கொடுப்பதில்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபின், அதிபர் ஜான் கென்னடி பேசிய முதல் சில வார்த்தைகள்...
"நாடு உனக்காக என்ன செய்யும் எனப் பார்க்காதே! நீ நாட்டுக்காக என்ன செய்யலாம் எனப் பார்!"
அது அன்பாகட்டும், இல்லை அறிவாகட்டும், இல்லை பணமாகட்டும், மனிதர்கள் கொடுப்பதைவிட, வாங்குவதிலேயேதான் குறியாயிருக்கின்றார்கள். இது ஆரோக்கியமற்றது.
ஆனந்த வாழ்வு கல்விபயிலும் மாணவர் ஒருவர், "வள்ளல், வாழத்தெரிந்தவர்... என ஓரிடத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.
நம்மிடம் இருப்பதையெல்லாம் வாரி வாரிக் கொடுத்தால், நாம் ஓட்டாண்டியாகி விடமாட்டோமா?" எனக் கேட்டார்.
செலவு செய்யச் செய்ய
லாபம் ஈட்டிடும் ஒரே
தொழில்,
அன்பு செய்தல்.
இந்தத் தொழிலில்
"செலவு செய்யச் செய்ய லாபம் ஈட்டிடும் ஒரே தொழில், அன்பு செய்தல். இந்தத் தொழிலில் செலவு செய்வதே முதலீடு.
மொத்த உலகில், இந்த ஒரேயொரு தொழிலுக்குத்தான் வேலைவாய்ப்புகள் மிக அதிகம்.
அதேபோல், இந்தத் தொழிலுக்கு மட்டும்தான் வேலையாட்கள் குறைவு.
அன்பில் வள்ளலானால்... "இந்த உலகத்துக்கே நான் அரசன்!" எனும் சிறு பதவியில் அமர்த்தப்படமாட்டீர்கள்.
"இந்தப் பிரபஞ்சத்துக்கே நான் அரசன்!" எனும் ஆனந்த சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவீர்கள்.
இந்த வள்ளல் ஓட்டாண்டியாக மாட்டார். ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாக மாறிவிடுவார். அந்தச் சொற்பொழிவைத் திரும்பக் கேளுங்கள்," எனச் சொன்னோம்.
"கேட்டால் முழுக்கக் கேள். இல்லையேல் கேட்காதே!" எனும் ஜென் வாச கம், இந்த மாணவரின் மனசிக்கலை தீர்க்க வல்லது.
பொதுவாக மனிதர்கள் அவர்கள் படிக்கும், கேட்கும் கருத்துகளில் தங்களுக்குப் பிடித்த சில வரிகளை மட்டுமே பிடித்து வைக்கிறார்கள்.
ஓரிரு வரிகளை மட்டுமே மனதில் ஒட்ட வைத்தால், அது விஷச் செடியாக மட்டுமே வளரும். அகங்காரப் புதரைப் பெரிதாக்கும்.
அன்பைப் பற்றி பேசியச் சொற்பொழிவை, பணத்தின் கோணத்தில், தம் மனத்துக்கு ஏற்றபடி பிடித்து வைத்ததால்தான், நேருக்கு மாறாய் புரிந்து கொண்டுவிட்டார் அந்த மாணவர்.
அந்த மாணவருக்கு மட்டுமல்ல, வாழ்க்கை எனும் பாடத்தைப் பயிலும்

பொதுவாக மனிதர்கள் அவர்கள் படிக்கும், கேட்கும் கருத்துகளில் தங்களுக்குப் பிடித்த சில வரிகளை மட்டுமே பிடித்து வைக்கிறார்கள்.
ஓரிரு வரிகளை மட்டுமே மனதில் ஒட்ட வை த்தால், அது விஷச் செடியாக மட்டுமே வளரும். அகங்காரப் புதரைப் பெரிதாக்கும்.
ஒவ்வொரு மனிதருக்கும் வரக்கூடிய பிரச்சினைதான் மேற்சொன்ன பிரச்சினை. படிப்பதிலும், கேட்பதிலும், பார்ப்பதிலும் ஒரு சிறு பகுதியை மட்டும் மனத்தில் இறுக்கி பிடித்துக் கொள்வது மன ரீதியான கஞ்சத்தனம்.
ஒரு முறை பரத ரிஷியிடம் புலவர் ஒருவர் கேட்டபோது...
- யார் கஞ்சன்?
கொடுக்க மறுப்பவர்.
- யார் வள்ளல்?
நிச்சயம், அள்ளி அள்ளிக் கொடுப்பவர் அல்ல.
