நீங்களும் இளவரசர், இளவரசிதான்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனித உடலுக்கு எலும்புகள்போல், மனதிற்கு எண்ணங்கள்! எண்ணங்களே இல்லையென்றால், மனமே இல்லை. எண்ணங்களின் தொகுப்பு மனம்.
௵டிணஞீ டிண் ணணிணூடடிணஞ் ஞதண ஞிணிடூேஞிணிடிணி ணிஞூ ணடணிதண்டணண்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எலும்புகள் வளைந்தோ நெளிந்தோ போய்விட்டால், மனிதன் குட்டையாகவோ, கூனாகவோ மாறவேண்டியதுதான்.
எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ, ஆனந்தத்திற்கு எதிரானதாகவோ இருந்தால், மனமும் கூனாகவோ, குருடாகவோ மாறிவிடும்.
விாிவிதமான எண்ணங்களைத் தங்களுக்கு விவரம் தெரிந்த நாள்முதல் மனிதர்கள் சேகாிக்க ஆரம்பிக்கிறார்கள். மனம் என்னும் குழந்தை வளர ஆரம்பிக்கிறது.
ஒரு சின்ன கதை...
௵டிணஞீ டிண்
ணணிணூடடிணஞ்
ஞதண
ஞிணிடூேஞி
ஐந்துவயதில் காணாமல் போன, தம் நொண்டிக் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் பித்துப்பிடித்தவர் போல மாறி விடுவார் நவாப்.
நவாப்பிற்கு துக்கம் தாளா நிலைக்குச் செல்லும் போதெல்லாம், தளபதியை அழைத்து, "போய் என் மகனைக் கண்டுபிடியுங்கள். என் மகனில்லாமல் நாட்டுக்குள்ளே வரக்கூடாது. வந்தால், மரணதண்டனை நிச்சயம்," என்று அனுப்பிவிடுவார்.
பத்து வருடத்திற்குள் பதின்மூன்று தளபதிகளைச் தேடச்சொல்லி அனுப்பிவிட்டார். எனவே, தளபதி பதவி என்றாலே, அரசவையில் பீதிகொள்ள ஆரம்பித்தார்கள். பதினாலாவது தளபதி நியமிக்கப்பட்டார்.
ஒருநாள் துக்கம் உச்சத்திற்குச் செல்ல, அந்தத் தளபதியையும், எப்போதும் சொல்வதைச் சொல்லி, நாட்டைவிட்டு அனுப்பிவிட்டார். இந்தத் தளபதி புத்திசாலி. வித்தியாசமாக யோசித்துப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தம் காவலாளிகளிடம் அவர்கள் கண்ணில் படும் பதினைந்து வயது மதிக்க த்தக்க எல்லா நொண்டிப் பிச்சைக்கார சிறுவர்களையும் அழைத்து வரச் சொன்னார்.
25 பிச்சைக்கார சிறுவர்களை அழைத்து வந்தார்கள். நவாப்பின் முகச்சாயலுக்குப் பொருந்தும் ஒருவரைத் தளபதி தேர்ந்தெடுத்தார்.
அந்தப் பிச்சைக்காரச் சிறுவனை வணங்கிய தளபதி, "இளவரசே,

