KAILASA Library/மனதைத் திற/சிரிக்கும்போதுSign in
மனதைத் திற

சிரிக்கும்போது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* உடலுக்கு உள்ளேயே செய்யப்படும் மஸாஜுக்குப் பெயர் ‘சிரிப்பு,’ என சுருக்கமாய் சிரிப்பை வர்ணிப்பவர் டாக்டர் வில்லியம் ஃப்ரை.

சிரிப்பு பற்றி மிக அதிக அளவில், அதாவது தொடர்ந்து 30 ஆண்டுகாலமாக சிரிப்பை மருத்துவக் கோணத்தில் ஆராய்ந்து முடித்த பின் அவர் சொல்கிறார்...

"சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம்."

"ஒரேநேரத்தில், எல்லா நாடி நரம்புகளையும் தூண்டி, தசைநார்களை உற்சாகப்படுத்தி, எலும்பின் மஜ்ஜை வரை சக்தியைப் பாய்ச்சும் சக்தி பெற்றது இந்தச் சிரிப்பு," என்று சிரிப்பாராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

"சோர்வுக்குப் பதில் உற்சாகத்தைத் தரும் ஒரே ஒரு தொழில் சிரித்தல்," என ஜென் புத்திசத்தில் சொல்லப்படுவது ஒரு ஞான வெளிப்பாடு, தியான ரகசியம்.

தொடர்ந்து செய்தாலும், சலிப்பு எட்டிப் பார்க்காத களிப்புக்காலம், சிரிப்புக்காலம்.

ஒரு ஜென் சீடர், தம் குருவிடம் கேட்டார்.
"சுவாமி, உங்களின் செயல், சொல் எனக்கு
புதிராயிருக்கிறது,"

குரு, "என்ன?"

தொடர்ந்து செய்தாலும்,

சலிப்பு எட்டிப் பார்க்காத

களிப்புக்காலம்,

சிரிப்புக்காலம்.

சீடர், “நான் கோபப்பட்டால், ‘அது அகநடுக்கத்தின் உள் எரிச்சலின் வெளிப்பாடு’ எனச் சொல்கிறீர்கள். நீங்கள் கோபப்பட்டால், ‘அது கருணையின் வெளிப்பாடு’ என்றும், ‘அது நீங்கள் எனக்கு செய்யும் உதவி’ என்றும் சொல்கிறீர்கள்.

நான் செய்யும் போது, அதுதவறு. நீங்கள் செய்யும்போது மட்டும் அது சரியா?”

சீடரைப் பார்த்துச் சிரித்த குரு சொன்னார் ,“கூட்டுப்புழுவைத் தாய் வண்டு கொட்டிக் கொட்டிப் பட்டுப்பூச்சியாக்குவது கருணையா, அகநடுக்கமா சொல்...”

“கருணை,” என்றார் சீடர்.

“தாய் வண்டையோ, தம் பக்கத்திலிருக்கும் சக புழுவையோ வளரும் புழு கொட்ட முயற்சித்தால்,அது கருணையின் வெளிப்பாடா? இல்லை அகநடுக்கத்தின் வெளிப்பாடா சொல்?” என்ற குருவின் வார்த்தைகள் செய்த வருடல்கள், ஜென் சீடரின் முகத்தில் புன்னகையை வளர்த்தது.

தன் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை நினைக்க நினைக்க, சீடருக்குச் சிரிப்பு வந்தது.

மேலும் சீடர் கேட்டார், “எந்த ஒரு உணர்ச்சியை எடுத்துக் கொண்டாலும், அதில் நம்மிருவருக்கும் இமாலய வேறுபாடு இருக்கும்.

ஒரு ஞானியும், ஒரு சாதாரண மனிதரும், ஒரே மாதிரியாக, ஒரே விதத் தில் வெளிப்படுத்தும் ஓர் உணர்ச்சி அல்லது செயல் ஒன்றாவது இருக்கிறதா?

குரு, “ஒரே ஒரு செயல் இருக்கிறது,”

portrait of Nithyananda

புத்தனும் பித்தனும்
கிருஷ்ணனும் கிறுக்கனும்
சிவமும் சவமும்
ஒன்றாய்த் திகழும் நேரம், சிரிப்புக்காலம்.
இந்தக் கணத்தில் யார், யார்?
எனப் பிரித்துணர முடியாது.

சீடர், “அது எது?”

குரு, “ஞானியும் மனிதரும் சந்திக்கும் அந்தத் தளம் சிரிப்பு.

சிரிக்கும் போது ஞானி மனிதராகிறார். மனிதர் ஞானியாகிறார்,” எனச் சொல்லி முடித்தார்.

புத்தனும் பித்தனும்
கிருஷ்ணனும் கிறுக்கனும்
சிவமும் சவமும்
ஒன்றாய்த் திகழும் நேரம், சிரிப்புக்காலம்
இந்தக் கணத்தில் யார், யார்? எனப் பிரித்துணர முடியாது.

  • HAPPY CHEMICALS என அழகாய்க் குறிப்பிடப்படும் எண்டார்ஃபின்கள், உடலின் மகிழ்ச்சி தரும் இரசாயனங்கள்.

புன்னகைக்கும்போது பொட்டளவு உடலுக்குள் தூவப்படும் இந்த இரசாயனங்கள், உடல் குலுங்கச் சிரிக்கும்போது, உடலுக்குள் விடாது பெய்யும் அடைமழை போல் பொழியப்படுகிறது.

ஓஹோயோ நகரத்தில் நடைபெற்ற Laughter Meditation என்ற சொற்பொழிவின் முடிவில்... “மோனாலிஸாவின் புன்னகையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்,” என ஒருவர் கேட்டார்.

