புத்தனேயானாலும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அது பெயரிடப்படாத வரை பெரியது. தெரியாதது. பெயரிட்டதும் சுருங்கிப் போகும் நான்கு எழுத்தாய்...
க... ட... வு... ள்.
அவ்வளவு சிறுசா கடவுள்?
இந்த நான்கு எழுத்தை சேர்த்துப் படிக்க முடிந்ததால், புரிந்து விட்டதா நமக்கு அதைப்பற்றி?
யூகமா கடவுள்? பதில் காணுங்கள்.
உஸ்மான் ரோட்டில் தனக்கென இருக்கும் சூப்பர் மார்க்கெட் பற்றியும், மௌன்ட் ரோட்டில் தமக்கு ஒரு தெரு முழுவதுமே சொத்தாக இருப்பதையும் வந்த அரைமணி நேரத்திற்குள் நான்காவது முறையாகச் சொல்லி விட்டார் நிட்டியின் பணக்கார நண்பர்.
பெரிய உலக வரைபடத்தை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த நிட்டியின் சுட்டிப் பையன், “அங்கிள், அங்கிள்! இங்கேவாங்க...” என அவசரமாய்க் கூப்பிட்டான்.
உலகவரைபடத்தைப் காட்டி,
""இந்த வரைபடத்தில்
உங்களின் ‘ஒரு தெரு
சொத்து’ எங்கேயிருக்கிறது
காண்பியுங்கள்,"
என்று கேட்டால்...
தரையில் பிரம்மாண்டமாய்ப் படுத்திருந்த உலகவரைபடத்தைப் பணக்காரரிடம், நிட்டியின் பையன்காட்டி, "இந்த வரைபடத்தில் உங்களின், 'ஒரு தெரு சொத்து' எங்கேயிருக்கிறது காண்பியுங்கள்," என்றான்.
திடுக்கிட்ட நண்பர் நாவறண்டு நின்றார். வரைபடத்தில், பொட்டளவு இருந்த சென்னையில், அவரின் அவ்வளவு பெரிய சொத்தை, குண்டூசி நுனியால் ஒரு புள்ளியிட்டுக்கூடக் காண்பிக்க முடியவில்லை அவரால்!
'ஆகாஷ கங்கை' என்றழைக்கப்படும் நம் பால்வெளித்திரள் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறுபுள்ளி மட்டுமே.
அதுபோல், “1,00,00,00,000 (நூறு கோடி) புள்ளிகளின் மொத்த உருவம் பிரபஞ்சம்," என்கிறார்கள் விஞ்ஞானிகள் (குணீச்ச்ஞிலு கீஞுண்நுச்ச்ணூஞிடலுணூண்)
நம் பால்வெளித்திரள் என்ற சிறு புள்ளிக்குள் கோடிக்கோடியே நட்சத்திரங்கள், அங்கே இங்கேயென தெளிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கோடி கோடி புள்ளிகளில் ஒன்றுதான், இவ்வளவு பெரிய சூரிய குடும்பம் (Solar system)
பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், நம்மை பிரம்மிக்க வைக்கிறது.
சூரியனைக் கிரகங்கள் அதிக வேகத்தில் சுற்றுகின்றன. சூரியன் தம் கிரக குடும்பத்தைத் தூக்கிக் கொண்டு 'பிரபஞ்ச மையத்தை' சுற்றி ஓடி வருகிறது (Cen-ter of the universe). அதுவும், வினாடிக்கு 20,000 மைல்கள் என்ற அசுர வேகத் தில் சுற்றி வருகிறது.
இவ்வளவு வேகமாய் சுற்றியும், சூரியக் குடும்பம் ஒரே ஒருமுறை 'பிரபஞ்ச மையத்தை' சுற்றி முடிப்பதற்கே 225 கோடி ஆண்டுகளை எடுத்துக்

சூரியக் குடும்பம் என்னும் வட்ட வெளியில்
உயிரோட்டமுள்ள ஒரு சிறு பொட்டு, நாம்
வாழும் பூமாதேவி. அந்தப் பொட்டின்
துணுக்கு என்றுகூடச் சொல்ல முடியாத
அளவு சிறிதான இரண்டுகால் பிராணிதான்
கொள்கிறதெனக் கண்டுபிடித்துள்ளார்கள்.
சூரியக் குடும்பம் என்னும் வெட்ட வெளியில், உயிரோட்டமுள்ள ஒரு சிறுபொட்டு, நாம் வாழும் பூமாதேவி. அந்தப் பொட்டின் துணுக்கு என்றுகூடச் சொல்ல முடியாத அளவு சிறிதான இரண்டுகால் பிராணிதான் மனிதர்கள்.
இங்கு மனிதர்கள் நகர - கார், மோட்டார், விமானம், இராக்கெட், கட்டடங்கள் என எதுவும் இல்லை, போக்குவரத்து நெரிசல் இல்லை . ஆனாலும், விமானத்தோடு விமானம் மோதி விபத்தாவது விபரீதம்!
