கண்ணைத் திற...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சொர்க்கம்
இந்த நிமிடம், இந்தப் புத்தகத்தை நீங்கள் படிப்பது ஏன் கனவில் நிகழ்வதாய் இருக்க கூடாது.
சில மணி நேரங்களுக்குமுன் தூங்கிய நீங்கள், தூக்கத்தில் கண்டு கொண்டிருக்கும் கனவுதான், ‘நீங்கள் இப்போது படிப்பது!’ என்பதை முழுமையாய் இல்லையென மறுக்க, நம்மிடம் என்ன ஆதாரமிருக்கிறது?
“கிள்ளிப்பார்ப்பேன்!” என்பீர்கள். கனவில் கூடத்தான் கிள்ளலாம், ஓடலாம், கத்தலாம்... எல்லாமே செய்யலாம்.
எத்தனை முறை நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து, “ஓ! வெறும் கனவுதானா?” என்று கலைந்திருப்பீர்கள். விழிக்கும் வரை, கனவை நிஜமென்று தானே நம்பினீர்கள்.
ஞானமடையும்
வரை, உள்ளபடியே
உள்ள உலகம்,
எப்படியிருக்கும்
என, ஒருவருக்கும்
ஆகவே கேட்கிறேன்... இந்தப் புத்தகத்தை
நீங்கள் படிப்பது, ஏன் கனவில் நிகழ்வதாக
இருக்கக்கூடாது?
தூங்கும் உங்களை யாராவது
எழுப்பினால்தான் தெரியும். இல்லையேல்
நீங்கள்தானே எழவேண்டும்.
"கனவுலகுக்கும், நிஜவுலகுக்குமான வித்தியாசம் சிறிது கால அளவிலானது மட்டுமே," என தாவோ கீதமொன்று சொல்கிறது.
ஆம். அது உண்மைதான்.
மனிதக் கனவு வெறும் 6 மணிநேரம்.
மனித வாழ்வு கொஞ்சம் அதிகம். 60 வருடம்!
6 மணி நேர கனவுக்கும், 60 வருட வாழ்வு எனும் மாயைக்கும் இடையில் சிக்கித்தவிப்பது, இன்னும் எவ்வளவு காலம்? அதற்கு விடிவு எப்போது?
மொத்த ஆன்மீகமும் சொல்வது, என் சொந்த அனுபவம் - ஆகிய இரண்டால் உறுதியாய்ச் சொல்வேன்...
"மனித வாழ்வே கனவுதான். உள்ளே தூங்கும் மனிதன் விழித்தால், வாழ்வு மொத்தமுமே கனவெனப் புரியும்! (All are just illusion of Mind)."
கனவுலகைத் தாண்டியது நிஜ உலகம். நிஜ உலகையும் தாண்டியது உள்ள படியே உள்ள உலகம் (Existing reality)
ஞானமடையும் வரை, உள்ளபடியே உள்ள உலகம், எப்படியிருக்கும் என ஒருவருக்கும் தெரியாது.
சாதாரணமாக, உயிர் உடலைப் பிரிகையில்...
"அச்சச்சோ! மனித வாழ்வுகூட ஒரு பெரிய கனவுதானா என்று புரிய வரும்..."

மனித வாழ்வே கனவுதான். உள்ளே
தூங்கும் மனிதன் விழித்தால், வாழ்வு
மொத்தமுமே கனவெனப் புரியும்!
(All are just illusion of Mind)
நிஜ உலகம் என்று நாம் இப்போது நம்புவது, அப்போது ஒடுங்கிப்போகும். அப்போதுதான் உள்ளபடியே உள்ள உலகம் இதுதான் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் புரியவரும். ஆனால், அந்த உலகை அனுபவிக்க உடல் இருக்காது.
அதனால், உள்ளபடியே, உள்ள உலகை அனுபவிக்க, அடுத்தகணமே உடலெடுத்திட, உயிர் துடியாய்த் துடிக்கும். உயிர் மறுபிறவியெடுக்கும்.
உயிரானது உடலை எடுத்ததும், மனமும் மாயையும் சூழ, ஏன் பிறந்தோமென்று மறந்து - மீண்டும் மனித வாழ்வு தொடரும்.
கனவுகளும் பிறவிகளும் தொடரும்.
மனிதப் பிறவி பற்றி ஞானி ‘ரூசேக்’ ஒருமுறை சொன்னார், “இந்தவுலகில் உடலெடுத்து, உடலெடுத்து மனம் விளையாடும் விளையாட்டுக்குப் பெயர் மனிதப் பிறவி.”
காலையில் கண்விழscreenக்கும்போது, ஆறு மணி நேரமாக நிஜம் எனக் கழிந்த கனவு, விளையாட்டுப்போல் கலைந்து போகிறது.
உடலை விட்டு உயிர் வெளியேறும் போதும், இதுவரை அறுபது வருடமாக நிஜமெனக் கழித்த வாழ்வு, விளையாட்டுப் போல் கலைந்து போகும்.
சுருங்கச் சொன்னால்... மனிதவாழ்வு ஒரு நீளமான கனவு.
காலம், மனம், கனவு, பொருட்கள் ஆகியவற்றை முடிச்சுப்போட்டுச் சுவையாய் விளக்கும் Quantum Physics, காலம் பற்றி ஆச்சரியப்பட வைக்கும் உண்மை ஒன்றைச் சொல்கிறது: “காலம் (Time) என்பது பருப்பொருளின் நான்காவது பரிமாணம்.”
இந்தவுலகில்
உடலெடுத்து,
உடலெடுத்து மனம்
விளையாடும்
விளையாட்டுக்குப்
பெயர் மனிதப் பிறவி.
