சின்ன வயதில் செய்த
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எப்படி, எப்படியெல்லாம் வாழ வேண்டும் என நினைத்தால், அது ஆசை.
இப்படி, இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது என நினைத்தால், அது குற்ற உணர்ச்சி.
பெண்மணி ஒருவர் நித்யானந்த ஸ்புரணம் தியானத்தின்போது, தம்முடைய சின்ன வயதில் நிகழ்ந்த தவறை நினைத்து மிகவும் வருந்தி அழுதார்.
"அவர், 'அந்தத் தப்பு இப்பவும் என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கிறது. அந்த நினைவு வரும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியால் சாகிறேன்.
இதிலிருந்து விமோசனமே இல்லையா?' எனத் தேம்பித்தேம்பி அழுதார்கள்.
எப்படி, எப்படியெல்லாம்
வாழ வேண்டும் என நினை
த்தால் அது ஆசை.
இப்படி, இப்படியெல்லாம்
வாழ்ந்திருக்கக் கூடாது
என நினைத்தால்,
அது குற்ற உணர்ச்சி.
அவர்களிடம், அம்மா, சில நிமிடம் செலவு
செய்து, இப்போது சொல்வதை மட்டும்
ஆழமாய்க் கேளுங்கள்.
உங்களின் உறுத்தல்களெல்லாம்
இருக்குமிடம் தெரியாமல் மறைந்து
போய்விடும்," என்றேன்.
மிக ஆர்வமாய், "இப்படியொரு வழி கிடைக்காதா என்றுதான் ஏங்கிக்கொண்டே இருக்கிறேன். சொல்லுங்கள்'' என்றார்.
என்றோ நடந்ததை நினைத்து, இன்றும் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். அன்றைய தினத்திற்கு, நம்மிடமிருந்த புத்திசாலித்தனத்தால் அவ்வளவுதான் முடிந்தது.
'அன்று செய்தது தவறு' என்று கண்டுபிடிக்குமளவுக்கு இன்று புத்திசாலித்தனம் அதிகமாகிவிட்டதே! இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள். ஏன் கஷ்டப்படுகிறீர்கள்.?
இன்று அதிகமாகி இருக்கும் புத்திசாலித்தனத்தை வைத்து, உங்களின் பக்குவத்தை அதிகரியுங்கள்.
நிச்சயம் இனியொருமுறை அந்தத் தவறைச் செய்யமாட்டீர்கள். 'செய்த தவறை இனியொருமுறை செய்யமாட்டேன்' என்ற முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து, நீங்கள் புனிதராகிவிட்டீர்கள். நீங்கள் பாவி அல்ல,'' என்று சொல்லி முடித்தேன்.
அவர்களிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சும், ஆனந்தக் கண்ணீரும் வெளிப்பட்டது. “நம்முடைய வாழ்வைப்பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.
அப்படியும் விமர்சித்தால்... விமர்சிப்பவர் மடையன். அதை அனுமதிப்பவர், அடி மடையன்.”
- ஜென் ஞானி
லாஸ் ஏsingleஜல்ஸ் ஆஸ்ரமத்தில், சாயங்கால வேளையில், ஓய்வாய்ப் பேசிக் கொண்டிருக்கும் போது...
நித்ய பக்தானந்தாவிடம் விளையாட்டாய்க் கேட்டேன், “ஒருவேளை, என்னைப் பற்றிய வதந்திகள் நிறைய உங்களின் காதுக்கு வந்தால், நீங்கள் என்ன

இன்று அதிகமாகி இருக்கும்
புத்திசாலித்தனத்தை வைத்து, உங்களின்
பக்குவத்தை அதிகரியுங்கள்.
நிச்சயம் இனியொருமுறை ஒரே தவறைச்
செய்யமாட்டீர்கள். ‘செய்த தவறை
இனியொருமுறை செய்யமாட்டேன்’ என்ற
முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து, நீங்கள்
செய்வீர்கள்?'' எனக் கேட்டேன்.
‘அப்படியா!’ என்று கேட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பேன்’’ என்றார்.
‘‘சந்தேகமோ, கோபமோ வராதா?’’
‘‘எனக்கேன் அதெல்லாம் வர வேண்டும்?
வதந்தி என்பது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது.
நான் கேட்ட வதந்தியை உண்மையா? பொய்யா? என்றுகூட ஆராயமாட்டேன்,’’ .
‘‘ஏன்,’’?
‘‘ஏனென்றால்
என் வாழ்க்கை என்னுடையது.