மனதில், எண்ணத்தில்
சிறு மாற்றம் நிகழ்ந்தால் போதும்,
ஆளையே மாற்றிவிடலாம்.
உங்களுக்காக, உங்கள் தந்தை காத்துக்கொண்டிருக்கிறார்,"என்றார்.
பிச்சைக்காரன், "ஐயா... என்ன சொல்கிறீர்கள்? நானொரு அனாதை பிச்சைக்காரன்." தளபதி, "இளவரசே! அப்படிச் சொல்லாதீர்கள், உங்களுக்கு விவரம் தெரியும் வயதையும் முன்பே, நம் நாட்டிலிருந்து நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள். தயவு கூர்ந்து தாங்கள் நாட்டிற்குத் திரும்ப வரவேண்டும்," என்று காலில் விழுந்து சொல்ல, நொடியில் தலைகீழாய் மாறிப்போன பிச்சைக்காரன், "அப்படியா சொல்கிறாய் நீ! சரி, சரி, சீக்கிரம் பல்லக்கைக் கொண்டுவரச்சொல்,"என ஒருமையில் பேச ஆரம்பித்தான்.
இளவரசன் உடையைக்கூட இன்னும் பிச்சைக்காரன் உடுத்திக்கொள்ளவில்லை. அதற்குள் மனதளவில் இளவரசனாகி, "அதைச் செய், இதைச் செய்," எனக் கட்டளையிட்டபடியிருந்தான்.
"இவன் எப்படி நடந்துகொண்டாலென்ன? நான் நாடு திரும்ப வேண்டும்," என்றெண்ணிய தளபதி, "நீ இளவரசன்," என்றதும், ஆட்டமாய் ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து, "இதற்குப் பெயர்தான் அகங்காரமா!" என்றெண்ணித் தன்னுள் சிரித்துக்கொண்டார்.
மனதில், எண்ணத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் போதும், ஆளையே மாற்றிவிடலாம்.
தவறான மாற்றம் அகங்காரம், சரியான மாற்றம் மன ஆரோக்கியம்.
"எண்ணங்களை உறிஞ்சி
உயிர்வாழும் மனம், தொடர்ந்து நிறம்
மாறிக்கொண்டேயிருக்கும்," - வேத இரகசியம்.
ஒரு பெண்ணையோ, ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர், "நீ அழகு," எனச்சொல்லிவிட்டால் போதும், தாம் அழகென்ற எண்ணம் அவருக்குள் கர்வமாக மாறிவிடும்.
அதே பெண்ணையோ அல்லது ஆணையோ, "நீ அசிங்கம்," எனத்தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லிவிட்டால் போதும், தாம் அசிங்கமென்ற எண்ணம் வருத்தமாக மாறிவிடும். எண்ணங்களில் புகுத்தப்படும் மாற்றங்கள், மனிதரையே மாற்றிவிடுகின்றன.
நவாப் கதையில், இதுவரை பிச்சைக்காரனாயிருந்தவனை இளவரசனாக நொடியில் மாற்றியது "நீ இளவரசன்," எனப் புகுத்தப்பட்ட புது எண்ணம்தான்.
கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாய்ப் பார்த்தால் புரியும்... இளவரசன், பிச்சைக்காரன் என இரண்டுமே உள்ளுலகின் எண்ணத்தைப் பொறுத்தது. வெளியுலகைப் பொறுத்ததல்ல. உங்களின் இன்றைய நிலைக்கு முழுக்க முழுக்க காரணமானது உங்களின் எண்ணங்கள்.
"நான் யார் தெரியுமா?" எனப் பெருமையாய் ஆரம்பித்த அரசரிடம், ஜென் ஞானி, "தெரியும்," என்றார்.
"அப்படியா!" என ஆச்சரியப்பட்டு, "என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? சொல்லுங்கள்," என்றார்.
"நீ ஒரு குரங்கு" என்றார்.

இளவரசன், பிச்சைக்காரன் என இரண்டுமே
உள்ளுலகின் எண்ணத்தைப் பொறுத்தது.
வெளியுலகைப் பொறுத்ததல்ல.
உங்களின் இன்றைய நிலைக்கு முழுக்க
முழுக்க காரணமானது உங்களின்
குருவின் வார்த்தைகளால் கோபம் கொப்பளிக்க வெகுண்டெழுந்தவரைச் சாந்தமாய்ப் பார்த்து உறுதியான வார்த்தைகளால் சொன்னார்...
"உட்கார். கோபப்பட்டு நீ குரங்கென நிரூபிக்காதே. . இந்தக் கோபம் கலைந்தால் நீ குரங்கல்ல, கடவுள் என்பது புரியும்," என்றார்.
மனித மனத்து உறுதியற்றது. அதனால்தான், சதா மற்றவர்கள் புகுத்தும் எண்ணங்களுக்கு ஏற்றார்போல் நம்மை குரங்காட்டம் ஆட வைக்கிறது. ஓய்வே இல்லாதவர்களாக நம்மை மாற்றிவிட்டது.
தெளிவான எண்ணங்கள், மனதின் 'முதுகெலும்புகள்'.

பிச்சைக்காரனை ஒரு இளவரசனாகத் தலைநிமிரச் செய்ய - “நீ இளவரசன்,” என்ற எண்ணத்தை தளபதி புகுத்த வேண்டியிருந்தது.
ஒருமுறை யோசியுங்கள்!
ஏன்! வெளியே இருப்பவர்கள்தான் நம் மனதின் எலும்புகளான எண்ணங்களை நிர்ணயிக்க வேண்டுமா? நாம் நிர்ணயிக்கக் கூடாதா?
உங்களின் களங்கப்பட்ட எண்ணங்களைக் கண்டுபிடியுங்கள். தவறான எண்ணங்களைத் தூக்கியெறிந்து, நல்ல எண்ணங்களை நீங்களே உங்கள் மனதில் நுழையச்செய்யுங்கள்.
புது மனத்தை, புது எண்ணங்களால் வடிவமைருங்கள், இது சாத்தியமானதே. நீங்களும் இளவரசன், இளவரசிதான் என்பதை உணர்வீர்கள்.