KAILASA Library/மனதைத் திற/எது கற்பு?Sign in
மனதைத் திற

எது கற்பு?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ போதனை?

அது, எல்லோரும் எல்லோர்க்கும் தரத் துடிப்பது.

அதேநேரத்தில், யாரும், யாரிடமிருந்தும் பெற தயாராயில்லாது இருப்பதும் அதுவே.

❖ வேதனை?

தங்கள் காரியம் ஆக வேண்டியிருக்கையில் வரும் தடங்கல்களுக்கு, "சோதனை - அது சாதனையின் படிக்கட்டு," என்பர். மற்ற நேரங்களில் அது வந்தால் வேதனை என்பர்.

❖ தியானம் செய்ய சிறந்த ஆசனம் எது?

தியானம் செய்ய சிறந்த ஆசனம் எது?

முதுகெலும்பு, கழுத்து, தலையை நேர்க்கோட்டில் இருக்க அனுமதிக்கும் எல்லா உட்காரும் முறைகளும் சி

முதுகெலும்பு, கழுத்து, தலையை நேர்க்கோட்டில் இருக்க அனுமதிக்கும் எல்லா உட்காரும் முறைகளும் சிறந்தவையே.

❖ படிப்பு?

அது ஒரு கலை.

❖ நன்றாகப் படிப்பவர்கள்?

நிச்சயம் வானத்திலிருந்து குதித்தவர்களல்ல.

❖ படிப்பில் கெட்டிக்காரனாக ஒரு டிப்ஸ்...

படிக்கும்போது படியுங்கள். அது 30 நிமிடமானாலும் சரி... . அடுத்த நாளே படித்ததை ஞாபகப்படுத்துங்கள். அடுத்த ஏழாவது நாளில், மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திவிட்டு, தைரியமாய்ப் பரீட்சைக்கு முன் நினையுங்கள். ஞாபகக் கிடங்கிலிருந்து அருவிபோல் செய்திகள் கொட்டும்.

❖ விதியின் பிடியிலிருந்து விடுபட என்ன வழி?

விதியின் கூட்டாளிகளைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும்.

❖ யார் அந்தக் கூட்டாளிகள்?

வெறி, தயக்கம், சோம்பேறித்தனம்.

❖ கூண்டோடு ஒழிப்பதென்றால்?

விதி வலியதென நம்பும்வரை, அதன் கூட்டாளிகளும் கும்மாளமிடும். அவை செய்யும் சதிகளே வாழ்வைச் சுருக்கும். அவை தலைகாட்டும்போதே, அவற்றைத் தைரியமாய்க் கிள்ளி எறியத் துணிந்துவிட்டால்... விதியையே திருத்தி எழுதிவிடலாம்.

❖ எது பாவம்?

இச்சொல்லைப் பிரயோகிப்பது.

portrait

படிப்பில் கெட்டிக்காரனாக ஒரு டிப்ஸ்...

படிக்கும்போது படியுங்கள். அது 30 நிமிடமானாலும் சரி... அடுத்த நாளே படித்ததை ஞாபகப்படுத்துங்கள். அடுத்த ஏழாவது நாளில், மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திவிட்டு, தைரியமாய்ப் பரீட்சைக்கு முன் நினையுங்கள். ஞாபகக் கிடங்கிலிருந்து அருவி போல் செய்திகள்

❖ ஏன்?

'பாவம்!' என்ற சொல் ஒருவருக்குள் எறியப்படும்போது, மனத்துக்குள் பெரியக் காயம் ஏற்படுகிறது. இந்த மனக்காயமே குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சி, மனித வளர்ச்சிக்கு எதிரானது.

❖ யார் பாவி?

"அடுத்தவரைப் பார்த்து பாவிகள் எனச் சொல்பவர்களே, பாவிகள்!" என ஜென் தத்துவம் சொல்கிறது.

❖ பின், மனிதர்களைத் திருத்துவது எப்படியாம்?

மற்றவர்களைத் திருத்த நீங்கள் யார்? நீங்கள் முழுமையாகத் திருந்திவிட்டீர்களா?

  • இந்த இரண்டுக்கும் பதில் சொல்ல முடிந்தால்... நீங்கள் கேட்ட கேள்வி அவசியமானதா? இல்லையா? எனப் புரிந்துவிடும்.

❖ யார் முதலில் திருந்த வேண்டும்?

திருத்த நினைப்பவர்கள்.

❖ எது கற்பு?

உடல் ரீதியான கற்பு - வெறும் ஒழுக்கம்
மட்டுமே.
உண்மையான கற்பு இன்னும்
ஆழமானது.

❖ அதென்ன உண்மையான கற்பு?

உடலளவில் மட்டும் ஒருவரோடு
வாழ்வதல்ல, மனதளவிலும் ஒருவரோடிருப்பதே
உண்மையான கற்பு.

யார் முதலில் திருந்த வேண்டும்?

