முடிச்சுகளை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு ஜென் ஞானியிடம் சீடர் கேட்டார், "குருவே, நான் பொய்யை மிகவும் விரும்புகிறேன். எதையும் நேரடியாய்ப் பேசுவதைவிட, கொஞ்சம் சேர்த்துச் சொன்னால்தான் அது சுவைக்கிறது. ஏன் இப்படி?"
ஜென் ஞானி, "மற்றவரைவிட, அதிகம் தெரிந்திருப்பவன் நான் என இலைமறை காயாய், காண்பித்துக்கொள்ளத் துடிக்கும் மனத்துடிப்பே காரணம்," எனச் சொன்னார்.
ஆழ்ந்து பார்த்தோமானால் புரியும்,ஒவ்வொருமுறை நாம் பொய் சொல்லும் போதும், நம் அகங்காரம் திருப்தியடைகிறது. மனம் புஷ்டியாகிறது. இது ஆரோக்கியக் கேடல்ல. ஆனந்தக் கேடு.
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனிக் கலையாக, பிரித்து பேசுதல் உருவாகியுள்ளது. இதை நாம் மற்றவருக்கும், மற்றவர் நமக்கும் செய்துகொண்டேயிருக்கிறோம். இதனால் பல சேதாரங்களை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.
ஒரு சின்ன கதை :
முதல் பாடவேளைக்கான மணி அடித்து, பத்து நிமிடம் ஆகிவிட்டது.
ஒவ்வொருமுறை நாம்
பொய் சொல்லும்
போதும், அகங்காரம்
திருப்தியடைகிறது. மனம்
புஷ்டியாகிறது. இது
ஆரோக்கியக் கேடல்ல.
என்றைக்கும், நேரத்திற்கு முன்னதாகவே வரும் பத்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார், பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை.
முணுமுணுத்துக் கொண்டிருந்த மாணவர்கள், கலகலக்கத் தொடங்கிவிட்டனர்.
மாப்பிள்ளை பெஞ்சு மாணவர்கள் குறும்பர்கள்.
அதில் ஒரு மாணவர், தம் அருகில் இருக்கும் இன்னொருவரிடம், "டேய், கண்ணா! கணக்கு வாத்தியாரை இன்னும் காணோமே! ஜுரமா இருந்தால்கூட வந்துடுவாரே! அப்படின்னா அவருக்கு உடம்பு சரியில்லாம இருக்கும்," என்றார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இரண்டாவது மாணவர், "கணக்கு வாத்தியாருக்கு உடம்பு சரியில்லைன்னா, அது ஏதோ சீரியஸான விஷயமா இருக்கும்பா," என்றார்.
மூன்றாவது மாணவரின் காதுக்கு இந்தச் செய்தி எட்டியது, "சீரியஸ்ன்னா அவரை ஹாஸ்பிடல்லதான் அட்மிட் பண்ணியிருக்கணும்," என அடுத்தவர்களிடம் சொன்னார். அவர்கள் மற்றவர்களிடம், 'சீரியஸ் என்றால், நிச்சயமாக ICU-வில்தான் வைத்திருப்பார்கள்' என்று யோசித்து, "தெரியுமாப்பா... கணக்கு வாத்தியாருக்கு ரொம்ப சீரியஸ் என்பதால், ICU-வில் வைத்திருக்கிறார்களாம்," என்று சொன்னார்.
இதைக் கேட்ட ஐந்தாவது மாணவர், 'ஐஇக்-வில் இருக்கிறார் என்றால், இந்நேரம் அவர் செத்து போயிருக்கலாம்' என யோசித்து, "தெரியுமா, கோமாவில் இருந்த நம்ம கணக்கு வாத்தியார், இன்னிக்கு காலையில செத்துப் போயிட்டாராம்," எனச் சொன்னார்.

பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு வரும்
பாதிப்பைவிட, நமக்கு நாமே ஏற்படுத்திக்
கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.
அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து,
உங்களை உங்களிடமிருந்தே
பறிக்கும் அரக்கனாகும்.
