தியானத் துணுக்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- திருப்பதிக்கும், சபரி மலைக்கும் கால் நோக நடந்து செல்வது எளிது.
ஆனால், அங்கு ஓரிரு மணி நேரம் அமைதியாய் உட்கார்ந்திருப்பது கடினம்.
பாதயாத்திரைகள், மனயாத்திரைக்கு முற்றுப்புள்ளி வைக்க உருவாக்கப்பட்ட தியான முறைகள். பாதயாத்திரையாய்ச் செல்லும் போதெல்லாம்... ஆங்காங்கே, அவ்வப்போது, அரைமணி நேரமாவது அமைதியாய் உட்காருங்கள்.
பாதயாத்திரை, அர்த்தமுள்ளதாகும், பயன்தரும்.
- ஆரோக்கிய ஸ்புரணா தியான முகாமில் பக்தர் ஒருவர் கேட்டார்...
"பார்க்க சாதாரணமாய்த் தோன்றும் என் வீட்டுத்தோட்டம், புகைப்படத்தில் மிக அழகாகத் தெரிகிறதே! ஏன்?"
பாதயாத்திரையாய்
செல்லும் போதெல்லாம்...
ஆங்காங்கே, அவ்வப்போது,
அரைமணி நேரமாவது
அமைதியாய் உட்காருங்கள்.
பாதயாத்திரை,
அர்த்தமுள்ளதாகும்,
"காரணம் காமிராவுக்கு அகங்காரம்
இல்லை. அது உள்ளதை உள்ளபடி
காட்டுகிறது.
ஆனால், மனிதக் கண்ணில் லென்ஸ் வழியே அகங்காரமும் சேர்ந்து பார்க்கிறது. எனவேதான், நீங்கள் உற்சாகமாயிருக்கும் போதெல்லாம் பளிச்செனத் தெரிவது, துக்கமாயிருக்கும் போது மங்கலாகத் தெரிகிறது,” எனச் சொன்னோம்.
அகங்காரம் அழிந்தால், கண் லென்ஸ் வழியே, காமிரா லென்ஸால் பார்க்க இயலாத வாழ்வியல் வண்ண ஜாலங்களைக் கண்டுகளிக்கலாம்.
- குடுடிண க்ஞூண்டிண்ணச்ணஞிஞுயை தியானம் குறைக்கிறது. தூங்கும்போது தோல் தளர்வடைவதைப் போல, குறைந்தது நான்கு மடங்கு தியானத்தால் தளர்வடைகிறது... எனும் ஆராய்ச்சி முடிவுகளை வேல்ஸ் யுனிவர்சிட்டி வெளியிட்டிருக்கிறது.
தோல் தளர்ந்தால் முகம் பொலிவடையும். உங்களை நீங்கள் தொடுவதே ஒரு சுகமான அனுபவமாய் இருக்கும்.
தியானம் செய்து பாருங்கள். அனுபவங்கள் பல கிடைக்கும்.
- ஒரு முறை ரமணரிடம், பக்தர் ஒருவர் கேட்டார். “பகவான், தியானம் செய்யும் தகுதி எனக்கெல்லாம் உண்டா?” ரமணர், “உன்னால் மூச்சு விட முடிகிறதா? பக்தர், “ம்..... முடிகிறது.”
ரமணர், “தியானம் செய்ய இந்த ஒரு தகுதியே போதுமானது,
மதம், இனம், குலம், கோத்திரம் என எந்த வித வித்யாசமும் இன்றி யார் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.
- ஒரு மத தீவிரவாதி, ஜென் சீடரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

மதம், இனம், குலம், கோத்திரம் என
எந்த வித வித்யாசமும் இன்றி யார்
வேண்டுமானாலும்
தியானம் செய்யலாம்.
தீவிரவாதி, "என் மதக் கடவுள்தான், எல்லாவற்றையும் படைத்தார்... . தெரியுமா?"
ஜென் சீடர், "ஓ! அப்படியா? சாத்தானைப் படைத்தது யார்?"
தீவிரவாதி, "கடவுள் புனிதமானவர். கடவுள் எங்கும் இருக்கிறார். அவருக்கு எதிராகப் பேசுவது பாவம்."
ஜென் சீடர். "எங்குமிருக்கும் உன் புனிதக் கடவுள், நாமிருக்கும் இந்த சினிமா தியேட்டருக்குள்ளும் இருப்பாரா மாட்டாரா?"
தீவிரவாதி, "ஏய்... ஏய்... இந்த மாதிரியெல்லம் பேசினால், எனக்கு கெட்ட கோபம் வரும்,"
ஜென் சீடர், "அடடே, கோபத்தில்கூட கெட்ட கோபம், நல்ல கோபம் உண்டா?
