KAILASA Library/மனதைத் திற/அந்தரங்கப் போர்Sign in
மனதைத் திற

அந்தரங்கப் போர்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"நர்ஸ்! என்னாச்சு இவருக்கு. இன்னைக்கு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றல்லவா இருந்தோம். எப்படித் திடீரென்று டெம்பரேச்சர் அதிகமாச்சு," என்று பதட்டமாக மருத்துவர் கேட்டார்.

நர்ஸ் சிரித்துக்கொண்டே, "அது ஒண்ணுமில்ல சார்... ஐஞ்சு நிமிஷத்துக்கு முன்னால்தான் இவரோட மனைவி வந்து இவரைப் பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள்." என்றார்.

"அப்படியா!" எனச் சிரித்த மருத்துவர், அடுத்த நோயாளியைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

நோய்கள் என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது போல், சச்சரவும், சகஜமான வாழ்வின் ஓர் அம்சம் என்று மாறிவிட்டது - விஞ்ஞானம் விண்ணைத் தொட்டுவிட்ட இச்சமுதாயத்தில்!

வெளியே தோன்றும்
சண்டைசச்சரவுகளுக்கு
மூலகாரணம்,
உள்ளே எங்கோ

சச்சரவுகளுக்கு சிலர் முட்டாள்தனமாக நியாயம் கற்பிக்கவும் செய்கிறார்கள். வேதனை மிகு விஷயமிது. அதாவது, ஓடையென்றால் நீர் சலசலக்குமாம். அதேபோல்தான், வாழ்வு என்றால் சச்சரவும் சலசலக்குமாம்.

ஒன்றை நாம் யோசிக்க வேண்டும். ஓடை சலசலத்து ஓடினாலும், அதன் குளுமை மாறுவதேயில்லை.

ஆனால், நம் சச்சரவுகள், கொதிநீர் ஓடைகளில், நீர் கொதிப்பதால் ஏற்படும் சலசலப்புக்குச் சமமானவை.

சண்டை சச்சரவுகளில் சிக்கித் தவித்த நிமிடங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். உணர்ச்சிகள் பொங்கியதால் இரத்தம் கொதித்தது, கோபத்தால் சிவந்த கண் தகித்தது, உடல் முழுவதும் இனம்புரியாத சூடுபரவியது நினைவுக்கு வரும்.

இவை உணர்த்த முயற்சிப்பதுதான் என்ன?

வெளியே தோன்றும் சண்டைசச்சரவுகளுக்கு மூலகாரணம், உள்ளே எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றது எனத் தோன்றவில்லையா?

“ஆம்,” காரணம், அந்தரங்கத்தில்தான் பதுங்கிக் கொண்டிருக்கிறது. வெளியே வாய்ப்புக் கிடைக்கும்போது, உடல் உணர்ச்சி மூலம் சச்சரவாகப் படையெடுக்கிறது.

அந்தப் பேருந்தில் சலசலப்பு. “திற... மூடு... திற... மூடு” என்ற இரண்டு வார்த்தைகள் சலசலப்புக்கிடையில் சப்தமாகக் கேட்பது.

பேருந்தை நிறுத்தினார் நடத்துனர், நடக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக. ஓர் இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்த இருபெண்களுக்கிடையில்தான் சண்டை. கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த நடத்துனர் கேட்டார், “என்னம்மா பிரச்சினை?”

முதலாமவர், “ஐயா எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. குளிர்காற்று வேறு

portrait

ஓடை சலசலத்து ஓடினாலும், அதன் குளுமை

மாறுவதேயில்லை.

ஆனால், நம் சச்சரவுகள், கொதிநீர் ஓடைகளில்,

நீர் கொதிப்பதால் ஏற்படும் சலசலப்புக்குச் வீசுகிறது. எனக்குக் குளிர்காற்றுப் பட்டால் போதும், இரைப்பு வந்துவிடும். இரைப்பு வந்தால், மிகக் கொடூரமாகவே எனக்கு வரும். அதனால் ஜன்னல் கதவை மூடி வைக்க வேண்டும். இல்லை... செத்துப்போவேன்," என்றார் பிடிவாதமாக.

