கண்ணீர்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
களிப்பாகும் நேரம்
1) ஜப்பான் மலைக்குகை ஒன்றில் . .
“மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன். போய்ச் சொல்,” உள்ளே சென்ற சீடர் திரும்பவில்லை.
ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு சீடர் குடிலுக்குள் நுழைந்தார்.
“மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன், என்று உங்கள் குருவிடம் சொல்லுங்கள்.”
அவரும் வரவில்லை. அரைமணி நேரம் கழித்து குடிலுக்கு வந்த சமையல்காரரிடம்... . “ஐயா! மேயர் சுயாங்கோ வந்திருப்பதாகவும், காத்துக் கொண்டிருப்பதாகவும் குருஜியிடம் சொல்லுங்கள்.” சமையல்காரரும் திரும்பவில்லை.
மனிதர்கள் தங்களை
விட அந்தஸ்தில் பெரிய
மனிதர்களிடம் பேசும்
போது எளிமையாய்ப் பேச
முடியாமல் தவிப்பார்கள்.
அவர்களின் கடினத்தன்மை
காரணமாக, அந்தச் சூழலில்
கஷ்டப்படுவார்கள்.
2) லாஸ் ஏஞ்ஜல்ஸ் - தியானபீட கிளையில்...
“ என் குடும்பத்தினரோடு அடிக்கடி
சண்டை சச்சரவு வந்து கொண்டேயிருக்கிறதே!
என்ன காரணம்?” என விருப்பா கேட்டார்.
“குனிந்தவரைக் கொட்டிப்பார்ப்பதும், எதிரேயிருப்பவர் கொட்டும் போது ‘குனிந்து போகிறோமே!’ எனப் பொங்கி எழுவதும்தான் காரணம்” என்றேன்.
“புரியவில்லை...”
“எளிமையானவர்களிடம் இளக்காரமாய் பேசுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?”
“பார்த்திருக்கிறேன்,”
“அதே மனிதர்கள், தங்களைவிட அந்தஸ்தில் பெரிய மனிதர்களிடம் பேசும்போது எளிமையாய்ப் பேச முடியாமல் தவிப்பார்கள். அவர்களின் கடினத்தன்மை காரணமாக, அந்தச் சூழலில் கஷ்டப்படுவார்கள்...”
“... இது அப்படியே என் மாமனாருக்குப் பொறுந்தும்!” என்றார் அவர்.
3) வந்து ஒரு மணி நேரமாகிவிட்டது. மேயர் சுயாங்கோவால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அது புது இடம். அங்கே தம் அதிகாரத்தை செலுத்த முடியாது. அவரே தேடி வந்ததால், சூழ்நிலையின் அடிப்படையில், அவர் அங்கே எளிமையாக இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.
அவரின் அந்தஸ்து, குரு என்பவரின் சமுதாய அந்தஸ்தைவிட, மிகச் சிறியது. தம் வேலைகாரர்களை சிறு தவறுக்கும் பெரிதாகத் திட்டும் அவரால், அங்கு அமைதியாய் இருக்க முடியவில்லை.
எளியவர்களைக் கொட்டும் மனிதருக்கு, எளிமையாய் இருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் உள்ளே பொங்கிக் கொண்டிருந்தார்.

எளியவர்களைக் கொட்டும் மனிதருக்கு, எளிமையாய் இருக்க வேண்டிய
4) "விருப்பா! இப்படிப்பட்டவர்கள் தூங்கும் எரிமலைக்குச் சமம். எப்போது வேண்டுமானாலும், வெடிக்கலாம் வார்த்தைகளைக் கக்கலாம்."
ஆமாம். சரியாய்ச் சொன்னீர்கள் அப்படித்தான் செய்கிறார்கள்.
5) மேயர் சுயாங்கோவைத் தாண்டிச் சென்ற சிறுவனை அழைத்து, ஒரு சிறிய ஓலையில், "மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன். உங்களோடு பேச வேண்டும்," என எழுதிக் கொடுத்தார்.
உள்ளே போன மறுவினாடியே ஓடிவந்த சிறுவன், சுயாங்கோ கொடுத்த ஓலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தான்.
ஓலையின் பின்னால்...
"உம் போன்ற மடையர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்குமளவுக்கு, சரியான மடையர்கள் யாரும் இங்கில்லை," என எழுதியிருந்தது.
6) விருப்பாவிடம்...