தீவிரவாதி "!!!!!!,"
வம்பிழுக்கப்பட்டால்கூட, உற்சாகமிழக்காமல் இருப்பார் தியானி. கடவுளைப் பற்றிப் பேசும்போதும் கூட, நிதானமிழப்பார் பக்குவமற்ற மனிதர்.
நீங்கள் எப்படிப்பட்டவர்?
விரும்பினால்... தியானம் செய்தால்... எச்சூழலிலும் உற்சாகமிழக்காத சிட்டுக்குருவி போலாகலாம்.
வம்பிழுக்கப்பட்டால்கூட,
உற்சாகமிழக்காமல் இருப்பார்
தியானி.
கடவுளைப் பற்றிப்
பேசும்போதும் கூட,
நிதானமிழப்பார் பக்குவமற்ற
* மீகுக தியான முகாமில்
அன்பரொருவர் கேட்டார், "நம் மனத்தோடு
சண்டையிட்டு ஜெயிக்கவே முடியாதா?"
"உங்களின் நிழலோடு சண்டையிட்டு
உங்களால் ஜெயிக்க முடியுமா?"
மனத்தை அடக்க முடியாது.
மனமானது அடங்க வேண்டும்.
- கனடாவின் வான்கோவர் நகரில் பெண்மணியொருவர் இப்படிக் கேட்டார்.
"யோகம், தியானம் இதில் எது சிறந்தது?"
"யோகம் மனத்தை அடக்கும். தியானத்தில் மனம் அடங்கும்.
அடக்க, முயற்சி நிறைய தேவை. அடங்க, எதுவும் செய்ய வேண்டாம். இளைப்பாற ஆரம்பித்தால் போதும், மனம் அடங்கும். எது சிறந்தது... . இனி முடிவெடுப்பது நிச்சயம் சுலபம் தானே," என்றோம்.
- பேசுவதைக் கடைப்பிடிக்காதவர்
நல்ல பேச்சாளர். கடைப்பிடிக்காததை அழகாய்ப் பேசுபவர்
நல்ல வியாபாரி.
பேசும்போது பேசுபவர்...
செய்யும்போது செய்பவர்... .
நல்ல தியானி.

""யோகம், தியானம் இதில் எது சிறந்தது?"
""யோகம் மனத்தை அடக்கும். தியானத்தில் மனம் அடங்கும்.
அடக்க, முயற்சி நிறைய தேவை. அடங்க, எதுவும் செய்ய வேண்டாம்.
இளைப்பாற ஆரம்பித்தால் போதும், மனம்
நீங்களே விரும்பி, தேர்வு செய்து பெற்றது நரகமேயானாலும், அது சொர்க்கம்தான்.
காரணம், அது நீங்கள் விரும்பியது.
உங்களின் விருப்பத்தை மீறி, நீங்கள் தள்ளப்பட்டது சொர்க்கமென்றாலும், அது நரகம்தான்.
காரணம், அது உங்கள் விருப்பத்திற்கு எதிரானது.
விருப்பமில்லையென்றால், அது தியானமென்றால்கூட, நிறுத்தப்பட வேண்டியதே!
உங்கள் வாழ்க்கை சக்கரத்தின் இயக்கி 'விருப்பம். '
தூண்டிவிடும் ஆசைகளை விட, துணையாய் வரும் விருப்பங்களுக்கு முக்கியத்துவமளியுங்கள்... நரகம்கூடச் சொர்க்கமாகும். துன்பம்கூட, இன்பமாகும். தடைகூட மேடையாகும்.
✦ ஒரு வேடிக்கையான பத்திரிகை சர்வே ரிப்போர்ட் ஒன்று படித்தேன்...
உலகில் விவகாரத்தான திருமணங்கள் 30%, விவாகரத்திற்காகக் காத்திருக்கும் திருமணங்கள் 70%.
திருமணங்கள் கேலிக்கூத்தானது ஏன்?
திருமணத்தின் மூலம், இருமனங்கள் ஒரு மனமாக வேண்டும் எனும் தியான சூத்திரம் வழக்கொழிந்து போனதால்தான் அவை கேலிக்கூத்தாயின.
உலகையே நேசிப்பது எளிது. மனைவியை நேசிப்பது...
எனவேதான் சொல்வோம், புதிதுபுதிதாய் மனிதர்களைத் தேடாதீர்கள். நெருங்கிய மனிதர்களின் நெருக்கத்தைச் சம்பாதியுங்கள்... அதுவே, ஒரு மாபெரும் தியானம்தான்.
அருகிலிருப்பவர்கள் சலிப்பதால்தான் வாழ்வே புளிக்கிறது. அருகிலிருப்பவர் இனித்தால் வாழ்வே சுகிக்கும்.