KAILASA Library/மனதைத் திற/மகா வாக்கியம்Sign in
மனதைத் திற

மகா வாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இறைவன் விவாதத்திற்கு அப்பாற்பட்டவர்

"இறைவனை நம்புபவனல்ல நான்," எனச் சொன்னவரிடம், "இறைவன் என்றாலென்ன?" எனக் கேட்டாரா குரு.

"..........." பதிலில்லை சீடரிடமிருந்து.

"இறைவனைப்பற்றி என்ன தெரியும்," என குரு கேட்டதற்கும், "..........." பதிலேயில்லை. எதுவுமே தெரியாமல் அதை நம்புபவனல்ல என்றால் என்ன அர்த்தம்!" எனக் கேட்டபோதும் ".........." பதிலில்லை.

"யார் உன்னை நம்பச் சொன்னது? நான் நம்புபவன், நான் நம்புபவனல்ல என்று சொல்லும் இருவருக்கும் இறைவனைப்பற்றித் தெரியாது.

நம்புபவனல்ல எனச்சொல்லி வம்பு செய்யத் தூண்டும் மனம்தான் மூலகாரணம். விவாதிக்கப்பட வேண்டியது இறைவனல்ல," என்றார்.

நீங்கள் தொட்டதும் நோய்கள் குணமாகின்றன எனப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது எப்படி?

  • சாந்தா, பாண்டிச்சேரி

நோய்கள் குணமாவது என்னால் மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அது முழுக்க முழுக்க தியான சக்தியால் நிகழ்கிறது.

தியானசக்தி தம்முள் அதிகரிக்க, நோயாளி செய்யும் தியான முறைகளே நோய் குணமாகுதலில் பெரும் பங்கு வகிக்கின்றன.

எங்கள் தியான மையங்களில், நோயாளிகளின் சக்திகுறைவைச் சரிசெய்வதற்கேற்ற தியான முறைகளைக் கற்றுத் தருகிறோம். குறைந்தது ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் தியானங்களை நோயாளி கடைப்பிடிப்பார்.

தியானத்தால் நோயாளிக்குள் உருவாகும் பெருமளவு தியானசக்தியோடு, தியான சிகிச்சையாளர்கள் செய்யும் தியான சிகிச்சை, தியானசக்தியைச் சேர்க்கிறது, அற்புதங்களை நிகழ்த்துகிறது என்பனவெல்லாம் அனுபவ ரீதியாக நாங்கள் கண்டுக்கொண்டிருக்கும் உண்மைகள்.

தியான சிகிச்சையின்போது, ஆழமான குணமளிக்கும் சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் விழிக்க வைக்கப்படுகிறது.

தியான சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் பாய்கிறது. ஆனால், நோயாளி சிரத்தையோடு செய்யும் தியானம், அவருக்குள் பெருமளவு தியான சக்தியைச் சேமித்து வைப்பதற்கும், ஆழமான குணமளிக்கும் மாற்றங்கள உருவாகுவதற்கும் உதவுகிறது.

இந்த வகையில்தான், சிரத்தையோடு செய்யப்படும் தியானங்கள் அவரவர்கள் தங்களின் வரங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் முக்கியமானதாக இருக்கிறது.

தியான சிகிச்சையாளர், தொடுவதால் தியானசக்தி அதிகரிப்பதுபோல், நோயாளியின் சிரத்தைமிகு தியானமும், நோயாளிக்குக் குணமளிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. தியான சிகிச்சையாளர் தொடுவதைத் தாண்டி, நோயாளி குணம்பெற சிரத்தையோடு தியானம் செய்தல் மிகமிக அவசியமாகிறது.

நீங்கள் உங்களுடைய நோய்களிலிருந்து விடுபட விரும்பினால், உங்கள் ஊருக்கு அருகேயிருக்கும் தியான சிகிச்சை மையங்களுக்குச் சென்று, தியானம் செய்ய முறையாகக் கற்றுக்கொள்ளுங்கள்... சக்தி குறைபாட்டிலிருந்து விடுபடலாம். ஐஸ்வரியத்தைப் பெறலாம். ஆனந்தம் பொங்க வாழலாம்.