"சாதாரணமான மனிதர்கள் போலதான் பேசிக் கொண்டிருப்பார்கள், திடீரென ஏதாவதொரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு,
எப்படி அப்படிச் சொல்வாய்?
என்ன திமிர் உனக்கு.?
அப்படியென்றால், என்ன சொல்ல வருகிறாய்... ." என ஆரம்பித்து, நீ ங்கள் யோசிக்காத ஒரு கோணத்தில் வம்பிழுக்க ஆரம்பிப்பார்கள்.
"இல்லை, நான் அந்த அர்த்தத்தில்
சொல்லவில்லை," என நீங்கள்
ஆரம்பித்துவிட்டால் போதும்! சண்டை
சூடுபிடித்துவிடும்.
இதற்குக் காரணம், இது போன்ற சூழலில், எதிராளி, "நான் அப்படி
எளியவர்களைக்
கொட்டும் மனிதருக்கு,
எளிமையாய் இருக்க
வேண்டிய கட்டாயம்
வரும்போது உள்ளே
பொங்கிக் கொண்டிருப்பார்.
நினைக்கவேயில்லையே,'' எனத் தடுமாற ஆரம்பித்ததும், வம்பிழுப்பவர், தாம் மனத்தளவில் உயர்ந்து விட்டதாக நினைப்பார்.
'தடுமாற ஆரம்பித்த எதிராளி, மனத்தளவிலான அந்தஸ்தில் குறைந்து விட்டார்!' என வம்பிழுப்பவர் உணர்ந்து விட்டால் போதும், அவர் எங்கோ எப்போதோ நிகழ்ந்த சிறு சிறு தவறுகளையெல்லாம், நொடியில் ஒன்று திரட்டிக் கொட்ட ஆரம்பிப்பார்.
பல சமயங்களில், அடுத்தவர் அழும்வரை திட்டுவதையும், கொட் டுவதையும் நிறுத்தமாட்டார்கள்.
காரணம், எளியவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் அந்தஸ்து குறைந்தவர்கள் தன் கண்முன் கிடைத்தவுடனே விழித்துக் கொள்ளும் அகங்காரம்தான்,'' என்றேன்.
"ஆமாம்... ஆமாம்... சரியாய்ச் சொன்னீர்கள்,'' என்றார் விருப்பா.
"என்ன ஆமாம்... ஆமாம்?''
"இவ்வளவு நேரம் பேசியது யாரோ ஒருவரைப்பற்றி அல்ல. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியது!
அடுத்தவர்கள் இப்படித்தான் அகங்காரத்தால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் எனப் புரிந்துகொள்ளத் தெரிகிறதே! 'ஏன்? நானும் இது போல ஆட்டுவிக்கப்படக்கூடாது?' என ஒருமுறைகூட உங்களுக்கு யோசிக்கத் தோன்றவில்லையே... கவனித்தீர்களா?" எனக் கேட்டேன்.
"..................."

அடுத்தவர்கள் இப்படித்தான் அகங்காரத்தால்
ஆட்டுவிக்கப்படுகிறார்கள் எனப் புரிந்து
கொள்ளத் தெரிகிறதே! 'ஏன்? நானும் இது
போல ஆட்டுவிக்கப்படக்கூடாது' என
ஒரு முறைகூட உங்களுக்கு யோசிக்கத்
தோன்றவில்லையே... கவனித்தீர்களா?
7) ஓலையைப் படித்து முடித்த உடனே அவருக்குள் பொறி தட்டியது.
'இந்த ஜென் குரு மிக நியாயமானவர். இவர் இப்படிச் செய்யமாட்டார். ஆனாலும் இப்படி எழுதியிருக்கிறார் என்றால்,' என யோசிக்க யோசிக்க மேயர் சுயாங்கோவுக்கு குருவின் செயலிலிருக்கும் சூட்சமம் புரிந்தது.
ஓலையில் 'மேயர் சுயாங்கோ' என இருந்ததில், மேயர் என்ற வார்த்தையை அடித்து விட்டு, 'சுயாங்கோ' என்ற பெயரோடு அதே ஓலையை திருப்பி அனுப்பினார்.
அடுத்த நிமிடமே, அறைக்கதவு திறந்தது!
குரு ஓட்டமும் நடையுமாய் வெளிவந்து,"வாங்க சுயாங்கோ! வாங்க! உங்களுக்காகத்தான் வெகு நாட்களாக நான் காத்துக் கொண்டிருந்தேன்.