திருத்த நினைப்பவர்கள். இது காதலர்களுக்கானது மட்டுமல்ல. நண்பர்களுக்குமானதும்கூட. நண்பரோடு உடல் அமர்ந்திருக்கையில், மனமானது மெரீனா பீச்சில் சுற்றிக் கொண்டிருந்தால்... அது மனக் களங்கம்.

❖ உண்மையான கற்போடு இருப்பது எப்படி?

அவர் யாராயிருந்தாலும், அவரோடு அங்கேயே, அந்தக் கணத்திலேயே வாழுங்கள். எண்ணங்களில் ஏறி, ஊர் சுற்றக் கிளம்பாதிருங்கள்.

உடல் கற்பையும் தாண்டிய, புனிதமான கற்பு இது.

❖ நீங்கள் ஆன்மீகத்தைச் சேவையாக செய்கிறீர்களா?

ஆம்.

❖ அப்புறம் ஏன் தியான முகாம்களில் வரும் நன்கொடைகளைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஒரு சேவையாளர் மக்களிடமே ஏன் பணம் பெற வேண்டும்?

அன்று அரசர்கள், அமைதியின் மூல வேரான ஆன்மீகவாதிகளின் எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொண்டார்கள். காரணம், அன்று மன்னராட்சி. இன்று மக்களாட்சி. எனவே, நீங்கள்தான் முன்வர வேண்டும்.

உங்களுக்குக் கிடைக்கும் சேவைக்கு, நீங்கள் சேவை செய்வது நியாயம் தானே.

❖ யார் வேண்டுமானாலும் ஞானம் அடைய முடியுமா?

நிச்சயமாக முடியும்!

portrait

உண்மையான கற்போடு இருப்பது எப்படி?

அவர் யாராயிருந்தாலும், அவரோடு
அங்கேயே, அந்தக் கணத்திலேயே
வாழுங்கள். எண்ணங்களில் ஏறி, ஊர் சுற்றக்
கிளம்பாதிருங்கள்.

❖ ஞானம் பெற எது அடிப்படை தேவை?

உடலில் உயிர் ஒட்டிக் கொண்டுள்ளதா? இதற்குப் பதில் சொல்ல முடிந்தால் போதும்! அவர் ஞானமடைய தகுதி பெற்றவரே.

❖ பாமரனால்கூட முடியுமா?

மாடு மேய்த்த சிறுவன் கண்ணன், கிருஷ்ணன் ஆகவில்லையா?

ஆடுகளோடு வாழ்ந்த சிறுவன் இயேசு, கிறிஸ்து ஆகவில்லையா?

விக்கிரகங்களோடு விளையாடிய சிறுவன் கதாதரன், இராமகிருஷ்ணர் ஆகவில்லையா?

  • துன்பங்கள் என்பவை?

பயற்சிக் களங்கள்.

  • பயிற்சிக் களங்கள் என்றால்?

புத்திசாலித்தனத்தை உங்களுக்குள் வலுக்கட்டாயமாகவாவது வளரச் செய்யும் வாழ்வின் பகுதிகளே இவை.

  • சிரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா? எப்படி நம்புவது?

சிரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா? யார் உங்களை நம்பச் சொன்னது!

நம்ப வேண்டாம். சோதித்துப் பாருங்கள். நிஜமா, இல்லையா என்பது உறுதியாகும்.

  • சிரித்தால் நோய் விட்டுப்போகுமா?

நீங்கள் நோயை விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள்.

சிரித்தால் நோய் விட்டுப்போகுமா?

நீங்கள் நோயை விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள்.

  • நோயை விட்டுவிடுவோமென்றால்?

நிஜத்தில் நீங்கள்தான் நோயைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  • சிரிப்பு?

உங்களின் மனப்பிடிப்பை விடுவிக்கவல்ல சரவெடி!

  • தோல்வி என்பது?

வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம்.

வெற்றியைத் தொட, இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லும் அளவீடு, 'தோல்விகள்.'

  • வாழ்வு, சாவு பற்றி ஒரு சின்ன கதை சொல்லுங்கள்.

பொது மேடையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த சனாதன ஞானியிடம், ஒருவர் பல வில்லங்கமான கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்.

கேட்டு முடித்ததும்...

“உட்கார். உன் மடத்தனம் மாறவேயில்லை.

இதே இடத்தில், இதே கேள்வியை, இதே மாதிரி, பலமுறை கேட்டிருக்கிறாய்.

அத்தனை முறையும் சலிக்காமல் சொன்ன அதே பதிலை, இந்த முறையும்

Nithyananda smiling

தோல்வி என்பது?

வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம். நான் சொல்லப்போவதில்லை.

உட்கார். உருப்படும் வழியைப்பார்,” என்றார்.

கேள்வி கேட்டவரும், பதிலைக் கேட்டவர்களும் உறைந்து போனார்கள்.

✱ சாதாரண மனிதர்களின் பாசமெல்லாம், வேஷம் என்பது சரிதானா?

நிச்சயம் தவறல்ல.

