ஒளிந்திருக்கும் பொக்கிஷம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- கண்ணிருந்தும் குருடு? மோகம்.
- காதிருந்தும் செவிடு? வேகம்.
- நாவிருந்தும் ஊமை? மந்தம்
- உடலெடுத்திருந்தும் துக்கம்? மனிதன்.
- எதுவுமில்லாமல் ஆனந்தம்? ஞானம்
சுகம்?
நிச்சயம் வெளியேயில்லை
- சுகம்? நிச்சயம் வெளியேயில்லை
- துக்கம்? நிச்சயம் உள்ளுக்குள்தானிருக்கிறது.
- துக்கமில்லா ஆனந்த சுகம் பெறுவது எப்படி?
துக்கத்தையும், சுகத்தையும் விழிப்புணர்வால் தோண்டினால், அங்கேயே காத்துக்கொண்டிருக்கும் ஆனந்தம் பீறிட்டடிக்கும்.
- நீதி? அது ஒரு பெரிய அநீதி.
- அப்படியா!
நீதி, ஒழுக்கம் என்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மற்றவர்களை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது எனும் அநீதியை உருவாக்கிவிட்டது இந்தச் சமுதாயம்.
- அப்படியென்றால் ஒழுக்கம் தவறா?
ஒழுக்கம் பொதுப்படையானது அல்ல. அது தனிமனிதருக்கானது. ஒழுக்கம் ஒருவரின் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது. அது அவரின் சுதந்திரத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கம் சரி.
- மனிதர்?
இந்தப் பிறவியில் மனித உடலை எடுத்திருக்கும் ஓர் உயிர்.
- மிருகங்கள்?
சென்ற பிறவியில் மனித உடலெடுத்தபோது, ஒழுங்காய் வாழத்தவறியதால், தற்போது ஊர்ந்து செல்லும் உயிர்களாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

மன்னிப்பு?
வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது
மற்றவர்களின் இறுமாப்பிற்கு
நீங்கள் போடும் மருந்து.
இதயத்திலிருந்து வந்தால், அதுவே
உங்களின் இறுமாப்பினை அழிக்கும்
- மன்னிப்பு?
வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது மற்றவர்களின் இறுமாப்பிற்கு நீங்கள் போடும் மருந்து.
இதயத்திலிருந்து வந்தால், அதுவே உங்களின் இறுமாப்பினை அழிக்கும் மருந்து.
- கனிவு?
பணிவு கலந்தது.
- பணிவு?
கனிவு கலந்தது.
- தைரியம்?
பயப்படவேண்டியதற்கு பயப்படவேண்டிய ஞானத்தை உள்ளடக்கியது. தேவையில்லாத தயக்கத்தையும் தாண்டும் துணிவை உள்ளடக்கியது.
- பயபக்தி?
தெய்வ குணம்.
தெய்வ ஞானம்.
தெய்வப் பரிசு.
வாழ்க்கை?
இளைப்பாறுவதற்கு இறைவன் தந்த பரிசு.
- பற்று?
நிம்மதியை உறிஞ்சும் அட்டை.
- சிரிப்பு? யார் வேண்டுமானாலும் செய்யும் தியானம்.
- பெண்கள் மரியாதைக்குரியவர்களா? தொழுகைக்குரியவர்கள். ✦ அப்படியென்றால் அவர்கள் தெய்வங்களா? நீங்கள்கூட தெய்வம்தான். அவர்களுக்குள் இருக்கும் பெண்மைத்துவம் உங்களுக்குள்ளும் மலர்ந்தால்.
✦ வெற்றி? இளைப்பாற விரும்பாதவர்கள் செய்யும் வேலை.
✦ வாழ்க்கை? இளைப்பாறுவதற்கு இறைவன் தந்த பரிசு.

நாம் ஒவ்வொருவரும், எப்போதும், ஏதேனும் ஒரு செயலை செய்து கொண்டுதானிருக்கிறோம்.
எந்தச் செயலைச் செய்தாலும், அதைத் தியானமாகச் செய்வது ஒரு கலை. அந்தக் கலை எல்லோரிடமும் ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒளிந்திருக்கும் கலை வெளிவர இந்தப் புரிந்து கொள்ளுதல் போதும்.
ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும்முன், இந்த ஞானக்கருத்துகளைத் தியானியுங்கள்.
"இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது என் அன்பை, என் நன்றியை வெளிப்படுத்த உதவும் ஒரு வாய்ப்பு," என்று தியானியுங்கள்.
இக்கருத்துகள் உங்களுக்குள் எதையும் எளிதாக அணுகும் புத்திசாலித்தனத்தையும் மனபலத்தையும் தரும். அது நான் எனும் அகந்தையை மறந்து தெய்வத்தன்மையில் வாழச்செய்யும் தியானமாகும்.
இக்கருத்துகளை தியானியுங்கள். ஆனந்தமாக இருங்கள்.