எப்படியும் நீங்கள் இங்கு வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்று எனக்குத் தெரியாது," எனச் சொன்னார். சில நாட்களுக்குப் பின்...
அந்தஸ்து என்ற மனவலையில் இருந்து விடுப்பட்ட சுயாங்கோ, குரு தம் மீது செய்த ஆன்மீக அறுவை சிகிச்சையை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

“விருப்பா! நம்மையறியாமல் நம்மை ஆட்டுவிக்கும் அகங்காரமானது, ஒரு மனிதர் ஞானியாகும் வரை அவரைவிட்டுப் போகாது. ஞானியாகும்வரை, அவருக்கு இந்த உண்மை தெரியாது.
நேற்று உங்கள் குடும்பத்தாரோடு பேசும்போது, அவர்களும், நீங்கள் சொன்னது போலவே உங்கள் மீது குறைசொன்னார்கள். நீங்கள் அவர்களின் குறைகளை, கோபங்களை நேரடியாக அனுபவித்தவர். அதனால் உங்களுக்கு வலி!
உங்களின் நினைவில் அந்த வலி உருவாகக் காரணமாக இருந்த நபரும், சம்பவமும் பதிந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு தொந்தரவு தந்திருக்கிறோம் என்பதுகூட அவர்களுக்குக் தெரியவில்லை. அவர்களுக்கு அவர்களின் வலி.
அதேபோல்தான், உங்களுக்கும் தெரியவில்லை. நீங்கள் உங்களையும் அறியாமல் குத்தியதும், திட்டியதும் எத்தனை பேரை கிழித்திருக்கும்? யோசியுங்கள். இனியாவது தவிர்க்கலாம். முதலில், பிரச்சினையை உங்களிடம் சரிசெய்யுங்கள்," என்றேன்.
"நன்றி குருவே!" என்ற விருப்பா, தம்மை ஆட்டுவிக்கும் அகங்காரத்தையே ஆட்டுவிக்கும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டார். உங்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளுக்கும் காரணமான சுயாங்கோவின் அந்தஸ்தும், விருப்பாவின் அகங்காரமும் திரைமறைவில் ஒளிந்திருக்கிறது. இவை கொலை செய்யப்பட வேண்டும்.
இந்தச் சம்பவங்களில் உங்களைக் கதாபாத்திரமாக்கி தியானியுங்கள். மனவலையிலிருந்து நீங்களும் விடுபடுவீர்கள். ஆட்டுவிக்கும் அகங்காரத்தையே ஆட்டுவிப்போனாவீர்கள். உங்களின் கண்ணீர்த் துளிகள் ஆனந்தமாக மாறும். கண்ணீர் களிப்பாகும்.
நான் ரொம்ப பிஸியானவன். எனக்குத் தியானம் செய்ய நேரமிருப்பதேயில்லை. என்ன செய்வது?
-ரகுபதி, காரைக்குடி
'தியானம் செய்ய எனக்கு நேரமில்லை' என்று சொல்லாதீர்கள்.
'தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை' என்று சொல்லுங்கள். அது நியாயமானது. உண்மையானது.
காலைக்கடன்களையும், உணவையும், 'நான் பிஸியாக இருக்கிறேன்' எனச் சொல்லித் தவிர்த்து விடுவீர்களா என்ன? ஒருநாள் தவிர்த்தாலும் அடுத்த நாள் தொடர்வீர்கள்தானே!
தியானம் செய்ய எனக்கு நேரமில்லை எனச் சொல்லி தவிர்ப்பது, ‘தியானம்’ எவ்வளவு மகத்துவம் பெற்றது, அது எவ்வளவு பலன்களைத் தரக்கூடியது என்ற உண்மைகள் தெரியவில்லை என்று பொருள்.
தியானத்தின் அவசியம் ஆழப்புரியாததால், ‘தியானம் செய்ய வேண்டும்’ என்ற விருப்பம் இன்னும் உங்களுக்குள் அரும்பவேயில்லை.
விருப்பம் மலராததால்தான், ஒரு நாளின் 24 மணிநேரத்தில், தியானத்திற்கென வெறும், அரை மணி நேரத்தை ஒதுக்குவது எப்படி என்பது பற்றிக்கூட யோசிக்காமல், சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக்கழிக்க வைக்கிறது மனம்.
தியானம் செய்ய, விருப்பத்தை அரும்பச் செய்யுங்கள். இல்லை தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை எனச் சொல்லுங்கள். இரண்டும் சரியே.