விதி வலியதா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ தம்மை மறப்பதுதான் தியானமா?
தம்மை அறிவது தியானம்.
சொர்க்கம், நரகம் பற்றி இதுவரை நிலவும் கருத்துகளெல்லாம்... ஆசை, பயம் என்ற இரண்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை.
❖ இதற்கும், அதற்கும் என்ன தொடர்பு?
சொர்க்கம் ஆசையின் உச்சம், நரகம் பயத்தின் உச்சம்.
"இங்கே இது செய்தால்... சொர்க்கத்தில் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்பது ஆசைத் தீயை மூட்டும் செயல்.
யார் பெண்?
தாய்மைக் குணம் மலர்ந்தவர்...
இதைச் செய்துவிட்டால்... நரகத்தில்
கொடுமைப்படுத்தப்படுவாய் என்பது பீதி
கிளப்பும் செயல்.'"
❖ தீர்வு?
பயத்தையும், ஆசையையும்
தாண்டுங்கள்... சொர்க்கம், நரகம் எனும்
இரண்டையும் தாண்டிய ஆனந்த சமவெளியில்
குதிப்பீர்கள்.
❖ யார் பெண்?
தாய்மைக் குணம் மலர்ந்தவர்... யாராயிருந்தாலும் அவர் பூஜைக்குரிய பூ. ஆணாயிருந்தாலும்!
❖ யார் ஆண்?
தாய்மைக் குணம் மலராதவர்... பெண்ணாயிருந்தாலும்!
❖ உடல், மனம் பற்றி...
ஆத்மாவின் உருவ வெளிப்பாடு உடல். ஆத்மாவின் அருவ வெளிப்பாடு மனம்.
❖ அகங்காரம் பற்றி...
'நீர்'-அமிர்தம்! 'மனம்' - தெய்வப் பரிசு!
நீரில் நச்சுச் சேர, அதே நீர் விஷமாகிப் போகிறது. மனதில் அகங்காரம் சேர, அதே மனம் பிசாசாகிப் போகிறது.
❖ விதியை வெல்ல முடியுமா?
முடியும்.
❖ முடியும் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?
முடியாது என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

யார் ஆண்?
தாய்மைக் குணம் மலராதவர்... பெண்ணாயிருந்தாலும்!
❖ பின், 'விதி வலிது,' என்பது?
'அது வலிது,' என நீங்கள் நம்பும் வரை, அது உண்மை.
❖ சாதனையின் அளவுகோல்?
சாதித்த ஆனந்தங்கள்.
❖ வேதனையின் அளவுகோல்?
சம்பாதித்த துக்கங்கள்.
❖ தோல்விகள்?
தோள் கொடுக்கும் தோழர்கள்.
❖ வெற்றிகள்?
தேள் கொட்டும் அகங்காரத்தை உசுப்பி விடும் சாகசக்காரர்கள்.
❖ தானம் செய்தால் ஆனந்தம் வருமா?
இல்லை... ஆனந்தமாயிருப்பதால் தானமும் செய்வீர்கள்.
❖ தானம் ஆனந்தத்தைத் தராதா?
தியானம் ஆனந்தத்தைத் தரும். தானம் ஆனந்தத்தைத் தராது.
❖ ஏன்?
உங்களிடமிருப்பதை மற்றவருக்குத்
தருவது தானம். உங்களிடமிருப்பதை
உங்களுக்கே தருவது தியானம்.
❖ சித்துவேலை செய்பவர்கள்?
ஞானமடையத் தவறிய யோகிகள்.
❖ விஞ்ஞானிகள்?
தெரிந்தும் தெரியாமலும் மெய்ஞானியாக மாறிப் பிரயாணித்துக் கொண்டிருப்பவர்கள்.
கிளி ஜோஸியம் பலிக்குமா?
- சசி, கோவை
ஒரு சின்ன கதை...
திடீரென தம் மனைவி இருக்கும் அறையில் உறங்குவதை நித்திராஜன் தவிர்க்க ஆரம்பித்தார். "ஏன்? ‘எனக்காரணம்?' என கேட்டதற்கு, "கல்யாணமான பெண்களோடு பழகுவது, பெரும் தொல்லைகளை உண்டு பண்ணும்," என கிளி ஜோஸியம் கேட்டதாகச் சொன்னார்.
இந்தக் கேள்விக்குப் பதிலாய் ஒரேயொரு கேள்வியைக் கேட்கிறேன்...
தன் எதிர்காலமே ஒரு பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் கிளியால், உங்களின் எதிர்காலம் பற்றி மட்டும் கணிக்க முடியுமா என்ன?