KAILASA Library/மனதைத் திற/தியானத்தைக் கலைக்க தேவதைகள்Sign in
மனதைத் திற

தியானத்தைக் கலைக்க தேவதைகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

‘‘ரம்பை, மேனகையெல்லம் உண்மையா?’’ என தியான சத்சங்கமொன்றில் ஒருவர் வம்பாய்க் கேட்டு வைத்தார்.

அவரின் கேள்விக்குச் சிரித்தபடியே, ‘‘விஸ்வாமித்திரர் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கலைப்பதற்காகத்தான் ரம்பையும், மேனகையும் இறங்கிவந்தார்கள் என்றால், எல்லாச் சபல குணம் கொண்டவர்களும் தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்களே!

நாம் கொஞ்சம் ஆழமாய் தியானம் செய்தால், அது தேவலோகப் பெண்களுக்குப் பிடிக்காது. உடனே நம்முன் நடமாட இறங்கி வந்து விடுவார்கள். அப்புறம் நம்பாடு ஜாலிதானே! என்று எண்ண ஆரம்பித்து விடுவார்கள்,’’ எனச் சொன்னதும்...

மேற்கொண்டு பேசமுடியாத அளவிற்கு, அரங்கில் இருந்த மக்கள் கைதட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

உங்களுக்குள்ளேயேதான் பல
இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.
அந்த இச்சைகள்தான்,
அப்போது உங்கள் முன்னே
வந்து நடனமாடும். உங்களின்
தியானத்தைக் கலைக்கும்.

விஸ்வாமித்திரரின் தியானத்தைத்
தேவலோகப் பெண்கள் கலைத்தது எனும்
சம்பவத்தின் தாத்பரியம் வேறு.

தியானத்தில் ஆழ்ந்து செல்லும் ஒவ்வொருவரின் உருவகம் ‘விஸ்வாமித்திரர்.’ உங்களுக்குள்ளேயேதான் பல இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.

அந்த இச்சைகள்தான், அப்போது உங்கள் முன்னே வந்து நடனமாடும். உங்கள் தியானத்தைக் கலைக்கும்.

நீங்களும் அந்த இச்சைகளுக்கு மதி மயங்கி, அடிபணிந்து தியானத்திலிருந்து கலைந்து விடுவீர்கள்.

எனவே, தியானத்தில் ஆழ்ந்து செல்லும் ஒவ்வொருவரும், நம்மைத் தடுமாறச் செய்யும் அவற்றைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதே அதன் ஆழமான தாத்பரியம் என பதில் சொன்னோம்.

சத்சங்கம் முடிந்து பெங்களூர் ஆஸ்ரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது பிரம்மச்சாரி பிராணானந்தா கேட்டார்,

“குருவே! இச்சைகள் என்றால், அவை எதையெல்லாம் குறிக்கின்றன?’’

“சுவையான பொருட்களைப் பார்த்து நாவில் எச்சில் ஊறுகிறதே அதுவும் இச்சைதான்.

அழகைப் பார்த்ததும் மனம் அலைபாய்கிறதே, அதுவும் இச்சைதான்.

சொகுசு வாழ்க்கை, கார், பங்களா, பேர், புகழ், பணத்தைப் பார்த்ததும் உணர்ச்சிகள் முறுக்கேறுகிறதே அதுவும் இச்சைதான்.’’

“இவை தியானத்தின்போது நம்மை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?’’

Nithyananda

எவ்வளவு பெரிய பஞ்சு மூட்டையையும் ஒரு சிறு தீப்பொறி சாம்பலாக்கிவிடும்.

எவ்வளவு பெரிய மனிதரையும், ஒரு சிறு இச்சை தடுமாற வைத்து விடும்.

-சீன பழமொழி

“இச்சைகள் ஆழமான மனப்பதிவுகள். அவை சமஸ்காரங்கள் என்றும் அழைக்கப்படும்.

நேராய் அமர்ந்து தியானம் செய்யவிடாமல், கொஞ்சம் சொகுசாய் சாய்ந்து கொண்டால் என்ன என நம்மை மயக்குவதும் ஒரு சம்ஸ்காரமே.

அதையும் மீறிச் செய்தால், மனதில் ஏற்கனவே பதிவாகியிருக்கும் அழகு, புகழ், பணம் சம்பந்தப்பட்ட சம்ஸ்காரங்கள் எழுந்து ஆட்டம் போடும்.

அதையும் மீறி, தியானத்தில் இறங்கினீர்களென்றால்...

தூக்கம், கோபம், காமம், கவலை போன்ற சமஸ்காரங்கள் உங்களை உணர்வு ரீதியாகச் சுண்டியிழுக்கும்.

படிப்படியாக உங்களைத் தியானத்திலிருந்து கலைத்து, உங்களின் தவத்தையே குலைத்துவிடும் சக்தி பெற்றவை இந்த 'சம்ஸ்காரங்கள்' எனப்படும் இச்சைகள். தியானம் மனத்தையே அழிக்கும் தன்மை கொண்டது. மனமே அழிய ஆரம்பித்தால், அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்ஸ்காரங்களின் கதி என்னாவது!?

