கேட்டதையெல்லாம் கடவுள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அருமையான வாசகம் ஒன்று... "உலகத்தில் உள்ள எல்லோரின் தேவைகளையும் பூர்த்தி செய்யுமளவுக்குத் தேவையான எல்லாமே இவ்வுலகில் இருக்கிறது.
ஆனால், ஒரே ஒருவரின் ஆசைகள் எல்லாவற்றையுமாவது பூர்த்தி செய்வது, சாத்தியமே இல்லாத ஒன்று."
பலவற்றிற்கும் ஆசைப்படுகிறீர்கள். கடவுளிடம் வரம் கேட்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஆசைப்படுவதெல்லாமே ஒருவேளை கிடைத்துவிட்டால்... அவற்றின் பக்கவிளைவுகளாய் என்னென்ன நேருமென உங்களுக்கு இப்போது தெரியாது.
உங்கள் ஆசைகளைக் கடவுள் பூர்த்தி செய்திருந்தால், அவர் நல்லவர், பெரியவர்.
உங்கள் ஆசைகளைக் கடவுள்
பூர்த்தி செய்திருந்தால், அவர்
நல்லவர், பெரியவர்.
உங்களின் பல ஆசைகளை
இறைவன் பூர்த்தி
செய்யவேயில்லை என்றால்,
தெரிந்து கொள்ளுங்கள்.
கடவுள் இன்னும் நல்லவர்.
உங்களின் பல ஆசைகளை இறைவன்
பூர்த்தி செய்யவேயில்லை என்றால், தெரிந்து
கொள்ளுங்கள். கடவுள் இன்னும் நல்லவர்.
இன்னும் பெரியவர் என நிரூபித்திருக்கிறார்
என்று அர்த்தம்.
அமெரிக்கவாழ் இந்தியர் ([?] [?]) ஒருவர்
சில மாதங்களுக்கு முன் ஆலோசனைக்காக
வந்திருந்தார். அவர் சொன்னது ஆச்சரியம்
தரக்கூடியதாக இருந்தது...
"அமெரிக்கா செல்லும் முன், என் டைரியில் இருபது விஷயங்களை எழுதினேன். அவற்றை என்னுடைய நாற்பதாவது வயதிற்குள் சாதிக்க வேண்டுமென கணக்கிட்டிருந்தேன்.
விடாமுயற்சி, கடும் உழைப்பால் என்னுடைய முப்பத்தைந்தாவது வயதிலேயே எல்லாவற்றையும் சாதித்து முடித்தேன்!
என்னென்னவெல்லாம் சாதிக்க வேண்டுமென நினைத்தேனோ, அதே போல் நினைத்ததை எல்லாம் சாதித்ததும், எதற்காகச் சாதிக்க ஆரம்பித்தேன் என யோசித்தேன்... யோசித்தேன்... பதிலே இல்லை. அதிர்ந்து போனேன்.
அந்த அதிர்ச்சியில், மன அழுத்தத்தில் (ஈஞணீணூஞூண்ண்டிணி) விழுந்தேன்! பத்து வருடமாகிவிட்டது. இன்னும் சரியாகவில்லை,'' என்றார்.
வெளியே சாதனையாளராக வாழ்பவர்கள், உள்ளே வேதனையாளராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சமுதாயநிலையைப் பார்த்துதான், உங்களின் ஆசைகளை வடிவமைக்கிறீர்கள், வளர்க்கிறீர்கள். ஆனால், அவர்களின் மனநிலையைப் பார்த்தால், அடுத்த நிமிடமே அந்த ஆசைகளை எல்லாம் தூக்கியெறிந்து விடுவீர்கள்.
மன உலகில் சாதிக்காமல், வெளியுலகில் சாதிப்பது நரகத்தில் வாழ்வதற்குச் சமம்.
கேட்பதெல்லாம் ஒருவருக்குப் பூர்த்தியாவது நரகத்திற்கான துரித விசா.
குழந்தையொன்று கேட்டதாம், அம்மாவிடம் : "அதை எனக்குப் பறித்துக் கொடு,'' என்று உயரே இருந்த சூரியனைப் பார்த்து!

மன உலகில் சாதிக்காமல்,
வெளியுலகில் சாதிப்பது
நரகத்தில் வாழ்வதற்குச் சமம்.
"முடியாது," என்ற உண்மையைச் சொன்னால், குழந்தை அழும். அடம் பிடிக்கும். அங்கலாய்க்கும்.
அதனால் அமைதியாகவே இருந்தாள் அம்மா. சிலமுறை கேட்டுச் சலித்த குழந்தை, அடுத்து வேறொன்றைக் காட்டிக் கேட்க ஆரம்பித்ததாம்.
நம் செயல்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.
நாம் கேட்கும், கற்பனை செய்யும் பல விஷயங்கள், நடைமுறை வாழ்வில் சாத்தியப்படாததாகவே இருக்கின்றன. அதனால்தான் மனிதர்கள் வேண்டி க்கொள்ளும் பலவற்றை, கடவுள் தருவதில்லை. இல்லையென்றும் மறுப்பதில்லை.
