KAILASA Library/மனதைத் திற/வெறுமை உணர்வை விட்டு மீள...Sign in
மனதைத் திற

வெறுமை உணர்வை விட்டு மீள...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ தெய்வ விக்ரகங்கள்? இறைவனின் செல்போன்கள்

❖ செல்போன்களா?

ஒரு செல்போன் மூலமாக உங்களின் நண்பரோடு பேசலாம். ஒரு தெய்வ விக்ரகத்தின் மூலமாக உங்களின் தெய்வத்தோடு பேசலாம்.

❖ உருவ வழிபாட்டை ஆதரிக்கிறீர்களா?

உண்மை ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் உருவ வழிபாடே கிடையாது.

உருவத்தின் மூலமாக வழிபடுவது மட்டுமே இருக்கிறது. ரிஷி பரம்பரையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தியான முறைகளில் இதுவும் ஒன்று.

ஒரு செல்போன் மூலமாக
உங்களின் நண்பரோடு
பேசலாம். ஒரு தெய்வ
விக்ரகத்தின் மூலமாக
உங்களின் தெய்வத்தோடு

❖ அதெப்படி தியானமாகும்?

"ஏ கல்லே! வரம்கொடு,"
என வெங்கடாசலபதியிடம் யாரும்
வேண்டுவதில்லை. அங்கிருக்கும் உருவத்தின்
மூலமாக வெங்கடாசலபதி எனும் நம்
கடவுளோடுதான் பேசுகிறோம். கேட்கிறோம்.

நம் தந்தையிடம் கேட்பது போல, நாம் கடவுளிடம் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட உணர்வு ரீதியான தியான முறைதான் உருவ வழிபாடு.

❖ சடங்குகள்?

பாமரர்களுக்குமான தியானங்கள்.

❖ தெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன்?

மனித உருவங்கள், தெய்வ உருவங்கள் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

❖ உருவ வழிபாடு பற்றிய உங்களின் கருத்து?

அருமையான தொடக்கம். ஆனால் முடிவல்ல.

விவேகானந்தர் சொல்கிறார், "தேவாலயத்தில் பிறப்பது தவறில்லை. ஆனால் தேவாலயத்திலேயே இறக்கக் கூடாது."

❖ அப்படியென்றால், எது முடிவு?

கடவுளாக மாறுவதே இறுதி இலக்கு.

❖ அதுதான் இலக்கு என்றால், " நீங்கள் ஒரு கடவுளா?"

நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை. நீங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.

Photograph of Nithyananda

தெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன்?

மனித உருவங்கள், தெய்வ உருவங்கள் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

❖ உங்களைப் பொறுத்தளவிற்கு எது ஆன்மீகம்?

ஆனந்தமாக இருப்பதும்,

ஆனந்தமாய் இருக்க விடுவதும்.

❖ பக்தி?

அது முக்தி வழிச்சாலை.

❖ இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்...

"தீவிரவாதத்தின் பிடியில் இந்தியா," எனும் கலவரச் செய்தியை ஒரு தினசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் கார்ட்டூன் வரைபடமாகப் பார்த்திருப்பீர்கள்.

அதில் ஒரு பெரிய கரிய உருவம் கையில் உருட்டுக் கட்டையோடு இந்தியாவை தன் கையில் பிடித்திருப்பது போல வரைந்திருப்பார்கள்.

உறுதியாய் ஒன்றைச் சொல்லலாம், அந்தக் கரிய உருவம் கலவரம் கிடையாது.

கலவரத்தை நமக்கு உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட குணச்சித்திரமே அந்த உருவம்.

அதேபோல்தான், புராணங்கள் என்ற எல்லாமே ,நமக்கு உண்மைகளை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஞானச் சித்திரங்களின் தொகுப்பு. நாம் பார்க்கும் தெய்வப் படங்கள், உருவங்கள் ஆகிய அனைத்துமே

உங்களைப் பொறுத்தளவிற்கு எது ஆன்மீகம்?

ஆனந்தமாயிருப்பதும், ஆனந்தமாயிருக்க விடுவதும்.

இறைசக்தியையும், அதன் மகிமைகளையும்
உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஞானச்
சித்திரங்கள்.

மனிதரின் சிறிய மனதிற்கு, 'இறைவன்'
எனும் பெரிய நிலையை உணர்த்தும் சக்தியை
இந்த ஞானச் சித்திரங்கள் பெற்றிருப்பதால்,
இச்சித்திரங்களை, இறைவன் என்றும், தெய்வம்
என்றும் வழிபடுவது சரியானது, நியாயமானது,
புனிதமானது.

தெய்வ வடிவங்கள் ‘பக்தியுணர்வு’ எனும் ஆனந்த ரச த்தை நமக்குள் சுரக்கச் செய்யும் சக்தி படைத்தவை.

இருளில் கிடக்கும் கயிற்றைப் பாம்பு எனச் சந்தேகிக்காத வரை, உங்களுக்குள் பய உணர்வு எழாது.

அதேபோல் அஞ்ஞான இருளில் கிடக்கும் நம் மனம்தான், நம் எதிரியோ எனச் சந்தேகிக்காத வரை ஒருவருக்குள் ‘பக்தியுணர்வு’, எழாது.

பக்தியுணர்வு எழாதவரை, தெய்வ வடிவங்களின் மகிமையைப் புரிந்துகொள்ளவே முடியாது.

பக்தியுணர்வு பெறாத ஒருவர், தன்னுடைய வாழ்வின் மிகப்பெரிய பகுதியை இழக்கிறார். ‘‘ நான் ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருக்கின்றேன்...’’ என்பது போன்ற வெறுமை உணர்வை விட்டு அவர் மீளவே முடியாது.

தெய்வ வடிவங்களில், தெய்வத்தன்மையைக் காண முடியாதவரால், மனித வடிவங்களில், மனிதத் தன்மையைக் காணவே முடியாது.

பக்தி என்பது கடவுளைப் புரிந்து கொள்ள வைப்பதைவிட, மனிதர்களைப் புரிந்துகொள்ள உதவும்.

சுவாமி பரமஹம்ச நித்யானந்தா

தெய்வ வடிவங்களில், தெய்வத்
தன்மையைக் காண முடியாதவரால்,
மனித வடிவங்களில் மனிதத்
தன்மையைக்

பேய்கள் மனிதர்களைத் தொந்தரவு செய்யுமா?

  • மாலிக், பெரம்பூர்

9 வருடங்கள் பரிவிராஜகமாக இந்தியா முழுவதும் ஆன்மீக யாத்திரை செய்திருக்கிறேன்.

பல நேரங்களில் சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும்தான் இரவு உறங்குவேன். காரணம் அங்குதான் முன்பதிவு, வாடகை போன்ற பிரச்சினைகளே இல்லை!

இறந்த மனிதர்கள் வாழ்ந்த இடத்தில் தங்கிய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்... வாழும் மனிதர்கள்தான் நம்மைத் தொந்தரவு செய்கின்றார்களேயன்றி, இறந்த மனிதர்கள் அல்ல.

இறந்த மனிதர்களைப் பார்த்து நாம் பயப்படுவதைவிட, நம்மைப் பார்த்துதான் அவை அதிகம் பயப்படுகின்றன.