KAILASA Library/மனதைத் திற/சுகப்பிரம்மம்Sign in
மனதைத் திற

சுகப்பிரம்மம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இமைகளை மூடினால்,
முன்னால் தெரிந்த உலகம்
சட்டென மறைந்து போகிறது!
ஓர் இமை மூடலில் காணாமல் போகும்
உலகத்தை, உங்களுக்குக் கண்டுபிடித்துத்
தருவது எது!?
நிச்சயம் அது இமையல்ல!
பின் எது?

பதிலைச் சொல்லும் முன் ஒரு சிறிய கதை...

ஆற்றங்கரையில், உடலில் ஆடையில்லாத் திகம்பரராய் கடந்து கொண்டிருந்தார் சுகப்பிரம்மம்.

இமைகளை மூடினால்,
முன்னால் தெரிந்த உலகம்
சட்டென மறைந்து போகிறது!
ஓர் இமை மூடலில் காணாமல்
போகும் உலகத்தை,
உங்களுக்குக் கண்டுபிடித்துத்

அங்குக் குளித்துக் கொண்டிருந்த
இளம்பெண்கள், இவரை ஒருபொருட்டாய்க்
கூடக் கருதவில்லை.

ஆனால், அடுத்த நொடியே நிலைமை தலைகீழானது.

வாலிபன் சுகப்பிரம்மத்தின் தந்தை வியாசர், அதே இடத்திற்கு வந்தார். குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பதறியடித்துக் கொண்டு ஆடைகளைத் தேடி ஓடினர்.

நிகழ்ந்த அனைத்தையும் பார்த்த வியாசருக்கு வியர்த்துப் போனது!

"என்ன இது! என் மகன் இளைஞன். அதுவும் ஆடையில்லாமல் உங்களைத் தாண்டிச் செல்லும்போது கூச்சமில்லாமல் கும்மாளம் அடித்தீர்கள்.

நான் முதிர்ந்தவன். பண்பானவன். என்னைப் பார்த்ததும், இப்படி பதறியடித்துக் கொண்டு ஓடுகிறீர்களே! என்ன காரணம்?" என வெகு குழப்பத்தோடு கேட்டார்.

அதற்கு அப்பெண்கள்...

"உங்கள் மகனின் கண்கள் வேறு . உங்களின் கண்கள் வேறு."

வியாசர், "அப்படியென்றால்...?"

பெண்கள், "உங்கள் பார்வையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் தெளிவாய்த் தெரிகிறது. அது எங்களை உறுத்துகிறது," என அவர்கள் சொன்ன பதிலில் வியாசர் ஆடிப் போனார்!

வியாசரையே ஆடிப்போக வைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது கண் பார்வை.

portrait

அலட்சியம் தலைதூக்கும்போதே, அதை அலட்சியம் செய்துவிடுங்கள்.

உறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய்
ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும்
அதிசயங்களைக் காண்பீர்கள்.

அதனால்தான் நம் தமிழ் முன்னோர் அன்றே சொல்லி வைத்தார்கள். "கல்லடி பட்டாலும் படலாம்; கண்ணடி படக்கூடாது," என்று. இது உண்மையே. உங்களின் கண்பார்வைக்குக் கல்லைக்கூடக் கரைக்கும் சக்தி உண்டு.

நம்மில் பெரும்பாலோர் எதிரில் இருப்பவரின் முகத்தைக்கூட பார்த்துப் பேசுவதேயில்லை.

பேசிக் கொண்டிருப்பவரைக் கவனிக்காமல், அவருடைய உடை, கை, கால் அசைவுகளைக் கவனிப்போம். இன்னும் சிலர் பேசிக்கொண்டே எழுதுவது, படிப்பது, போனில் உரையாடுவது என்று வேறு வேலையில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் அதிகபட்சம் கருத்துப் பரிமாற்றம் (ஜணஞரணிணூ ட்ச்ணடிணிண ண்டச்ணூடிணஞ்) மட்டுமே நடக்கும். ஆனால், அடிப்படையான உணர்வுகளின் ஆத்மார்த்தமான பரிமாற்றம் (உட்ணிணடிணிணச்டு ண்டச்ணூடிணஞ்) அங்கு நடைபெறாது.

கணவன் - மனைவிக்குள்; பெற்றோர் - குழந்தைகளுக்குள்; நண்பர் - உறவினர்களுக்குள்; ஆசிரியர் - மாணவர்களுக்குள் வரும் எல்லாச் சச்சரவுகளுக்குமான விரிசல் இங்குதான் விழ ஆரம்பிக்கிறது.

அந்த விரிசல்தான் பிறகு, நாளாக நாளாகப் பெரிதாகி, விழுந்தால் எழமுடியாத அளவுக்கு ஆழமான மனப்பள்ளத்தாக்காகிறது.

நன்றாக ஆராய்ந்தால் தெரியவரும் உண்மை, "இது நம் அலட்சிய மனோபாவத்தால் வரும் பிரச்சினை. தும்பை விட்டு, வாலைப் பிடிக்கக் கூடாது.

உங்களின்
கண்பார்வைக்குக்
கல்லைக்கூடக்
கரைக்கும்

அலட்சியம் தலைதூக்கும்போதே அதை அலட்சியம் செய்துவிடுங்கள்.

உறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய்
ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும் அதிசயங்களைக்
காண்பீர்கள்."

Meditation symbol

இந்தத் தியானத்தைச் செய்வதால், நீங்கள் அடையப் போகும் பலன்கள்.

1. நீங்கள் சொல்லும் வார்த்தைக்குச் சக்தி கிடைக்கும். ஏனென்றால், நீங்கள் சொல்லும் கருத்தை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.

2. இதனால் உங்களால் நல்ல பேச்சாளராக முடியும் (இணிணதிஞுணூண்ச் ணாடிணிணச்சூ ண்டுடீடுடூ) மற்றும் உங்களைச் சுற்றி மக்கள் வசீகரிக்கப்படுவார்கள் (இணிணதிடிணஞிடிணஞ் ண்டுடீடுடூ).

3. உறவுகளிடம் சுமுகமான உறவு நீடிக்கும்.

4. இது உங்கள் தனித்துவத்தைச் செம்மைப்படுத்தும்.

இந்தத் தியானம் உங்களை சூட்சுமமாகப் பல பரிமாணங்களில் வளரச் செய்யும்.

கண்களோடு கண்கள் கலப்பதேயில்லை. நெருங்கிய உறவினர்களைக்கூட நாம் ஆழமாகப் பார்ப்பதில்லை.

ஆழமாகப் பார்ப்பது வேறு ; அடுத்தவரை ஊடுருவுவது வேறு.

சுகப்பிரம்மம் ஆழமாய் பார்த்தார்; அன்பாய் பார்த்தார்.

ஆனால், வியாசரின் பார்வையோ ஊடுருவியது. மற்றவர்களிடமும், உற்றவர்களிடமும் பழகும்போது கண்ணோடு கண்பார்த்து கரிசனமாய்ப் பேசுங்கள். அவர்களை ஊடுருவும் செயல் அன்றோடு நின்றுவிடும்.

ஆழமாய்ப் பாருங்கள்.
அழகாய்த் தெரிவார்கள். பின்
நீங்கள்கூட அழகாய்த் தெரிவீர்கள்.