KAILASA Library/மனதைத் திற/நம்பிக்கைSign in
மனதைத் திற

நம்பிக்கை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எனும்

* கல்யாணம்?

ஓர் அதிவேக ரங்கராட்டினம்.

* எப்படி, அது அப்படியாகும்?

வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே வரும் ஆர்வத்தையும், உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே குதிக்க வைக்கும் பயத்தையும் தரவல்லது.

* ஏன் கல்யாணம் இப்படி மாறிப்போனது?

இரண்டு தாள்கள், இரண்டு தரகர்கள், இரண்டு பெரியவர்கள், இரண்டு மணமக்களைத் தேர்ந்தெடுத்து "வாழ்வாங்கு வாழுங்கள்," என்று சொன்னால், எப்படி அது முடியும்?

மனப்பக்குவத்தை
அதிகரிக்கும் தியான,
ஞான வழிமுறைகளை
வாரிசுகளுக்கு
வழங்குங்கள்...

ஒன்று மணமக்களுக்கு மனப்பொருத்தம் பார்க்க வேண்டும்.

இல்லாவிட்டால், அவர்களின் மனப்பக்குவத்
தையாவது அதிகரிக்க வழிவகைகள் செய்ய
வேண்டும்.

மனப்பக்குவத்தை அதிகரிக்கும் தியான, ஞான வழிமுறைகளை வாரிசுகளுக்கு வழங்குங்கள்... மணமக்களைத் துக்க மயக்கத்தில் ஆழ்த்தும் கல்யாணமெனும் ராட்சஷ ராட்டினம் ஓய்வடையும், நிம்மதி பெருகும்.

  • ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவார்களா? எனக்குச் செல்வந்தனாக வேண்டும்.

ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவது இல்லை.

ஞானிகளின் சாந்நித்யத்தில் அதிசயங்கள் தானாகவே நிகழ்கின்றன.

  • செல்வம்?

ஒரு வகையில் சாபம்.

  • ஏன்?

சம்பாதிக்கும் வரையில் ஏக்கம், இது சக்தி விரயம். சம்பாதித்ததும் சேமித்து வைக்கப் பயம், இதுவும் சக்தி விரயமே.

  • அப்போது சொகுசுகள்?

சோம்பேறிக்கு அவை தண்டனைகள். உற்சாகமானவருக்கு அவை கொண்டாட்டங்கள். ஆனால், சோம்பேறிகள்தான் அவற்றை அதிகம் நேசிக்கிறார்கள்.

மாயாவின் லீலையில் இதுவும் ஒன்று. இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் உயிர் என்ற அடிப்படையில், இங்கே வாழ்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அதே அளவிற்கு உரிமை, ஒரு HIV-கிருமிக்கும் உண்டு.

portrait

ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவது
இல்லை.
ஞானிகளின் சாந்நித்யத்தில் அதிசயங்கள்

எனவே, சோம்பேறி, உடல் வளையாமல் படுத்து, குளிர்சாதன அறையிலேயே வாழ்ந்து ஆரோக்கியத்தைக் கெடுத்தாலும், அதை இயற்கை மறுப்பதில்லை.

  • சொகுசு என்பது தண்டனையா? கொண்டாட்டமா?

இது நீங்கள் சோம்பேறியா, இல்லை உற்சாகமானவரா என்பதைப் பொறுத்தது.

  • ஞானிகள் தவறே செய்ய மாட்டார்களா? அவர்களின் செயல்கள் எதைக் குறிக்கிறது?

சரி, தவறு என்ற விதிகளெல்லாம் சாதாரண மனிதர்களுக்குத்தான்.

நான் எனும் அகங்காரத்திலிருந்து பிறக்கும் செயல்கள், நல்லதாகவே தோன்றினாலும், அதனால் சிறிதளவாவது தீமை உண்டாகும்.

எண்ணங்களற்றவர்கள் ஞானிகள்.

ஞானியின் செயலால் ஒருவர் இறக்க நேரிட்டாலும், அதனால் நன்மையே நிகழும்.

ஒரு ஜென் ஞானி இவ்வாறு சொல்லியிருக்கிறார், "ஒரு ஞானி கொலை செய்தாலும், அச்செயல் அந்த ஞானியின் ஆழ்ந்த கருணையின் வெளிப்பாடே.''

எண்ணமற்ற நிலையில் இருந்து செய்யும் செயல்கள் அனைத்தும் நிச்சயமாக நன்மையைத்தான் தரும்.

ஒருமுறை அன்னை சாரதா தேவியிடம், “அம்மா என்னை நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். நம்பிக்கைத்துரோகிகள்...,” எனக் குடும்பஸ்தர் ஒருவர் புலம்பினார். அதற்கு சாரதா தேவி, “கவலையேபடாதீர்கள், உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவரைப்பற்றி நோகாதீர்கள்.

நம்பிக்கையை மட்டும் உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள். அந்த நம்பிக்கையே உங்களைத் தேவதைப்போல வாழவைக்கும்,” என்று பதிலளித்தார்.

அதனால்தான் அடிக்கடி சொல்வதுண்டு, “நம்பிக்கைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக்கூடாது.”

காரணம், “நம்பிக்கை என்பது ஒரு தெய்வ்சக்தி. அது மனிதர்களின் உடல், மனம், உயிர் ஆகிய அனைத்திற்குள்ளும் உற்சாகத்தைப் பாய்ச்ச வல்லது.” எனவே, துரோகிகளுக்காகக்கூட நம்பிக்கையை இழக்காதீர்கள்.

நம்பிக்கையோடு வாழ்வின் ஒவ்வொரு அடியையும் உற்சாகமாக எடுத்து வையுங்கள், தெய்வம் உங்களின் கைப்பிடித்து நடந்து வருவதைக் காண்பீர்கள்.

நம்பிக்கையிலிருக்கும் நிமிடங்களிலெல்லாம் தியானத்தை ருசித்துக் கொண்டிருப்பீர்கள். இது ஒரு தியான சக்தி.

குலதெய்வத்தை வழிபடாததால் பாதிப்பு ஏற்படுமா?

  • லோகேஷ்வரன், காஞ்சி

நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால், சக்தி ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும்.

12-ம் வகுப்பு முடிக்கும்வரை, டிகிரி படிப்பு முடித்த ஆசிரியருக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்த சில வருடங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் ஆசிரியருக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை. மரியாதை மட்டும் தந்தாலே போதுமானது.

உங்களை நீங்களே வழிபட ஆரம்பிக்காத வரை, குலதெய்வ வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை.

உங்களையே வழிபடச் செய்யும் தியான முறைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டால், குலதெய்வங்களுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்காது. அவர்களுக்கு மனதிலிருந்து முழு மரியாதையையும், பக்தியையும் வெளிப்படுத்துவதே போதுமானதாயிருக்கும்.