மகா வாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"கேட்டதெல்லாம் கிடைக்கும் - அதையெல்லாம் அனுபவிக்கும் பக்குவம் பெற்றிருந்தால்!"
கேட்பது எளிது.
ஆசைப்படுவதும் எளிது,
அனுபவிப்பது எளிதல்ல.
அனுபவிக்கும் பக்குவமில்லாவிட்டால்,
கேட்டாலும் கொடுக்கமாட்டார் கடவுள்.
கேட்காவிட்டாலும் கொடுப்பார் கடவுள்,
அனுபவிக்கும் பக்குவம் பெற்ற
அடுத்த வினாடியே!
தீயவர்கள்
நல்லாய்த்தானே வாழ்கிறார்கள்,
ஆசைப்பட்டதெல்லாம்
அவர்கள் வாழ்கிறார்களே! என அழாதீர்கள்.
பக்குவம் இல்லாதவருக்குக்
கேட்டதெல்லாம் கிடைப்பது
ஆசீர்வாதமல்ல - சாபம்.
ஆனந்தமாய் இருப்பது எப்படி?
- விஜிபாரதி, கொங்கணாபுரம்.
கன்ஃபூசியஸிடம் "ஆனந்தமாய் இருக்க ஒரு எளிய வழி சொல்லுங்களேன்," என சீடர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
அதற்குக் கன்ஃபூசியஸ், "உன் கேள்வியே மிகவும் விசித்திரமாய் இருக்கிறது. எந்த ரோஜாவும், நான் ரோஜாவாக மாற வழி சொல்லுங்களேன் எனக் கேட்பதில்லை," என்றார்.
உங்களுக்குள், ஆனந்தம் என்றும், எப்போதும் பொங்கிக் கொண்டே இருக்கிறது. பொங்கும் ஆனந்தமே ஆனந்த ஸ்புரணம்.
மனிதன் தம் அறியாமையால், விழிப்புணர்வின்மையால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
பொங்கும் ஆனந்தத்தைத் தடுப்பதைத் தடுக்கக் கற்றுக்கொண்டுவிட்டால், மனிதர்கள் ஆனந்தமாக இருப்பார்கள். அவர்களுக்குள் ஆனந்தம் பொங்கிக் கொண்டேயிருக்கும்.
"எதிர்காலத்தில், என்றோ ஒருநாள் ஆனந்தமாய் இருக்கலாம். அது எப்படி?'' என்ற உங்களின் கருத்தில் மாற்றம் நிகழ வேண்டும்.
"நீங்கள் பொங்கும் ஆனந்தத்திலேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்."
பொங்குவதை, மங்கும்தன்மை கொண்ட விழிப்புணர்வின்மை தடுக்கிறது. மனிதர் துக்கத்திலேயே தொடர்கின்றார்.
"தடுப்பதைத் தடுத்துவிடுங்கள்.
தடுப்பதைத் தடுத்துவிட்டால்... பொங்கும் ஆனந்தத்தை எங்கும் உணர்வீர்கள்."
ஆனந்தமாய் இருப்பீர்கள்.