அந்த குளுகுளு ரெஸ்ட்டாரண்டில் மது கேட்டார். கிடைத்தது. மாணிக்கம் கேட்டார். அதுவும் கிடைத்தது. "என்ன, இங்குக் கேட்பதெல்லாம் தருகிறார்களே!" என வியந்தபடி, ஒருகோடி பணம் வேண்டுமென கேட்டார், விளையாட்டாய்.
உடனே ரெஸ்ட்டாரண்ட் மேனேஜரே ஓடோடி வந்து, ஒருகோடி ரூபாயைத் தந்தார். "என்ன இது, இவர்கள் எனக்குப் பணம் தருகிறார்கள்..." என வியந்தவர், கேட்கக் கூடாததையெல்லாம் கேட்டு வைத்தார்.
கேட்டதும், கேட்டதற்கு அதிகமானதும் கிடைக்கவே, "அச்சச்சோ இவ்வளவு பாவம் செய்தால் நான் நரகத்திற்கு அல்லவா போவேன்," என அலறினார்.
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சிப்பந்தி, "வேறெங்கு இருக்கிறதாக நினைப்பாம்," எனக் கேட்டபடி, ரெஸ்ட்டாரண்ட் கதவைத் திறந்தான். பார்த்தவன் அதிர்ந்தான். அது பற்றி எரியும் நரகம்.
நாம் ஆசைப்படுவதெல்லாம் கிடைப்பது
பெரிதல்ல. கிடைத்ததைக் காக்க, அளப்பரிய ச
க்தியும் புத்திசாலித்தனமும் வேண்டும்.
அது இல்லாதவர், கையில் கோடி
ரூபாய் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும்,
அது வெட்டிச் செலவில்தான் போய்முடியும்.
நாம் ஆசைப்படுவதெல்லாம்
கிடைப்பது பெரிதல்ல.
கிடைத்ததைக் காக்க,
அளப்பரிய சக்தியும்
புத்திசாலித்தனமும் வேண்டும்.
அது அவருக்கு அழிவையே தேடித்தரும்.
என்ன கேட்கிறோம், எதைக் கேட்கிறோம் என்ற பக்குவம் இல்லாமல், ஒருவேளை கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால்,அவற்றை அனுபவிக்கும் பக்குவம் இல்லாமல் நாம் கேட்டு வைப்போம். அதற்குச் செவி சாய்த்து, கேட்டதையெல்லாம் கடவுள் கொடுத்திட வேண்டுமா என்ன?
"அவருக்கு ஆண்டவன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். எனக்கு அதிர்ஷ்டமே வாய்ப்பதில்லை. ஏன் இப்படி?" எனப் பொறாமை பொங்கத் தம் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி சாக்கிய முனிவரிடம் குடியானவர் ஒருவர் கேட்டார்.
சாக்கிய முனி சிரித்துக் கொண்டே, "அவ்வளவு கொடுத்தாலும், அதை அனுபவிக்கும் பக்குவம் அவரிடம் இருக்கிறது. இதுவரை தந்ததைக்கூட அனுபவிக்கும் பக்குவம் உன்னிடம் இல்லை. அதனால்தான் இப்படி," என்று சொன்னார்.
கேட்பது பெரிதல்ல. ஆசைப்படுவது பெரிதல்ல.
கேட்டதையெல்லாம் இறைவன் கொடுத்தால், அதையெல்லாம் அனுபவிக்க சக்தியும்; பக்குவமும் வேண்டும்.

> கேட்பதை அனுபவிக்கும் பக்குவம் > பெற்றுவிட்டால், நீங்கள் கேட்டு முடிக்கும் > முன்பே, கேட்டதைக் கொடுக்க ஆரம்பித்து > விடுவார் கடவுள். பக்குவம் பெறுங்கள்.
உங்கள்் எல்லாச் சிறுபிள்ளைத்தனமான ஆசைகளையும், ஒரு தாயைப் போல் கடவுள் கேட்கிறார். ஆனால், அவர் கேட்பவரின் பக்குவத்தைப் பார்த்தே வாரி வழங்குகிறார்.
அதனால்தான், மனிதன் கேட்டதை எல்லாம் கடவுளால்科 கொடுக்க முdiyாது. காரணம், கடவுள் கருணைக்கடல்.
எதை வேண்டுமானாலும் கேட்க, உங்களுக்கு உரிமை இருக்கிறது.
கேட்டதெல்லாம் கிடைத்தால், அதை अनுபவிக்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா?
ஆராயுங்கள். பக்குவமற்ற பகுதிகளைக் கண்டுபிடியுங்கள். பக்குவம் பெற ஆரம்பிப்பீரக்கள்.
கேட்பதை अनுபவிக்கும் பக்குவம் பெற்றுவிட்டால், நீங்கள் கேட்டு முடிக்கும் முன்பே, கேட்டதைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவார் கடவுள். பக்குவம் பெறுங்கள்.