அவரிடமிருந்து செய்தியைப் பெற்ற ஆறாவது மாணவர், 'செத்து போயிட்டாரென்றால், இந்நேரம் வீட்டுக்குக் கொண்டு வந்திருப்பார்கள்தானே' என யோசித்தவாறு வகுப்பு முழுவதும், "பாவம், கணக்கு வாத்தியார் செத்துப் போயிட்டார். இப்பத்தான் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். நம்ம பசங்கள் இரண்டு, மூணுபேர் பார்த்துவிட்டு வந்தவர்கள் சொன்னாங்கப்பா," எனச் சொன்னார்.
அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே, பள்ளி முழுவதும், செய்தி காட்டுத்தீ போன்று பரவியது.
எனவே, பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டு, எல்லோரும் கணக்கு வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினர்.
கிளம்புவதற்காக மாலையும், கையுமாக பள்ளிக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த மொத்த மாணவர்களையும் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே, விஷயம் புரியாமல் பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக் கொண்டே ஆரோக்கியமாய் வந்து சேர்ந்தார், கணக்கு வாத்தியார்.
ஆழ்ந்து புரிந்து கொண்டால் புரியும். நீங்கள் பொய் சொல்கிறீர்களா அல்லது உண்மையைச் சொல்கிறீர்களா என்பது கேள்வியல்ல.
மொத்தக் கேள்வியும், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ, அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பொதுவாக நாம் அடுத்தவர் சொல்வதைச் ச ட்டென்று ஏற்றுக் கொள்வதில்லை. அலங்கரிக்கப்பட்ட நயமான வார்த்தைகளை, சொல்பவர் சொல்லும் விதத்தில் சொன்னால், நம்பி விடுகிறோம். நம்பிச் செயல்படுகிறோம்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு வரும் பாதிப்பைவிட, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.
நாம் அடுத்தவர்
சொல்வதை சட்டென்று
ஏற்றுக் கொள்வதில்லை.
அலங்கரிக்கப்பட்ட நயமான
வார்த்தைகளை, சொல்பவர்
சொல்லும் விதத்தில்
சொன்னால், நம்பி விடுகி
றோம். நம்பி செயல்படுகி
அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து, உங்களை உங்களிடமிருந்தே பறிக்கும் அரக்கனாகும்.
எதையுமே ஜோடித்துச் சொல்வதென்பது, நாசுக்காய்ப் பேசிக்கொண்டே இருக்கும் பொய்கள்.
பொய் பேசுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள, எதையுமே பொட்டளவாவது திரித்துச் சொல்லும் இயல்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பொய் சொன்னதால் போட்ட ஒவ்வொரு முடிச்சுக்களையும், இந்தத் தியானம் செய்வதால் அவிழ்த்து விடுங்கள்.

“இனி எதையும் திரிப்பதில்லை ;
கேட்டதைக் கேட்டபடி சொல்வேன்.
எதையும் திரித்து, மிகைப்படுத்தி அல்லது குறைபடுத்தி என்னைப் பேசச் சொல்லித் தூண்டும் செயலை முழுமையாய்க் கவனிப்பேன்.
அதற்கெல்லாம் அனுமதியளிக்க மாட்டேன்,” எனும் சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக் கொள்ளுங்கள்.
சங்கல்பத்தை வாழ்வில் நிஜமாக்குங்கள். செயல்படுத்துங்கள்.
வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும். நீங்களும், மற்றவரும் சேர்ந்து, நலமாய் வாழ இன்னொரு நல்வழி பிறக்கும்.
வெளிநாட்டில் இருக்குமளவுக்கு ஆன்மீகத் தேடல், இந்தியர்களிடம் ஏன் இருப்பதில்லை?
- ரோசின், மொரிஷியஸ்
காரணம்,இந்தியர்களின் இரத்தத்திலேயே ஆன்மீகம் ஊறிப் போய்விட்டதுதான்.
மொடாக் குடியனுக்கு இரத்தத்தில் மது கலந்துவிட்டதால், மயக்கத்திலேயே இருப்பார். நிஜத்திற்கு எளிதில் வரமாட்டார்.
அளவுக்கு மீறி ஆன்மீகக் கருத்துகளை, இந்தியர்கள் தெரிந்து வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த அறிவு, ஒரு மூளைக்கட்டிக்குச் சமம்.
அறிவு கரைந்து, அனுபவங்களாக மாற வேண்டும்... முதலில், போதை தெளிய வேண்டும். போதை தெளிய, தியானம் மிக அவசியம்.