மகாவாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
“தூங்காமல் தூங்கும் துரிய நிலையே உச்சகட்ட இளைப்பாறுதல்.”
எண்ணங்களும் இருந்து
சுயநினைவும் இருந்தால்,
அது ‘விழிப்புநிலை’
எண்ணங்கள் இருந்து
சுயநினைவு இல்லாது போனால்,
அது ‘கனவு நிலை’
எண்ணங்களும் இல்லாதிருந்து
சுயநினைவும் இல்லாதுபோனால்,
அது ‘ஆழ்தூக்க நிலை’
எண்ணங்கள் இல்லாதிருந்து
சுயநினைவு (விழிப்புணர்வு) இருந்தால்,
அதுதான் தூங்காமல் தூங்கும் நிலை
ஞானியரின் ஆனந்த நிலையான ‘துரிய நிலை.’
உச்சகட்ட ஆனந்தம்
உச்சகட்ட இளைப்பாறுதல், நிம்மதியைத்
துரிதமாய் அடைய உதவும்.
துரிதப் பேருந்து தியானம்.
எனக்கு தியானம் செய்யும் போது தூக்கம் தூக்கமாக வருகிறது. இது நல்லதா? கெட்டதா?
-சுபத்ரா, கொடைக்கானல்
அமெரிக்காவில், முதல் தியான வகுப்பை இந்திய சாது நிகழ்த்தியபோது, தியானத்தின் முடிவில் நன்றி நவில்தல் நேரத்தில்...
குதர்க்கவாதி ஒருவர் எழுந்து, " ஏதோ கண்ணை மூடி அரைமணி நேரம் உட்கார்ந்திருந்தோம். இந்தத் தியானத்தால் அதிகபட்சமாக ஒரு நல்லது நிகழ்ந்தது. நல்லா தூங்கினேன்," என்றார்
அறையில் கணிசமான அளவு சிரிப்பொலி.
சாது, "ஒரு மணி நேரச் சொற்பொழிவில், ஐந்து நிமிடத்துக்கு மேல் ஆடாமல் அசையாமல் உங்களால் இருக்க முடியவில்லை என்பதைக் கவனித்தேன்.
முதுகெலும்பில் அவ்வளவு பரபரப்பு. அமைதியற்றதன்மை.
நீங்கள் அரைமணிநேரம் அமர்ந்து அமைதியாய்த் தூங்கியதே ஒரு பெரிய விஷயமில்லையா?
தூக்கமாத்திரைகள் அமோக விற்பனையில் இருக்கும் இந்த நாட்டில், வெகு எளிதாக மாத்திரையில்லாமல் தூங்கியது பெரிய விஷயமில்லையா!" என்றார். கரவொலி அறைமுழுவதும் அதிர்ந்தது.
தியானத்தின் தொடக்கக் காலத்தில் சிலருக்குத் தியானம் செய்வதால் தூக்கம் வருவது போலத் தோன்றும்.
தூக்கத்தைத் தியானம் தரவில்லை. உங்களின் உள்ளே இருக்கும் மந்தத்தன்மை தியானத்தின்போது, தியானசக்தியால் வெளித்தள்ளப்படும். வெளித்தள்ளப்படும் மந்தத் தன்மையால் உடலும், மனமும் ஈர்க்கப்படும். தூக்கம் வரும்.
தொடர்ந்து தியானம் செய்யச் செய்ய, மந்தசக்திகள் முழுவதும் எரிக்கப்பட்டு விடும். அதன்பின் உடலுக்குள் உற்சாக சக்தி பொங்க ஆரம்பிக்கும்.
உற்சாக சக்தி பொங்க ஆரம்பித்த பின்தான், இரவுத் தூக்கத்தின் தரம் உயர ஆரம்பிக்கும்.
(Meditation is a medicine for peaceful sleep and mind)
குர்ஆன்-னில் வரும் அருமையான வாசகம் ஒன்று...
"நீங்கள் ஆறுதல் பெறுதற்குரிய உங்கள் வாழ்க்கைத் துணையை உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;
உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்று."
அன்பால் கிடைக்கும் ஆறுதலின் மருத்துவக் குணத்திற்கு இணையான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அன்பை ஓர் உணர்வு எனச் சொல்வது சரியாகாது.
