KAILASA Library/மனதைத் திற/மனித உருவங்களுக்கு உணர்ச்சி முலாம்Sign in
மனதைத் திற

மனித உருவங்களுக்கு உணர்ச்சி முலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கண்ணாடி முன்னால் நின்று, முகத்தை உற்றுப்பார்ப்பது, இரசிப்பது, விருப்பமானதாக இருப்பது ஏன்?

ரோல்ரோலாகப் புகைப்படங்கள் எடுத்து, ஆல்பங்களை அடுக்கி வைப்பதும், மற்றவரிடம் அவற்றைக் காட்டிக் காட்டி மகிழ்வதும், விருப்பமானதாகவே இருக்கிறது எல்லோருக்கும்! ஏன்?

நம்முடைய உருவங்கள்தான், 'நான் தனி (ஈகோ),' என்ற உணர்வுக்குத் தீனி!

'நான் தனி' என்ற உணர்வு நீங்கள் குழந்தையாக இருக்கும் வரை உங்களிடம் இருக்காது. ஏழு வயதைத் தாண்டும் போதுதான், இந்தப் புது உணர்வு பிறக்கிறது. ஈகோ வளர்கிறது.

வாலிபப் பருவத்தில் ஈகோ முதிர்கிறது.

அதனால் தான் விடலைப் பருவத்தில், இருபாலரும், கண்ணாடியில் தங்களின் முகத்தை வெகுநேரம் இரசிப்பதை, வாழ்வில் முதல் முறையாகச் செய்கிறார்கள்.

வெகு நேரம் தலை சீவுவது... வெகு நேரம் மேக்கப் செய்வது...

'நான் தனி'
என்ற உணர்வு,
குழந்தையாக இருக்கும்
வரை உங்களிடம் இருக்காது.
ஏழு வயதைத் தாண்டும்
போதுதான், இந்தப் புது
உணர்வு பிறக்கிறது.

ஆல்பங்களை அடிக்கடி புரட்டுவது... போன்ற எல்லாச் செயல்களும் உங்களின் ஈகோவுக்குத் தீனிபோல் அமைகிறது. தின்பண்டங்களைச் சாப்பிடும்போது திருப்தியடையும் குழந்தைபோல், நம் மனமானது மேற்கண்ட செயல்களைத் திரும்பத் திரும்ப நம்மைச் செய்ய வைத்து, தன்னைத் திருப்தி செய்து கொள்கிறது. ஈகோ வாழ்கிறது.

"வேறு வேலைவெட்டி இல்லாததால், தங்களின் பெரிய பெரிய ஓவியங்களை அரசர்கள் வரையச் சொல்லியிருப்பார்களா?" என அத்வைத ஞானியிடம் சீடர் கேட்டதற்கு, "அப்படியல்ல... வேறு வழி இல்லை. அரசர் என்றழைக்கப்படும் மனிதருக்கு, 'நான் தனி' என்ற உணர்வு மிக திடமானதாக இருக்கும். அது பிரம்மாண்டத்தைத்தான் விரும்பும். அதைத் தவிர்ப்பது கடினம்.

அவர்களின் அகங்காரம் திருப்தியடைய, அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான உருவங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது என்று பொருள்," என்றார்.

பனை மரமளவுக்கு எழுந்த கடல் அலையைப் புகைப்படத்தில் பார்க்கும் போது பிரம்மாண்டமாகத்தான் இருக்கும்.

அந்தப் புகைப்படத்தை 'கிளிக்' செய்த மறு வினாடியே, அந்தக் கடல் அலை அங்கு இருப்பதில்லை. புகைப்படத்தில் உயிருள்ள உருவம் போல இருக்கும் கடல் அலை, நிஜத்தில் இல்லாத ஒன்று.

புகைப்படத்தில், இப்படி இல்லாதது இருந்தால் பிரச்சினையில்லை. உங்கள் மூளைக்குள், மனத்துக்குள், நிஜத்தில் இல்லாதவை, குப்பைபோல் நிரம்பி வழிந்தால், யாருக்குப் பிரச்சினை?

புகைப்படத்தில் ஓர் உருவத்தின், ஒரு பரிமாணத்தைப் பிடிக்கலாம். வீடியோவில் இரண்டு பரிமாணங்களைப் பிடிக்கலாம்.