ஜாங்கிரியை விரும்பிச் சாப்பிடப்படுவது, அது ஜாங்கிரி என்பதால் அல்ல. அதன் இனிய சுவைக்காகவே!

சாதாரண மனிதரின் பாசம் என்பது, இன்னொரு மனிதர் என்பதால் அல்ல. “அவரின் பொருள், சொல், உடல், குணம் ஆகியவற்றின் இனிய சு வைக்குத் தரும் கூலி மட்டுமே.”

✱ ஒரு சன்யாசி நடனமாடலாமா?

சன்யாசி நடனமாடாவிட்டால் வேறு யார் நடனமாட முடியுமாம்!

பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால், நீங்களும் ஆடுங்கள்.

✱ ஞானி? அவரால்தான் ஆனந்த நடனமாட முடியும்.

ஒரு சன்யாசி நடனமாடலாமா?

சன்யாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்!

பிக்கல் பிடுங்கல்கள் இல்லை.
ஆடுகிறார். முடிந்தால், நீ
ங்களும் ஆடுங்கள்.

ஒரு சாதாரண மனிதருக்கு என்னென்ன பிரச்சி
னைகள் இருக்கின்றன என ஒரு லிஸ்ட்
போடுங்கள்.

அந்தப் பிரச்சினைகள் எதுவுமே
இல்லாததால், ஞானி ஆனந்தமாயிருக்கிறார்.
ஆனந்தக் கூத்தாடுகிறார்.

சிவ தாண்டவம், நடராஜரின் நடனம்,

கிருஷ்ணரின் ஆனந்தக் கூத்து ஆகிய அனைத்துமே ஞானத்தின் வெளிப்பாடுகளே.

  • தியானம் என்பது?

அகங்காரத்திலிருந்து கழல்வது.

  • கடவுள் எங்கேயிருக்கிறார்?

உங்களினுள்ளே உட்கார்ந்திருக்கிறார் கடவுள்.

  • காதலர்கள்?

அதிர்ஷ்டசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் துரதிர்ஷ்டசாலிகள்.

  • இன்றைய தம்பதியர்?

துரதிர்ஷ்டசாலிகள் என நம்பிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.

  • யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள்?

எங்கிருந்தாலும், ஏங்காமல், இனிமையாய் இருக்கத் தெரிந்தவர்களே அந்த அதிர்ஷ்டசாலிகள்.

portrait of a smiling man with headwear

யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள்?

எங்கிருந்தாலும், ஏங்காமல், இனிமையாய்
இருக்கத் தெரிந்தவர்களே, அந்த
அதிர்ஷ்டசாலிகள்.

  • ஜோதிடம் உண்மையா?

நிச்சயம், ஜோதிடம் உண்மை.

ஆனால், ஜோதிடம் பார்ப்பவர்களெல்லாம் உண்மையானவர்கள் எனச் சொல்லமுடியாது.

  • மரணம்?

முடிவல்ல. அடுத்த வாழ்க்கையின் தொடக்கம்.

  • உடல்?

உயிர் மீது போடப்பட்ட சட்டை.

  • நாம் யார்?

இறைவனின் சொக்கட்டான் காய்கள்.

  • கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?

வாருங்கள் என்னோடு, காட்டுகிறேன்!

  • எங்கேயிருக்கிறார் அவர்?

எங்கே இல்லை கடவுள் .

அணுக்கள் தோறும் துள்ளித்துள்ளி அவர் விளையாடுகிறார்.

கடவுள், தாவரங்களில் அசைகிறார். மிருகங்களில் நடமாடுகிறார். ஏன், உங்களிலிருந்து இந்தக் கேள்வியைக் கேட்பதே அவர்தான்.

நாம் அன்பு செலுத்தும் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்தினால் கோபம் வருவது ஏன்?

  • வனஜா, நாமreceivedபட்டடை.

அப்படிக் கோபம் வந்தால், தெரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் செலுத்துவது அன்பு அல்ல.

உங்களுக்கு முழுச் சுதந்திரம் இருப்பதுபோல், அவர்களுக்கும் முழு சுதந்திரம் உண்டு என்பதை மறந்துவிட்டீர்கள்.

உங்களின் பீரோ, கார், செல்போன்தான் உங்களின் பொருட்கள்!

மனிதர்கள் என்னுடையது என உரிமை கொண்டாடும்போது, அவர்களை அஃறிணைப் பொருட்களாகக் குறைக்கின்றோம்.

அப்படிச் செய்யாமல், அவர்களை முழு மனிதர்களாக மதித்தால், கோபம் எழ வாய்ப்பேயில்லை.

இன்னும் ஆழமாய்ச் சொல்ல வேண்டுமானாலும்...

மனிதர்களுக்கு முழுச் சுதந்திரம் தந்து வாழ

ஆரம்பித்தீர்களென்றால்,

அவர்கள் மற்றவர்களோடு

சிரித்துப் பேசி மகிழ்வதைப் பார்த்து,

நீங்களும் மகிழ்ந்து ஆசீர்வதிப்பீர்கள்.