- அப்புறம் யார்...
'நான் கொடுக்கிறேன்' எனும் அகங்கார உணர்வுகூட இல்லாமல், தம்மிடம் இருப்பதை மனதாரப் பகிர்ந்து கொள்பவரே அந்த வள்ளல்.
உலக ரீதியான கஞ்சத்தனம் இருந்தால், மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மன ரீதியான கஞ்சத்தனம் இருந்தால், பாதிப்புக்குள்ளாகப்போவது மற்றவர்களல்ல. நிச்சயம் நீங்கள்தான்!
மன ரீதியான கஞ்சத்தனம் கொண்டிருப்பவர்கள்தான்...
“நாடு எனக்கு என்ன செய்யும்?”
“வீடு எனக்கு என்ன செய்யும்?” “நீ எனக்கு என்ன செய்வாய்?”
என எதிர்பார்த்தவண்ணம் ஏங்கித் திரிவார்கள்.
மன ரீதியான வள்ளல்கள், “தன்னால்
என்ன கொடுக்க முடியும் எனச் சிந்தித்து
செயல்பட்டு ஆனந்தத்தைச் சந்திப்பார்கள்.”
மன ரீதியான
கஞ்சத்தனம் இருந்தால்
பாதிப்புக்குள்ளாகப்
போவது மற்றவர்களல்ல.
நிச்சயம்
அன்றைய உரையாடலின் முடிவில், அந்த மாணவர், "நான் வள்ளலாக வழி சொல்லுங்கள்," எனக் கேட்டபோது...
"எதில் வள்ளலாக வேண்டுமானாலும் அதில் முழுமையாக வேண்டும்.
ஆனால், அன்பில் வள்ளலாக... மனத்தைக் காலி செய்யுங்கள். அதுவே, போதுமானது.
மனதில் உங்களுக்கு ஒத்துவரும் கருத்துகளை மட்டும் கஞ்சத்தனமாக பிடிப்பதை நிறுத்தினால்...
மற்றவர்களைப் பற்றிய கெட்ட அபிப்ராயங்கள், வாழ்க்கையின் துக்கப் பகுதிகள், சச்சரவுகளைக் கிண்டிவிடும் கருத்துகள் மனதில் நிற்காது.
இவை மனதில் தங்காமல் சென்றால்... ஏற்கெனவே, நீங்கள் ஒரு பால் நிலவு. அதை மறைக்கும் இந்த மேகங்கள் மறைந்தால், உங்களிடமிருந்து ஆனந்த ஒளி வீசும், மகிழ்ச்சிக் காற்று வீசும், சந்தோஷ சப்தங்கள் பறக்கும்," எனச் சொன்னேன்.

எதில் வள்ளலாக வேண்டுமானாலும் அதில் முழுமையாக வேண்டும்.
ஆனால், அன்பில் வள்ளலாக...
மனத்தைக் காலி செய்யுங்கள்.
அதுவே, போதுமானது.
டிராஃபிக்ஜாம்
நரம்புகளின் நுனிகளில் ஏற்படும் டிராஃபிக்ஜாமுக்குப் பெயர், ‘உடல்சோர்வு.’ மனதின் எண்ண ஓட்டப்பாதைகளில் ஏற்படும் டிராஃபிக்ஜாமுக்குப் பெயர், ‘மனசோர்வு.’
‘‘நான் முந்தி, நான் முந்தி,’’ எனப் போட்டிபோடும் வாகனங்களை ஓடவிட்டால்... டிராஃபிக்ஜாம் சரியாகிவிடும்.
அதேபோல், எதைப்பற்றியும் ஒரு அபிப்ராயம் சொல்ல முந்திக்கொள்ளும் மனக்கருத்துகளைக் கவனமாய்ப் பாருங்கள்.
அதில் பெரும்பான்மை, உங்களின் மனக்கோணத்தில் பிடிக்கப்பட்டக் கருத்துகளாகவே இருக்கும்.
முந்தி வரும் விஷக்கருத்துகளை, தந்தி வேகத்தில் பிடித்து வெளியே எறியுங்கள்... மனதின் ஓட்டம் சீராகும்,
அது சீரான மறுகணமே, நரம்புகளின் நுனியில் முந்திக் கொண்டிருக்கும் கெமிக்கல்கள், பின்வாங்க ஆரம்பிக்கும். காரணம், உடலும் மனமும் பிரிக்க முடியாக் கலப்பினங்கள்!
முந்துவதை முந்துங்கள், உடலும் மனமும் உற்சாகமாகும்.