக்கு மைபூசி, தலை நரையை என்னதான் மறைத்தாலும், மழையில் நனைந்தால், தண்ணீருடன் மையும் கரைந்துவிடும். உண்மையான வெள்ளைநிறம் வெளிப்பட்டுவிடும்.
அதுபோல், உண்மையான சுபாவத்தை, அழகான அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளால் மறைப்பது எளிது. ஆனால், அவசரம் எனும் எதிர்பாராத சூழ்நிலைகளில், அலங்கார வார்த்தைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். உண்மைச்

உண்மையான சுபாவத்தை, அழகான அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளால் மறைப்பது எளிது. ஆனால், அவசரம் எனும் எதிர்பாராத சூழ்நிலைகளில், அலங்கார வார்த்தைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். உண்மைச் சுபாவம் வெளிப்பட்டு விடும். சுபாவம் வெளிப்பட்டு விடும்.
இந்த உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
தன்னை மறைத்துக் கொள்வதற்காக மனம் செய்யும் தந்திரம்தான், இந்த மனவேலி. மனவேலி உங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்த விடாமல், திரைமறைவிலேயே வாழ வைக்கும்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், உண்மை சுபாவம் வெளிப்படுவதை, எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.
உண்மை வெளிப்படும்போது, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் மனவலிக்கு, மருந்தும் தீர்வும் நிகழ்காலத்தில் வாழ்வது ஒன்றுதான்.
உங்கள் மனவலி குறைவதோடு அல்லாமல், மனவலியைத் தாண்டும் சக்தியைப் பெறுவீர்கள். மனவேதனை போய், அருமையான மனிதர் எனும் மணம் வீசும் மனிதராக மலர்வீர்கள்.
ஆசைகளை வைத்திருப்பது சரியா? தவறா?
- தேஸ்வினி, பொள்ளாச்சி
ஆசைகளோடு இருப்பது, உங்கள் பிறப்புரிமை. ஆசைகள் இல்லாமல் இருப்பது, உங்கள் வாழ்க்கை உரிமை.
மனிதர்கள் பிறப்பதன் நோக்கமே, முந்தைய ஜென்மத்து ஆசைகளைப் பூர்த்திச் செய்து கொள்வதற்காகத்தான்.
ஓர் ஆசையைப் பூர்த்திச் செய்ய ஆரம்பித்து, ஓராயிரம் ஆசைகளுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். மீதி வாழ்க்கையை, அந்த மனிதர் வாழ்வதில்லை, அந்த ஆசைகளே வாழ்கின்றன.
வாழ்க்கை என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆசையிலிருந்து விடுதலை பெறுவதுதான் தவம், தியானம்.
ஆசைகளிலிருந்து விடுபடுங்கள். ஆசைகளைத் தாண்டிய ஆனந்தம் சொந்தமாகும்.
இதை முழுமையாக நீங்கள் செய்வதற்காகத்தான், ஞானிகள் மீண்டும், மீண்டும் அவதாரம் எடுக்கிறார்கள், போதிக்கிறார்கள், தியான சத்சங்கங்களில் பேசுகிறார்கள்.
- பிணம் மிதக்கிறது, மனிதர் மூழ்குகிறார்.
உயிரோடிருக்கும் மனிதருக்குள் இரண்டு பெரிய காற்றுப் பலூன்கள், நுரையீரல்களாக இருக்கின்றன. எனவே, இவர் மிதக்கவேண்டும். ஆனால், மூழ்குகிறார்.
இறந்த மனிதர் நிறைய நீர் குடித்து, மூச்சு வெளியேறியதால், உடலின் எடை இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கும். இந்த உடல் மூழ்க வேண்டும். ஆனால், மிதக்கிறது.
இது நிஜத்தில் நேர்மாறாயிருக்கிறதே. ஏன்? சிந்தியுங்கள்.
- ஜியார்ஜ் குருதீஃப் ஒரு மிகப்பெரிய ஞானி. அவருடைய ஆஸ்ரமத்தில் ஒரு நூதனமான டெக்னிக் வழக்கத்திலிருந்தது.
> இறந்த மனிதர் நிறைய
> நீர் குடித்து, மூச்சு
> வெளியேறியதால், உடலின்
> எடை இன்னும் கொஞ்சம்
> அதிகரித்திருக்கும்.
> இந்த உடல் மூழ்க வேண்டும்.
> ஆனால், மிதக்கிறது.
> ஏன்? சிந்தியுங்கள்.
அது, எப்போது வேண்டுமானாலும் அவர், 'Stop' என்ற கட்டளையைப் பிறப்பிப்பார். யார் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அந்த நிலையில் அப்படியே நின்றுவிட வேண்டும்.
