KAILASA Library/மனதைத் திற/துறவியாயிருப்பதுSign in
மனதைத் திற

துறவியாயிருப்பது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

என் சொந்த

  • காதல் தோல்வியால் துறவியானீர்களா?

காதலில் ஜெயித்ததால்.

  • அப்படியா... யாரைக் காதலித்தீர்கள்?

என்னுள்ளிருக்கும் என்னை.

  • எப்போது ஜெயித்தீர்கள்?

ஜனவரி 1, 2000.

  • அது நீங்கள் ஞானமடைந்த நாளல்லவா?

அன்றுதான்... என்னோடு நான் கலந்ததும், கரைந்ததும் நிகழ்ந்தது!

ஞானமடையும் போதே...
நான் கரைந்துவிட்டேன்.
'நான்' என்ற தனி அன்று
இறந்துவிட்டது.

அன்றுதான்... உண்மைக்காதல் ஜெயித்தது.

அதை ஜெயித்தல் எனவும் சொல்ல முடியாது. அது ஒரு நிகழ்வு.

ஞானமடையும்போதே... நான் கரைந்துவிட்டேன். 'நான்' என்ற தனி அன்று இறந்துவிட்டது.

இதை... நான் கரைய, நானே அனுமதித்ததால், என்மீது கடவுள் கொண்ட காதல் ஜெயித்தது என்று சொல்லலாம்.

  • உண்மைக்காதல்... என்றால்!?

உண்மைக்காதலின் மடியில் தவழும் குழந்தைகள்...

ஈர்ப்பு,
பாசம்,
காமம்,
காதல்,
நட்பு,
அன்பு

இந்த எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டதும், இவை எல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வு நிலையே உண்மைக் காதல்.

  • ஞானமடையும்போது நிகழ்வதென்ன?

மனிதன் இறக்கிறான். கடவுள் பிறக்கிறார்.

  • யார் ஞானி? யார் மனிதன்?

செத்தும் பிழைத்தவர் - ஞானி பிழைத்தும் சாகுபவர் - மனிதர்

portrait

ஞானமடையும் போது நிகழ்வதென்ன?

மனிதன் இறக்கிறான். கடவுள் பிறக்கிறார்.

  • கடவுளை நிரூபிக்க என்ன ஆதாரம்?

"நான் கடவுளை நிரூபிக்க முடியாது," என்பதே கடவுள் இருப்பதற்கான ஆதாரம். சிறு உபகரணங்களால் நிரூபிக்கப்படும் அளவுக்குச் சிறியவர் அல்ல கடவுள்.

  • கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து?

கடவுளைக் கற்பனை செய்ய முடியாது. அப்படி உங்களால் கற்பனைசெய்ய முடிந்தால், அது கடவுளாக இருக்க முடியாது.

  • ஆத்திகம், நாத்திகம் பற்றி... .

கடவுள் உண்டு என நம்புவது எளிது. கடவுள் இல்லை என நம்புவதற்கு இன்னும் கொஞ்சம் போராட வேண்டும்.

இருவரும் தம் தம் கொள்கையில் தீவிரமாகத் தேடி ஓடினால்... ஆத்திகத் தின் உச்சமும், நாத்திகத்தின் உச்சமும் மோதிக்கொள்ளும் நாற்சந்தியே ஆன்மீகம்.

கடவுள் உண்டு, இல்லை என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்டதே ஆன்மீகம்.

  • கோயில்கள்...

சக்தி நிலையங்கள்.

  • பக்தி பற்றி விளக்குங்கள்?

கடவுள் உண்டு, இல்லை

என்ற இரண்டுக்கும்

அப்பாற்பட்டதே

நாத்திகருக்கு, தம் நாத்திகத்தின்
மேலிருக்கும் நம்பிக்கை, மரியாதையின்
கூட்டுத்தொகை

  • பக்தி.

