KAILASA Library/மனதைத் திற/நலந்தரும் இரசாயன மாற்றங்களுக்கு வழிSign in
மனதைத் திற

நலந்தரும் இரசாயன மாற்றங்களுக்கு வழி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஜோனத்தான் கோல்டுமேனின், ‘ஹீலிங் சவுண்டஸ் (Healing sounds)’ எனப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைப் புத்தகம் படித்தேன்.

பல புதிய ஆராய்ச்சிகள் செய்யும் திரு. மாசுரூ எமோட்டோ எனும் ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி, “உயிரற்றபொருட்கள், இனி உயிருள்ள பொருட்கள் என்றழைக்கப்பட வேண்டும்.”

ஆராய்ச்சியாளர் நீரோடு பேசி உறவாடி, அதற்கு அந்த நீர் சொல்லும் பதில்களை படம் பிடித்திருக்கிறார்.

‘தண்ணீரிலிருந்து செய்திகள்’ என்ற தலைப்பில் அப்புத்தகங்கள் சொல்லும் செய்திகள் - புதியது, புதிரானது, புனிதமானது.

அன்பு, வெறுப்பு, வேதம், தியானம் என பல தலைப்புகள் எழுதி ஒட்டப்பட்ட கண்ணாடிப் பாத்திரங்களில், ஒரே அளவு நீர் ஊற்றப்பட்டது.

நீர், மனிதர்களின் வார்த்தைகளுக்குப் பதிலளிக்கிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அன்பு என்றெழுதப்பட்ட
பாத்திரத்தின்முன் அமர்ந்து, அன்பான
வார்த்தைகளை காலை, மதியம், மாலை என
மூன்று வேளையும் மனதாரப் பேசினார்.

வெறுப்பு என்றெழுதப்பட்ட பாத்திரத்தை, சதா திட்டித் தீர்ப்பதும், வேதம் என்றெழுதப்பட்ட பாத்திரத்தின் முன் வேத வாசகங்களைப் பக்தியோடு வாசிப்பதும், தியானம் என்றெழுதப்பட்ட பாத்திரத்தை தினம் தியானம் செய்யும் புத்தபிட்சுவால் தொட்டு சக்தியூட்டப்படுவதும்... என ஒவ்வொரு பாத்திரங்களையும் ஒரு தனி உயிர்போல பாவித்து இவற்றைச்செய்தார்.

சில நாட்கள் முடிவில், நீரைக் குளிர்சாதன முறையில் கெட்டிப்படுத்தினார். (இணூதூண்ணாச்ச்டீழ்த்துஞீ) கெட்டியான நீர்க் கட்டிகளின் மூலக்கூறுகளை, அதிநவீன மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்தார். அதைப் படம் பிடித்தார்.

அந்த நீர்க் கட்டிகளின் மூலக்கூறுகளின் புகைப்படத்தைப் பார்க்கப் பார்க்க, பார்ப்பவர் கண்களை ஆச்சரியம் பற்றிக் கொள்ளும்.

அன்பு என்று எழுதப்பட்ட நீர் மூலக்கூறுகளின் புகைப்படம், பார்ப்பதற்குச் சீராக இருந்தது. அழகாக அடுக்கப்பட்ட சின்னஞ்சிறு கற்களின் தொகுப்புப்போல இருந்தது.

வெறுப்புப் பொழியப்பட்ட நீர்க்கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், அலங்கோலப்பட்டிருந்தது. அது பார்ப்பதற்கு ஒரு பேயைப் போன்ற உருவத்தை ஏற்படுத்தியிருந்தது.

வேதம் படிக்கப்பட்ட நீர் கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், அழகாய் அடுக்கப்பட்ட கலர் கற்கள் போன்ற காட்சியைக் கொடுத்தது.

தியான சக்தி நிறைந்தவரால் தொடப்பட்ட நீர்க் கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், ஜொலிக்கும் நகை போன்று காட்சியைத் தந்தது.

ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரின் மூலக்கூறுகள், ஒவ்வொரு

portrait

தியான சக்தி நிறைந்தவரால் தொடப்பட்ட
நீர்க் கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும்
புகைப்படம், ஜொலிக்கும் நகை போன்று
காட்சியைத் தந்தது.

சூழ்நிலைக்கும் தகுந்தார்போல் மாறியிருக்கிறது அல்லது பாதிக்கப்பட்டிருக்கிறது. நீர், மனிதரின் வார்த்தைகளுக்குப் பதிலளிக்கிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மனிதரின் வார்த்தைகள், நீரை நடுங்கச் செய்கிறது. மகிழச் செய்கிறது. நீர் உயிரற்ற பொருளல்ல, அது உயிருள்ள பொருள்.

மனித உடல் நாம் நினைப்பது போல் திடமானதல்ல. உடல் 70 சதவீதத்திற்கு மேல் வெறும் நீரால் மட்டுமே ஆனது.

உங்களைச் சுற்றி இருப்பவரின் வார்த்தைகள், உங்கள் உடலின் பெரும் பகுதியான நீரைப் பாதிக்கின்றன.

அதனால்தான், உற்சாக வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப் பாய்ச்சுகின்றன. துக்க வார்த்தைகள் நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

உடலின் 70 சதவீத நீர், மற்றவரின் வார்த்தைகளுக்கேற்றப்படி ஆட்டிப்படைக்கப்படுகிறது. நீங்கள் ஆடிப்போகிறீர்கள்.

