KAILASA Library/மனதைத் திற/மிகவும் தவறாய் புரிந்து கொள்ளப்பட்டSign in
மனதைத் திற

மிகவும் தவறாய் புரிந்து கொள்ளப்பட்ட

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கிருஷ்ணர் கோபிகைகளோடு யமுனையைப் பார்த்து, "நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால் யமுனையே எனக்கு வழி விடு," என்று சொல்லியதும் யமுனை வழிவிட்டது... எனும் சம்பவத்தை குருகுலத்தில் தம்முடைய சீடர்களிடம் குரு பகிர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது துடிப்பான ஓர் இளம் சீடர் எழுந்து, "கரைபுரண்டு ஓடிய யமுனை இரண்டாய்க் கிழிந்து கிருஷ்ணர் நடந்து செல்ல ஒரு பாதை உருவாக்கியது என்பதைக்கூட நம்ப முடிகிறது. புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், அவ்வளவு கோபிகைகளோடு ஆடிப்பாடி, விளையாடிய கிருஷ்ணர், ஒரு பிரம்மச்சாரி என்பதை நம்பவும் முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

கோபிகைகளின் நடுவிலிருந்த கிருஷ்ணர் எப்படி ஒரு பிரம்மச்சாரியாக இருக்க முடியும்?" எனக் கேட்டார்.

ஞானம், ஆனந்தம் பற்றி
ஆயிரம் புத்தகங்கள்
படித்தாலும் அவற்றைப்
அனுபவமாக உணராமல்
புரிந்து கொள்ள முடியாது.

குரு, சீடரின் நிலையை உணர்ந்தவராய்
மிகவும் கருணை பொங்கும் குரலில் பேச
ஆரம்பித்தார். "அப்பனே! உனக்கு வந்த அதே
சந்தேகம் எனக்கும் வந்தது.

தொடக்கத்தில் எனக்குள்ளும் உணர்ச்சித் தடுமாற்றங்கள் இருந்தன. அப்புறமாய் படிப்படியாய் தியானம் செய்து என்னுள் விழிப்புணர்வு நிலை உயர்ந்த பின்புதான் பல உண்மைகள் தெரிய வந்தது.

விழிப்புணர்வு பெருகும்முன் உணர்ச்சிகள் பொங்கிக் கொண்டிருந்தன.

தனியாய்க் கண்ணை மூடி அமர்ந்திருந்தபோதுகூட, விதவிதமான உணர்ச்சிகள் வாட்டி வதைத்த காலமும் உண்டு.

தியானத்தில் மூழ்க மூழ்க, விழிப்புணர்வு பொங்க ஆரம்பித்தது. ஆனந்தமயமான சமநிலை என்னுள் உருவாக ஆரம்பித்தது. அதற்கப்புறம் என்னை வாட்டி வதைத்த உணர்ச்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தே போனது.

உணர்ச்சிகளிடமிருந்து விடுபட்டு மேல் எழும்பிய பின்புதான், கிருஷ்ணரின் ஆனந்தமயமான சம உணர்வுநிலை நிஜம் என்பதும், அவரால் பிரம்மச்சரிய நிலையில் வாழ்ந்திருக்க முடியும் என்பதும் எனக்குப் புரிந்தது," என்று தம் சீடரின் சந்தேகத்திற்கு அனுபவ விளக்கம் அளித்தார் குரு.

ஞானம், ஆனந்தம் பற்றி ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும், அவற்றைப் பற்றி யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

அதிகபட்சமாக அந்தச் சீடருக்கு ஏற்பட்டதுபோல சந்தேகங்கள் ஏற்படலாம்.

அதைத் தாண்டி எதுவும் நிகழ முடியாது.

தியானத்தில் ஆழ்ந்து சென்றால்தான் ஞானம், ஆனந்தம் போன்ற உயர்ந்த நிலைகளைப் புரிந்து கொள்ளவே முடியும்.

தியானத்தில் ஆழ்ந்து செல்லாதவர்கள் தவறாய்ப் புரிந்துகொள்ளவே நிறைய வாய்ப்பிருக்கிறது.

Sadhguru portrait

பிரம்மச்சரியம் என்பது வெறுமையாய்
வாழ்வதல்ல. வாழ்வின் வெறுமையைப்
போக்கும் வாழ்வியல் பயிற்சி.

ஆனந்த சன்யாசத்திற்கான நேர்முகத் தேர்வில், புதிதாய் வந்திருந்த இளைஞர், "பிரம்மச்சரியம் என்றால், வாழ்வின் சுகங்களை விட்டு, வெறுமையாய் வாழ்வதா?" எனக் கேட்டார்.

"பிரம்மச்சரியம் என்பது வெறுமையாய் வாழ்வதல்ல. வாழ்வின் வெறுமையைப் போக்கும் வாழ்வியல் பயிற்சி.

வாழ்வில் எல்லாமிருந்தும், ஏதோ ஒரு வெறுமையை உணரும் வாழ்க்கையிலிருந்து, வாழ்வில் எதுவுமில்லாவிட்டால்கூட, ஆனந்தமாய் இருக்கும் வாழ்வு முறையைக் கற்றுகொண்டு வாழ்வதே பிரம்மச்சரியம்," எனச் சொன்னேன்.

