KAILASA Library/மனதைத் திற/மகா வாக்கியம்Sign in
மனதைத் திற

மகா வாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"நீங்கள்தான் உங்களை உருவாக்க வேண்டும்.''

உங்கள் பெயர் மற்றும் உங்களைப்பற்றிய வர்ணனைகள் நீங்களல்ல. இவற்றைத் தாண்டிய உங்களை வர்ணிக்க, வார்த்தைகள் வளரவேண்டும்

கள்ளிச் செடிபோல் அள்ளித் தெளித்தக் கருத்துகளின் கொத்தாக வளர்ந்திருக்கிறது, 'நீங்கள் யார்? நீங்கள் எப்படிப்பட்டவர், எனும் அபிப்ராயம். போதும். இனியும் கருத்துகளை உங்களுள் தெளிக்க விடாதீர்கள்.

உங்களைப்பற்றிய உண்மைகளைக் கண்டுபிடியுங்கள். உண்மையான நீங்கள் உருவெடுப்பீர்கள்.

வயது 40 ஆகியும் மோசமான எண்ணங்கள் குறையவில்லை. இது எதனால்?

திரு. ஜெலானி.

வயதுக்கும், மனதின் சலனத்திற்கும் சம்பந்தமேயில்லை. இது போன்ற எண்ணங்கள், எண்ணங்களின் (கூடணிதங்டண ணீஞுணூ ண்ஞுஞிணிணீஞீ) எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகும்போதுதான், சலனம் ஒருவருக்குள் ஆட்டம் போடுகின்றன.

இதற்காகக் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம். அதுபோன்ற எண்ணங்கள் வரும்போது, அவற்றைக் கவனிக்க ஆரம்பியுங்கள்.

ஆசிரியரைப் பார்த்ததும் அடங்கும் மாணவர்களின் சலசலப்புப் போல, உங்களின் கவனம் அதிகமாகும்போது, உங்களின் மனச்சலனமும் அடங்கிப் போகும். இதன் வலிமை புரிய, செய்து பாருங்கள்.

எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தால், மனம் எளிதாக உங்களின் கட் டுக்குள் வந்துவிடும்.

தியான சூத்திரத்தைப் பயன்படுத்தினால், எண்ணங்களைக் கவனிக்கும் கலை எல்லோருக்கும் எளிதில் சாத்தியமாகும்.

தியான சூத்திரம்,

‘‘எண்ணங்களை உருவாக்காதீர்கள்!

நிறுத்தாதீர்கள்!

வளர்க்காதீர்கள்!’’

எந்த எண்ணங்கள் வேண்டுமானாலும் வரட்டும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எப்போது வேண்டுமானாலும் அவை கலைந்து போகட்டும். உள்ளிருக்கும் குப்பைகள்தான் வெளிவருகின்றன.

வரட்டும். தடுக்காதீர்கள்!

விழிப்புணர்வோடு தொடர்ந்து எண்ணங்களை அமைதியாய் அமர்ந்து கவனியுங்கள்.

எண்ணங்கள் உங்கள் வசப்படும் அற்புதம் நிகழும்.

1. சன்யாஸ வாழ்க்கை? அது ஒரு தியான நுட்பம்.

2. சம்சார வாழ்க்கை? அது ஒரு வாழ்க்கை நுட்பம்.

3 தியானத்திற்கும், உணவு முறைக்கும் சம்பந்தம் உண்டா? உண்ணுதலே தியானம்தான். அதில் விழிப்புணர்வைச் சேர்த்தால் போதும்.

4. தூக்கத்தை தியானமாக்க முடியுமா? முடியாது.

5. ஏன்?

"ஏனென்றால், நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை தூங்கிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். புதிதாய்த் தூங்கவெல்லாம் முடியாது."

  • ஜென் வாக்கியம்.

தியானத்திற்கும், உணவு முறைக்கும் சம்பந்தம் உண்டா? உண்ணுதலே தியானம்தான் அதில் விழிப்புணர்வைச் சேர்த்தால் போதும்.

6. அப்படியென்றால் என்ன செய்ய? விழித்துக்கொள்ளுங்கள்.

7. அதற்கு என்ன செய்ய? தியானம் செய்யுங்கள்.

8. இரவு கண்விழித்து, காலையில் லேட்டாகவே எழுந்திருப்பது சரியான வாழ்க்கை முறையா?

லேட்டாகப் படுத்துச் சீக்கிரமாக எழுந்து கொள்வது மட்டுமே சரியான வாழ்க்கை முறை. அதை மீறிய எதுவாக இருந்தாலும், சக்தி ரீதியான ஓட்டையே.

9. இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் தூண்களாக மாறவேண்டியவர்கள். உளுத்துப்போன மூங்கிலாக மாறிக் கொண்டிருக்கக் கூடாது.

10. அப்படியென்றால்? இளஞ்சிங்கங்களே! அறிவை மட்டும் வளர்ப்பது ஆபத்து. ஆற்றலையும் வளர்க்க வேண்டும்.

'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்ற வரி உங்கள் ஒவ்வொருவரின் தினசரி வாழ்விலும் நடைமுறையாக வேண்டும்.

11. ஆற்றல் என்றால்? சக்தி (உணஞுணூாஞ்துா).

Swami Vivekananda

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் தூண்களாக மாறவேண்டியவர்கள். உளுத்துப்போன மூங்கிலாக

12. அறிவு - ஆபத்து! ஏன்?

ஆற்றல் அதிகரிக்காத அறிவு, ஆளில்லாத ஹைவேயில் முடுக்கி விடப்பட்ட ரேஸ் காருக்குச் சமம். இது ஆபத்து. யாரையும் மோதலாம். எதிலும் மோதலாம்.

13. அப்படின்னா வாழ்வில் ஒரு த்ரில், ஒரு விறுவிறுப்பு வேண்டாமா?

இப்படித் துடுக்காகக் கேட்பதற்கு வெடுக்கென பதில் சொல்வது வெகு எளிது. அந்தப் பதில் வாயை மூட வைக்கும். ஆனால், மனத்தைத் திறக்க வைக்காது. மகிழ்ச்சியைப் பொங்க வைக்காது.

14. மன்னிக்கவும் உதவுங்கள்!

அறிவு என்பது மனோபலம்.
ஆற்றல் என்பது உடல்பலம்.
ஆனந்தம் என்பது ஆன்மபலம்

மனோபலத்தை மட்டுமே அதிகரித்தால், வாழ்வில் ஒரு கட்டுப்பாடு (இணிணணணூணீடூ ஞூஞூஞிட்ச்ணடிண்ட்) இல்லாமல் சென்று விடும். உடல் பலம் நிச்சயமாக அதிகரிக்கப் படவேண்டும்.

விவேகானந்தர்கூட உடல் பலத்தை இளைஞர்கள் அதிகரித்தாக வேண்டியது மிக முக்கியம் எனக் குறிப்பிடுகிறார்.

15. உடல்பலம், மனோபலம், ஆன்மபலம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அதிகரிக்க வழியிருக்கிறதா?

இருக்கிறது.

ஆற்றல் அதிகரிக்காத அறிவு,
ஆளில்லாத ஹைவேயில்
முடுக்கி விடப்பட்ட ரேஸ்
காருக்குச் சமம். இது ஆபத்து.
யாரையும் மோதலாம்.
எதிலும் மோதலாம்.

16. என்ன? தியானம்.

நின்று பேசக்கூட நேரம் போதவில்லை.

24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கிறேன், உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

எதைச் செய்வது? எப்படிச் செய்வது? எப்போது செய்வது? என்று தெரியாமல் குழப்பத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை.

அவசர கதியில் இயங்குவது, செயல்படுவது என்பது இன்றைய வாழ்க்கை முறையாக ([?])ஆகிவிட்டது.

சுறுசுறுப்பாக ([?]) ஆக இயங்குவதற்கும், அவசரமாக ([?]) செயல்படுவதற்கும், மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது

சுறுசுறுப்பாக இயங்கிய பின், நீங்கள் ஓய்வாக, தளர்வாக ([?]) ஆக இருப்பீர்கள். அவசர அவசரமாக ஒரு செயலைச் செய்தபின், அமைதியற்றவராக ([?]) இருப்பீர்கள்.

[?] [?]

[?] [?]

அவசர அவசரமாக தெளிவில்லாமல் செயல்படும் ஒருவரால், மேலோட்டமாக மட்டுமே செயல்பட முடியும்.

உயிரின் ஆழத்திலிருந்து செயல்பட, நிதானம் அவசியம்.

உங்களை வெற்றி பெறச் செய்யும் இந்த ஞானக் கருத்துக்களைத் தியானியுங்கள்.

நிதானம், தியானத்தால் கிடைக்கும் உபவிளைவுகளில் கிடைக்கும் நற்பலன்களில் ஒன்று.

தியானம் செய்பவர் எத்தகைய சூழ்நிலையையும் எளிதாகப் புரிந்து கொண்டு உயிரின் ஆழத்திலிருந்து நிதானமாய்ச் செய்வார்.

உங்கள் வாழ்க்கையில் தியானத்தைச் சேருங்கள்.

வாழ்வில் வெற்றி பெறுங்கள்.