KAILASA Library/மனதைத் திற/மகா வாக்கியம்Sign in
மனதைத் திற

மகா வாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"உணர்ச்சிவசப்படாதீர்கள், உணர்ச்சிமயமாகுங்கள்."

கிருஷ்ணருக்கும்
கோபம் வரும்,
புத்தருக்கும்
பாசம் வரும்,
அன்பு பொங்கும்.

கிருஷ்ணரும், புத்தரும்
பித்தனாக மாட்டார்கள்.
உணர்ச்சிப்பதிவுகள் எனும்
பித்தம் ஏறவிடமாட்டார்கள்.

நம்மூர் மனிதருக்கும்
கோபம் வரும்...
பாசம் வரும்... பொங்கும்.
பித்தம் தலைக்கேற,
பித்தனாவார் அந்த நிமிடத்திற்கு.

காரணம்,
உணர்ச்சிகள் வருவதும்
அவர் கட்டுப்பாட்டில் இல்லை.
அது போவதும்
அவர் கட்டுப்பாட்டில் இல்லை.

உணர்ச்சிகள் வரும்போது,
உணர்ச்சிவசப்படாதீர்கள்.
உணர்ச்சிமயமாகுங்கள்!
உணர்ச்சிகளின் உச்சம் தொடுங்கள்!
உணர்ச்சிகள் பதிவாகாது.

ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன என் சகோதரரைப் பற்றிய

நினைவுகள் என்னை வாட்டுகிறது. என் சகோதரனின் ஆவி செய்யும் வேலையா இது?

-மேனகா, பூண்டி

இந்த ஐந்து வருடங்களுக்குள், உங்களுக்குத் தெரிந்த பலர் இறந்திருப்பார்கள். அவர்களின் நினைவுகள் உங்களைத் தொந்தரவு செய்யவில்லையே. அவர்களின் ஆவிகள் மட்டும் நாகரிகமாக நடந்து கொள்வதேன்.

மற்றவர்கள், உங்கள் மனதில் குடியிருக்கும் சாதாரண மனித உருவங்கள். உங்கள் சகோதரர் மீது நீங்கள் கொண்டிருந்த அதீத பாசம் எனும் உணர்ச்சிப்பதிவின் செறிவு அதிகம் .

அதனால்தான் ஐந்து வருடங்களாகியும் விடுபட முடியாமல் தவிக்கிறீர்கள்.

இதற்குத் தீர்வு, சகோதரரை வெறுப்பது அல்ல. வெறுத்தால் அது இன்னொரு உணர்ச்சிப்பதிவாக மாறிவிடும். அவரின் நினைவுகளை அசையாமல் பிடித்திருக்கும் இன்னொரு நங்கூரமாக மாறிவிடும்.

தீர்வு...

சகோதரரைப்பற்றிய நினைவுகள் வரும் நிமிடங்கள்தான் முக்கியமானவை.

அவை வந்து, உங்களைத் துக்கத்தில் ஆழ்த்தும்வரை அனுமதிக்காதீர்கள். அமைதி காக்காதீர்கள்.

சகோதரரைப்பற்றிய சாதாரண நினைவுகள்தான் முதலில் வரும். அதுதான் விதை.

அது ஆரம்பிக்கும் போதே, கவனிக்க ஆரம்பியுங்கள்.

அந்த உணர்ச்சிப்பதிவுகள் உங்கள் மன நிம்மதியை கவ்வும் முன், உங்கள் விழிப்புணர்வால் அதைக் கவ்வுங்கள்.

தொடர்ந்து இந்தத் தியானத்தை செய்யுங்கள். சில நாட்களிலேயே வேதனை தரும் உணர்ச்சிப்பதிவுகள் எரிந்து ஆவியாகிவிடும். ஆவித்தொல்லை நின்றுவிடும்.

ஒரு அம்மா ஆஸ்ரமத்திற்கு வந்தார். “ஒவ்வொரு நாளும், ‘நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்’ னுதான் தோணுது. எழுந்ததும் தோணும் முதல் எண்ணமே இதுதான்.

அதோடுதான் என் பொழுதே தொடங்குகிறது. ஒவ்வொருமணி நேரமும் நேரம் ஆக, நேரம் ஆக நரக வேதனையாக இருக்கிறது. என்னோட பிரச்சினைக்குத் தீர்வே கிடையாதா?” என்று கேட்டார்.