விசாலமான வானத்திலேயே விபத்தென்றால், கேட்கவா வேண்டும். தரையில் தினம் ஒரு விபத்து நடக்காத நகரத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
விபத்துகளைத் தவிர்க்க, சாலை விதிகள், அப்புறம் போக்குவரத்து காவல்துறை என இதையெல்லாம் தாண்டி, தனி மனிதரின் ஓட்டுனர் பயிற்சியும், புத்திசாலித்தனமும் இவ்வளவு இருந்தும் இங்கு ஆயிரம் விபத்துக்கள்.
இப்பிரபஞ்சத்தின் கோடானு கோடி கோடிகளுக்கு மேற்பட்ட, மிக மிகப் பெரிய இராட்சத உருவம் கொண்ட நட்சத்திரக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிக்னல் இல்லை, போலீஸ் இல்லை, நிரந்தரமான விதிகள் இல்லை, யாருமே இல்லை.
20 பில்லியன் வருடங்களாய் (இது பிரபஞ்சத்தின் வயது) மிக சுமுகமாகவே நட்சத்திரக் கூட்டத்தின் போக்குவரத்து இருந்து வருகிறது.
யார் இவற்றைக் கட்டுப்படுத்துவது?
பூமியையும், மற்றதையும் பிரபஞ்சத் தோட்டத் தில் உருட்டிவிட்டது யார்?
பிரபஞ்சத் தேரோட்டி யார்?
இவற்றிற்குப் பதில் -
சட்டென 'இறைவன்' என்றால்! அது
சுத்த ஏமாற்றுவேலை. 'இறைவன்' என்று பதில்
சொல்பவர், இறைவனைப் பார்த்திருக்கிறாரா?
20 பில்லியன் வருடங்களாய்
(இது பிரபஞ்சத்தின் வயது)
மிக சுமுகமாகவே
நட்சத்திரக் கூட்டத்தின்
போக்குவரத்து இருந்து
வருகிறது. அவரோடு பேசியிருக்கிறாரா? எது இறைவன் என அடையாளங் கண்டிருக்கிறாரா?
பதில், 'இறைவன்' என்பது உண்மைதானென்றாலும், சுய அனுபவமாகாத ஒன்றை, தெரிந்த ஒன்றுபோல் வார்த்தையில் பேசிச் சமாளிப்பதால் என்ன பயன்?
இதுபோன்ற சுய அனுபவமில்லாப் பதில்களும், வெறும் அறிவாக மட்டுமே இருக்கும் கருத்துக்களும், உங்களின் மனதில், 'வார்த்தைகளின் ஜனத் தொகையை' அதிகமாக்கும். அவ்வளவே.
வார்த்தைகளின் நெரிசலால், மனதில் வார்த்தைகளின் மாசு அதிகமாகும். மனமே மாசடைந்து போகும்.
'அறிவு' என்ற பெயரில் சுயஅனுபவமாகாத, பல செய்திகளை, குப்பை போல் மனதில் கொட்டிவைத்திருக்கிறார்கள் மனிதர்கள்.
மனம் தூய்மையாக வார்த்தைகளின் மாசு துடைக்கப்பட வேண்டும். அனுபவங்கள் மலர வேண்டும்.
தனி மனித வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உதவாத, எல்லாத் தேவையற்ற கருத்துக்களும் மனதிலிருந்து வெட்டியெறியப்பட வேண்டும். அது இறைவனைச் சுற்றி உருவாக்கப்பட்டவையாக இருந்தாலும்!
“பிரபஞ்சத்தின் தேரோட்டி யார்?” என்றால் கண்ணை மூடிக்கொண்டு, “இறைவன்,” என்று சொல்லாதீர்கள் கண்ணை மூடி உள்ளே பாருங்கள். சுவாரஸ்யங்கள் சுடர்விடும். அனுபவங்கள் விரியும்.
அனுபவங்கள் விரிய விரிய, எல்லாம் தெளிவாய்ப் புரிய ஆரம்பிக்கும்...
பிரபஞ்சத் தேரோட்டி உங்களுக்குள்ளும் உட்கார்ந்திருக்கிறார் என்று! இது

தனி மனித வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும்
உதவாத, எல்லாத் தேவையற்றக் கருத்துக்களும்
மனதிலிருந்து வெட்டியெறியப்பட
வேண்டும். அது இறைவனைச் சுற்றி
புரியும் கணத்தில் , வாழ்வில் மகிழ்ச்சிக் காற்று வீச ஆரம்பிக்கும்.
ஒரு செல், குழந்தையாகும் புனிதமான நேரம் - ‘கர்ப்பக்காலம்.’ ஒரு மனிதர், தெய்வமாகும் புனிதமான நேரம் - ‘தியானம்.’