Nithyananda

உணர்ச்சிப்பதிவுகள் சேகரமாகாவிட்டால்
மனம் ஸ்தம்பிக்காது.
மனம் சோர்வடையாமல் மிக
உற்சாகமாகவே இருக்கும்.

‘3டி’ படக் கண்ணாடிகள் மூலம் ஒரு பொருளின் மூன்று பரிமாணங்களைப் பிடிக்கலாம். ஆனால், உங்களின் மனம் எனும் கேமராவால் ‘உணர்ச்சிகள்’ எனும் இன்னொரு பரிமாணத்தையும் சேர்த்துப் பிடிக்கலாம்.

உங்களின் மனம் ‘4டி’ அல்ல. அது ‘பல டி’ என்றழைக்கப்பட வேண்டும். இந்த பல டி (Multi Dimension) பதிவுகள் அதிகமாகும் போதுதான் மனம் ஸ்தம்பிக்கிறது, சோர்வடைகிறது. உணர்ச்சிகளோடு சேர்ந்து ஓர் உருவம் மனதில் பதிந்தால், மனிதரை ஸ்தம்பிக்கச் செய்யுமளவுக்கு, அது விஸ்வரூபம் எடுக்கிறது. கம்ப்யூட்டரின் அடிப்படை செயல்பாட்டைப் புரிந்து கொண்டோமானால், மனத்தின் செயல்பாட்டைப் பற்றியும் நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

கம்ப்யூட்டரில் எழுத்துகளைப் பதிவு செய்தால், அதை டெக்ஸ்ட் (Text) என்றழைப்பர். அதே கம்ப்யூட்டரில் படங்களைப் பதிவு செய்தால், அதை இமேஜ் (ஐட்ச்ஞ்நு) என்றழைப்பர்.

எழுத்துக்கள் அதிகமாவதால் கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்தம்பிக்காது. ஆனால், படங்கள் (ஐட்ச்ஞ்நு) அதிகமானால், கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்தம்பிக்கும். இது அடிப்படையான ஓர் உண்மை.

கம்ப்யூட்டரைப் போன்றே இயங்கக் கூடியதுதான் மனம்.

உங்களுடைய ஆல்பத்தில் இருக்கும் கையளவு புகைப்படத்திற்கும், பெரிய பெரிய ‘கட் அவுட்’களில் இருக்கும் படத்திற்கும், நிறைய வித்தியாசம் உண்டு. கட்அவுட் பிரிண்ட் செய்ய சாதாரண புகைப்படத்தின் செறிவு (ஏடிஞ்ட ணூஞுண்ணிடூதேணடிணிண) அதிகமாக வேண்டும்.

சாதாரண புகைப்படங்களை நூற்றுக்கணக்கில் ஒரு கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கலாம்.

மனித உருவங்கள் சாதாரண
புகைப்படத்திற்குச் சமம்.
மிகவும் நெருங்கியவர்களாக,
உயிருக்குயிராக, எதிரியாக
அதே மனிதர்கள் மாறும்
போது, - நம் மனதில்
பதிந்திருக்கும் அவர்களுடைய
உருவங்களோடு, நம்
உணர்வுகளும் சேர்ந்து

ஆனால், ‘கட்அவுட்டு’க்காகச், செறிவு
அதிகமாக்கப்பட்ட அதே புகைப்படங்கள் சில
இருந்தாலே போதும், கம்ப்யூட்டரின் இயக்கம்
ஸ்தம்பித்துப் போகும்!

எனவேதான், செறிவு அதிகமான புகைப்படங்களை (ஏடிஞ்ட கீனுண்ணி டூணாடிணிண ணீடிஞிணாதணூஞுண்) கம்ப்யூயூட்டரில் சேமித்து வைக்க மாட்டார்கள்.

மனித உருவங்கள் சாதாரண புகைப்படத்திற்குச் சமம். மிகவும் நெருங்கியவர்களாக, உயிருக்குயிராக, எதிரியாக அதே மனிதர்கள் மாறும்போது,

  • நம் மனதில் பதிந்திருக்கும் அவர்களுடைய உருவங்களோடு, நம் உணர்வுகளும் சேர்ந்து பதிவாகிறது. இது சாதாரண புகைப்படத்தின் செறிவை அதிகப் படுத்துவதற் குச் சமம்.