“என்னம்மா உங்கள் பிரச்சினை...

உங்கள் பிரச்சினைகளை முதலில் தெளிவாகச் சொல்லுங்கள். அப்போதுதான், உங்களுக்கு என்னால் முடிந்த தீர்வை தர முடியும்,” என்று சொன்னோம்.

அப்போது அந்த அம்மா சொன்னார்,
“ஒன்றா, இரண்டா - எதைன்னு சொல்வேன்.
எல்லாமே பிரச்சினைதான்.

நான் எதைச் செய்தாலும் அது
வினையாகிவிடுகிறது. நான் ஓர் அதிர்ஷ்டம்
இல்லாதவள். என்னை ஒதுக்குகிறார்கள்.
ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில்
இருக்கிறேன்,” என்று அழத் தொடங்கினார்.

உங்கள் பிரச்சினைகளை
முதலில் தெளிவாகச்
சொல்லுங்கள்.

அப்போதுதான், உங்களுக்கு
என்னால் முடிந்த தீர்வைத்
தர முடியும்

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். இது ஏதோ ஒருவரின் பிரச்சினை அல்ல. பெரும்பாலானோரின் பிரச்சினையும் இதுதான்.

"நரக வேதனையாக இருக்கிறது. எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது," என்று சொல்வதெல்லாம், ஒரே ஒரு புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இருப்பதனால்தான்.

உண்மையில் நாம் நரகத்தில் வாழ்வதும் அல்லது சொர்க்கத்தில் வாழ்வதும், நம் கையில்தான் இருக்கிறது. சொர்க்கத்தில் வாழ்வதென்றால் ஏதோ இறந்த பிறகு வாழும் வாழ்க்கை கிடையாது.

நரகத்தையும், சொர்க்கத்தையும் நாம்தான் உருவாக்குகின்றோம். எங்குச் சென்றாலும், நாம் வசிப்பதற்கு இந்த இரண்டையும் உடன் எடுத்துச் செல்கிறோம்.

நரகங்கள், சொர்க்கங்கள் என்பது வேறொன்றுமில்லை. நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும் எண்ண ஓட்டங்கள், மந்திரங்கள் போன்று அவை மீண்டும் மீண்டும் நமக்குள் உருவாக்கும் உணர்ச்சிகளின் தொகுப்பு, எண்ணங்களின் தொகுப்புதான் நம் மனம்.

எறும்புகள் உணவு சேகரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். எறும்புகளைப் பார்த்தீர்களென்றால், அவை கூட்டம் கூட்டமாக வாழும்.

உணவு இருக்கும் இடம் தேடி, வேலைசெய்யும் எறும்புகள் ‘ஙிணிணூடுஞணூ ச்ணணண்’ எனப்படும் எறும்புகள் முதலில் செல்லும்.

portrait of spiritual teacher

நரகங்கள், சொர்க்கங்கள்

என்பது வேறொன்றுமில்லை.

நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும்

எண்ண ஓட்டங்கள்.

உணவிருக்கும் இடத்தை அடைந்ததும், அங்கிருக்கும் மிகுதியான உணவிலிருந்து சில துணுக்குகளை மட்டும் மாதிரி உணவாக எடுத்து வரும்.

உணவு இருக்கும் இடத்திலிருந்து, தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை நோக்கித் திரும்பும் வழியில், குறிப்பிட்ட இடைவெளிவிட்டு, இந்த வேலை செய்யும் எறும்புகள் ,ஒரு குறிப்பிட்ட வரைபடத்தை கோடாக வரைந்து கொண்டே செல்லும்.

எறும்புகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து
டூபர்சுரபி (ஈதஞூணிதணூ ஞ்Patentஞீ) எனும்
சுரப்பி இருக்கிறது.

இந்தச் சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம், பிசுபிசுப்புத்தன்மை வாய்ந்தது.

வேலை செய்யும் எறும்புகள் தங்கள் இடம் நோக்கித் திரும்பும்போது, இந்தத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம் இடைவெளி விட்டு ஒரு கோடாகக் குறிக்கப்பட்டு வரும்.

தங்கள் இருப்பிடத்தை அடைந்ததும், தங்கள் சக நண்பர்களிடம் உணவு இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலையும் துணுக்கு உணவினைப் பற்றிய தகவலையும் பரிமாறிக் கொள்ளும்.