இரண்டாமவர், “ஐயா, இவருக்காவது ஆஸ்துமாதான். எனக்கு மூச்சு முட்டிக் கொள்ளும் வியாதி இருக்கிறது. சுவாசக்காற்றுக் கொஞ்சம் குறைந்தாலும், எனக்கு மூச்சடைத்துக் கொள்ளும். மூர்ச்சையாகிவிடுவேன். அதனால் ஜன்னல் கதவைத் திறந்துதான் வைக்க வேண்டும்,” என்றார் விடாப்பிடியாக.

பேருந்தில் இருப்பவர்கள் அனைவருமே இந்தச் சண்டையை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப்பெண்களுக்குப்பின் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தரவயதுக்காரர் அமைதியாக வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.

நடத்துனர், “இப்படி இருவரும் அடம்பிடித்தால் எப்படி? யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால்தானே தீர்வு கிடைக்கும்,” என்றார் பரிதாபமாக

இருவருமே விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஒருவர் கதவைத் திறக்க, இன்னொருவர் கதவை மூட, திற... மூடு... திற... மூடு... என்ற சப்தங்கள் திரும்பத் திரும்ப ஒலிக்க ஆரம்பித்தது.

பின் இருக்கையில் இருந்து ஓர் சப்தம், “ஐயா! நான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லட்டுங்களா,” என்றார் நடத்துனரிடம், அந்த நடுத்தரவயதுக்காரர் பவ்யமாக.

“சொல்லுங்களேன்,” என்றார் நடத்துனர்.

அடுத்த நொடியே முகம் மாறிய நடுத்தர வயதுக்காரர், மிகக் கோபமாக,

வேடிக்கையான கதைக்குள்

புதைந்திருக்கும்

வேதனையை ஆராயுங்கள் -

அந்தரங்கப் போர் வெளிச்ச

“முதலில் ஜன்னலை மூடுங்கள் சார். மூச்சடைச்சு மூர்ச்சையாகி இவர் சாகட்டும். அடுத்து, ஜன்னலைத் திறந்து வைங்க சார். ஆஸ்துமா இரைப்பெடுத்து அவர் சாகட்டும். அப்புறம் நாம் நிம்மதியாக வண்டிய கிளப்பலாம்,” என்றார்.

அவரின் தீர்ப்பைக் கேட்டதில்,
அங்கிருந்த அனைவருமே திடுக்கிட்டார்கள்.
நடத்துனர், “ஐயா என்ன சொல்றீங்க...?”
என்றார் குழப்பமாக.

நடுத்தர வயதுக்காரர், "பின்ன என்ன பண்றது. எனக்குத் தெரிந்து, கடந்த பத்து வருஷமாக, இவங்க இரண்டுபேரும் எங்க ஒண்ணாப் போனாலும் இப்படித்தான். ஏதாவது ஒரு சண்டை போட்டுக்கறாங்க,"என்று முடித்தவர் பேருந்தை விட்டு வேகமாக கீழே இறங்கிச் சென்றார்.

யார் அவர்? ஏன் இப்படிப் பேசினார்? இப்போது ஏன் இறங்கிச் செல்ல வேண்டும்? என்று மற்றவர்கள் கேட்டுவிடக்கூடாதே என்பதற்காக இருபெண்களில் ஒருவர் சொன்னார், "அவர் எங்களுடைய கணவர்."

வேடிக்கையான கதைக்குள் புதைந்திருக்கும் வேதனையை ஆராயுங்கள்

  • அந்தரங்கப் போர் வெளிச்சத்துக்கு வரும். முதல் மனைவியோடு வாழ்ந்த வாழ்க்கைத் திருப்தியளிக்கவில்லை. இரண்டாவது முறையாக மணம்முடித்தும் திருப்தியில்லை. வேதனை இன்னும் கொஞ்சம் அதிகமானதுதான் மிச்சம்.

சண்டைகளும் சச்சரவுகளும் இல்லாத, வேதனையில்லா வாழ்க்கையைத்தான் எல்லோரும் தம் குலதெய்வத்திடம் வேண்டுகிறோம். ஆனால், திருப்தியாக வாழ்ந்துவிடுவது என்ற முடிவு, கனவோடு மாத்திரமே நின்றுகொள்கிறது.

