KAILASA Library/மனதைத் திற/தேவர்களாகுங்கள்Sign in
மனதைத் திற

தேவர்களாகுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* ஓம்காரீஸ்வரர் மலைக்குகைகளில் தவம் செய்து கொண்டிருந்த காலம் அது.

ஒருநாள், பொழுது முழுதாய்ச் சாய்ந்த மங்கலான வெளிச்சத்தில், இயற்கையை ரசித்தப்படி சிறு மலைக் குன்றில் அமர்ந்திருந்தேன். ஆள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில், தூரத்தில் இருக்கும் மரத்தடியிலிருந்து, வயதான ஒருவர் கம்பளியைப் போர்த்திக் கொண்டு, என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆளில்லாப் பகுதியில், புதிதாய் ஒருவரைக்கண்டதும், ஆச்சரியமடைந்தேன். "யார் அவர்? அவருக்கு என்ன வேண்டும்? வழிதவறி இங்கு வந்துவிட்டாரோ?" எனச் சிந்தித்தபடி குன்றிலிருந்து குதித்தேன்.

குதித்தபின்தான் தெரிந்தது, அது மனிதர் அல்ல, கரடி!

இருள் அதிகமாக இருந்ததால், இரண்டு
காலில் நடந்து வந்த கரடி, மனிதர் போல
தென்பட்டது.

எனக்கும் கரடிக்கும் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தது. என் உடலைக்

எனக்கும் கரடிக்கும்
சில அடிகள் மட்டுமே
இடைவெளி இருந்தது. என்
உடலைக் கரடியிடமிருந்து
காப்பாற்ற, எந்த வழி

கரடியிடமிருந்து காப்பாற்ற, எந்த வழிவகையும் புரியவில்லை.

காரணம், என் முன்னால் கரடி. பின்னால் பாறை!

அந்த நிமிடத்தில், என்னுள் பதட்டம் இல்லாமல் இருக்க முடிந்ததால், தெளிவாய் யோசிக்க முடிந்தது. தளர்வாய் இருக்க முடிந்தது.

என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது ஆழமாய்ப் புரிந்ததால்... அந்தக் கரடியை நேருக்கு நேராகப் பார்த்தேன், எந்தச் சலனமுமில்லாமல்!

சில நொடிகள் கரடியும் என்னைப் பார்த்தது! பின் தலையை இடது புறமும், வலது புறமும் ஆட்டிவிட்டு, சட்டென திரும்பிச் சென்றது.

“எனக்கு எந்தப் பாதகமும் செய்யாமல் அந்தக் கரடி சென்றது எப்படி?” என்பது அந்த நிமிடத்தில் எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது!

✦ ஒரு ஜென் ஞானி சீடர்களோடு அமர்ந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.

அந்தக் கூட்டத்துக்குள் திடீரென மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்து விட்டது.

ராஜநாகத்தைப் பார்த்த பீதியில் கூட்டம் கலைந்தோடியது.

தப்பித்தோடும் சீடர்களோடு, ஜென் ஞானியும் வேக வேகமாக ஓடினார்.

Sadhguru gesturing

அவசர, அபாய சூழ்நிலை உருவானதும், சரியாகச் சிந்திக்க முடியாமல், பீதி தூண்டத் தப்பித்தோடுவது, மனக்குழப்பத்தின் வெளிப்பாடு. இது நரம்பு மண்டலத்திற்குக் கெடுதி. இதனால் உயிர்ச்சக்தி விரயமாகும்.

நிதானத்தோடு, அமைதியின் உச்சத்தில் வாழும் ஞானியும், தங்களைப் போலவே தப்பியோடுவது, சீடர்களுக்கு மிகவும் புதிரான ஒன்றாகத் தோன்றியது, சந்தேகத்தைக் கிளப்பியது.

கடைசியாக ஒரு மரத்தடிக்கு வந்து எல்லோரும் ஓய்வாக அமர்ந்ததும், ஒரு சீடர், "நாங்கள் பயந்தோடுவது நியாயமானது. ஞானமடைந்த நீங்களும் பயந்தோடினால், அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?" என படபடக்கும் குரலில் கேட்டார்.

ஜென் ஞானி, "நீங்கள் பயந்தோடினீர்கள். நான் தப்பித்தோடினேன்.

நான் உடலைக் காப்பாற்ற ஓடினேன். நீ பீதியால் தூண்டப்பட்டு ஓடினாய். அதனால்தான், நான் ஓடும்போதும், இங்கு வந்தபின் நிம்மதியாகவே இருக்கிறேன். நீங்கள் இன்னும் படபடப்பிலேயே இருக்கிறீர்கள்."

உடலைக் காப்பாற்றுவதற்காகச் சிந்தித்துச் செயல்படுவதும், தப்பிப்பதும் நம் தெளிவின் வெளிப்பாடு. இது தேவையான நடவடிக்கை.