பின் சக நண்பர்களோடு, கூட்டாகச் சேர்ந்து, உணவு இருக்கும் இடம் தேடி, அதே வரிசையில் செல்லும். அந்தப் பாதையில் செல்லும் ஒவ்வொரு எறும்பும், தன் உடலிலிருந்து திரவத்தைச் சுரந்து அடர்த்தியான பாதையை உருவாக்கிக் கொள்ளும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தத் திரவத்தைப்போல் நம்முடைய உள்ளுலகிற்குள் தொடர்ந்து குறிப்பிட்ட உணர்ச்சிகள், உணர்வுகள் சுரக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நம்முடைய உள்ளுலகிற்குள்
தொடர்ந்து குறிப்பிட்ட
உணர்ச்சிகள், உணர்வுகள்
சுரக்கப்பட்டுக் கொண்டே
இருக்கிறது.

அவற்றைப் பாதையாகக் கொண்டுதான்,
உள்ளே வாழ்வதும், வெளியே சிரிப்பதும்,
புழுங்கி அழுவதும் நிர்ணயிக்கப்படுகிறது.

துக்கமான உணர்வுகள் சுரந்தால்,

மீண்டும் மீண்டும் அதே பாதைக்கு எறும்பு ஈர்க்கப்படுவதுபோல், நீங்களும் துக்க உணர்வைத் தாண்டி வேறு பாதையில் செல்ல முடியாது.

எறும்பின் பிரயாணம், அது திரவம் சுரக்கும் இடத்தைப் பொறுத்தது. உங்கள் வாழ்க்கையின் பிரயாணம், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உருவாக்கும் உணர்வுகளின் குணத்தைப் பொறுத்தது.

ஆனந்தமயமான உணர்வுகளைச் சுரக்கக் கற்றுக் கொண்டால், மீண்டும் மீண்டும், அதே பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி, துக்கத்திற்குள் விழ முடியாது.

எறும்புபோல் வேலை செய்யும் இரும்பு மனத்திற்குள், ஆனந்தம் அரும்ப, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆனந்தமான உணர்வுகளைச் சுரக்கச் செய்யுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் ஆனந்தமாக வாழத்தான் விரும்புகிறோம். இதில் வேறு வாய்ப்பு என்பதே கிடையாது. "இல்லை, இல்லை, நான் துக்கத்தில்தான் வாழ்வேன்," என்று விரும்புகிறவர்கள், ஏன், அதுபோல எண்ணுகிறவர்கள், ஒருவர்கூட இந்த உலகத்தில் இல்லை.

ஆனந்தமாக வாழ்வதற்கு, நீங்கள் இந்த ஒரு தியானத்தைச் செய்தால்போதும்,

Nithyananda

> ஆனந்தமயமான உணர்வுகளைச் சுரக்கக் > கற்றுக் கொண்டால், மீண்டும் மீண்டும் அதே > பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி, > துக்கத்திற்குள் விழ முடியாது. ஆனால், தினமும் செய்ய வேண்டும். இந்தத் தியானத்தை செய்து முடிப்பதற்கு 5 நிமிடங்கள் போதும்.

காலையில் கண்விழித்ததும் வரும் முதல் எண்ணத்தை நீங்கள் உருவாக்குங்கள்.

நீங்கள், உங்கள் எண்ணங்களுக்கு மாஸ்டர் ஆக இருங்கள். உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள், "நான் இன்று ஆனந்தமாக இருப்பேன்," என்று.

21 முறை சொல்லுங்கள்.

இவ்வார்த்தைக்கு இருக்கும் சக்தி, உங்கள் எண்ணங்களின் அமைப்பையே மாற்றும். உங்களுக்குள் ஆனந்தமயமான உணர்வுகளைச் சுரக்கத்தொடங்கும். "இன்று ஏன் வாழ்கிறேன்?" என்ற எண்ணம் காணாமல் போய், "ஆஹா! என்ன பாக்கியம்? இன்று நான் ஆனந்தமாக இருக்கிறேன்," என்று படுக்கையிலிருந்து ஆனந்தத்தோடு குதித்து எழுவீர்கள்.

ஆனந்தமாய் இருப்பீர்கள்.