நிம்மதியான தூக்கம் வேண்டுமா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
காலை எழுந்ததும் துள்ளிக் குதிக்கும் காளைக்குட்டியைப் பார்த்திருப்பீர்கள்... உடலை உற்சாகமாக முறிக்கும் பூனை... விதவிதமாய் இசையெழுப்பும் குருவிக் கூட்டம்... என எல்லா மிருகங்களும், கண்விழித்ததும் மிக உற்சாகமாகவே எப்போதும் உணர்கின்றன. ஆனால், ஒரு விசித்திரம்...
காலையில் எழுந்ததும் திரும்பிப் படுக்கும் ஒரே மிருகம் ‘மனிதன்.’
ஏன், மனிதர்கள் மட்டும் காலையில் எழும்போது உற்சாகத்தை உணர்வதில்லை. தூங்கிய தூக்கம் போதாதென்றே சொல்கின்றனர். விழிக்கக் கஷ்டப்படும் இமைகளும், கனமாகக் கனக்கும் உடலும், இது ஏன்?!
காரணம், ஆழ்ந்த தூக்கத்திற்குள் ஒருவரை இளைப்பாறவிடாமல் அவரைத் தடுக்கும் கனவுகளே!
தூக்கத்தில் கனவுகள் அதிகமாகும்போது,
உண்மையான ஆழ்தூக்கத்தின் (Deep
sleep) நேரம் குறைக்கப்படுகிறது. நன்றாகத்
தூங்கினேன் என்ற உணர்வு உங்களிடமிருந்து
பறிபோகிறது.
மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு,
பரதரிஷியைக் கண்டதும் ஓடிவந்த அந்த
குடும்பஸ்தர் சொன்னார், "நன்றி சுவாமி!
தூக்கத்தில் கனவுகள்
அதிகமாகும்போது,
உண்மையான ஆழ்தூக்கத்
தின் (Deep sleep) நேரம்
நீங்கள் கற்றுக் கொடுத்த தியானம் ஒரே மாதத்திற்குள் என்னைப் புத்தம் புது மனிதனாக மாற்றிவிட்டது.''
ரிஷி கேட்டார், "இப்போ நன்றாகத் தூங்குகிறீர்களா?''
பக்தர், "எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூங்கிய திருப்தி கிடைக்காமல், பலநாள் தூக்கமின்மையாலும் கஷ்டப்பட்டவன்...
படுத்ததும் தூங்கிப்போகிறேன்.
விழித்ததும் துள்ளலோடு எழுகிறேன்.
வெறும் நான்கு மணி நேரத் தூக்கம், பன்னிரண்டு மணி நேரம் தூங்கினாலும் கிடைக்காத புத்துணர்வைத் தருகிறது. நன்றி சுவாமி,'' என்றார்.
ரிஷி, "நன்றியை எனக்குச் சொல்லாதீர்கள். தியானத்திற்கும், தியான சக்திக்கும் சொல்லுங்கள்,'' என்றார்.
இன்சோமினியா (Insomnia) என்றழைக்கப்படும் தூங்கக் கஷ்டப்படும் வியாதிக்கு, தியானம் ஒரு சிறந்த தீர்வு.
தூக்கமின்மையைச் சரி செய்வதோடு, தூக்கத்தின் தரத்தையும் தியானம் அதிகப்படுத்துகிறது.
டொனால்டு இ மிஸ்கிமேன் என்னும் ஆராய்ச்சியாளர் 1972-ல் ‘தியானம் எவ்வாறு தூக்கத்தின் தரத்தை உயர்த்துகிறது’ என்பது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்...

தூக்கமின்மையைச் சரி செய்வதோடு,
தூக்கத்தின் தரத்தையும் தியானம்
அதிகப்படுத்துகிறது.
அதில், "சராசரி மனிதர்கள் தூக்கத்தில் ஆழ்வதற்கு 10 நிமிடத்திலிருந்து 75 நிமிடம் வரை எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், ஒரு மாதம் தொடர்ந்து தியானம் செய்பவர்கள், தூங்குவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பரத ரிஷியிடம் அந்தக் குடும்பஸ்தர் பேசிக் கொண்டிருக்கும்போதே, பண்டிதர் ஒருவர் "தூக்கமின்மையை தியானம் சரி செய்வது எப்படி?" என்று கேட்டார்.
ரிஷி: "உடல் ஓய்வுக்காக தூக்கத்தையும், மன ஓய்வுக்காக ஆழ்தூக்கத்தையும் இயற்கை வகுத்தளித்திருக்கிறது.
உடல் ஓய்வு பெறக் கனவு கலந்த தூக்கம் நிச்சயம் அவசியமானது.
ஆனால், மனம் ஓய்வு பெறக் கனவுகளற்ற, சலனமற்ற ஆழ்தூக்கம் நிச்சயம் அவசியமானது.
மனதின் அலைபாயும்தன்மை அதிகமாகும் போது, மனதின் ஓய்வெடுக்கும் தன்மை மங்கிப்போகிறது.
தூக்கத்தில் ஓரிரு மணி நேரங்களாவது இளைப்பாறவேண்டிய மனம் - இடைவெளியே இல்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கனவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மனம் ஓய்வெடுக்க முடிவதேயில்லை.
