மிகவும் சரியாய் புரிந்து கொள்ளப்பட்ட
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கிருஷ்ணர் மிகவும் ஆச்சரியமான சன்யாசி. அதே வேளையில், மிக ஆச்சரியமான இல்லறவாசி.
-சுவாமி விவேகானந்தர்.
துறவறம் என்பது பெண்களைக் கண்டாலே ஓடி ஒளியும் பலவீனமான நிலையல்ல.
சன்யாசி ஆவதற்கான குறைந்தபட்சத் தகுதி, இல்லறவாசி ஆவதற்கான அதிகபட்சத் தகுதி.
அதாவது, ஒரு குடும்பத்தையே சர்வசாதாரணமாகக் கையாளத் தெரிந்தவரால்தான், ஒரு தனி ஆஸ்ரமத்தைக் கையாள்வதைப் பற்றி யோசிக்கக்கூட முடியும்.
கிருஷ்ணர் மிகவும்
ஆச்சரியமான சன்யாசி.
அதே வேளையில், மிக
ஆச்சரியமான இல்லறவாசி.
-சுவாமி
சன்யாசியாக மாறுவதென்பது இலேசுபட்டக்
காரியமல்ல. அதற்கு நிறையத் தவம் செய்ய
வேண்டும்.
இவ்வளவு தவம் செய்து சன்யாசியாய்
மாறுவதால் எனக்கென்ன பயன்? எனக் கேட்
டால்...
நீங்கள் ஒரு கிருஷ்ணரைப் போல் ஆனந்தமாக வாழலாம் என்பதே என் பதில்.
கிருஷ்ணர், பிரம்மச்சரியத்திற்கான அருமையான உதாரணம்.
ஆனந்தவாழ்வு கல்வி பயிலும் மாணவர் ஒருவர் இப்படிக் கேட்டார். "பிரம்மச்சரியம் என்றால் என்ன?"
பிரம்ம+சரியம்.
அதாவது பிரம்மம் என்றால் கடவுள், சரியம் என்றால் கடவுளை போல் வாழ்தல். அதாவது கடவுளைப்போல் வாழ்தல் பிரம்மச்சரியம்.
"யார் சன்யாசி?"
"தமக்குள் ஆனந்தமாய், தமக்குள் சுதந்திரமாய், யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம்."
"இன்னும் விளக்கமாய்ச் சொல்லுங்கள்."
"பெண்களின் நினைவுகளாலும், பெண்களின் அருகாமையாலும் தொந்தரவு செய்யப்படாத நிலையில் இருப்பவர், சம்சாரியாக (இல்லறவாசி) இருந்தாலும், சன்யாசிதான். அதுவே கிருஷ்ண நிலை.
பெண்களே இல்லாத காட்டுக்குள், மரத்தினடியில் அமர்ந்திருக்கும் தனிமனிதரின் மனத்துக்குள், இரம்பையாகவும், மேனகையாகவும் மாறி மாறிப் பல பெண்களின் நினைவுகள் வந்து வாட்டினால்...

"யார் சன்யாசி?"
"தமக்குள் ஆனந்தமாய், தமக்குள் சுதந்திரமாய், யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம்."
அவர் தம்மை சன்யாசி என்று அழைத்துக்கொண்டாலும், சம்சாரியே. சன்யாசம் உடையில் இல்லை,
சன்யாசம் உணர்விலிருக்கிறது.
இதுவரை சொன்னது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். ஆண்களின் நினைவுகளினால் அலைக்கழிக்கப்படாத இராதை நிலையை அடைந்துவிட்டால் அவர்களும் கிருஷ்ண நிலையைத் தொட்டவர்கள்தான்."
சின்ன கதை
கிருஷ்ணர், கோபிகைகளோடு ஆனந்தக் கூத்தாடி வந்துகொண்டிருந்தார்.
