உன்னை எனக்குக்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கொடுத்துவிடு
இறைவனிடம் பிரார்த்திப்பவரா நீங்கள்?
கீழுள்ள கருத்துகளைப் புரிந்துகொண்டு பிரார்த்தனையைத் தொடருங்கள்.
"கேளுங்கள் கொடுக்கப்படும்,"
- பைபிள்
"கேட்டதெல்லாம் கிடைக்காது,"
- ஞானமொழி
"கேட்டாலும் கேட்காவிட்டாலும், வேண்டியது வேண்டியபோது கொடுக்கப்படும்," - வேத ரகசியம்.
இம்மூன்றையும் படித்து குழம்பிப்போன ஜென் மாணவர் குருவிடம் கேட்டார், "இம்மூன்றுமே ஞானக்கூற்றுகள். இதில் எது உண்மை? எதுபொய்?"
""கேட்டாலும் கேட்காவிட்
டாலும், வேண்டியது
வேண்டியபோது
கொடுக்கப்படும்,"
-வேத ரகசியம்.
குருசொன்னார், "மூன்றுமே உண்மை?"
குழம்பிப்போன மாணவர், "அதெப்படி
மூன்றுமே உண்மையாகும்," எனக்
கேட்டார்.
குரு, "நீ கேட்டா, உனது இதயம் இயங்குகிறது. இல்லை, நீ கேட்கவில்லை என்பதால், மூளை இயங்காமல் நின்றுவிடுகிறதா?
ஆனால், நீ கேட்டால்தான் ருசியான உணவு கிடைக்கும். நீ கேட்டாய் என்பதற்காக, கூரையைப் பிய்த்துக்கொண்டு பணத்தைக் கொட்டுவாரா என்ன இறைவன்," எனக் கேட்டதற்கு, "இல்லை," என்றார் சீடர்.
தொடர்ந்த குரு, "தெரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களும் நீ கேட்காமலேயே கிடைக்கும். சுகபோகங்கள் நீ கேட்டால்தான் கிடைக்கும். அடங்காத ஆசைகள் மற்றும் தேவையற்ற காரியங்களை நீ எவ்வளவுதான் கேட்டுக் கொண்டாலும் அது கிடைக்காது. பார். நான் எதுவும் கேட்பதில்லை. இருந்தும், உன்னை விட ஆனந்தமாக இருக்கிறேன். சூட்சுமம் புரிகிறதா?" என்றார்.
உங்கள் இறைவன், உங்களுக்கு வியாபாரியா? செல்லங் கொடுக்கும் தந்தையா? ஆனந்தமளிக்கும் ஆத்மார்த்தமான உறவா?
"எனக்கிதைச் செய்தால் உனக்கு அதைச் செய்கிறேன்," என நேர்ந்து கொள்பவர்கள், இறைவனை வியாபாரியாக மட்டுமே பார்ப்பவர்கள்.
"அதைக் கொடு! இதைக் கொடு!" என உரிமையாய் இறைவனிடம் பேசுபவர்கள், இறைவனை ஒரு செல்லங்கொடுக்கும் தந்தையாக மட்டுமே பார்ப்பவர்கள்.
"இவ்வளவு நாள் காத்தது, இனியும் காக்கும்," என்ற நம்பிக்கையோடு நிம்மதியாயிருப்பவர்கள், இறைவனை ஆத்மார்த்தமான உறவாகப் பார்ப்பவர்கள்.