அது குறைமதிப்பீடு.
அன்பு இறைவனின் முகம்.
"எளியவர்களுக்கு அன்பு
செய்கிறவர்கள், எனக்கே
அதைச்செய்கிறார்கள்,"
- பைபிளின் வாசகம்.
"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய 'அல்லாஹ்'வின் திருப்பெயரால்," எனத் தொடங்கும் குர்ஆன்னும்...
"அன்பே சிவம்! சிவமே அன்பு!" எனும் சிவவாக்கியமும்... “எளியவர்களுக்கு அன்பு செய்கிறவர்கள், எனக்கே அதைச்செய்கிறார்கள்,” என்ற பைபளின் வாசகமும்...
இறைவனின் முகம், ‘அன்பு’ என்பதற்கான ஆதாரங்கள்.
அன்பைவிடச் சிறந்த தொழுதலோ, வேண்டுதலோ, பிரார்த்தனையோ இல்லை என்பதற்கான நிரூபணங்கள் அவை.
ஓஹாயோ பல்கலைக்கழகத்தில், மனிதர்களின் நோய்க்கான காரணங்களை ஆராயும் மருத்துவக் குழுவுக்கு எதிர்பாராத ஆச்சரியம். அந்தப் பரிசோதனைக்கு உள்ளான பல கூட்டமாகப் பிரிக்கப்பட்ட முயல்களில், ஒரு கூட் டத்து முயல்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்துமட்டும் வேலை செய்யவில்லை.
இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அதிகக் கொழுப்புகளை அந்த முயல்களுக்குக் கொடுத்து, ‘இரத்தக் குழாய் அடைப்பு எப்படி ஏற்படுகிறது’ என்பதைச் சோதித்தார்களாம்.
எதிர்பார்த்தப்படியே பல முயல்களுக்கு இரத்தக்குழாய்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், சில முயல்கள் அவ்வளவு கொழுப்புக் கொடுக்கப்பட்டும் பெரிய பாதிப்புக்குள்ளாகாமல் ஆரோக்கியமாகவே இருந்தன.
இந்த முயல்கள் எப்படித் தப்பித்தன என்பதே மருத்துவக்குழுவின் ஆச்சரியம். அதுவே அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது.
பல காரணங்களை, பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்தார்கள். கடைசியாகக் காரணத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
கொடுக்கப்பட்ட கொழுப்பும், மருந்தின் அளவும், மற்றவசதிகளும் எல்லா

அன்பைவிடச் சிறந்த தொழுதலோ,
வேண்டுதலோ, பிரார்த்தனையோ
இல்லை .
முயல்களுக்கும் நூல் பிடித்தாற்போல் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால், தப்பித்துக் கொண்ட எல்லா முயல்களும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவை. ஒரே ஒரு செவிலித்தாயால் (Nurse) கவனிக்கப்பட்டவை.
மற்றகூட்டத்து முயல்களைக் கவனித்துக் கொண்டவர்கள் வேளா வேளைக் குக் கொழுப்புகளைக் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்.
தப்பித்த கூட்டத்தைக் கவனித்த செவிலித்தாய் (Nurse) மட்டும், ஒவ்வொரு வேளையும் உணவளிக்கும் முன், ஒவ்வொரு முயலையும் தனித்தனியாக ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல் கொஞ்சி முத்தமிட்டு முழு அன்பைப் பொழிந்திருக்கிறார்.
அன்பு பொழிந்ததைத் தவிர, வேறு, எந்தச் சலுகையோ, மருந்தோ தரப்படாத முயல்கள் தப்பித்தது எப்படி? அந்த முயல்களுக்கு மட்டும் எங்கிருந்து அவ்வளவு நோய் எதிர்ப்பாற்றலும், ஆரோக்கியமும் கிடைத்தது? என 1970 களில் அந்தக் குழு கேட்ட கேள்வியை, இன்றைய உடல் மன மருத்துவத் துறை (Mind Body Medicine) பல ஆராய்ச்சிகளுக்குப் பின், 'அன்புக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு' என ஆதாரப்பூர்வமாக அறிவிக்கிறது.