எனவேதான், அவை மனிதர்களை 10 நிமிடங்கள்கூட கண்களை மூடி தியானம் செய்ய விடுவதே இல்லை.

சம்ஸ்காரங்கள்தான் இக்காலத்து ரம்பை, மேனகை!” என விளக்கம் சொன்னோம்.

“எவ்வளவு பெரிய பஞ்சு மூட்டையையும் ஒரு சிறு தீப்பொறி சாம்பலாக்கிவிடும்.

எவ்வளவு பெரிய மனிதரையும், ஒரு சிறு இச்சை தடுமாற வைத்து விடும்.”

-சீன பழமொழி

சம்ஸ்காரங்கள்தான் இக்காலத்து ரம்பை, மேனகை!

இச்சைகளின் எண்ணிக்கை மனதில் அதிகரித்தால், தியானம் செய்யும்போது மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கையில்கூட அவற்றின் தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.

ஓர் இனிப்பைப் பார்த்ததும்,

ஓர் அழகைப் பார்த்ததும்,

ஓர் புகழைப் பார்த்ததும்,

சொக்குப்பொடி போடப்பட்ட பூனை போல் மனம் அவற்றை நோக்கி மனிதனை இழுக்கும்.

அவை, மனிதர்களுக்கு அந்த நேரத்தில் தேவையற்றிருந்தாலும்கூட, அவற்றிற்காக அவர்கள் ஏங்குவார்கள், அலைவார்கள். மொத்த நிம்மதியும், ஆரோக்கியமும் பறிபோக ஆரம்பிக்கும்.

இச்சைகள் எனப்படும் சம்ஸ்காரங்களிடமிருந்து முழு விடுதலை பெறுவதே ஞானமடைதல்.

Nithyananda

இச்சைகள் எனப்படும்
சம்ஸ்காரங்களிடமிருந்து முழு
விடுதலை பெறுவதே ஞானமடைதல்.

விளக்கப்படம்

இச்சைகளிடமிருந்து விடுபடுவது என்பது, அவற்றை வெறுப்பது அல்ல.

அவற்றை வெறுப்பதும், அடக்குவதும் மூட்டைப் பூச்சியை நசுக்குவதற்குச் சமம். ஒன்றை வெறுத்தால், அது பல வகைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

இவற்றிலிருந்து விடுபட அத்தியாவசியமான தேவை...

சமஸ்காரங்கள் எனப்படும் இச்சைகளின் போக்கைப் புரிந்து கொள்வதே.

அவற்றின் போக்கையும், இயல்பையும் புரிந்து கொண்டுவிட்டாலே, அவற்றிற்கு அடிபணிந்து, நிம்மதியிழப்பது நின்றுவிடும். இதை மட்டும் நாம் செய்தால் போதும் மீதமுள்ளதைத் தியானம் பார்த்துக்கொள்ளும்.

என் காதலி என்னை ஏமாற்றி விட்டதால், இந்த ஏமாற்றம் மாறாத புண்ணாக இருக்கிறது...

-ராகுல், மகுடஞ்சாவடி

அவரின் சூழ்நிலை தெரியாமல்,
அவர் ஏமாற்றினார் என வருந்துவதால்,
ஒருவேளை நீங்கள் மீண்டும் ஒருமுறை
ஏமாறலாம். அவர் நல்லவராயிருக்கலாம்.

உங்களை ஏமாற்றிய அவர்,
வெளியே சிரித்து, உள்ளே அழலாம்.
யாருக்குத் தெரியும். யோசியுங்கள்.

ஒருவேளை அவர் சூழ்நிலைக்
கைதியாக இருந்திருப்பாரோ எனும்
புதுக்கோணம் பிறக்கும். மீண்டும்
உற்சாகமாவீர்கள்.

அல்லது, நிஜமாகவே அவர்
ஏமாற்றியிருக்கட்டுமே... ஒரு
ஏமாற்றுக்காரருக்கு உங்களின்
மனதில் ஏன் இடம் தரவேண்டும்?

ஏமாற்றியவர் விடும் ஏப்பமாக உங்களின் வாழ்க்கை மாறிவிடக் கூடாது.

இந்த நொடி முடிவெடுத்தால் கூடப் போதும்...

புதுப் பொலிவோடு, முன்பைவிடப் பல மடங்கு இனிமையான வாழ்வைத்தாக் இயற்கை காத்துக்கொண்டிருக்கிறது.

ஏமாற்றியவரை நல்லவர் எனப் புரிந்து கொண்டு, விட்டு விட்டாலும் சரி, இல்லை, அவரை ஏமாற்றுக்காரர் எனப் புரிந்துகொண்டு, விட்டு விட்டாலும் சரி.

இரண்டுமே நல்லது.

புது வாழ்வுக்கு வழி பிறக்கும்.