இறைவனை நெருங்க முதல்படி, இறை ச
க்தி
மீதான ஆழமான நம்பிக்கை.
“இறைவனை நெருங்க முதல்படி, இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கை. (கூணூாதண்ண டின் ச் ஞூணாடிடீஞ்ஞு ஞாணிணூா ளீடிடிதிடிணடிணூதூ).”
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜலாலுதீன் ரூமி என்ற சூஃபி ஞானியிடம், “மனிதன் எதையோ அடைய ஏங்கித்தவிக்கிறானே அது எது?” எனக் கேட்டதற்கு, “இறைவனின் சில முத்தத்திற்காகத்தான், வாழ்வு முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறான் மனிதன்,” என்றார்.
உண்மையான நண்பர்கள் சேர்ந்தால், பேசிச் சிரித்து மகிழ்வார்கள். உண்மையான காதலர்கள் சேர்ந்தால், பேசமாட்டார்கள். ஒருவருக்கருகில் ஒருவர் அமர்ந்திருப்பதிலேயே மகிழ்ந்திருப்பார்கள்.
உண்மையான மனிதர், தம்மருகே யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாகவே இருப்பார். காரணம், உறவுகளுக்கெல்லாம் உறவான இறைவனில் கலந்திருக்கும் கலையை அவர் கற்றிருப்பார் . “இறைவன் என்னோடு இருக்கிறான்,” என்ற உணர்வே மிக இனிதாயிருக்கும்.
பார்வையற்றவன் கண்ணுக்குச் சூரிய வெளிச்சம் தெரியாததால், சூரியன் இல்லை என்றாகிவிடுமா? ஒருவரால் இறைவனை உணர முடியாததால், அவர் இல்லை எனச் சொல்லிவிட முடியுமா? யோசியுங்கள்!
இறைவனைத் தொடர்பு கொள்ளும் சூட்சமம் கற்றுவிட்டால், இருக்குமிடத்திலேயே, இலேசான தென்றல் காற்றுப்போல் வாழ முடியும்.
இறைவனை நெருங்க இரண்டாவது படி, ஏக்கம். ஏதேதோ காரணங்களுக்காக ஏங்கும் ஏக்கம், இறைவனைச் சுற்றியக்கமாக, இறை குணங்களான நிம்மதி, நிதானம், ஆனந்தம் நோக்கிய ஏக்கமாக மாறவேண்டும். (குணீணூாடிணூத ச்டூ தணூாஞ்ஞு ண்டணிதடூஞீ ஞுஞூளிணிட்ஞு தணூாஞ்ஞுணஞிதூ)
ஆனந்தத்தில், நல்லதில் போய்
முடியக்கூடிய ஒரேயொரு ஏக்கம், இறைவனைச்
சுற்றிய ஏக்கம்.
ஆனந்தத்தில், நல்லதில்
போய் முடியக்கூடிய
ஒரேயொரு ஏக்கம்,
இறைவனைச் சுற்றிய ஏக்கம்.
சமீபத்தில் படித்த தாவோகீத வரிகள் “இந்த உலகில் எனக்கு நீ தர விரும்புவதையெல்லாம், உன் எதிரிகளுக்குக் கொடுத்து விடு!
மேலோகத்தில் எனக்கு நீ தர விரும்புவதையெல்லாம், உன் நண்பர்களுக்குக் கொடுத்து விடு!
ஆனால், உன்னை எனக்குக் கொடுத்து விடு! அதுபோதும், அதுபோதும்,''
இறைவனுக்கும் உங்களுக்குமான நெருக்கம் அதிகமாக அதிகமாக, இறைவனிடம் கேட்பது குறையும். இறைவனைப்பற்றிக் கேட்பது அதிகரிக்கும்.
இறைவனிடம் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, மற்றவர்களிடம் உங்களுக்கிருக்கும் இடைவெளி குறைய ஆரம்பிக்கும்.
நீங்கள் இறைவனை நெருங்க உதவும் மூன்றாவது படி, இறைவனைப் பற்றிய, தியான சக்தியைப் பற்றிய, ஞானக் கருத்துகளைத் தெரிந்து கொள்வது தான்.
இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கையோடு, அந்த ஆனந்த சக்தியை அடைந்தே ஆகவேண்டும் என்ற ஏக்கத் தீயோடு ஞானக்கருத்துகளை புரிந்துகொள்ள ஆரம்பித்தால்...
உங்களுக்கும் இறைவனுக்குமான இடைவெளி கொஞ்சங்கொஞ்சமாய் குறைந்து, நீங்கள் வேறு, இறைவன் வேறு என பிரிக்க முடியாத நிலையை அடைவீர்கள். ஆனந்தத்தில் திளைத்திருப்பீர்கள்.

இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கையோடு, அந்த ஆனந்த சக்தியை அடைந்தே ஆகவேண்டும் என்ற ஏக்கத் தீயோடு ஞானக்கருத்துகளை புரிந்துகொள்ள ஆரம்பித்தால்... உங்களுக்கும் இறைவனுக்குமான இடைவெளி கொஞ்சங்கொஞ்சமாய் குறைந்து, நீ ங்கள் வேறு, இறைவன் வேறு என பிரிக்க முடியாத நிலையை அடைவீர்கள்.

"இறைவனிருப்பதையே நம்பாத நான், இறைவனை நம்புவது எப்படி?" எனக் கேட்ட சீடருக்கு, ஜென்குரு சொன்னார். "இறைவனில்லை என நம்புவதையாவது முழுமையாக நம்பு. நம்பிக்கை, இறைவனைவிட முக்கியமானது" என குரு சொன்னதும் "அப்படியா!" என ஆச்சரியமானார் சீடர்.
குரு, "இறைவனிருக்கிறார் என்ற நம்பிக்கையும், இறைவனில்லை என்ற நம்பிக்கையும் ஆழமாக ஆழமாக, இறைவனை அடைவாய். கேள்வியை நிறுத்து. வேள்வியில் இறங்கு," என்றார்.
கடவுள், இறைவன் பற்றி நீங்கள் இன்று வைத்திருக்கும் நம்பிக்கையை, "மூடநம்பிக்கை," என மற்றவர் சொன்னாலும், கவலைப்பட வேண்டியதில்லை. ஏற்கெனவே இருக்கும் ஏக்கங்களை ஆராயுங்கள். ஆராய ஆராய, தேவையற்ற ஏக்கங்கள் இருக்குமிடம் தெரியாமல் மறைய ஆரம்பிக்கும்.
நம்பிக்கை பிறந்து, ஏக்கம் மாறினால், ஒரேஒரு ஞானமொழிகூட ஒருவருக்குள் ஆனந்தத்தை மலர்த்திடமுடியும். இறைவனில் கலந்திடமுடியும்.