மகா வாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
“புன்னகையல்ல... முழுசிரிப்பே மனிதனைப் புதுப்பிக்கும்.”
“முழுச் சிரிப்பு மனிதரை முழு மனிதராக்கும்.”
தெரியுமா...
இயற்கை, சிரிக்க
அனுமதித்திருக்கும்
ஒரே ஒரு மிருகம்
மனிதன்.
சிரிக்கும்போது
வயிறு அசையாத
மனிதரிடம், மிக
எச்சரிக்கையாக
இருங்கள்.
- காண்டோன் பழமொழி
சிரிப்பு தசை
மனிதரில் மட்டும்
மாசில்லா முழுமை நிலை
பெற்றிருக்கிறது.
சிரிக்க நீ மறுக்க,
உதடுகள் மெல்ல விரிக்க
வருவது புன்னகை
அகங்காரம் வெடிக்க;
நரம்புகள் குதிக்க;
உடல் ஒரு கல்யாண வீடாக... .
மாற்றம் பெரும்.
ஏற்றம் தருவது
குற்றம் இல்லாக்
கொண்டாட்டச் சிரிப்பு.
சிரிப்பு
அது ஆனந்த தெளிப்பு!
நீங்கள் சிரிக்கச் சிரிக்க,
உங்களை மறக்க மறக்க
இறுக்கம் கரையும்,
அகங்காரம் மறையும்.
புதுப்பிக்கப்பட்ட பட்டொளி வீசும் புது அரண்மனை போல வாயில் மட்டும் எப்படி அப்படி சிரிப்பு வருகிறது?
-மதன், குமிளி.
Logic எனப்படும் மனதின் தர்க்கப் பகுதி ஸ்தம்பிக்கும் போது... 'க்ளுக்!' என ஒரு சக்திப் பெருக்கு நொடி நேரத்தில் நிகழ, நீங்கள் சிரிக்கிறீர்கள்.
"மனிதர்கள் இரண்டுகாலில் நடப்பவர்கள். நடக்கும்போது கீழே விழாமல் நடக்க வேண்டும்," என்பது மனதில் பதிந்துவிட்ட திடமான ஒரு உண்மை.
இதுபோன்ற ஓர் உண்மையைச் சுற்றி உருவாகும் எண்ணங்களை, தர்க்கம் என்று சொல்லலாம்.
இந்தத் தர்க்கம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு வெளியே ஏதோ நிகழும்போது... மனம் கணநேரம் ஒதுங்கிக் கொள்கிறது. சிரிப்பு வருகிறது.
அதனால்தான் வாழைப்பழத்தோலில் கால்வைத்து ஒருவர் வழுக்கி விழுவதைப் பார்த்த உடனேயே, சிரிப்புத் தானாய் வந்துவிடுகிறது.
குடிபோதையில் தள்ளாடி, தட்டுத்தடுமாறி நடக்கும் ஒருவரைத் தூரத்தில் பார்க்கும்போது சிரிப்பு வருவதற்கும் இதுதான் காரணம்.
மனிதன் இப்படித்தான் நடப்பான், நடக்க வேண்டும் என்ற உங்களுடைய திடமான தர்க்கப் பதிவு, அப்போது உலுக்கப்படுகிறது. சிரிப்புத் தானாய் வருகிறது.
ஒரு 'ஜோக்' சிரிப்புத் தரக் காரணம், அதன் கடைசி 'punch line'தான்.
'punch line' வரும் வரை உங்களின் மனதின் தர்க்கப்பகுதி வேறொரு திசையில் இயங்கிக் கொண்டிருக்கும்.
எதிர்பாராத கோணத்திலிருந்து சொல்லப்படும் 'punch line' மனதின் தர்க்கப் பகுதியையே சடன் பிரேக் அடிக்க வைக்கிறது. ஒரு கணம் மனம் மறைய கிடைத்த வாய்ப்பில், உள்ளிருக்கும் சக்தி பெருக்கின் வெளிப்பாடே சிரிப்பாய் வெடிக்கிறது. சிரிக்கிறீர்கள்.
இறுக்கம், அகங்காரம் அதிகமாக அதிகமாக, மனம் ஒரு கணம் மறைவது கடினமாகும். சிரிப்பதும் கடினமாகும்.