நான்காவது பரிமாணத்தின் கோணத்திலிருந்து பார்த்தால், ஒரு திடப்பொருள் நாம் நினைப்பது போல், தனியொரு பொருளல்ல என்பது புரியவரும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம்...
நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்ட, வெயிலில் வைக்கப்பட்ட ஐஸ்கட்டி, சில நிமிடங்களில் காணாமல் போகிறதே.
ஐஸ்கட்டியின் நான்காம் பரிமாணத்தின் கோணத்தில் பார்த்தால், சில நிமிடங்களில் அந்த ஐஸ்கட்டி வேறு ரூபம் எடுத்து விடுகிறது. சக்தியின் இன்னொரு வெளிப்பாடாக அது மாறிவிடுகிறது.
மக்கும் மரமும், துருவைக்கும் இரும்பும், கதிரியக்கமாகும் பொருள்களும், உருக்குலையும் உடலும் - காலத்தின் கோணத்தில் வேறு வேறு சக்தியாகப் பிரிந்து சென்றுவிடுகின்றன.
திடமான பொருட்கள் கலைந்து போவதுபோல், காலத்தின் கோணத்தில் வாழ்க்கையும் கலைந்து போகிறது. கரைந்து போகிறது.
எனவே சொல்கிறேன், நிஜவாழ்க்கை என்று நிஜமாய் நீங்கள் நம்பும் வாழ்க்கையைத் தாண்டி, உலகைத் தாண்டி, உள்ளபடியே உள்ள ஆனந்தமயமான உலகம் இருக்கிறது. இது உண்மை.
சிவானந்தர், பரதரிஷியிடம், “சொர்க்கம் எங்கேயிருக்கிறது,” எனக் கேட்டபோது,
“கண்ணைத் திற... சொர்க்கம்!” என்றார்.
“திறந்து பார்த்தேன். உலகம் அப்படியேதான் இருக்கிறது, “சொர்க்கம் தெரியவில்லையே!” எனச் சொன்னவரிடம் பரதரிஷி சொன்னார்...
“கண்ணைத் திற என்பது, கண் இமையை திறப்பதல்ல. கண்களைத் திற...,” என்றார்.
இமையை அசைப்பதும், கண்விழியை அசைப்பதும் எப்படிக் கண்களைத் திறப்பதாகும்?
இமை திறவாமல், விழி அசையாமல் கண்களைத் திறக்க முயற்சிக்க முயற்சிக்க...
ஒருநாள்... அகக்கண் திறந்து கொள்ளும். நீண்ட கனவு கலையும். உள்ளபடியே உள்ள உலகம் புலப்படும்!
சொர்க்கமாகத் தெரியும், உலகமே!
எனவே சொல்கிறேன் 'கண்களைத் திற... சொர்க்கம்' என்பது வெறும் வாக்கியமல்ல.
அது தியான சூத்திரம்.
மகாவாக்கியம்
"அன்பு ஒரு மருந்து, வித்தியாசமான மருந்து. இந்த மருந்தைப் பெறுபவரைவிட, கொடுப்பவரே அதிக குணம் பெறுவார். இது மருத்துவ ரீதியான உண்மையும் கூட."
ஒரு காலகட்டத்தில் நான் பலவற்றிற்காக ஏங்கியிருக்கிறேன். ஆனால், இன்று அவற்றை நானே வெறுக்கிறேன் ஏன்?
-சையத் ஹாரிஃப், விக்ரவாண்டி.
குடும்பஸ்தர் ஒருவர் அத்வைத ஞானியிடம், "நான் எல்லா லௌகீக சுகத்தையும் வெறுத்து ஒதுக்கிவிட்டேன். எனக்கு எந்த ஆசையுமில்லை. எனக்கு ஆன்மீகம் சொல்லிக் கொடுங்கள்," எனக் கேட்டார்.
ஞானி, "யாரைக் கேட்டு எல்லாவற்றையும் வெறுத்தாய்? இந்த பைத்தியக்காரச் செயலுக்குப் பதில், நீ ஆசையோடே அல்லல்பட்டிருக்கலாம். அது எவ்வளவோ மேல்," என்றார்.
குடும்பஸ்தர், "என்ன சாமி சொல்றீங்க?" ஞானி சொன்னார், "ஆசை தம்மை அழியாமல் பார்த்துக் கொள்ளச் செய்யும் தந்திரவேலைதான் வெறுப்பு."
"ஆசை தொடங்குகையில், வெறுப்பு மறைகிறது.
ஆசை மறையுமிடத்தில், வெறுப்பு தொடங்குகிறது."
- ஹஸிட் தத்துவம்.
ஒருகால் நிறைவேறலாம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை, ஆசையானது ஏக்கங்களாகக் குடியிருக்கும்.
வாழ்வின் வரம்புகளும், தனிமனித இயலாமைகளும் ஒருசேர ஒரு காலகட்டத்தில் இந்த ஆசைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்ற உண்மையை உணர்த்தும். அப்போதுதான், அதே ஆசையின் மீது வெறுப்பு உருவாகும்.
இவற்றை நான் வெறுக்கிறேன் எனச் சொல்வது, இன்னும் ஆழ்மனதில் அவற்றின் மீது ஒருவர் வெறி கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறி.
வெறுப்பதால் தப்பித்ததாய் நினைத்துவிட வேண்டாம். அடக்கப்பட்ட ஆசைகள் புரையோடியிருக்கிறது. அவ்வளவே.
ஆழ்மனம் தூர்வாரப்பட வேண்டும்.