திடமான உடலுக்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கபீர் மகா ஞானி. எளிமையின் உச்சம். இயல்பின் வெளிப்பாடு.
அவருக்குச் சேவை செய்ய ஆயிரம் செல்வந்தர்கள் போட்டியிட்டுக் கொள்வார்கள்.
ஆனால், அவரோ! அவரே உற்பத்தி செய்த கம்பளங்களை கடைவீதிக்கு எடுத்துச் சென்று, அதை விற்று, அதில் வரும் பணத்தில் தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்.
கபீரின் செயல்கள் மிகப் புதிராகத் தோன்றியதால்... புதிதாய் வந்த பக்தர் ஒருவர் கேட்டார், "உங்களுக்குச் சேவை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கையில், ஒரு சிறு கம்பளத்தை விற்க காலையிலிருந்து காத்திருப்பது ஏன்? ஏன் இந்த வீண்வேலை. இதை விற்கவா இவ்வளவு தூரம் காத்திருக்கிறீர்கள்?"
"இது சாதா கம்பளியல்ல. என் அன்பினால் இணைக்கப்பட்ட தியான உருவம்.
இதை வாங்க ஏற்கனவே ஒருவர்
பிறந்துவிட்டார். அவர் வரும் வரையில் அதே
ஆனந்தத்தோடு காத்திருப்பேன்.
இது என் தொழிலல்ல.
இது என் தொழிலல்ல.
இது என் தியானம்.
இது என் ஆனந்தம். இது என் தியானம்.
இது என் ஆனந்தம்,'' என்றார்.
கபீர் கதை பேசவில்லை. அவர் சொன்னது அனைத்தும் உணர்வு வெளிப்பாடு என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் புரியும்.
கலையில், மன அலைகள் கலைகின்றன. ஒரே மாதிரியாக ஓடிக்கொண்டிருக்கும் மனமானது, நடனம் ஆட ஆரம்பிப்பதே கலை.
"மண்ணோடு விளையாடு, உன்னோடு கடவுள் விளையாடுவார்,'' எனும் வாசகத்தை அழகாய்ச் சொல்லும் சூஃபி ஞானி இப்படிச் சொல்வார்...
கலையில் மனம் வளையும். விளையாட்டில் உடல் வளையும்.
கலையும், விளையாட்டும் கலந்து செய்யும் அன்றாட வேலையில், இரண்டும் வளையும்.
சைனாவிற்கு ஜென் சென்ற பிறகு, அந்த நாட்டில் தியானமானது, வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது.
அதில் ஒன்றுதான், 'கிச்சாலியோ தியானம்.'
'கிச்சாலியோ' என்றால் 'மதித்தல்' என மலைவாசிகள் மொழியில் பொருள்படும்.

கலையில் மனம் வளையும்.
விளையாட்டில் உடல் வளையும்
கலையும், விளையாட்டும் கலந்து செய்யும் அன்றாட வேலையில் இரண்டும்
மரங் வெட்டும் முன்பு கண்களை மூடி, ஒரு நிமிடம் மரத்தின் முன்பு முழங்காலிட்டு, "ஒரு நல்ல காரியத்திற்காக உன்னை அழைத்துச் செல்கிறேன்.
நீ ஒரு அருமையான மேஜையாக, நாற்காலியாக, கட்டிலாக மாறப்போகிறாய்," என்று ஒரு மாணவனை உற்சாகப்படுத்துவதுபோல் உற்சாகப்படுத்திவிட்டுத்தான் மரத்தை வெட்ட ஆரம்பிப்பார்கள்.
மரப்பொருட்கள் செய்தபின், "உன்னை இவ்வளவு அழகாக வடிக்க, நீ உதவியதற்காக நன்றி," என்று கண்களை மூடி உணர்வு பொங்க நன்றி சொல்வார்கள்.
வேலையை தியானமாக மாற்றுவது எப்படி என நமக்கெல்லாம் அடிக்கோடிட்டுக் காட்டும் தியானம்தான் கிச்சாலியோ தியானம்.
நம்மில் பலர் மிருதுவான மலரைக்கூட வெடுக்கெனப் பறிப்பதைப் பார்த்திருப்போம்.
இவையனைத்தும், வேலைகள் கடமைக்காக மட்டுமே செய்யப்படுகின்றன என்பதற்கான அடையாளங்கள்.
அன்றாடச் செயல்களில் ஆனந்தம் பொங்க... வேலைகள் தியானங்களாக மாற வேண்டும். இந்த ஓர் உண்மை புரிந்தால் அது எளிதில் சாத்தியமாகும்.
ரிஷி கூற்று ஒன்று...
"உடல் வேலைகள் சூட்சும சரீரத்தைத் திடமாக்கும்."
சூட்சும சரீரம் (Etheric Body) என்பது உங்களின் மனம் வாழும் இடம். இந்த ஈதரிக் பாடி திடமாக திடமாக, மனம் உங்களின் கட்டுக்குள் வரும்.
இன்றைய நவீன மயமாக்கலால், மனிதரின் மூளைக்கு வேலை அதிகமாகி விட்டது. உடலுக்கு வேலை என்பதே அரிதாகிவிட்டது.
இது மிகவும் ஆபத்தானது.
உடலுக்குத் தேவையில்லாத ஓய்வு கொடுக்கப்பட்டால், சூட்சும சரீரம் வலு இழக்கும், மனம் பழுதடையும்.
இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டால், ஜன்னலைத் துடைத்தாலும், ஜாதி மல்லியைக் கோத்தாலும், ஜாங்கிரி செய்தாலும் அது அத்தனையையும் தியானமாக மாற்றிக்கொள்ளும் சூட்சுமம் தெரிந்துவிடும்.