மண்வெட்டியைத் தூக்கியவர் அப்படியே அதை அந்தரத்தில் பிடித்தபடி நிற்பார்... ஓடியவரின் ஒரு கால் காற்றிலும், ஒரு கால் நிலத்திலும் இருக்கும்...
இப்படி அவரவர், அந்தந்த நிலையிலேயே இருப்பார்கள். விழிப்புணர்வை அதிகரிக்கும் மிக வலிமையான தியானம் இது.
இது, குருவின் அடுத்த கட்டளை வரும் வரை, தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், அங்கிருக்கும் சீடர்கள்.
ஒருமுறை அருகே இருக்கும் ஆற்றிலிருந்து, சிறு வாய்க்கால் ஒன்றை ஆஸ்ரமத்திற்காக வெட்டிக்கொண்டிருந்தார்கள். அன்று மூன்று பேர் வாய்க்காலை வெட்டிக் கொண்டிருந்தபோது... 'குணணீணீ' என்ற கட்டளை வர, மூன்று பேரும் அந்தந்த நிலையில் உறைந்து விட்டார்கள்.
ஆனால், இன்று ஒரு புதுவம்பு. ஆற்றின் அடைப்பு பொத்துக்கொண்டது. வெட்டப்பட்ட வாய்க்கால் குழிக்குள் நீர் பரவ ஆரம்பித்தது.
நீர் மட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நீரின் அளவு வயிற்றளவிற்கு வந்ததும், முதல் சீடருக்கு பயம்வர, தலையில் இருந்த சட்டியைத் தூர எறிந்துவிட்டு கரையேறிவிட்டார்.
அடுத்து நீரின் அளவு கழுத்தளவை தொட்டதும், அடுத்தவருக்கு இலேசாக நடுக்கமெடுக்க, அவர் கையிலிருந்த கடப்பாரையை அப்படியே விட்டுவிட்டுக் கரையேறினார்.
மூன்றாமவர் உண்மையான சீடர். ஞானகுருவின் செயல்களில் ஞானசூட்சுமம் ஒளிந்திருப்பதைப் புரிந்துகொண்டவர்.
குருவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் தமக்கு, நிகழ்வதெல்லாம்

குருவின் அடுத்த கட்டளை வரும் வரை,
தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள
மாட்டார்கள், அங்கிருக்கும் சீடர்கள்.
தியானமுறைகளே என்று உணர்ந்த அந்தச் சீடரால், நீர்மட்டம் முக்களவிற்கு வந்தபின்கூட அப்படியே இருக்க முடிந்தது.
நீரின் மட்டம் அதிகரிக்க... அதிகரிக்க, சீடருடைய விழிப்புணர்வின் அளவும் அதிகரித்தது. காரணம், அந்த மொத்தச் சூழலும் மனத்தை ஸ்தம்பிக்கச் செய்யுமளவுக்கு நூதனமானது, விசித்திரமானது.
நீரின் மட்டம் மூக்கைத் தாண்டி, நெற்றியைத் தாண்டி, தலையையும் தாண்டியது... அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது!
அந்தச் சீடர் நீரில் மிதந்தார். விழிப்புணர்வின் உச்சியைத் தொட்டு ஞானமடைந்து விட்டார். உயிரோடிருந்தும் மூழ்கவில்லை.
எப்படி? விடைக்கான கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
- ஒரு பிறந்த குழந்தையைவைத்து, பெற்றோர் மற்றும் அரசு அனுமதியோடு இந்த ஆய்வு ஜப்பானில் செய்யப்பட்டது.
பிறந்த குழந்தையை மிக ஜாக்கிரதையாக நீருக்குள் விட்டார்கள். அடுத்து நிகழ்ந்த ஆச்சரியத்தை நம்புவது மிகக் கடினம்.
நீருக்குள் விடப்பட்ட குழந்தை நீந்த ஆரம்பித்து விட்டது. ஒரு மீன்போல, அந்தக் குழந்தையால் நீரில் மிதக்கவும், நீந்தவும் முடிந்தது.
- தாயின் கர்ப்பப்பையில் ஒரு மீன் போல் நீருக்குள்ளேயே வாழ்ந்தவர்தானே நீங்கள்.
மிதந்தவர்தானே நீங்கள்!
அதுவுமில்லாமல் புத்தரின் கூற்றுபடி,
"ஒரு மனிதருக்குள் எல்லா மிருகங்களின்
குணாதிசயங்களும் ஒளிந்திருக்கிறது."
படிப்பவதற்கு இது புதுச் செய்தியாக இருந்தாலும், இது பூரணமான உண்மையே.
எல்லா மனிதர்களாலும் எளிதாய் மிதக்க
புத்தரின் கூற்றுபடி
""ஒரு மனிதருக்குள்
எல்லா மிருகங்களின்
குணாதிசயங்களும்
ஒளிந்திருக்கிறது."