அவசர, அபாய சூழ்நிலை உருவானதும், சரியாகச் சிந்திக்க முடியாமல், பீதி தூண்டத் தப்பித்தோடுவது மனக்குழப்பத்தின் வெளிப்பாடு. இது நரம்பு மண்டலத்திற்குக் கெடுதி. இதனால் உயிர்ச்சக்தி விரயமாகும். மனிதர்கள் இதிலிருந்து மீள வேண்டும்.

  • ஓம்காரீஸ்வரர் மலைக் கரடி என்னைத் தாக்காமல் சென்றது எப்படி? என்ற கேள்விக்கு... சமீபத்தில் அறிவியல் பூர்வமான விளக்கம் ஒன்றைப் படித்தேன்.

விலங்குகளை வளர்ப்பது பற்றி மிக அழகாக விளக்கும் புத்தகம் அது.

மனிதர்களைப் போன்றே, விலங்குகளுக்கும் உள்ள தனிப்பட்ட உணர்வுகள், குணங்கள், விருப்பங்கள் பற்றி அப்புத்தகத்தில் அழகாக விளக்கியிருந்தார்கள்.

உடலைக் காப்பாற்றுவதற்காக
சிந்தித்து செயல்படுவதும்,
தப்பிப்பதும் நம் தெளிவின்
வெளிப்பாடு.
இது தேவையான நடவடி

“ஒரு விலங்கு நம்மைத் தாக்க, நம் உடலில் இருந்து வெளிப்படும் ஒரு குறிப்பிட்ட வாசனைதான் காரணம்.

பயம் நம்மைப் பற்றியதும், நம் உடலுக்குள் பல மாற்றங்கள் நிகழ்கிறது. பயம் வரும்போது நம் உடலில் இருந்து வெளிப்படும் குறிப்பிட்ட வேதிப்பொருளின் வாசனை, அருகே உள்ள மிருகத்தைச் சீண்டுகிறது.

விளைவு - மிருகங்கள் மனிதரைத் தாக்குகிறது, ” எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

தொடர்ந்து செய்த தியானங்கள், என்னுள் நிதானத்தை முழுமையாக மலர்ச்செய்திருந்தது.

பயத்தாக்குதல் இல்லாத ரம்யமான உணர்வு நிலையிலேயே வாழ ஆரம்பித்தபின்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது. கரடியைப் பார்த்ததும் என்னுள் பயத்தாக்குதல் நிகழவில்லை.

உடலில் பயத்தாக்குதல் நிகழாத அளவுக்கு நிதானத்தை நம்முள் பெருக்கிவிட் டால்... நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கமாட்டோம். நம்மையும், மற்றவரையும் சங்கடத்தில் ஆழ்த்தும் தேவையற்ற வேதிப்பொருட்களும், ஹார்மோன்களும் நம்முள் சுரக்காது.

Nithyananda

உடலில் பயத்தாக்குதல் நிகழாத அளவுக்கு
நிதானத்தை நம்முள் பெருக்கி விட்டால்...
நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும்
பாதிக்கமாட்டோம். நம்மையும், மற்றவரையும்
சங்கடத்தில் ஆழ்த்தும் தேவையற்ற
வேதிப்பொருட்களும், ஹார்மோன்களும்
நம்முள் சுரக்காது.

பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லும் அருமையான வாழ்வியல் தத்துவம் ஒன்று "வன்முறை துளியுமில்லா மனிதரின் அருகாமை, மிருகங்களைக்கூட ஆனந்தமடையச் செய்யும்."

உங்களிடம் உள்ள வன்முறை, தடுமாற்றம் ஆகியன உங்களின் கவனத்திற்குத் (அதாவது மேல் மனத்தின் கவனத்திற்கு) தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அவை தொடர்ந்து உங்கள் உடலில் இரசாயன மற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

* உங்களின் அருகாமையை மனிதர்கள் எப்படி உணர்கிறார்கள்?

* பயம், கோபம், காமம், வெறி போன்ற உணர்வுகள் உங்களை ஆட்கொண்டிருக்கும்போது உங்களிடமும், மற்றவர்களிடமும் அவை என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன?

உடல் மாற்றங்கள், வாசனைகள், ஐந்தறிவு மிருகத்தையே பாதித்தால், ஆறறிவு படைத்த உங்களின் சுற்றத்தாரை எவ்வளவு பாதிக்கும். சிந்தியுங்கள்.

உங்கள் வீடு உங்களுக்கு சொர்க்கமா? நரகமா?

பதில்: உங்களின் நல்ல கெட்ட பாதிப்புகளைப் பொறுத்தது.

வீடு சொர்க்கமாக மாற...

நீங்கள் தேவர்களாக வேண்டும். தேவர்களாக நீங்கள் மாற, உங்களின் அருகாமை மற்றவரை ஆனந்தத்துக்குள் ஆழ்த்தும் அளவுக்கு, நீங்கள் அருமையானவராக, எளிமையானவராக மாற வேண்டும்.

நீங்கள் இருக்குமிடத்தை ஆனந்த மயமாக்கும் சொல், செயல், பாவனைகளைத் தியானியுங்கள், வெளிப்படுத்துங்கள், தேவர்களாவீர்கள்.