தாயின் வருடல், தோழியின் கை கோர்ப்பு, கணவரின் அன்பு வார்த்தைகள், குழந்தையின் பாசக்குரல் - நம்முள் நவரச மாற்றங்களையும், நல்ல உணர்வையும் ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த மாற்றம்தான் அன்பின் மருத்துவ குணம்.
ஆனால், அன்பு என்பது இன்றையச் சமுதாயத்தில் அரிதாய்க் கிடைக்கும் ஒன்றாகிவிட்டது.
அன்பு தொடர்ந்து கிடைக்கக் கிடைக்க, அந்த அன்பு சக்தியே அத்தனை நோய்களையும் களைத்தெறிந்துவிடும். அவ்வளவு சக்தி பெற்றது அன்பு.
''அன்பைப் பெறுபவருக்குள்
நிகழும் நல்ல மாற்றங்களை, விட அன்பைக்
கொடுப்பவருக்குள் இன்னும் பல நல்ல
மாற்றங்கள் நிகழும்,'' என்கிறார்கள் நவீன
ஆராய்ச்சியாளர்கள்.
அன்பு தொடர்ந்து கிடைக்கக்
கிடைக்க, அந்த அன்பு
சக்தியே அத்தனை
நோய்களையும்
களைத்தெறிந்துவிடும்.
அவ்வளவு சக்தி பெற்றது
அன்பு.
அன்பு உங்களை மருத்துவராக்கும்!
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் ஒருவரிடம் பேசி கொண்டிருக்கும்போது, அவர் சொன்ன செய்தி மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது அது.........
"நான் அறுவைசிகிச்சை நடக்கும் அறையிலிருக்கும்போது, சில நேரங்களில் நோயாளிகளின் மூச்சும், இரத்த ஓட்டமும் தாறுமாறாகும். அந்த அவசரச் சூழலில், உடனே சில மருந்துகளைச் செலுத்த, எல்லாம் சராசரி நிலையை அடைந்து விடும்.
இதயத் துடிப்பும் மூச்சும் அதன்பின்னும் குறையாத நேரங்களில், இறைவனின் மீதான பக்தியுணர்வோடு, என் குழந்தையின் கையைப் பிடிப்பதுபோல், நான் நோயாளியின் கைகளைப் பிடிப்பேன், வருடிவிடுவேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதன்பின் வெகு சீக்கிரத்தில் சராசரி நிலைக்கு இதயத் துடிப்பும், மூச்சுவாங்குதலும் திரும்பிவிடும். அவர்களுக்குள்ளும் ஒருவித சுகமான உணர்வு பிறக்கும்.
ஒருமுறை, இரு முறையல்ல, பலமுறை இது நிகழ்ந்திருக்கிறது.
நீங்கள் நேற்று சொற்பொழிவில் சொன்ன 'அன்பு மருந்துக்கெல்லாம் மருந்து' என்ற கருத்து வெறும் கருத்தல்ல, நடைமுறை உண்மை," என்றார்.
அன்பும் ஒரு நல்ல உணர்வு என்று உணர்வுப்பட்டியலில் சேர்த்துவிடாதீர்கள். அதன் வலிமை புரியாமலே போய்விடும்.
ஆளையே அடியோடு மாற்றும் சக்தி பெற்றது அன்பு.

உங்கள் உண்மைன முழு அன்பால் மற்றவர்கள் ஆறுதல் பெறுவார்கள். ஆரோக்கியம் பெறுவார்கள். நீங்கள் அதைத்தா ண்டிய ஆனந்தத்தைப் பெறுவீர்கள். (Love is a medicine, love is bliss, love is divine)
அன்பின் இயல்பு, அது ஒருவருள் பொங்கி, வழிவதின் வாயிலாகவே அடுத்தவரைச் சேரும்.
உங்களின் உண்மையான முழு அன்பால், மற்றவர்கள் ஆறுதல் பெறுவார்கள். ஆரோக்கியம் பெறுவார்கள். நீங்கள் அதைத்தாண்டிய ஆனந்தத்தைப் பெறுவீர்கள். (Love is a medicine, love is bliss, love is divine) .
சாதாரண பாசத்திலிருந்து உயருங்கள். அன்பின் உரு ஆகுங்கள். கடவுளின் முகம் உங்களிலும் தெரியும்.