பக்தி சக்தி. பக்தி தியானம். யார் மீது, எதன் மீது பக்தி செய்யப்படுகிறது என்பது முக்கியமல்ல. பக்திதான் முக்கியமானது. எதைப்பார்த்து நம்பிக்கை வந்தாலும், யார் மீது மரியாதை வந்தாலும், அது பக்தியுணர்வே.

  • தியானம், ஆரோக்கியமான தூக்கத்தைத் தருமா?

தரும். நீருக்குள் விரலை விட்டு எவ்வளவு சுலபமாய் வெளியே எடுக்க முடிகிறதோ, அவ்வளவு சுலபமாகத் தியானம் செய்பவரால், தன்னுள் நுழைந்து தூங்கி, எளிதாய் வெளிவரமுடியும். தியானம் ஞானத்தின் திறவுகோல்.

  • தூக்கம் எதைப்பொறுத்தது?

தூக்கத்தின் நீளமல்ல, ஆழமே அதை நிர்ணயிக்கும்.

  • ஞானம்?

தெய்வமாளிகை.

  • தெய்வம்?

நீங்கள்!

  • தூக்கம், மரணம் ஒன்றா?

குட்டி மரணம், 'தூக்கம்.' நீண்ட தூக்கம், 'மரணம்.'

  • நான் கடவுளா?
தெய்வம்? நீங்கள்!

ஆம்!
மனிதராக வாழும் கடவுள் - மனிதர்
கடவுளாக வாழும் மனிதர் - ஞானி

  • யார் தியானம் செய்யக் கூடாது?

சிரிக்கும் குழந்தை, ஆனந்தமாயிருக்கும் ஞானி.

  • யார் தியானம் செய்ய வேண்டும்?

மற்ற எல்லோரும்.

  • எப்போது தியானம் செய்யக் கூடாது?

ஆனந்தம், ஆரோக்கியம் அருளும் அருமருந்து தியானம். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே முழு ஆரோக்கியமானவராகவும், ஆனந்தம் நிறைந்தவராகவும் இருந்தால்... மருந்து தேவையில்லை.

  • சரியான தியானம் எது? வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் 'வேதம்' வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் 'குரு' வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் 'தியானம்.'
  • அந்தச் 3 நாட்களில் பெண்கள் தியானம் போன்ற புனிதச் செயல்களைச் செய்யக் கூடாதா?

யார் தியானம் செய்யக் கூடாது?

சிரிக்கும் குழந்தை,

உடலும், மனமும் சோர்ந்திருக்கும் அந்தக்
காலங்களில்தான் சக்தியூட்டும் தியானமும்,
தெம்பூட்டும் தெய்வமும் வேண்டும்.

வாசல்வரை நின்றவர்கள், பூஜை
அறைவரை செல்லவேண்டும். கட்டாயம் செல்ல
வேண்டும்.

  • சிரிப்பு தியானம் மருந்தாமே?

சிரிப்பு என்பது...
அது ஒரு ஞான வெளிப்பாடு.
அகங்காரத்தை அழிக்கும் அருமருந்து.
தியானியின் அடிப்படை குணம் .
நோயற்ற வாழ்வின் சொர்க்கவாசல்.
எளிய, ஆனால் வலிமை மிக்க தியானம் அது.
ஆனந்தமாக இருப்பவரின் ID card
கவலை, கஷ்டம் கரைக்கும் ஓர் இயற்கை வழி.
நித்ய ஆனந்தத்தின் திறவுகோல்.

  • எது சிறந்த தானம்?

நிதானம் - இதைத் தானமளியுங்கள். இதைப் பெறுவோரும், கொடுப்போரும் புண்ணியவான்கள்.

  • யார் முட்டாள்?

புத்திசாலியென நம்புபவர்.

  • யார் புத்திசாலி?

தம்முடைய முட்டாள்தனங்களை உணரும் புத்தியோடு இருப்பவர். அதைத் தொடர்ந்து திருந்துபவர்.