“மோனாலிஸா ஒரு பெண் மட்டுமே. ஞானியல்ல. அதனால் அவரைப் பற்றிய செய்திகளை விவாதிப்பதில் விருப்பமில்லை.

ஆனால், புன்னகையைப் பற்றிச் சொல்ல முடியும்.

பெரும்பாலான நேரங்களில் புன்னகை ஒரு நாசூக்கான மறுப்பு, ஒரு நாகரிக வேஷம்.

சிரிக்கும் போது ஞானி

மனிதராகிறார். மனிதர்

ஞானியாகிறார்

உங்களுக்குப் பிடிக்காதவர் சொல்லும் நல்ல ஜோக்கிற்குக்கூடச் சிரிக்கமாட்டீர்கள். வெறுமனே புன்னகைத்து வைப்பீர்கள். மன ஆழத்திலிருக்கும் வெறுப்பு சொல்லும் நாசூக்கான மறுப்பு புன்னகை!

உங்களைவிட அந்தஸ்த்தில், வயதில் அதிகமானவர் எக்கச்சக்கமாக ஏதாவது பேசிவைக்கும்போது, உங்களால் பதிலுக்குப் பதிலளிக்க முடியாது. புன்னகைக்க மட்டுமே முடியும். நல்ல நாகரிக வேஷம் இது.

எனவே, மோனாலிஸாவின் புன்னகையில் எதுவும் பெரிதாய்ச் சொல்வதற்கில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து," எனச் சொல்லி முடித்தேன்.

✦ சமீபத்தில் சிரிப்பு பற்றி ஒரு ஆராய்ச்சி அறிக்கையில் படித்தேன். அதில் குறிப்பட்டிருந்த மிக பயனுள்ள சில குறிப்புகளை மட்டும் உங்களுக்காக இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. முழு சிரிப்பு, நுரையீரலை காலியாக்கி, உள்வரும் மூச்சுக்காற்றை அதிகப்படுத்துகிறது.

2. உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, எந்தப் பக்கவிளைவுமில்லாமல்!

3. உற்சாக சக்தியை உடலில் திடீரென உருவாக்குகிறது, எந்த பக்கவிளைவுமில்லாமல்.

4. நன்றாகச் சிரிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

5. துக்கத்தைக் கரைக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களை, சிரித்தலால் சுரக்கச்செய்கிறது.

சிரிக்கும்போது என்ன நிகழ்கிறது?

சிரிப்பு

சிரிப்பு ஆத்ம சக்தியின் வெளிப்பாடு.
அதனால்தான் அந்தக் கணங்களில்
மனிதர் ஞானியாகிறார் எனச்

அப்போது உங்களின் மனம் நிற்கிறது.

உடலும் உயிரும் சந்திக்கிறது. உங்களின் ஆத்ம சக்தி, ஒரு மின்னல் போல் உங்களுக்குள் பளிச்சிடுகிறது.

சிரிப்பு ஆத்ம சக்தியின் வெளிப்பாடு. அதனால்தான் அந்தக் கணங்களில் மனிதர் ஞானியாகிறார் எனச் சொல்லப்படுகிறது.

எனவே சொல்கிறேன்... ஒரு ஜோக்கைப் புரிந்து கொள்ளத் தவறினாலும், சிரிக்கத் தவறாதீர்கள்.

'Even if you miss the joke, don't miss the laughter. '

பத்து நிமிடச் சிரிப்பு ஒரு மணி நேர உடற்பயிற்சிக்கும், இரண்டு மணி நேர நடை பயிற்சிக்கும், மூன்று மணி நேரத் தூக்கத்திற்கும் சமமானது.

"அகங்காரம் மிகுந்தவரால் முழுதாய்ச் சிரிக்க முடியாது. முழுதாய்ச் சிரிப்பவரிடம் அகங்காரம் இருக்க முடியாது," என்ற ஞானமொழியைச் சொல்லும் தாவோ ஞானியிடம் ஒருவர் கேட்டார்.

"சிரித்துக் கும்மாளமடிப்பவரெல்லாம் எப்படி ஆன்மீகவாதியாக முடியும்?"

அதற்கு, "சிரித்து மகிழ்வது ஆன்மீகம் அல்ல என்று உனக்குச் சொன்னது யார்?" என ஞானி திரும்பக் கேட்டார்.

கேட்டவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஜடாமுடி வளர்த்து, தாடி வளர்த்து பெரிய விழிகளை சோகமாக்கி, இறுகிய முகத்தோடு,

மிக சீரியஸாக, வார்த்தைகளை அளந்து பேசுவது ஆன்மீகமல்ல. அவர் ஆன்மீகவாதியுமல்ல.

மலர்போல் மலர்ந்த முகத்தோடு... எல்லோர்க்கும் இதமளிக்கும் வகையில் தாமும் மகிழ்ந்து, மற்றவரும் மகிழும் வகையில் குழந்தைபோல் குதூகலமாக இருப்பவரே ஆன்மீகவாதி.

சிரிப்பு, உங்களை ஞானியாக்குகிறது.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஒருவர் செய்யக் கூடிய தியானம் சிரிப்பு.

சிரியுங்கள், சிரிக்கவையுங்கள்.

சிரிக்க சிரிக்க, சிரிப்பாய் சிரித்துக் கிடக்கும் வாழ்வைச் சீர்படுத்தித் தூக்கி நிறுத்தும் ஞானசக்தி உங்களுக்குள் அதிகமாகும்.

உடல், மனம், உயிர் எல்லாம் சக்தியூட்டப்படும்; நீங்கள் ஆரோக்கியம் பெறுவீர்கள்.