முடியும். ஆனாலும், அவர்கள் மூழ்குகிறார்கள்.
காரணம், அகங்காரம். அகங்காரம் அதிகமாக... அதிகமாக, மனிதர்கள் கடினத்தன்மை மிகுந்தவராகிறார்கள்.
60 கிலோ எடையுள்ள இருவரில், திமிர்பிடித்தவர் பார்ப்பதற்கு மிகவும் கடினமானவராய்த் தெரிவார். எளிமையாய் வாழும் இன்னொருவர், பூப்போல மென்மையாக இருப்பார். இதைக் கவனித்திருக்கிறீர்களா?
இந்த வேறுபாடு அகங்காரத்தின் வேறுபாடுதான்.
குழந்தைக்கு, அகங்காரம் இன்னும் உருவாகவேயில்லை. அதனால் மிதக்க முடிகிறது.
ஜியார்ஜ் குருஜீஃபின் சீடர், அகங்காரம் மறைந்து ஞானமடைந்ததும், அதுவரை செங்குத்தாக நின்றுகொண்டிருந்தவர் மிதக்க ஆரம்பித்துவிட்டார்.
அகங்காரமுள்ள சாதாரண மனிதர் மூழ்குகிறார்.
அகங்காரத்தின் உறைவிடமான மனம் இல்லாது போன பிணம், மிதக்கிறது, உடலின் எடை அதிகரித்த பின்னும்!
இப்போது புரிகிறதா... அகங்காரம் எவ்வளவு வலிமையானது என்று?
அகங்காரம் மிக சூட்சுமமானது.
அது புரிந்துகொள்ளப்பட்டு, மனதிடமிருந்து துடைத்தெறியப்பட வேண்டியது.

> அகங்காரமுள்ள சாதாரண மனிதர் மூழ்குகிறார். > அகங்காரத்தின் உறைவிடமான மனம் இல்லாது > போன பிணம், மிதக்கிறது, > உடலின் எடை அதிகரித்த பின்னும்!
ஒரு தியான அறிமுக முகாமில் இப்படி ஒருவர் கேட்டார்... “தியானம் செய்தால் உடலின் அதிக எடை குறையுமா?’’
“தொடர்ந்து செய்யும் தியானம், நிச்சயம் உடலின் அதிக எடையைக் குறைக்கும்.
இன்னொரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்... உடலின் அதிக எடை உங்களைக் கஷ்டப்படுத்துவதைவிட, உங்களைக் கஷ்டப்படுத்துவது, உங்களை கடினமாய் உணரச் செய்வது அகங்காரம்தான்.
உஞ்ணி டிண் தீஞுடிஞ்டண.
தியானம் அகங்காரத்தைக் குறைக்கும்.
எனவே, உடலின் அதிக எடை குறையும் முன்பே, நீங்கள் இலேசாக உணர ஆரம்பிப்பீர்கள்,’’ என்றோம்.
உங்களின் அகங்காரம் குறையக் குறைய, ஒரு காற்றைப் போல உணர்வீர்கள்.
அகங்காரம் முழுமையாய் கரைந்து நீங்கள் ஞானமடைந்து விட்டால், சாதாரண நடையில்கூட எடையற்றவராக நீங்கள் உணர்வீர்கள்.
அது மிதப்பது போலவும், பறப்பது போலவும், உங்களால் உணரப்படும்... அந்த ஆனந்த அனுபவம், மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் அனுபவித்துப் பார்க்க வேண்டியது.
அதனால்தான், “ஞானிகளின் நடை, நடையல்ல நடனம்,’’ என்போம். அகங்காரம் மறைந்தபின், மனிதர்கள் வாழும் வாழ்வுதான் மகத்தானது.
உங்களின் வாழ்வு பிறக்க, அகங்காரத்தைக் கரையச் செய்யுங்கள்.
இனிமேல் அகங்காரம் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இனிமேலும் கடினமாவதை அது, தடுக்கும். அகங்காரம் கரையும். உங்களாலும் மிதக்கவும் முடியும். பறக்க முடியும்.
✦ பலூனை ஊதி
ஓரிடத்தில் உட்காரவைத்தால்,
அது பறக்கவே முயற்சிக்கும்.
பாறாங்கல்லைக்கூட பிடித்திழுக்கும் புவிஈர்ப்பு சக்திக்கும், டாட்டா சொல்லிப் பறக்க முடியும், பலூனால்.
சுருங்கிய காற்றில்லாப்
பலூனால், முயற்சித்தாலும்
பறக்க முடியாது.
ஊதிய பலூன் பறக்கலாம்...
தன்னை விரிவடைய, அது
அனுமதித்தால்.