நம் மனதில் வாழும் மனிதர்களின் நினைவுகளோடு, கோபம், பாசம், காமம், அவமானம் போன்ற உணர்ச்சிப் பதிவுகள் சேரும்போது, சாதாரண நினைவுகளின் செறிவு அதிகமாகிறது. விளைவு-மனம் ஸ்தம்பிக்கிறது. மனம் சோர்வடைகிறது. டிப்ரஷன் உருவாகிறது.

லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகர தியான சொற்பொழிவொன்றில், “மனிதர்களைப் பற்றிய நினைவுகள் தவறானவை அல்ல. ஆனால், மனிதர்களைப் பற்றிய உணர்ச்சிப் பதிவுகளே (உணஞ்ணூாச்சிதுஸ்ரீ ளுனுடூண்ணிணாடினுண்) தவறானவை, மோசமானவை,” எனச் சொன்னபோது, நடுவில் கை உயர்த்திய கல்லூரிப் பெண் கேட்டார்...

“என் காதலரோடும், என் காதலோடும் சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பதிவுகள்தான் என் வாழ்வை இன்று இனிமையாக வைத்திருக்கிறது. இது தவறானதா? இது தவறென்றால், பின் எப்படித்தான் நாங்கள் வாழ்வது?”

“ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். மனதிற்கு எல்லா உணர்ச்சிகளும் ஒன்றே. எந்த நிறத்தைக் கொடுத்தாலும், அந்த நிறமாக வெண் பஞ்சு மாறிவிடும்.

பஞ்சு போன்ற உங்களின் மனம், இன்று சில சந்தோஷமான உணர்ச்சிப் பதிவுகளை மட்டும் உறிஞ்சியிருக்கிறது. அதனால், அது சந்தோஷமாயிருக்கிறது. நீங்களும் சந்தோஷமாயிருக்கிறீர்கள்.

இனி, வாழ்வில் சந்திக்கப்போகும் துக்ககரமான உணர்ச்சிப் பதிவுகளையும் மனம் உறிஞ்சிக் கொள்ளும். அது, துக்ககரமயமானதாக மாறும். விளைவு - துக்கமாயிருப்பீர்கள்.

துக்கத்திலிருந்து விடுபட, தப்பித்துக்கொள்ள, ஒரே வழி, உணர்ச்சிப் பதிவுகள் மனதில் நுழையவிடாமல் தடுப்பதுதான் வழி, புரிந்ததம்மா,'' என்றோம்.

"ஆம்,'' என தலையசைத்தார்.

பாசமும், வெறும் காதலும் அது அது அனுபவிக்கப்பட வேண்டிய நேரத்தில் மட்டுமே அனுபவிக்கப்பட வேண்டும். அவை பதிவுகளாக மாறக்கூடாது.

நம் வாழ்நாளின் பெரும்பான்மையான நேரங்களில், வெறுமையை உணர்கிறோம். அந்த நேரங்களிலிருந்து தப்பிக்க, உணர்ச்சிப் பதிவுகளை நினைத்து நினைத்துக் காலந்தள்ளுகிறோம். அதனால், அது வாழ்வின் அவசியமான ஒன்றாக நமக்குத் தெரிகிறது.

நல்ல, கெட்ட உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்ளும் நிமிடங்களில், அவற்றை முழுமையாக அனுபவித்தால் போதும், அவை உணர்ச்சிப்பதிவுகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டுவிடும். மனதில், மனித உருவங்கள் உணர்ச்சிச் செறிவோடு குவிக்கப்படுவது தடுக்கப்பட்டுவிடும். மனம் லேசாக இருக்கும்.

உணர்ச்சிப்பதிவுகள் சேகரமாகாவிட்டால், மனம் ஸ்தம்பிக்காது. மனம் சோர்வடையாமல் மிக உற்சாகமாகவே இருக்கும்.

உற்சாகமாக இருப்பவருக்கு, உணர்ச்சிப் பதிவுகளை நினைத்துக் காலந்தள்ள வேண்டிய ஒரு சூழல் வர வாய்ப்பேயில்லை.

பாசம், வெறுப்பு வரும்போது, அதில் முழுமையாய் இருக்கலாம். அடுத்த நிமிடமே அந்த உணர்ச்சிகளின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வாழலாம். சுதந்திரமாக இருக்கலாம்.

உணர்ச்சிகளை உள்மயமாக்காமல் தடுத்துவிட்டால், துக்கமேயில்லாத உற்சாகமான வாழ்க்கை சாத்தியமாகும்.