விளைவு - சோர்வடைந்த மனம், சோர்வடைந்த கண்கள், உற்சாக உணர்வற்ற உடல்," என்றார்.
பண்டிதர்: "அப்படியென்றால், கனவுகள் மிகுந்த இரவு, கிட்டத்தட்ட தூங்காத இரவுக்குச் சமம் என்கிறீர்களா?"
ரிஷி: "ஆமாம். சரியாய்ச் சொன்னீர்கள்.
பலர் தினம் தினம் தூங்கினாலும், நிஜத்தில் தூங்குவதில்லை என்பதே உண்மை.
மனதின் அலைபாயும்தன்மை
அதிகமாகும் போது, மனதின்
ஓய்வெடுக்கும் தன்மை
மங்கிப்போகிறது.
தியானம் மிக அழகாக இந்தப் பிரச்சினையை சரி செய்கிறது. அது அலைபாயும் மனத்தை அமைதி நோக்கி எளிதாய்த் திருப்புகிறது.
நம் சக்திக் குறைவே மனம் மீதான ஒருங்கிணைப்பைக் குறைக்கிறது. மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.
முறையான தியானத்தைத் தொடர்ந்து செய்யச்செய்ய, உள்ளே உருவாகும் தியான சக்தி, நம் சக்திக் குறைவைச் சரி செய்கிறது. மனம் எளிதாய் ஒழுங்குக்குள் வருகிறது.
அலைபாயாத மனம், கனவுகள் நிறைந்த தூக்கத்திலிருந்து கனவுகளற்ற ஆழ்தூக்கத்திற்குள் எளிதாய் நுழையும். இது இயற்கை நியதி.
தியானம், மனக்கட்டுப்பாட்டை இழந்தவருக்குள், மனக்கட்டுப்பாட்டை உருவாக்கித் தருகிறது.
உடலும், மனமும் நிம்மதியான தூக்கத்தில் இளைப்பாறும்போது, அந்த மனிதரை உற்சாகம் தொற்றிக் கொள்வதும் இயற்கையே,'' எனச் சொல்லி முடித்தார்.
60 வருடம் வாழும் மனிதர், குறைந்தது 20 வருடம், தூக்கத்திற்காக மட்டும் செலவிடுகிறார். ஆனாலும், தூக்கத்திலும் அவருக்கு நிம்மதியில்லை.
தியானம் நிம்மதியான தூக்கத்தைத் தருவதோடு, பல வருடங்களையும் மிச்சப்படுத்தும். உற்சாகமான புத்தம்புது மனிதராக உங்களை மாற்றும்.

தியானம் நிம்மதியான தூக்கத்தைத்
தருவதோடு, பல வருடங்களையும்
மிச்சப்படுத்தும். உற்சாகமான புத்தம்புது
மனிதராக உங்களை மாற்றும்.
"தூங்கச் செல்கிறோம். ஏன்?" எனக் கேட்டால் மனிதர்கள் சொல்லும் மூன்று காரணங்கள்.
1. கண் சொக்குகிறது. கண் எரிகிறது
2 கண் விழிக்கமுடியவில்லை.
3 தூங்கவேண்டும் போலத் தோன்றுகிறது.
"காலை தூக்கத்திலிருந்து எழுவதற்குக் கஷ்டப்படுகிறோம். ஏன்?" எனக் கேட்டால், மனிதர்கள் சொல்லும் மூன்று காரணங்கள்.
- இன்னும் கொஞ்சம் தூங்கவேண்டும் போலத் தோன்றுகிறது.
- கண் விழிக்க முடியவில்லை.
- கண் எரிகிறது, கண் சொக்குகிறது.
அலைபாயும் மனம் தூக்கத்திலும் செய்யும் மாயங்கள் புரிகிறதா? தூக்கத்திற்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரியிருந்தால், தூங்கியதால் என்ன பலன்?
எல்லாச் சாதனையாளர்களும் குறைந்த நேரம் மட்டுமே தூங்கியவர்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
தொடர்ந்து உழைக்கும் மனிதரின் மனம் ஸ்திரமானதாக இருக்கும். உழைப்பவருக்கு மனதில் அலைபாய ஏது நேரம்? இளைப்பாறுவதற்கு மட்டுமே அவரால் நேரம் ஒதுக்க முடியும்.
சாதனையாளர்கள் அளவுக்கு, நாள் முழுக்க நீங்கள் உழைக்காவிட்டாலும், தோட்டக்கலை, வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைப் பராமரித்தல், துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற அன்றாடச் செயல்களில் உங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கத்திற்கு உடலும், மனமும் ஆயத்தமாகும்.
உடல் வேலை செய்தால், அலைபாயும் மனம் வேலை செய்யாது. சோம்பேறியின் உடலில்தான் மனம் ஆட்டம் போடும். உடல் உழைப்பு, மனக் களைப்பைப் போக்கிவிடும். மேலும், அன்றாட எளிய வேலைகளில், உங்களை ஈடுபடுத்திக் கொள்வது, அகங்காரம் வளராதிருக்கச் செய்யும். ஈடுபாட்டோடு செய்தால், இது ஒரு குதூகலமளிக்கும் தியானம் என்பது புரியும்.