யமுனை நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதியிலோ தண்ணீர் கரைபுரண்டோடியது. அப்போது கிருஷ்ணர், "யமுனையே நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால் எனக்கு வழிவிடு" என்று சொன்னார்.
அவர் சொன்ன உடனே யமுனை பிரிந்து, கிருஷ்ணர் நடந்து செல்ல பாதையை உருவாக்கிக் கொடுத்தது.
கிருஷ்ணர் பிரம்மச்சாரி என்பதை இயற்கையே உறுதிசெய்திருக்கிறது.
இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததா, இல்லையா, இது நிஜமா, பொய்யா, என்றெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை. இச்சம்பவத்தில் பதிந்திருக்கும் சத்தியம் மிக ஆழமானது.
அது...
கிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரி.
அவ்வளவு கோபியரோடு இருந்தும்,
கிருஷ்ணர் ஒரு பிரம்மசாரியாக, எந்தப்
பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்.
நீரிலேயே இருந்தாலும், அதனோடு
கொஞ்சமும் ஒட்டிக்கொள்ளாத தாமரையைப்
போல, உணர்வளவில் யாரோடும் ஒட்டிக்
கொள்ளாத, சிக்கிக்கொள்ளாத, சுதந்திரத்தைப்
சன்யாசம் உடையில் இல்லை,
சன்யாசம் உணர்விலிருக்கிறது. பெற்றிருந்தால் மட்டுமே கிருஷ்ணரைப்போல் வாழ்வைக் கொண்டாடலாம்.
நிருபர் ஒருவர், "ஆன்மீகம் என்ற பெயரில் மக்களுக்கு எந்த நல்லதைத் தர விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டபோது, "கொண்டாட்டம் மிகுந்த ஆனந்தமயமான வாழ்வு," எனச் சொன்னோம்.
கிருஷ்ணர் சிறந்த அரசனாயிருந்தார், கைதேர்ந்த அதிபதியாயிருந்தார், ஞானகுருவாயிருந்தார், நல்ல கணவராயிருந்தார், உயிர் நண்பராயிருந்தார், சுட்டிக் குழந்தையாயிருந்தார்.
இவையனைத்தையும், ஆனந்தமயமான பிரம்மச்சரிய நிலையிலிருந்து கொண்டாடும் பிரம்மச்சாரியாயிருந்தார்.
"தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் பிரம்மச்சரியத்தைச், சரியாய்ப் புரியவைப்பதும், உலகில் ஆனந்தமயமான சூழலை உருவாக்குவதும்தான் நிஜமான ஆன்மீகம், அதைத்தான் உங்களுக்குத் தர விரும்புகிறோம்.''
விரதம் என்ற பெயரில் பட்டினிகிடப்பது; பக்தி என்ற பெயரில் மற்ற மதங்களின் மேல் அவதூறு பேசித் திரிவது; சாஸ்திரங்கள், வேதங்கள், நீதி நெறிகள் எனும் பெயரில் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்வது ,நிச்சயம் ஆன்மீகம் அல்ல.
ஆன்மீகம், ஆத்திகம் எனும் பெயரில் நம்மை எவை எவையெல்லாம் சுருக்கிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள்.
இந்தக் கண்டுபிடிப்பு, உங்களுடைய வாழ்க்கைச் சாலையை விசாலமாக்கிவிடும். ஆனந்தத் தேர் உலாவரும் இராஜவீதியாக வாழ்வு மாறிவிடும்.
கொண்டாடி, மகிழ்ந்து வாழ்ந்திட, நிஜ ஆன்மீகம் நோக்கித் திரும்புங்கள். நிஜ ஆன்மீகம் நோக்கி மனம் திரும்ப உதவும் மேலுள்ள கண்டுபிடிப்பைச் சிரத்தையோடு செய்யுங்கள்.
கண்டுபிடிப்புக்காலம் தியானகாலமாக மாறுவதைக் கண்டு மகிழுங்கள்.