இரண்டு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உலகிலும்
“நீங்கள் வடிவமற்றவர்.”
நீருக்கும் வடிவமில்லை.
ஒரு முக்கோண வடிவக் கண்ணாடிக் குடுவையில் ஊற்றி வைக்கப்பட்ட நீர், முக்கோண வடிவம் பெறுகிறது. தம் முக்கோண வடிவத்தை, அந்த நீரால் மாற்றிக்கொள்ளவே முடியாது. காரணம், குடுவையின் வடிவம் முக்கோணம்.
வடிவமற்ற நீருக்கு உருவம் தரும் குடுவையைப்போல், உங்களுக்கு உருவத்தைத் தந்தது மனம்.
பிறக்கும்போது எந்த மனதிற்குள் உயிர் நுழைந்ததோ, அந்த வடிவத்தை நீ ங்கள் பெற்றீர்கள்.
மூர்க்க மனதிற்குள் நுழைந்த உயிர், மூர்க்கன் வடிவம் பெறும். சோம்பேறி மனதிற்குள் நுழைந்த உயிர், சோம்பேறி வடிவம் பெறும். புத்திசாலி மனதிற்குள் நுழைந்த உயிர், புத்திசாலி வடிவம் பெறும்.
இந்த வடிவம் பெரும்பாலும்
மாறுவதில்லை. இந்த வடிவத்தை மாற்றலாம்,
சாதிக்கலாம் என்ற இரகசியம் பலருக்கும்
தெரிவதுகூட இல்லை.
இந்த வடிவத்தை
மாற்றலாம், சாதிக்கலாம்
என்ற இரகசியம்
பலருக்கும் தெரிவதுகூட
தெரிந்தவர்கள் சாதிக்கிறார்கள். தெரியாதவர்கள் சாகிறார்கள்.
'Personality development Program' மிற்கு வந்திருந்திருந்த இளைஞர் ஜாபர் கேட்டார்,
"நான் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன். MBA படித்து முடித்திருக்கிறேன். அப்பா பெரிய தொழிலதிபர்.
அறிவு பலம்,
பண பலம்,
ஆள் பலம்,
என்ற எல்லாமே என்னைச் சுற்றி இருக்கிறது.
ஆனாலும் தனிமையையும், வெறுமையையும் உணர்கின்றேன். மனிதர்களோடு என்னால் சகஜமாய் இருக்க முடிவதில்லை.
வெளியே சிரித்து,
உள்ளே அழுகிறேன்.
என் பிரச்சினைக்கு வழி
சொல்லுங்கள்."
"மலர் இருக்கும் இடத்தைத் தேனீ தேடிச் செல்லும். அசுத்தம் இருக்கும் இடத்தைக் கொசு மொய்க்கும் கவனித்திருக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டோம்.
"ம்ம், கவனித்திருக்கிறேன்."
"ஏன், இது மாறி நிகழ்வதில்லை?"

"கடவுள் உங்களைக் கைவிடவில்லை.
நீங்கள் கடவுளைக் கை விட்டுவிட்டீர்கள்.
அதுதான் வெறுமைக்குக் காரணம். அது
தான் உங்கள் பிரச்சினை" என்றேன்.
அசுத்தத்திடம் தேனீக்கள் நெருங்குவதில்லை. மலரைக் கொசு மொய்ப்பதில்லை. ஏன்?"
"அட... ஆமாம்.
இதை யோசித்ததேயில்லையே...!" என்று ஆச்சரியத்தோடு சொன்னார்.
"நீங்கள் மலர்வதுதான் உங்களின் பிரச்சினைக்குத் தீர்வு. அப்போதுதான் மனிதர்கள், உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்."
"இதனால் என்னுடைய வெறுமை உணர்வு அதிகமாகிவிடாதா?" என்று குழப்பத்தோடு கேட்டார்.
அப்போது அவரிடம் சொன்னோம்... "கடவுள் உங்களைக் கைவிடவில்லை. நீங்கள் கடவுளைக் கை விட்டுவிட்டீர்கள்.
அதுதான் வெறுமைக்கு காரணம்... அதுதான் உங்கள் பிரச்சினை," என்றேன்.
அந்தத் தியான முகாமின் முடிவில், இன்னொரு இளைஞர் ஒருவர், "வாழ்க்கையை வாழ வேண்டிய எங்களுக்கு ஆன்மீகமெல்லாம் உடனடி தேவையா? அதெல்லாம் ஐம்பது வயது தாண்டிய பின் பார்த்துக் கொண்டால் போதாதா?" எனக் குதர்க்கமாய்க் கேட்டார்.
"உங்களின் டூவீலரை ரிசர்வில் வைத்துக்கொண்டு வெகுதூரப் பயணம் செல்வீர்களா?"
"ம்ஹூம்... மாட்டேன்."
"இதற்கே மாட்டேன் என்றால்...
சக்தி, புத்தி பற்றாக்குறையை வைத்துக் கொண்டு வாழ்க்கை எனும் நெடுந்தூரப் பயணம் மட்டும் செல்லலாமா?"
"கூடாதுதான்..."
நீங்கள் மலர்வதுதான்
உங்களின் பிரச்சினைக்குத்
தீர்வு.
“மனிதரின் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளோ, புத்தியை அதிகரிக்கும் மருந்துகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சக்தியையும், புத்தியையும் ஒரு சேர அதிகரிக்கும் ஆனந்த ஆன்மீகமானது வாழ்க்கையை வாழ்ந்து முடித்த வயோதிகரைவிட...
வாழ்க்கையை அணு அணுவாய் அனுபவித்து வாழத்துடிக்கும் வாலிபருக்குத்தானே அவசியம்?” எனக் கேட்டு நிறுத்தியபோது, இளைஞரின் கண்களில் தெளிவும், முகத்தில் புதிதாய் ஒரு இரகசியத்தைக் கற்றுக்கொண்டோம் என்ற பூரிப்பும் தெரிந்தது.
வாழும்முன்தான் தியானமும் ஞானமும் அவசியம். வாழ்ந்த பின் அல்ல. உங்களின் சாதனை வெளியுலகில் இருந்தாலும், உள்ளுலகில் இருந்தாலும், அதற்குத் தேவையான எரிபொருள் பொதுவானதுதான்.
அது, சக்தியும் புத்தியும் மட்டுமே.
அதை மட்டும் வதிகரியுங்கள்.
இரண்டு உலகிலும் அரசராவீர்கள்.