உங்களின் வாழ்க்கை உங்களுடையது.
எனக்குத் தேவையான தியானம், ஞானம் உங்களிடமிருந்து முழுமையாய்க் கிடைக்கிறது.
நான் பழகிய வகையில் நீங்கள் 100% நல்லவர்.
உங்களுக்கும் எனக்கும் இடையிலிருக்கும் கணக்கு வழக்குச் சரியாய் இருக்கையில்... நான் ஏன் எவனோ ஒரு குப்பன் சொல்வதையெல்லாம் தலையில் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டும்," என்றார்.
என்றோ நடந்ததை நினைத்து
இன்றும் ஏன் இவ்வளவு
வருத்தப்படுகிறீர்கள்.
அன்றைய தினத்
திற்கு, நம்மிடமிருந்த
புத்திசாலித்தனத்தால்
தொடர்ந்து செய்த தியானங்களால் அவருள்
மலர்ந்திருந்த தெளிவைப்பார்த்து அகம்
மகிழ்ந்தேன்.
பக்தானந்தாவைப்போல் வாழ்பவருக்குக் குற்ற உணர்ச்சியே வரமுடியாது.
குற்ற உணர்ச்சிகளால் பொங்கிப் புழுங்கிக் கொண்டிருப்பவர்கள்தான், விமர்சனம் செய்தல், வதந்தி பரப்புதல் போன்ற கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள்.
விமர்சனங்களையும் வதந்திகளையும் மனதளவில் வரவேற்போர், புதிய புதிய குற்ற உணர்ச்சிகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள்.
நிருபர் ஒருவர், "மனிதருக்கு தேவையே இல்லாதது எது?" எனக் கேட்ட போது...
"குற்ற உணர்ச்சி," என்றேன்.
விமர்சிப்பதையும், விமர்சனங்களை மனதில் பிடித்துக் கொண்டு வாடுவதையும் நிறுத்துங்கள்.
குற்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாது போய்விடும்.
இப்படி இப்படியெல்லாம்தான் வாழ வேண்டும் என்ற வரையறையே, அரைகுறையானது. காரணம், வாழ்வு என்பது சுவர்கள் இல்லாத அறை. அதற்கு யாராலும் வரையறை சொல்ல முடியாது.
பெற்றோரும் மற்றோரும்...

விமர்சிப்பதையும், விமர்சனங்களை
மனதில் பிடித்து கொண்டு வாடுவதையும்
நிறுத்துங்கள்...
குற்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாது
மதமும் இனமும்... மதவாதிகளும் அதிபதிகளும்... மாறி மாறிச் சொல்லும் விமர்சனங்களைக்கண்டு அஞ்சாதீர்கள்.
அப்படி என்றோ அஞ்சியதால்தான், சின்ன வயதில் செய்த தவறுகள்கூட மனத்தை வதைகின்றன.
தர்மப்படி, மனசாட்சிப்படி, உங்களின் உணர்வுப்படி நியாயமான வாழ்வை வாழ ஆரம்பியுங்கள்...
‘எப்படி எப்படியெல்லாம் வாழலாம் எனும் ஆசைகளைக் கடந்து, இப்படி’ இப்படியெல்லாம் ஆனந்தமாய் வாழலாம் எனும் தெளிவு பிறக்கும்.
இறந்தவர்களோடு பேச முடியுமா?
-காளீஸ்வரன், செங்கம்.
உங்களின் சிந்தனைக்கு... “முதலில் உயிரோடு இருப்பவர்களோடெல்லாம் நன்றாய்ப் பேசுகிறோமா?"
பதில், “இல்லை” என்றால், முதலில் உயிரோடு உங்களைச் சுற்றி உலாத்துபவர்களிடம் நன்றாய்ப் பேசுவதைப் பற்றியோசியுங்கள். அது மிகப்பெரிய ஆன்மீகம்.
பதில், “ஆம்” என்றால், ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களின், ‘ஆம்’ ஒரு முழுப்பொய், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமெல்லாம் சிரித்து கொண்டாடுபவருக்கு,
இறந்தவர்களோடு வெகு பிரயார்த்தனப்பட்டு, வெகுநேரம் செலவு செய்து பேசுவதைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியாது. அதற்கு நேரமே இருக்காது.
இறந்தவர்களோடு பேச முடியுமா? என ஆராய்வதை நிறுத்தி... வாழ்பவர்களோடு கொண்டாட முடியுமா? என யோசியுங்கள்...
மீதி வாழ்வு மிச்சமாகும்.