நிஜத்தில், ஏதேதோ காரணங்களுக்காக, எப்படி எப்படியowelல்லாம், நமக்குச் சச்சரவுக்கான, சண்டைக்கான காரணம் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது. நாளாக நாளாகத் திருப்தியான வாழ்க்கை என்ற கனவுகூட மனதிலிருந்து கலைய ஆரம்பிக்கிறது.

இவ்வளவுக்கும் காரணம், ஒவ்வொருவருக்குள்ளும் தொடர் நிகழ்வாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மனதின் பனிப்போர்தான்.

காலப்போக்கில், அடிமனத்தில் சேர்ந்துவிட்ட எல்லா எதிர்மறை நிகழ்வுகளும், துக்கங்களும் புகைந்து கொண்டேயிருக்கின்றன - பற்றவைத்து

பெண்

உள்ளே கொந்தளிக்கும் உணர்வுக் கலவரம்
(அந்தரங்கப் போர்) ஓயாதவரை,
சச்சரவுகள் ஓயாது.

வெடிக்கக் காத்திருக்கும் வெடி போல்!

நமக்குச் சொந்தமானவர்கள், நெருங்கியவர்கள் என்று சில மனிதர்கள் கிடைத்ததும், மனதின் அந்தரங்கப் பகுதியில் தூங்கிக் கொண்டிருக்கும் எல்லாமே விழித்துக் கொள்கின்றது. அன்பு, காதல், பாசம் என்று நாம் அழைக்கும் எல்லாமே, மனதின் அந்தரங்க கதவுகளோடு முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது.

மனிதன் நினைக்கும் அன்பு, காதல், பாசம் இதில் ஏதாவது ஒன்று வெளிவரும்போது, அந்தரங்கக் கதவு திறந்து கொள்கிறது. உள்ளே அடங்கிப்போய், புகைந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட உணர்ச்சிகள் சச்சரவாகவும், சண்டையாகவும் வெடிக்கிறது.

அந்தரங்கப்போர் வெளிச்சண்டையாக வெளிப்படுகிறது.

யோகா சின்னம்

ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

‘சண்டை சச்சரவுகள் ஓயாது’ - அந்தரங்கத்தில் புதைந்திருக்கும் எதிர்மறை உணர்ச்சி கள் தீரும் வரை.

இந்த உண்மையை மனதில் இருத்திக்கொண்டு மனதார, உங்களுக்கு நெருங்கிய உறவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த வாய்ப்பை மாத்திரம், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி ஏற்படுத்தினால், கொஞ்சநாளில், அந்தரங்கக் குப்பைகள் குறைந்துவிடும். அந்தரங்கப் போர் முடிவுக்கு வரும்.

இதற்குப் பின், உண்மையான அன்பு மலரும். வாழ்க்கை என்னும் ஓடை சந்தோஷச் சிணுங்கல்களோடு குளுமையாக ஓட ஆரம்பிக்கும்.

வெளியே உலகைக் காண்கிறோம். இல்லை... உள்ளே கனவுலகைக் காண்கிறோம்.

வெளியே பேசிக்கொண்டிருக்கிறோம், வார்த்தைகளால், இல்லை... உள்ளே மனதில் பேசுகிறோம்.

எண்ணங்களால் வெளியே கொந்தளிக்கிறோம், இல்லை... உள்ளே கொந்தளிக்கிறோம்.

கண்ணைத் திறந்தாலும், மூடினாலும் ஏதோ ஒன்று நம்மைத் தொடர்ந்து உள்ளிருந்து ஆட்டுவித்துக் கொண்டேயிருக்கிறது.

எந்த ரகம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, அந்தரங்கத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அது எது?

✦ ஒரு மனிதர், தம் மனதின் அந்தரங்க கஜானாவில் சேர்த்து வைத்திருப்பதைப் பொறுத்து, அவர் எந்த ரகம் என்று தீர்மானிக்கப்படுகிறார்.

✦ உள்ளே கொந்தளிக்கும் உணர்வுக் கலவரம் (அந்தரங்கப் போர்) ஓயாதவரை, சச்சரவுகள் ஓயாது.