வார்த்தைகள் மந்திர சக்தி பொதிந்தவை. அதனால்தான், நிம்மதி தரும் பக்தி வார்த்தைகளின் தொகுப்பையும், ஆனந்தம் தரும் ஞான வார்த்தைகளின் தொகுப்பையும் "மந்திரங்கள்," என அழைத்தனர் ரிஷிகள்.

மந்திரங்கள், மனிதரின் மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

மந்திரங்களின் மகத்துவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்த நிட்டியிடம், "மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியுமா!?" என வம்பாய்க் கேட்டார் ஒருவர்.

உங்களைச் சுற்றி இருப்பவரின்
வார்த்தைகள், உங்கள் உடலின்
பெரும் பகுதியான நீரைப்
பாதிக்கின்றன.

அதனால்தான், உற்சாக
வார்த்தைகள் நம்முள்
உற்சாகத்தைப்
பாய்ச்சுகின்றன. துக்க

அதற்கு நிட்டி, "உங்கள் கை என்ன பூப்பறித்துக் கொண்டிருந்ததா... கையை வைத்து மாங்காயைப் பறிக்கலாமே.

மாங்காய் பறிக்க மந்திரம் எதற்கு?" எனக் கேட்டதும், தலைகவிழ்ந்தார் அந்த நபர். மந்திரங்களைச் சுற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு மதத்தின் சிறந்த ஆன்மீக தத்துவங்களைச் சுற்றியும், மேற்கண்டது போன்ற கண்டன வார்த்தைகள் பின்னப்பட்டிருக்கின்றன.

அதனால்தான், எந்த மதத்தின் மீதும் எவருக்கும் மதிப்பு இருப்பதில்லை.

தன் மதம், நல்லமதம் என நினைப்பது தவறில்லை. ஏதோ சில மூடத்தனமான கண்டன வரிகளை மனதின் மூலையில் பிடித்துக்கொண்டு, அடுத்த மதங்களைக் குறைத்து மதிப்பிடுவதும், அவற்றை அவமதிப்பதும்தான் தவறு.

இவ்வளவும் வார்த்தை ஜாலங்கள், நம்முடலில் அத்துமீறிச் செய்யும் ரசாயன மாற்றங்களின் வெளிப்பாடுகள்.

“என் வாழ்வு நலம் பெற, ஏதாவதொரு நல்ல மந்திரத்தைக் கற்றுத் தாருங்கள்,’’ என ஒரு குடும்பஸ்தர் அத்வைத ஞானியிடம் கேட்டார்.

சிரித்த ஞானி, “உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையுமே மந்திரம்தான்.

இன்னொரு மந்திரத்தைக் கற்றுக் கொள்வதை விட, உன் வார்த்தைகளை நல்ல வார்த்தைகளாக்கு, வாழ்வு நலமாகும்,’’ என்றார்.

உங்களின் வாழ்வை வளமாக்கத்தான், வளமான வார்த்தைகளை மந்திரங்களாகவும், மத நூல்களில் தெய்வம் பேசிய வார்த்தைகளாகவும் எழுதிவைத்தனர் முன்னோர்கள்.

வார்த்தைகளை நேரடியாக வளப்படுத்தத் தடுமாறுபவர்கள், நலந்தரும் மந்திரங்களையும், தெய்வ வாசகங்களையும் திரும்பத் திரும்பப் படியுங்கள், திரும்பத் திரும்ப உச்சரியுங்கள். வார்த்தைகளின் அர்த்தம் உங்களுக்கு

Nithyananda smiling

உங்களுடைய ஒவ்வொரு
வார்த்தையுமே மந்திரம்தான்.
இன்னொரு மந்திரத்தைக்
கற்றுக் கொள்வதை விட,
உங்களுடைய வார்த்தைகளை நல்ல
வார்த்தைகளாக்குங்கள், வாழ்வு
நலமாகும்.

முழுமையாகப் புரியாவிட்டால்கூடப் பரவாயில்லை. உங்களின் உடலின் நீருக்கு அது புரியும். அது, நலந்தரும் இரசாயன மாற்றங்களை உங்களுக்குள் உண் டாக்கும். வாழ்வு வளமாகும்!

காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லலாமா? கேட்கலாமா? -சரஸ்வதி நடராஜன், அரும்பாக்கம்,

காயத்ரியே பெண். .

ஏன், காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் உபயோகிக்கக் கூடாது? காயத்ரி ஆண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல. அது மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், காயத்ரி இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. காயத்ரி உலகத்துக்கே சொந்தமானது.

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு கிறிஸ்தவர் என்பதால், அவர் கண்டுபிடித்த டியூப்லைட் அவருடைய மதத்தினருக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாட முடியுமா?

அதேபோல், மனிதர்களின் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்த உதவும் வார்த்தைகளைத் தேடிப்படித்து, விஸ்வாமித்ர ரிஷியால் உருவாக்கப்பட்ட 'காயத்ரி மந்திரம்' இந்துக்களுக்கோ, ஆண்களுக்கோ மட்டுமே சொந்தமானதல்ல!

தங்களுடைய புத்திசாலித்தனம், ஞானம் பெருகிட விரும்பும் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து போல காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

காயத்ரி மந்திரம் மட்டுமல்ல, எல்லா மந்திரங்களும், எல்லா மக்களுக்கும் சொந்தமானவை.