  • இன்றைய ஆன்மீகத்தை நம்பலாமா?

நம்பாதீர்கள், நவநாகரிக மனிதருக்கு அது கடினம்.

வெறுமனே எதையும் நம்பாதீர்கள்,

portrait

நிதானம்

  • இதைத் தானமளியுங்கள். இதைப் பெறுவோரும், கொடுப்போரும் புண்ணியவான்கள்.

முதலில் யோசித்துப்பாருங்கள். பலன்களை ருசித்துப்பாருங்கள். பின் தியானத்தை ஒத்துக்கொள்ளுங்கள்.

ஏற்றுக்கொள்ளுங்கள்.

நம்பவேண்டிய அவசியமே இல்லை எனுமளவிற்கு அது அனுபவமாகிவிடும்.

  • எந்த குருவிடம் போகக் கூடாது?

"மற்ற குருமார்களிடம் போகாதீர்கள்" எனச் சொல்லும் குருமார்களிடம் நிச்சயமாகப் போகாதீர்கள்.

  • மற்ற ஆன்மீக இடங்களுக்குச் செல்லலாமா?

நிச்சயமாக! எல்லா நல்ல இடங்களுக்கும் செல்லுங்கள். எல்லாத் தோட்டங்களிலிருந்தும் பெற்ற மலர்களால், ஓர் அழகுப் பூச்செண்டை உங்களுக்காகச் செய்து கொள்ளுங்கள்.

  • எது ஆத்மா?

இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணமாயிருப்பது.

  • எது தர்மம்?

உங்களுக்கும் மற்றவருக்கும் ஆனந்தமளிக்கும் எல்லாச் செயல்களும் தர்மங்கள்.

எந்த குருவிடம் போகக் கூடாது?

"மற்ற குருமார்களிடம்
போகாதீர்கள்" எனச் சொல்லும்
குருமார்களிடம் நிச்சயமாகப்

  • எது அதர்மம்?

உங்களுக்கும், மற்றவருக்கும்
துன்பமளிக்கும் எல்லாச் செயல்களும்
அதர்மங்களே!

  • பதவியின் நோக்கம்? உதவி செய்வது.
  • நீங்கள் நிறைய கதை சொல்வதின் இரகசியம் என்ன? ஞானக்கதைகள், சத்திய விதைகள்!

நலம் தரும் மருந்தின் கசப்பை மறைக்கும் இனிப்புப்பூச்சு, ஆனந்தம் தரும் சத்தியத்தின் கடினத்தைக் குறைக்கும் கதைப்பூச்சு.

  • நான் ஏன் இன்னும் ஞானமடையவில்லை?

அது இன்னும் கேள்வியாக மட்டுமே இருக்கிறது. முதலில், கேள்வி வேள்வியாகட்டும்...

பின் குழந்தையைக் காணத்துடிக்கும் தாயின் தவிப்பாக அது மாறட்டும்... அது நடந்தால், ஞானக்குழந்தை கருத்தரிக்கும். நீங்கள் ஞானியாவீர்கள்.

  • சொர்க்கம் எங்கேயிருக்கிறது?

சொர்க்கமும், நரகமும் புவியியல் ரீதியானதல்ல. அவை மனோ ரீதியானவை. சொர்க்கம் உங்களுக்குள்ளே...

  • படிப்பு பற்றி...

படிப்பு ஒரு கலை.

விருப்பம், ஞாபக சக்தியின் பிறப்பிடம். விருப்பம் மலர்ந்தால், படிப்பு ஒரு சுவை. அது வேறிடத்தில் மலர்ந்தால், படிப்பு ஒரு சுமை.

portrait

எது தர்மம்?

உங்களுக்கும் மற்றவருக்கும் ஆனந்தமளிக்கும் எல்லாச் செயல்களும் தர்மங்கள்.