KAILASA Library/மனதைத் திற/மகாவாக்கியம்Sign in
மனதைத் திற

மகாவாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“விட்டுக்கொடு, நீ இராஜாவாயிருப்பாய்,”

ஆனால்,

ஒத்துப்போகாதே! கூஜாவாகுவாய்.

‘வேறு வழியில்லை’ என்பதற்காக நம் உறவுகளைத் ‘தாங்கத்தான் வேண்டும்,’ என்ற நொண்டிச் சாக்குகளுக்காக, உங்கள் உணர்வுகளை அடக்கி, ஒடுக்கி, ஊரோடு ஒத்துப்போவது சுயத்துரோகம்.

“ஒத்துப்போனால் நசுக்கப்படுவாய்.
விட்டுக் கொடுத்தால் வீர்யமாவாய்.
விடுதலை பெறுவாய்,”

‘பெருந்தன்மையாலும்’, நம் உறவுகள் ‘நல்லாயிருக்கட்டும்’ எனும் தயாள குணத்தாலும் சுய விருப்பப்படி முடிவு செய்து, விட்டுக்கொடுப்பது தானம்.

தன்னை மதிப்பவர் செய்யும் தியானம்.

விட்டுக்கொடுங்கள்,

இராஜாவாயிருப்பீர்கள்.

“தெய்வப் படங்களை நினைத்துத் தியானம் செய்கிறேன்? எந்தத் தெய்வம் சிறந்த தெய்வம்?”

-லஷ்மி , பாநாசம்.

தாந்த்ரீக ஞானியிடம் ஒருமுறை இதே கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறிய பதில், “தியானம் செய்யும் போது, புத்தனே வந்தாலும் கொலை செய்!”

தெய்வப்படங்களை நினைத்துத் தியானம் செய்வது முதல்படி. இறுதிப்படி அல்ல. வார்த்தைகளையும் , உருவங்களையும் உணர்ச்சி முலாம் பூசிப் பூசித்தான் , மனம் தன்னை அலங்கரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சாதாரண மனித உருவங்களைவிட, தெய்வ உருவங்களை நினைப்பது நல்லதுதான். சாதாரண வார்த்தைகளைவிட, மந்திரங்கள் மிக உயர்ந்தவை.

ஆனால் இறுதியல்ல.

மனம் - தெய்வ உருவங்களையும், மந்திரங்களையும் பிடித்துக் கொள்ள ஆரம்பிக்கும்போது, மனவேதனையைத் தரும் மனிதர்கள் மற்றும் வார்த்தைகளைப் பற்றிய நினைவுகளை மனம் விட ஆரம்பிக்கும்.

இது ஒரு நல்ல மாற்றம். அடுத்து, மனம் அழிந்து ஆத்மா விழித்துக் கொள்ள வேண்டும்.

தெய்வ உருவங்களை மனம் நினைக்கும் வரை, மனம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். ஆத்ம அனுபூதி நிகழாது. ஆனந்தம் பொங்காது.

தியானத்தில் தெய்வ உருவங்கள் மட்டுமல்ல, தியானத்தை முறையாய் வகுத்தளித்த புத்தனைப் பற்றிய நினைவுகள் வந்தால்கூட, அவை தாண்டப்படவேண்டியவையே.

எல்லா நினைவுகளும்,” ஆனந்தத்திற்குத் தடையே.

‘ஆனந்தம்’ நிகழ, நினைவுகளைத் தாண்டுங்கள்.