வெளிநாட்டவர் படையெடுப்பதற்குமுன், இந்தியாவில் மிக அருமையான வாழ்வியல் கல்வித்திட்டம் வழக்கிலிருந்தது.

ஏழு வயதிற்கப்புறம் குருகுலத்தில் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

கலை, காவியம், ஓவியம், மருத்துவம், விஞ்ஞானம், ஜோதிடம் போன்ற வாழ்வின் அடிப்படை சித்தாந்தங்கள் தொடக்கத்திலிருந்தே கற்றுத்தரப்படும்.

அத்தோடு வாழ்வின் ஆனந்தத்திற்குத் தேவையான ஞானம், தியானம் பற்றிய வேதாந்த ரகசியங்களும், நுட்பங்களும் கற்றுத்தரப்படும். படிப்படியாய்க் கற்று தேர்ந்தபின் தனிமனிதராய் வாழும் தகுதி பெற்றவருக்கு பிரம்மசூத்திரமும், திருமணவாழ்க்கை அவசியம் எனும் நிலையிலிருப்பவர்களுக்குக் காமசூத்திரமும் கற்றுத்தரப்படும்.

காமசூத்திரம் பயின்று முடித்து சம்சார வாழ்க்கைக்குத் தேவையான மற்ற கல்வியறிவுகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கைக்குள் நுழைவார்கள்.

பிரம்மசூத்திரம் பயின்று முடித்து, சன்யாச வாழ்க்கைக்குத் தேவையான மற்ற ஆன்மீக ஞானத்தைப் பெற்று, மக்களுக்கு ஆனந்தத்தையும் ஆரோக்கியத்தையும் தர ஆரம்பிப்பார்கள்.

குருகுலத்தில்...

தனிமனிதராய் வாழும்

தகுதி பெற்றவருக்கு

பிரம்மசூத்திரமும்,

திருமணவாழ்க்கை

அவசியம் எனும் சன்யாசியானவர்களும், சம்சாரியானவர்களும் வாழ்வை முழுமையாய், இனிமையாய் வாழ்வார்கள்.

இரண்டு தரப்பினருக்கும், வாழ்வில் ஏதோ ஒன்றைத் தாங்கள் இழந்து விட்டோம் என்ற ஏக்கம் வாழ்வின் எந்தவொரு சூழலிலும் வரவே வராது.

காரணம், சிறுவயதிலிருந்து அவர்களுடைய பிரம்மச்சரிய சக்தி வீணாக்கப்படாமலே வளர்க்கப்பட்டிருப்பார்கள்.

நம்முடைய ஞானப் பரம்பரையினால் வடிவமைக்கப்பட்ட குருகுலம், மனித குலத்தின் ஆனந்தத்தை இலக்காகக் கொண்டது.

எல்லாப் பொருளும், எல்லா அறிவும் பெற்றிருந்தும், ஆனந்தத்தின் அடிச்சுவடுகூடத் தெரியாத மேலை நாட்டு கலாச்சார முறையிலிருந்து, இந்தியமக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இப்போதிருக்கும் வாழ்வையே, இன்னும் ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உதவும் குருகுலம், மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். அப்போதுதான் பிரம்மச்சரியம் என்றால் என்ன என்றே புரிய வரும்.

‘ஏணிதீ ணணி ஞனுஞிணிணிட்டு ச் சூடிடூேடீணிண்ச்டிணூநு’ என்ற பிரபலமான தலைப்பில் சொற்பொழிவாற்றும் மேலைநாட்டு சொற்பொழிவாளர். .

‘‘நீங்கள் கோடீஸ்வரர் ஆகாமலிருப்பதற்கான மூலகாரணங்களில் ஒன்று நான் கோடீஸ்வரனாகவேண்டும் என ஒருமுறைகூட எண்ணாமல் இருப்பதே,’’ எனச் சொன்னார்.

வாழ்வின் எல்லாச்சூழலிலும் ஆனந்தமாயிருக்கும் ஞானியாக நீங்கள்

Swamiji smiling profile

இப்போதிருக்கும் வாழ்வையே, இன்னும் ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உதவும் குருகுலம், மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். அப்போதுதான் பிரம்மச்சரியம் என்றால் என்ன

இன்னும் ஆகாதிருப்பதற்கான மூலகாரணங்களில் ஒன்று...

உங்களாலும் அது முடியும் என்ற எண்ணம் பிறக்காததே!

கிருஷ்ணரை வழிபடுவதோடு நில்லாமல், கிருஷ்ணரின் 'வழி' பட்டு, அவரின் தியான, ஞான வழிமுறைகளைப் பின்பற்றி கிருஷ்ணராகவே மாறுவது எப்படி எனத் தியானியுங்கள்.

அப்படித் தியானித்து செயல்பட்டபின், தியானசக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்தபின்தான் பிரம்மச்சரியத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளவே முடியும்.